Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Friday, April 15, 2011

அஞ்சலி

பலமொழி பாடகி சின்னகுயில் சித்ரா'வின் குழந்தையின் மறைவுக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்....


பதினைந்து வருடம் தவமிருந்து பெற்ற பிள்ளை, எனக்கு நெஞ்செல்லாம் பதறுகிறது. ஆண்டவா அக்குடும்பத்திற்கு ஆறுதல் கொடு. அடுத்த
வெள்ளிகிழமை திருவனந்தபுரத்தில் புதிதாக கட்டியுருந்த வீட்டில் குடியேற இருந்தாராம் சித்ரா. வீட்டின் பெயர் "நந்தனம்" மகளின் பெயர் "நந்தனா"...



அடுத்து, நம்ம நீரா ரா[வு]டியா ஸ்பெக்ட்ரம் ஊழலில் சரத்பவாருக்கும் பங்கு இருக்குன்னு அந்தாளையும் மாட்டி விட்ருச்சி ஹா ஹா ஹா ஆக எல்லாருமே கள்ள பசங்கதான் போல...

அசாம் சட்டசபை தேர்தலில், பிரதமர் மன்மோகன் சிங் ஓட்டளிக்காதது கவலை அளிக்கிறது' என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார்.


பிரதமருக்குதான் காதே கேக்காதே.....





மும்பை: "ஓட்டு வாங்குவதற்காக பணம் கொடுத்து, வாக்காளர்களின் பெருமையை சீர்குலைத்ததற்கு, அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சித் தலைவர்களுமே பொறுப்பேற்க வேண்டும். அரசியல்வாதிகள் முறைகேடாக, ஏராளமாக கறுப்புப் பணம் ஈட்டுகின்றனர். ஆனால், அந்த கறுப்புப் பணத்தில், குறிப்பிட்ட சிறிய தொகையை மட்டுமே வாக்காளர்களுக்கு கொடுக்கின்றனர்' என, காந்தியவாதியும், சமூக சேவகருமான அன்னா ஹசாரே கூறியுள்ளார்.


சரியா சொன்னீங்க ஐயா....


நடிகர் பிரபுதேவா - நடிகை நயன்தாரா இடையேயான காதலில் முறிவு ஏற்பட்டு விட்டதாகவும், நடிகை ஹன்சிகா மோத்வானி - பிரபுதேவா இடையே காதல் அரும்பி விட்டதாகவும் கோடம்பாக்கத்தில் திடீர் பரபரப்பு செய்தியொன்று உலவ ஆரம்பித்துள்ளது.


கருமாந்திரம் பிடிச்சவங்க போங்கடா கொய்யால....




சரி இனி நடந்த ஒரு ஜோக்....
கல்யாணத்திற்கு முன்பு நடந்தது...எனது நண்பன் வீட்டில் லீவு நாட்களில் எல்லா நண்பர்களும் ஒன்றாய் கூடி தண்ணி அடிச்சி கூத்தடிப்பது வழக்கம். அவன் அப்பா இறந்து போனதால் அம்மா மட்டும்தான் [[எப்பவாவது குடிக்கிறதுனால அம்மா ஒன்னும் சொல்லமாட்டாங்க]] எனவே எங்களை  எல்லாம் அவங்க பிள்ளை மாதிரிதான் நடத்துவாங்க,

அப்பிடி ஒரு நாள் நண்பர்கள் கூடினோம். எட்டு பீர் [[பாட்டல்]] மூணு குவாட்டர் [[மானிட்டர் மாதிரி]] வாங்கி மேசையில் வைத்து விட்டு ரெடி ஆனோம். இதை நண்பனின் அம்மாவும் கவனித்து கொண்டிருந்தார்கள், அப்போது நண்பன் ஒரு பீர் பாட்டலை கையில் எடுத்து பல்லால் கடித்து [[நமக்கு ஓப்பனர் பல்லுதான் அப்போது]] திறக்க முயற்ச்சிக்க...

 அவன் அம்மா ஓடி வந்து பாட்டலை பிடுங்கி விட்டு சொன்னார்கள், எய்யா.......இந்த பெரிய [[பீர்]] பாட்டலை குடிக்காதேய்யா இந்தா இந்த சின்ன பாட்டலை குடி என்று குவாட்டர் பாட்டலை எடுத்து குடுக்க....நண்பன் "ங்கே"........நாங்கெல்லாம் சிரிச்ச
சிரிப்பிருக்கே...அந்த சிரிப்பு, எப்போ  அவனை பார்த்தாலும் சொல்லி சிரிப்போம்....

Sunday, February 13, 2011

அஞ்சலி

உன்னை எண்ணும் வேளையில்
காரிருள் என்னுள் பரவுதடி
அதற்குள் உன்னை ஏன் தேடுகிறேன்...
நீ
கிடைக்க மாட்டாய் என தெரிந்தா...
கடும் இருளில் இருந்த என்னை
வெளிச்சம் காண்பித்து விட்டு...
நீ
காரிருளில் கரைந்து போனதென்ன
அந்த இருளில் உன்னை தேடி
கரையும் என் மனசு
யாருக்கு தெரியும் உன்னை தவிர...
நீ
தீண்டி விட்டு போன
இந்த உடல் தகிக்க
என்னை ஏங்க வைத்து போனதென்ன...
நீ
உன்னை காண எதிர் பார்த்து
முன்பு  ஏழு ஜென்மம் ஏங்கினேன்
பாடலை என்னோடு சேர்ந்து ரசித்தாயே
அது இதற்குத்தானா....
நீ
வாங்கிய சத்தியம்
என் இதயத்தை கீறி ரணம் செய்கிறதே
அதற்கும் மருந்தாய்தான்
அத்தனை முத்தம் தந்தாயோ...
நீ
சுலபமாய் சாம்பலாகி விட்டாய்
என்னையும் சாம்பலாக்கி விடு...
ஆனால் அந்த ஒற்றை பனை மரம்
உன் மறைவுக்கு பின் இன்னும்
கனி கொடுக்கவில்லையடி............!!!!
 
 
காதலர் தினம் : இந்த கவிதை உருவாக காரணமானவளுக்கு  என் அஞ்சலி....

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!