Wednesday, March 14, 2012

உனக்கு நான் மாப்பிளையா இல்ல அவன் மாப்பிளையா.? நடந்தது என்ன...?

பயணங்கள் முடிவதில்லை.......

மனோ நீங்க ஆவலோடு எதிர்பார்க்கும் சண்முகபாண்டி [[அருவாபாண்டி]] வந்துகொண்டிருக்கிறார் பராக் பராக் என்றார், நானும் ஆளு நாம சிபி அண்ணன் ரேஞ்சுக்கு இருப்பார்னு பார்த்தால்....


[[உண்மை பெயர் ராஜேஷ், என் கற்பனை பெயர்தான் சண்முகபண்டி]] ஒரு பார்சலை கொண்டு வந்தார் ஆபீசர் அறிமுகப்படுத்தினார், என்னை பார்த்ததும் ரொம்ப குஷி ஆகிட்டார், ஒருவேளை என்னை ரொம்ப ரஃ பான ஆளுன்னு தம்பி நினச்சிட்டு, பச்சபுள்ள அளவுக்கு ஜாலியா இருப்பதை நினைச்சு குஷி ஆகிட்டாரோ ஹி ஹி...


ஆளு ரொம்ப சிம்பிள் நம்ம செல்வா [[கோமாளி]] வயசுதான் இருக்கும், ஜிம் போயிட்டு இருக்கார் ஜெம ஜிம் பாடி, திவானந்தா சாமிகளின் அடியாளும், சிஷ்யனும் கூட....

[[குரங்குகளுக்கு முறுக்கு போட்டுகொண்டு இருக்கிறார், விஜயன் போட்டோ எடுப்பதற்காக]]

ஆனால் அடிக்கடி ஊருக்குள்ளே ராத்திரி ஒரு மணிக்கு அடுத்தடுத்த வீடுகளுக்குள் புகுந்துட்டு தலைதெறிக்க ஓடி வருவாராம், எதுக்குலேய் இந்த நேரத்துல இப்பிடி ஓடி வருதே'ன்னு கேட்டா இல்லை பைப்புல தண்ணி வருதான்னு பாக்கப்போனேன்னு சொல்வாராம் [[ திவானந்தா சாமிகளின் சிஷ்யன் ஆச்சே ம்ஹும்]]

[[கடும் கற்பாறையில் பூத்த பூ, விஜயனின் கைவண்ணம் சூப்பர்...!!!]]

சரி எழு மணிக்கு பாவநாசம் கிளம்புவதாக இருந்தது கார் சற்று தாமதம் ஆனதால் கவுசல்யாவை வீட்டுக்கு புறப்பட சொன்னோம், நல்லா இன்பமாக பேசி மகிழ்ந்திருந்த மகிழ்ச்சியில் சிறு குழந்தையாக மாறி இருந்தார், நாங்களும்தான்....!!!

[[கல்தவளை]]

கவுசல்யாவை வழி அனுப்பிவிட்டு காரில் ஏறி அமரவும், கார் சீறியது சின்ன சின்ன தெருவாக, அன்றைக்குத்தான் நெல்லையப்பர் கோவிலை பார்த்தேன், ஆபீசர் காட்டி தந்தார், கார் போகும் பாதையெல்லாம் எல்லா இடங்களையும் விவரமாக முன் சீட்டில் அமர்ந்தவாறு சொல்லிக்கொண்டே வந்தார்....


சவேரா காரில் நடு சீட்டில் நானும் விஜயனும், பின் சீட்டில் சண்முகபாண்டியும், திவானந்தாவும் அமர்ந்திருந்தோம், என்னன்ன சாப்பாடுகள் வேண்டும் என்று ஆர்டர்கள் பறந்து கொண்டிருந்தது போனில்...!!!


இடையில் ஒரு ஹோட்டல் முன்பு கார் நின்றது, அங்கே இருந்து சிக்கன் கறியும், சப்பாத்தியும் இன்னும் பிற சாப்பாட்டு ஆயிட்டங்களும் காரில் வலுகட்டாயமாக ஏற்றப்பட்டன, ஏற்றியவர் சுதன் என்ற நம்ம நண்பர்களின் உயிர் நண்பர், பரஸ்பரம் அறிமுகப்படுத்தினார் ஆபீசர்.


அவரும் காரில் ஏறிக்கொண்டார் சுதனை பார்க்க அதிமுக ஆள் மகாதேவன் போல இருக்கிறார், சும்மா ஆஜானுபாவாக, முன்பு ஒரு நாளைக்கு இரண்டு ஃபுல் சரக்கு அடிப்பாராம், ஆனால் தற்போது சுத்தமாக விட்டுவிட்டாராம் [[வாழ்த்துக்கள் சுதன்]]


சவேரா கார் அதிவேகமாக சறுக்கியது நெடுஞ்சாலையில், ராத்திரி நேரமாக இருந்தபடியால் அக்கம் பக்கம் பற்றி ஆபீசர் விவரித்தாலும் கண்களுக்கு தெரியவில்லை, நாளை பகலில் வரும்போது தெளிவாக பார்த்து கொள்ளல்லாம் என்று சற்று அலைச்சலின் மயக்கத்தில் இருந்தேன் ஆபீசர் உசுப்பிகொன்டே வந்தார்.

[[அருவியில் குளித்து விட்டு ரிலாக்ஸ்]]

நம்ம திவானந்தா சாமிகள் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை ஆபீசர் சொன்னார், அதாவது குறைந்தது ஒரு ஐம்பது அறுபது பெண்களுக்காவது நான்தான் அவள் மாப்பிளை என்று சீரியஸாக இருக்கும் வியாதி [[உயிர் போகும் நிலை]] உள்ளவர்களுக்கு ஆஸ்பத்திரியில் கையெழுத்து போட்டுள்ளாராம்....!!!

[[சத்தியமா இவர் போட்டுருக்குறது என் கண்ணாடின்னு நான் சொல்லவே மாட்டேன்]]

ஆபரேஷன் எல்லாம் முடிந்து இவர் கட்டிய பணத்தை கூட கொடுக்காமல் ஓடியவர்கள் உண்டாம், சரி நமக்கு இதுவும் புண்ணியமாகவே இருக்கும், ஒரு உயிரை காப்பாற்றினோமே என்று சமாதானம் சொல்லி கொள்வாராம்....!

[[லேசாக தடுக்கினால் அதள பாதாளம் தைரியமாக உட்கார்ந்து இருக்கிறார் நம்ம சுவாமிகள்]]

ஒருநாள் ஒரு பெண்ணுக்கு வயிற்றில் கட்டி, உடன் ஆபரேஷன் செய்யாவிட்டால் உயிருக்கு உத்தரவாதமில்லை என டாக்டர்கள் கூற, அந்த பெண்ணுடன் அவர் மகளும் வந்திருந்தாளாம், திவானந்தாவிடம் உதவி கேட்க....[[திவானந்தாவுக்கு டாக்டர் நண்பர்கள் அதிகமாம்]] 

[[அருவியில் குளிக்க ஆயத்தமாகிறார் சுவாமிகள்]]

அவரும் ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ண அங்கே அந்த பெண்ணின் மாப்பிளை கையெழுத்து கேட்க, மாப்பிளை உடனே வரமுடியாத நிலை, இங்கே கையெழுத்து போடலைன்னா உயிர்போகும் நிலை, பார்த்தார் நம்ம திவானந்தா நான்தான்ய்யா அவள் மாப்பிளைன்னு கையெழுத்து போட்டு உயிரை காப்பாற்றி இருக்கிறார்...!

[[இலையே இல்லாத பூச்செடி, திவானந்தா கழுத்து பக்கம் தெரிவது சண்முகபாண்டியின் கைகள்]]

அடுத்தநாள் ஆஸ்பத்திரி வந்த மாப்பிளை, பொண்டாட்டி நலமாக இருப்பதை தெரிந்து கொண்டு மகளிடம் கேட்டு இருக்கிறார், ஆமா ஆபரேஷன் செய்யனும்னா என் கையெழுத்து வேணுமே இவங்க எப்படி ஆபரேஷன் செய்தார்கள் என கேட்க, மகள் திவானந்தா பெயரை சொல்ல, கடுப்பானவன் அங்கேயே சண்டை போட்டுருக்கான் உனக்கு நான் மாப்பிளையா இல்லை அவன் மாப்பிளையா என்று ஒரு கலவரமே பண்ணி இருக்கான்...!!

[[சுவாமிகளின் காதில் பூ சுற்றல் நடக்கிறது]]

கொய்யால உன் பொண்டாட்டி உயிரை காப்பாத்துனதுக்கு நன்றி சொல்வியா அதைவிட்டுட்டு ராஸ்கல், திவானந்தா நல்ல மனசுக்காரன்ய்யா.....!!!

கார் இன்னும் வேகமாக சறுக்கும்.........

டிஸ்கி : போன பதிவு கொஞ்சம் [[நிறைய]] நீளமாகி போனதால் விக்கி என்ற பக்கி, இன்னும் ஒரு நாய் நக்கி என்ற பக்கி'யாலும் சுருக்கமாக சொல்லுறேன் கொஞ்ச கொஞ்சமாக....

டிஸ்கி : போட்டோக்களுக்கு நன்றி விஜயன்...!


48 comments:

 1. வணக்கம் மக்கா

  ஒரு முடிவோடதான் இருகிங்க போல

  ReplyDelete
 2. //அன்றைக்குத்தான் நெல்லையப்பர் கோவிலை பார்த்தேன், //

  'சாமி' படம் பாத்ததே இல்லையா?

  ReplyDelete
 3. //இடையில் ஒரு ஹோட்டல் முன்பு கார் நின்றது, அங்கே இருந்து சிக்கன் கறியும், சப்பாத்தியும் இன்னும் பிற சாப்பாட்டு ஆயிட்டங்களும் காரில் வலுகட்டாயமாக ஏற்றப்பட்டன, //

  என்ன ஒரு டீடெய்லிங்.

  ReplyDelete
 4. //சத்தியமா இவர் போட்டுருக்குறது என் கண்ணாடின்னு நான் சொல்லவே மாட்டேன்]//

  மிஷ்கின் கண்ணாடிய தொலைச்சிட்டு ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காரு. அசப்புல அதே கண்ணாடி மாதிரியே இருக்கே!!

  ReplyDelete
 5. உயிரை காப்பாத்தினத கூட நினைக்காம சண்டை போடுராங்களா?

  ReplyDelete
 6. திவானந்தாவின் சேவைக்கு வணக்கங்கள்.

  ReplyDelete
 7. //திவானந்தாவுக்கு டாக்டர் நண்பர்கள் அதிகமாம்]] //

  டாக்டர பிரகாஷ்?

  //டிஸ்கி : போன பதிவு கொஞ்சம் [[நிறைய]] நீளமாகி போனதால்//

  அப்படி ஒண்ணும் நீளம் இல்லை. சீனப்பெருஞ்சுவரை விட 4 மீட்டர் கம்மிதான்.

  ReplyDelete
 8. கதை..
  திரைக்கதை..


  நீளட்டும்...

  ReplyDelete
 9. என்னே ஒரு பதிவு...அய்யயோ என்னய தோக்கடிக்க பாக்குறான் ஹெஹெ!

  ReplyDelete
 10. மனசாட்சி said...
  வணக்கம் மக்கா

  ஒரு முடிவோடதான் இருகிங்க போல//

  முடிவில்லாமல் இருப்பது நல்லதில்லை நண்பா ஹி ஹி......

  ReplyDelete
 11. வெளங்காதவன்™ said...
  :-)

  #499?//

  ஆபீசர் வரும்வரை பொறுத்து கொள்ளவும்...

  ReplyDelete
 12. சிவகுமார் ! said...
  //அன்றைக்குத்தான் நெல்லையப்பர் கோவிலை பார்த்தேன், //

  'சாமி' படம் பாத்ததே இல்லையா?//

  சாமி படம் பார்க்கவும் நேரில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கா இல்லையா சொல்லுய்யா ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 13. சிவகுமார் ! said...
  //இடையில் ஒரு ஹோட்டல் முன்பு கார் நின்றது, அங்கே இருந்து சிக்கன் கறியும், சப்பாத்தியும் இன்னும் பிற சாப்பாட்டு ஆயிட்டங்களும் காரில் வலுகட்டாயமாக ஏற்றப்பட்டன, //

  என்ன ஒரு டீடெய்லிங்.//

  ஹி ஹி ஹி ஹி.....

  ReplyDelete
 14. சிவகுமார் ! said...
  //சத்தியமா இவர் போட்டுருக்குறது என் கண்ணாடின்னு நான் சொல்லவே மாட்டேன்]//

  மிஷ்கின் கண்ணாடிய தொலைச்சிட்டு ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காரு. அசப்புல அதே கண்ணாடி மாதிரியே இருக்கே!!//

  கொய்யால என் கண்ணாடி விலை என்னா தெரியுமா ராஜா கி கி கி கி...

  ReplyDelete
 15. கோகுல் said...
  உயிரை காப்பாத்தினத கூட நினைக்காம சண்டை போடுராங்களா?//

  நன்றி கெட்ட உலகமடா சாமீ.....

  ReplyDelete
 16. சிவகுமார் ! said...
  திவானந்தாவின் சேவைக்கு வணக்கங்கள்.//

  வந்தனங்கள்....

  ReplyDelete
 17. சிவகுமார் ! said...
  //திவானந்தாவுக்கு டாக்டர் நண்பர்கள் அதிகமாம்]] //

  டாக்டர பிரகாஷ்?

  //டிஸ்கி : போன பதிவு கொஞ்சம் [[நிறைய]] நீளமாகி போனதால்//

  அப்படி ஒண்ணும் நீளம் இல்லை. சீனப்பெருஞ்சுவரை விட 4 மீட்டர் கம்மிதான்.//


  எலேய் இதுக்கு விக்கி என்ற பாக்கியே பரவா இல்லைன்னு நினைக்கிறேன் கிர்ர்ர்ரர்ர்ர்ர்......

  ReplyDelete
 18. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  கதை..
  திரைக்கதை..


  நீளட்டும்...//

  என்னய்யா தம்பி ரொம்ப நாளா ஆளையே காணோமே என்னாச்சு.....?

  ReplyDelete
 19. விக்கியுலகம் said...
  என்னே ஒரு பதிவு...அய்யயோ என்னய தோக்கடிக்க பாக்குறான் ஹெஹெ!//

  எலேய் கொய்யால சொல்வதை திருந்த சொல்றா மூதேவி ராஸ்கல்....

  ReplyDelete
 20. விக்கியுலகம் said...
  என்னே ஒரு பதிவு...அய்யயோ என்னய தோக்கடிக்க பாக்குறான் ஹெஹெ!//

  எலேய் கொய்யால சொல்வதை திருந்த சொல்றா மூதேவி ராஸ்கல்....

  ReplyDelete
 21. திவானந்தா பற்றிய மிக நல்ல தகவல் பகிர்வு.

  அனுபவியுங்க!

  ReplyDelete
 22. வணக்கம் மக்களே
  ஒரு கூட்டமாத்தான் கிளம்பி இருக்கீங்க போல...

  கிளப்புங்கள்....

  ReplyDelete
 23. இடையில் ஒரு ஹோட்டல் முன்பு கார் நின்றது, அங்கே இருந்து சிக்கன் கறியும், சப்பாத்தியும் இன்னும் பிற சாப்பாட்டு ஆயிட்டங்களும் காரில் வலுகட்டாயமாக ஏற்றப்பட்டன,
  >>>
  அதை ஏன் போட்டோ எடுத்து போடலை?!

  ReplyDelete
 24. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .....

  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

  யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மனோ...
  நீ தொல்லையை முடிச்சிட்டு...சேதி சொல்லு....

  அப்புறம் வாரேன்....

  ReplyDelete
 25. ///
  MANO நாஞ்சில் மனோ said...

  கவிதை வீதி... // சௌந்தர் // said...
  கதை..
  திரைக்கதை..


  நீளட்டும்...//

  என்னய்யா தம்பி ரொம்ப நாளா ஆளையே காணோமே என்னாச்சு.....?

  ///////


  நீங்கதானே கண்டுக்க மாட்டேங்கிறீங்க...

  ReplyDelete
 26. என்ன சரக்கு வாங்கினோம்கறதை பதிவுல போடவே இல்லை மனோ!இல்லை சரக்கடிக்கவேயில்லை என்று பொய் சொல்லப்போறீங்களா.....
  (நான் பலச்சரக்கை சொல்லவில்லை)

  ReplyDelete
 27. உயிர் காத்த நல்ல மனுசங்கள் எல்லாரையும் காட்டிக்கொண்டு கண்ணாடி கடன் கொடுத்த அண்ணன் வாழ்க!மகாதேவனுக்குப் பக்கத்தில் நின்றால் மக்கா உருப்படியான ஆள் என்று தெரியாதோ???

  ReplyDelete
 28. துண்டு கட்டும் போது கூட படம் பிடிச்சிருக்காங்கப்பா !

  ReplyDelete
 29. சென்னை பித்தன் said...
  திவானந்தா பற்றிய மிக நல்ல தகவல் பகிர்வு.

  அனுபவியுங்க!//

  ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 30. மகேந்திரன் said...
  வணக்கம் மக்களே
  ஒரு கூட்டமாத்தான் கிளம்பி இருக்கீங்க போல...

  கிளப்புங்கள்....//

  நல்லவேளை ஒரு மார்க்கமாத்தான் கிளம்பி இருக்கீங்கன்னு சொல்லாமல் விட்டீங்களே ஹி ஹி...

  ReplyDelete
 31. ராஜி said...
  இடையில் ஒரு ஹோட்டல் முன்பு கார் நின்றது, அங்கே இருந்து சிக்கன் கறியும், சப்பாத்தியும் இன்னும் பிற சாப்பாட்டு ஆயிட்டங்களும் காரில் வலுகட்டாயமாக ஏற்றப்பட்டன,
  >>>
  அதை ஏன் போட்டோ எடுத்து போடலை?!//

  நல்ல இருட்டுல எப்பிடிம்மா தங்கச்சி போட்டோ எடுக்குறது மணி ராத்திரி எட்டுன்னு நினைக்கிறன்..

  ReplyDelete
 32. NAAI-NAKKS said...
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .....

  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

  யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மனோ...
  நீ தொல்லையை முடிச்சிட்டு...சேதி சொல்லு....

  அப்புறம் வாரேன்....//

  அண்ணே உங்க ஊர் பக்கத்துல பெரிய மலை ஏதும் இருக்கா ஹி ஹி....

  ReplyDelete
 33. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  ///
  MANO நாஞ்சில் மனோ said...

  கவிதை வீதி... // சௌந்தர் // said...
  கதை..
  திரைக்கதை..


  நீளட்டும்...//

  என்னய்யா தம்பி ரொம்ப நாளா ஆளையே காணோமே என்னாச்சு.....?

  ///////


  நீங்கதானே கண்டுக்க மாட்டேங்கிறீங்க...//

  யோவ் ஆளையே காணோம்னு புலம்புறேன், கண்டுக்கமாட்டேன்னு சொல்றதுக்கும் நான் கெட்டதுக்கும் லாஜிக்கே இல்லையே...?

  ReplyDelete
 34. வீடு K.S.சுரேஸ்குமார் said...
  என்ன சரக்கு வாங்கினோம்கறதை பதிவுல போடவே இல்லை மனோ!இல்லை சரக்கடிக்கவேயில்லை என்று பொய் சொல்லப்போறீங்களா.....
  (நான் பலச்சரக்கை சொல்லவில்லை)//

  பச்சைபுள்ளைங்களை பார்த்து இப்பிடி கேக்குறீங்களே இது உங்களுக்கே நியாயமா இருக்கா ம்ஹும், விக்கி கூட இருந்தாலாவது ஒரு நியாயம் இருக்கு ஹி ஹி...

  ReplyDelete
 35. தனிமரம் said...
  உயிர் காத்த நல்ல மனுசங்கள் எல்லாரையும் காட்டிக்கொண்டு கண்ணாடி கடன் கொடுத்த அண்ணன் வாழ்க!மகாதேவனுக்குப் பக்கத்தில் நின்றால் மக்கா உருப்படியான ஆள் என்று தெரியாதோ???//

  ஜெயிலுக்கு போக பயமா இருக்குய்யா மக்கா...

  ReplyDelete
 36. மோகன் குமார் said...
  துண்டு கட்டும் போது கூட படம் பிடிச்சிருக்காங்கப்பா !//

  எந்த துண்டோ...?

  ReplyDelete
 37. FOOD NELLAI said...
  //ஒரு பார்சலை கொண்டு வந்தார் //


  என்னன்னு சொல்லவே இல்லை!//

  என்ன ஆபீசர் நீங்க? அருவாள் பார்சல் வந்ததையும், வேட்டையாட துப்பாக்கி கொண்டு போனதை
  எல்லாம் சொல்லவா முடியும் நீங்க வேற ம்ஹும்.

  ReplyDelete
 38. FOOD NELLAI said...
  // எதுக்குலேய் இந்த நேரத்துல இப்பிடி ஓடி வருதே'ன்னு கேட்டா இல்லை பைப்புல தண்ணி வருதான்னு பாக்கப்போனேன்னு சொல்வாராம் //


  எந்த பைப்புல? # டவுட்டு!//

  ஹை ஆபீசர் டபுள் மீனிங்க்ல பேசுறார் ஹே......

  ReplyDelete
 39. FOOD NELLAI said...
  //அவரும் காரில் ஏறிக்கொண்டார் சுதனை பார்க்க அதிமுக ஆள் மகாதேவன் போல இருக்கிறார், //

  ஆள்களை உள்ளே வச்சுப்பார்க்கறதில என்ன ஒரு ஆனந்தமோ!//

  ஓ அதான் மனோ அவருகூட நின்னு போட்டோ எடுக்கலை போல ஹா ஹா ஹா ஹா தப்பிச்சுட்டோம்ல.....

  ReplyDelete
 40. FOOD NELLAI said...
  //சவேரா கார் அதிவேகமாக சறுக்கியது நெடுஞ்சாலையில், ராத்திரி நேரமாக இருந்தபடியால் அக்கம் பக்கம் பற்றி ஆபீசர் விவரித்தாலும் கண்களுக்கு தெரியவில்லை//


  மயக்கமென்ன அந்த மௌனமென்ன?//

  மணி மாளிகைதான் ஆபீசர்.........

  ReplyDelete
 41. FOOD NELLAI said...
  //குறைந்தது ஒரு ஐம்பது அறுபது பெண்களுக்காவது நான்தான் அவள் மாப்பிளை என்று சீரியஸாக இருக்கும் வியாதி [[உயிர் போகும் நிலை]] உள்ளவர்களுக்கு ஆஸ்பத்திரியில் கையெழுத்து போட்டுள்ளாராம்....!!!//


  கையெழுத்து போட்டாரா கணவனே ஆயிட்டாரா? ஹா ஹா ஹா//

  அது அந்த சுவாமிகளுக்கே வெளிச்சம் ஹி ஹி....

  ReplyDelete
 42. FOOD NELLAI said...
  // கடுப்பானவன் அங்கேயே சண்டை போட்டுருக்கான் உனக்கு நான் மாப்பிளையா இல்லை அவன் மாப்பிளையா என்று ஒரு கலவரமே பண்ணி இருக்கான்...!!//


  நியாயம்தானேங்க!//

  ஹா ஹா ஹா ஹா உயிர் போயிருந்தா....

  ReplyDelete
 43. FOOD NELLAI said...
  //MANO நாஞ்சில் மனோ said...
  வெளங்காதவன்™ said...
  :-)

  #499?//

  ஆபீசர் வரும்வரை பொறுத்து கொள்ளவும்...//
  இதுக்கு நான் எதுக்குய்யா? இப்படி கோர்த்து விடுறீங்களே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

  அப்போ இதுக்கு அண்ணன் விஜயன் அவர்கள் பதில் சொல்வாராக ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 44. FOOD NELLAI said...
  //NAAI-NAKKS said...
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .....

  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

  யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மனோ...
  நீ தொல்லையை முடிச்சிட்டு...சேதி சொல்லு....

  அப்புறம் வாரேன்....//


  நேற்றும் இப்படி சொல்லிட்டு வர எப்படித்தான் உங்களுக்கு மனசு வருதோ!//

  அவரு மலையில இருந்து குதிப்பாராம், நான் பிளேனுக்கு அடியில தலையை குடுக்கனுமாம் அவர்தான் சொன்னார் ஹி ஹி...

  ReplyDelete
 45. FOOD NELLAI said...
  //வீடு K.S.சுரேஸ்குமார் said...
  என்ன சரக்கு வாங்கினோம்கறதை பதிவுல போடவே இல்லை மனோ!இல்லை சரக்கடிக்கவேயில்லை என்று பொய் சொல்லப்போறீங்களா.....
  (நான் பலச்சரக்கை சொல்லவில்லை)//

  நீங்க சரக்கைப்பற்றித்தான் ரொம்ப கவலைப்படுறீங்க போல!//

  25 இ பி பிகர்களையும் சரக்கு என்று சொன்னதை நான் வன்மையாக கண்டித்து வேகமாக வெளிநடப்பு செய்கிறேன்.....

  ReplyDelete
 46. நாஞ்சில் மனோ குளிக்கும் கண்கொள்ளா காட்சியை (ஷகீலா ரேன்சுக்கு) பதிவுலக நண்பர்களுக்காக மிகவும் ரிஸ்க் எடுத்து (என்னுடைய கேமிராவின் லென்ஸ் புகைந்தாலும் பரவாயில்லை என்று)எடுத்த புகைப்படத்தை சென்சார் செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

  ReplyDelete
 47. என்ன ஒரு அபார ஞாபக சக்தி உமக்கு. இன்ச் பை இன்சாக எவ்வளவு அழகாக எழுதுகிறீர். இதே ஞாபக சக்தியை நீர் பள்ளியில் உபயோகப்படுத்தியிருந்தால் இந்நேரம் நீர் கலெக்டர் ஆகியிருக்கலாம் பதிவுலக அவதார புருசரே.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!