Thursday, June 14, 2018

மனம் நிறைவான ஊர் பயணம்...3 !



மகள் ஒரு நாள் கொஞ்சலாக, டாடி என்னை கன்னியாகுமரி கூட்டி சொல்லுங்களேன் என்றாள், நாம இருக்கதே கன்னியாகுமரிதானே என்றேன், "இல்லை டாடி மும்பையில் என் கிளாஸ் மேட் கன்னியாகுமரி வந்ததாக சொன்னாள், அதுக்கு நான், எங்கள் ஊரே கன்னியாகுமரிதான் என்றேன், அதுக்கு அவள் பல கேள்விகள் கேட்டாள், விவேகானந்தா ராக், வள்ளுவர் சிலை, காந்தி மண்டபம், முக்கடல் சங்கமம் என்று, எனக்கு ஒன்னுமே தெரியலைன்னதும் கிண்டல் பண்ணிகிட்டே இருக்கா"
சின்ன அண்ணன் மகன் பிரகாசும் நானும் காட்சி கோபுரத்திலிருந்து அய்யன் வள்ளுவருடன்.

அதான் ஏற்கனவே பலமுறை உன்னை கூட்டிப்போயி காட்டிருக்கேனே என்றதும், இல்லை அப்போது எனக்கு நினைவில்லை இப்போ கூட்டிட்டு போங்க என்றதும் சரி என்றேன்.
நண்பன் ராஜகுமார் மகள் பபி.

நாங்கள்தான் குடும்பமாக போகணும்ன்னு ஏற்பாடு, நாம நினைக்கிறது எங்கே நடக்குது அங்கே...? ரெண்டு அண்ணன் பிள்ளைங்க, நண்பன் ராஜகுமார் பிள்ளைங்கன்னு மொத்தம் நான்கு குடும்பம் கன்னியாகுமரி நோக்கி கிளம்பினோம் காலையில்.
காந்தி மண்டபத்தின் முதல் மாடியில் கடலின் காற்றோடு...சின்ன அண்ணன் மகள், நண்பனின் மகள், என் மகள்...முகம் தெரியாமல் அமர்ந்திருப்பது சீவலப்பேரி.

கன்னியாகுமரி பஸ் நிலையம், நான் ஆரம்பத்திலிருந்து பார்த்த அதே கன்றாவியாதான் இப்போவும் இருக்கு பாத்ரூம் தவிர, திண்பண்டம்ன்னு எதையாவது வாங்கி சாப்பிட்டுறாதீங்க டீ  கடையில், கண்டிப்பா உள்ளே புழு இருக்கும்.
கன்னியாகுமரி காட்சி கோபுரம்.[இதற்கு ஒரு வரலாறு உண்டு] உள்ளே ஒரு சின்ன பாறை தெரிகிறதா ? அதுதான் முக்கடலும் சந்திக்குமிடம் !

கடலின் பிரமிப்பைக் கண்டு மகள் பிரமித்து போனாள், மும்பையில் ஆழமே இல்லா அழுக்கு ஜூ பீச்சை பார்த்தவள், இந்தியப் பெருங்கடலின் அழகையும் ஆக்ரோஷத்தையும் கண்டு களித்தாள்.
தெப்பக்குளம் மாதிரி தெரிந்தாலும் கடலின் ஆக்ரோஷ சீற்றமும், அதன் அலையின்  இழுப்பும் பயங்கரமாக இருக்கும், நான் உக்காந்திருப்பது ஒரு பாறையில், இடது கையால் பாறையை பிடித்துக்கொண்டு மகள்களின் கையை பிடித்து வைத்திருக்கிறேன் இல்லேன்னா கடல் உள்ளே இழுத்துட்டு போயிரும்.

காட்சி கோபுரத்தில் மேலே போகப் போக இன்னும் இந்தியப் பெருங்கடலின் அழகும் சீற்றமும் அதிகரித்துக்கொண்டே போனது, எனக்கு மட்டும் சுனாமி பயம் மனதிலும் வயிற்றிலும் உருண்டு கொண்டேயிருந்தது.
வாழையிலை சாப்பாடு, கன்னியாகுமரி போலீஸ் ஸ்டேஷன் நேரெதிரில்.

வழி நெடுக ஜூஸ், ஐஸ்கிரீம், உப்பிட்ட மாங்காய், உப்பிட்ட அண்ணாச்சி பழம், அது இதுன்னு பர்ஸை பதம் பார்த்துக்கொண்டே வந்தார்கள், அடிச்ச வெயிலும் அப்படி, என்னைவிட பிள்ளைகளின் ரசிப்பு என்னை மிகவும் கவர்ந்தது, பின்னாலேயே நான் அவர்களை ரசித்துக்கொண்டே வந்து கொண்டிருந்தேன்.
காந்தி மண்டபத்தில் அமர்ந்து கொண்டு...பின்னால் தெரிவது காமராஜர் மணி மண்டபம்...சின்ன அண்ணன் மகன் பிரகாஷ், ராஜகுமார் மகன் பாஸ்.

காட்சி கோபுரத்திலிருந்து வெளியே வரவே மணி மாலை மூன்றாகி விட்டது, பிள்ளைகளுக்கு, பசிக்கும் என்று, காட்சி கோபுரத்திலிருந்து வெளியே வரும் வழிகளிலெல்லாம் ஹோட்டல் இருக்கிறது ஆனால் வாழையிலை சாப்பாடு இல்லவேயில்லை.

ஹோட்டல் காரரிடம் கேட்டதுக்கு கன்னியாகுமாரில எங்கேயும் வாழையிலை சாப்பாடு கிடையாது சார் என்கிறார், உங்களுக்கு எந்த ஊர்ன்னு கேட்டேன், திருச்செந்தூர் என்றார், போய்யா நான் உள்ளூர் காரன் என்கிட்டேவா ? போலீஸ்ஸ்டேஷன் எதுத்தாப்ல ஒரு ஹோட்டல் இருக்கு வாரியா காட்டுறேன் என்றதும் நெஞ்சில் கைவைத்து வணங்கி விடை கொடுத்தார்.
ராஜகுமார் மகன் துறு துறுன்னு கடலுக்குள்ளே பாய...அலை இழுத்து செல்லாமலிருக்க காலால் அடை கொடுத்துட்டு இருக்கேன்.
பீச் ரோட்டில் குடும்பமாக தெருவில் நின்றபோது[அவ்வ்வ்]

பெரிய அண்ணன் மகன் ஜோஷ்வாவுடன்.

பொதுவாவே கன்னியாகுமரியில், உள்ளூர்க்காரன்னு சொன்னதும் பவ்வி விடுவார்கள், காரணம் நாம் பேசும் ஸ்லாங், அடுத்து உடனடியாக விழும் அடி, காரணம்.... அங்கே தொழில் செய்யும் முக்கால்வாசி ஆள்கள் வெளியூர்காரர்கள்.

தொடரும்....

4 comments:

  1. ஆஹா கன்யாகுமரி பயணமா? இந்த மே மாதம் அங்கே வர வேண்டியது - கடைசி நேரத்தில் வர முடியாமல் போனது.

    எஞ்சாய்....

    ReplyDelete
  2. பல தடவை கன்னியாக்குமரிக்கு போக நினைத்தாலும் ஏதாவது ஒரு தடங்கள் வந்துவிடுகின்றது! விரைவில் போகும் ஆசையைத்தூண்டுகின்றது உங்க பகிர்வு!

    ReplyDelete
  3. சின்ன அண்ணன் மகன்/பெரிய அண்ணன் பெறாமகன் என்று சொல்வதில் இன்னும் அன்பு அதிகம் அண்ணாச்சி!)))

    ReplyDelete
  4. வாழையில்லைச்சாப்பாடு நாவூறுது!))

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!