Showing posts with label "தக்காளி" என்னை போடா வெண்ணை என்றான். Show all posts
Showing posts with label "தக்காளி" என்னை போடா வெண்ணை என்றான். Show all posts

Sunday, May 29, 2011

"தக்காளி" என்னை போடா வெண்ணை என்றான்

வாழ்க்கையில் நொந்து நூடுல்ஸ் ஆன ஒருவன், கடவுள்ட்ட போயி ஆண்டவா ஏன் என்னை இப்பிடி சோதிக்குற எனக்கு ஒரு ரெண்டு லட்சரூபாய் பணம் குடு என கேட்க, கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் டுர்ர்ர்ர் சவுண்டுக்கு அப்புறம் கடவுளும் தோன்றினார்.


கடவுள் அவனிடம் கேட்டார் உனக்கு ரெண்டு லட்சம் பணம் வேணும்னா உன் ரெண்டு கையையும் தா, அஞ்சி லட்சம் வேணும்னா உன் ரெண்டு காலையும் தா, ஒரு கோடி பணம் வேணும்னா உன் ரெண்டு கண்ணையும் தா, அஞ்சி கோடி பணம் வேணும்னா உன் மூளையை தா, 


பத்து கோடி பணம் வேணும்னா உன் நாக்கை தா, இருவது கோடி பணம் வேணும்னா உன் கிட்னியை தா, முப்பது கோடி பணம் வேணும்னா உன் செவியை தா, என அடுக்கி கொண்டே போன கடவுளை பார்த்து இவன் கேட்டான், 


சாமீ நான் அம்புட்டு விலை உயர்ந்தவனா என கேட்டு ஆச்சர்யப்பட்டான்...!!! கடவுள் சொன்னார், போடா வெண்ணை போய் ஒழுங்கா சோம்பேறியா சுத்தாம வேலையை பாரு'ன்னு [[சிபி'யை நினைவில் கொண்டு இதை படிக்கவும் ராஸ்கல் பிட்டு படம் பார்த்துட்டு ஒழுங்கா வேலைக்கு போகமாட்டேங்குறான் மூதேவி]]


இன்னொரு தருதலையும் [[தக்காளி அல்ல]] கோவிலுக்கு ஓடினான் பஞ்சமடைந்து, கடவுளே கையிலே அஞ்சி பைசா இல்லை எனக்கு லாட்டரி அடிக்க செய் என்று மனமுருகி வேண்டினான், 


அடுத்தமுரையும் ஓடினான் கோவிலுக்கு, ஆண்டவா தாங்க முடியலை பிட்டு படம் பார்க்க கூட கையில காசு இல்லை ஆகவே எனக்கு லாட்டரி அடிக்க செய் என்று பணிந்து வேண்டினான். 


அடுத்தும் ஓடினான் கடவுளே தாங்க முடியலை ஏன் பொண்டாட்டி பணம் கொண்டு வந்தால்தான் சாப்பாடு தருவேன்னு சொல்லி என்னை விரட்டுகிறாள், இப்பவாவது ஒரு லாட்டரி அடிக்க செய்யுன்னு வேண்டினான்.


இனியும் ஓடினான் கோவிலுக்கு ஐயோ ஐயோ ஆண்டவா என் பொண்டாட்டி பிள்ளைகளெல்லாம் பட்டினி கிடந்தது பசியால் வாடுது கடவுளே என்னால் சாவுரதை தவிர வேறே வழியே இல்லை இப்பவாவது லாட்டரி அடிக்க செய் என கதறினான்.


சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என சவுண்ட் எஃபக்ட்டோடு கடவுள் தோன்றினார், தோன்றிவிட்டு சொன்னார், எலேய் நாதாரி லாட்டரி அடிக்கணும் லாட்டரி அடிக்கணும்னு வேண்டிக்கிறியே, போடா வெண்ணை போயி முதல்ல லாட்டரி சீட்டு எடுடா மூதேவி, லாட்டரி சீட்டு எடுக்காமலே வந்து லாட்டரி அடிக்கணும் அடிக்கணும்னு லந்து பண்ணுறியே ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி என திட்டி அனுப்பினார்.


நீதி : செய்வதை திருந்த செய் ஹி ஹி ஹி ஹி எப்பூடி....!!!

டிஸ்கி : என்னாது தலைப்பா....?? அதாவது தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதுதான் இப்போதைய டிரென்ட்டாம், மூதேவி சிபி சொன்னான் ஹி ஹி அதான்.....

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!