ஊருக்கு போகணும் என்கிற சண்டை மும்முரமா நடந்துட்டு இருக்கு எனக்கும் அரபிக்கும். அதுவும் இல்லாமல் புது ஹோட்டல் வேற எடுத்து இருக்கான் எங்க அரபி. ஹோட்டல் டூ ஹோட்டல் ஷிப்டிங் நடந்துட்டு இருக்கு. பர பர பிஸியா இருக்கேன் நான் [[ எவம்லேய் அது அருவாளை தேடுறது ம்ஹும் ]]
இன்னைக்கி அரபியை மடக்கி பிடிச்சு எனக்கு ஒரு பதில் சொல்லாம இந்த அருவாளை தாண்டபுடாதுன்னு கட்டையை போட்டேன் [[ஏண்டா பொய் சொல்றே]] அப்புறமா பயந்து ஒரு டேட் சொல்லி இருக்கான் ஊர் போறதுக்கு ஹி ஹி...
நண்பன் ராபர்ட்டுக்கு போன் போட்டு சொன்னென் அண்ணே 00/00/0000 இந்த டேட்டுக்கு புக் பண்ணுங்கன்னு. என்னாது டேட்ட சொல்லனுமா...??? நோ நோ நோ பிள்ளைகளே, மும்பை ஏர்போர்ட் நாறி போவதை நான் விரும்பாததாலும், கொலைவெறி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முயற்சி நடப்பதாகவும் உளவு துறை [[உணவு துறை அல்ல]] ரகசிய தகவல் வந்திருப்பதாலும், நோ டேட்.
எனக்கு இன்னொரு பயம் என்னன்னா, என் வீட்டுக்காரம்மா என் பதிவுகளை எல்லாம் ரகசியமா படிச்சிட்டு கடுப்புல ஏர்போர்ட்'ல அருவாளோட வந்துருவாளோ'ன்னு நடுக்கமா இருக்கு ஹி ஹி... சீவலப்பேரி பக்கத்து ஊர் அலங்காரப்பேரி ஆள் ஆச்சே, அதான் இப்பமே கிலோ கணக்குல ஐஸ் அம்பாரத்தையே வச்சிட்டு இருக்கேன் தலையில கொஞ்ச கொஞ்சமா....
இந்த பிஸி'களுக்கு நடுவுல நண்பர் ரவிகுமார் "பதிவர்" போன் பண்ணுனார். என்னய்யா ஃபிரியா...? என்ன பண்ணிட்டு இருக்கீங்க..? நான் பண்றதைதான் பண்ணிட்டு இருக்கேன் சொல்லுங்க, ரவி : லேப்டாப்பை வச்சியே ஒரு பதிவை தேத்தி புட்டீங்களேன்ன்னு வாழ்த்தி கமெண்ட்ஸ் போடலாம்னு நினச்சேன், சரி பக்கத்துலதானே இருக்கீங்கன்னு கமெண்ட்ஸ் போடாம போன்லயே வாழ்த்தலாம்னு போன் பண்ணுனேன் [[அவ்வ்வ்வ்வ்வ்]] [[கமெண்ட்ஸ போடுய்யா அப்போதானே லைம் லைட்டுக்கு வரமுடியும்]]
நான் : ஹி ஹி ஹி ஹி, ரவி : இன்னைக்கு ராத்திரி ஃபிரியா இருக்கீங்களா..? [[பிரியா அல்ல]] நான் : ஆமாய்யா ஒம்பது மணிக்கு மேல ஃபிரிதான். ரவி : அப்போ ராத்திரி நம்ம ரூமுக்கு வந்துருங்க மங்களம் பாட [[அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்]] நான் : வாரேன் வாரேன்....!!!
அடுத்து ஃபிரன்ட் ஆபீஸ்ல ஒரு குவைத்தி அரபி கூட வாய்க்கா வரப்பு சண்டை நடந்து முடியவும் போன், யாருன்னு பார்த்தா நம்ம "கலியுகம்"தினேஷ். அண்ணே ஃபிரியா இருக்கீங்களா [[டேய்]] நான் : ஃபிரியா இல்லை டை கட்டிட்டுதான் இருக்கேன் சொல்லுங்க...
அண்ணே இன்னைக்கு நீச்சல் குளத்துல குளிக்க வரட்டுமா அண்ணே [[ஹி ஹி]] நான் ; ராசா ஹோட்டலே கைவிட்டு போகுது, இனி புது ஹோட்டல்ல போயி ஆரம்பிப்போம் என்ன, இன்னைக்கு ரவி கூப்புட்டு இருக்கார் அங்கே போறேன். தினேஷ் : சரிண்ணே.
ஏற்கெனவே நானும் தினேஷும் நீச்சல் குளத்துல குளிச்சி நாரடிச்சது வேற நடந்தது தனி கதை.....நீச்சல் குளம் எங்கள் ஹோட்டல் மொட்டை மாடியில் இருக்கு. நீச்சல் அடிச்சி குளிச்சா உடம்புக்கு நல்லாத்தான்யா இருக்கு...!!! மனைவியை பிரிஞ்சி வந்த சோகத்தை எல்லாம் அந்த தண்ணி தொட்டிகுள்ளே கொட்டி பொங்க வச்சாரு தினேஷ்....
அடுத்து எங்க முதலாளி வந்து என்கூட பிஸியா பேசிட்டு இருக்கும் போது நம்ம ஆபீசர் சாட்டிங்க்ல வந்தாரு, குட் ஈவ்னிங். நான் : ஆபீசர் நான் பிஸியா இருக்கேன் அப்பாலிக்கா போன் பண்றேன்னு கட் பண்ணிட்டு, முதலாளிகிட்டே பேசிட்டு இருக்கும் போதே போன், எடுத்தா நண்பன் சதீஷ் [[நல்ல நேரம் சதீஷ் அல்ல]] என்ன மனோஜ் நீங்க ஃப்ரீயா...??? [[கொய்யால]] நான் : @#@#%&@#$%%%@@@, . . . . சதீஷ் போனை தூக்கி கடாசும் சத்தம் கடபுடான்னு கேட்டுச்சு.
எங்க அரபி முதலாளி எடுத்தான் பாருங்க ஓட்டம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இன்னைக்கு தேதி 02/06/11 மீதி ரவிகுமார் வீட்டுக்கு போயிட்டு வந்து சொல்றேன் நாளைக்கு ஹி ஹி ஹி ஹி...
இன்னைக்கு தேதி 03/06/11
நேற்று ரவி வீட்டுக்கு போனேன் அங்கே கீர்த்தி வாசன், ரமேஷ், வெங்கட் என மூன்று நண்பர்களை அறிமுக படுத்தினார் ரவி, ரொம்ப நாள் பழகிய நண்பர்கள் போல நல்ல ஜாலியாக பேசி பழகினார்கள்...!!! செமையான அலப்பறை நடந்துச்சு, கொலைவெறி, சொல்வெறி, எகனை மொகனைவெறி, சாப்பாடு வெறி, என செம ஜாலியா நடந்ததை நாளை சொல்றேன் ஏன்னா பதிவு நீளம் கூடி போச்சின்னு "தக்காளி" துப்பாக்கியை தூக்கிட்டு வந்துரப்போறான்....!
கருப்பு சட்டை கீர்த்தி வாசன், அடுத்து வெங்கட், ரவிகுமார், ரமேஷ் [[சிரிப்பு போலீஸ் ரமேஷ் அல்ல]]
டிஸ்கி : அலப்பறை தொடரும்....





