Showing posts with label கேரளா ஹவுஸ் மேட். Show all posts
Showing posts with label கேரளா ஹவுஸ் மேட். Show all posts

Tuesday, February 8, 2011

கேரளா ஹவுஸ் மேட்

எங்க ஹோட்டல்ல புதுசா ஒரு மலையாளி டாக்டர் குடும்பம் தங்கியிருக்காங்க. அவங்களுக்கு ரெண்டு குழைந்தைங்க உண்டு. பிள்ளைகளை கவனித்து கொள்ளவும் சமைக்கவும் ஒரு ஹவுஸ் மேட் இருக்காங்க. இந்த ஹவுஸ்மேட் தங்கியிருப்பது  வெளியில் என்பதால் இந்த டாக்டர்கள் வெளியே போகும் போது ரூம் சாவியை என்னிடம் தந்து ஹவுஸ்மேட் வரும்போது அவளிடம் கொடுக்க சொல்வார்கள். இது தினம் நடக்கும் சங்கதி.
அந்த ஹவுஸ்மேட் கேரளா பத்தனம்திட்டா ஊர்காரர். இவர் தினமும் சாவி வாங்க வரும் போது சரளமாய் என்னோடு மலையாளத்தில் பேசுவார் நானும் பேசுவேன் [மலையாளத்தில்] நான் தினமும் படிக்கும் மலையாள மனோரமா [கேரளா நண்பன் படித்து விட்டு எனக்கு தருவான்] பேப்பரையும் கொடுப்பேன். நன்றாக சிநேகமாக பேசினாள் பேசுவாள். ஆனால் என் ஊர் எது என அவளும் கேட்க வில்லை நானும் சொல்லவில்லை [ஊமை குசும்பு] இப்படி ஒரு நாள் பேசிகொண்டிருக்கும் போதுதான் திடீரென கேட்டாள் உங்களுக்கு எந்த ஊர்னு [நாசமா போவ] தமிழ்நாடுன்னு சொன்னதுதான் தாமதம்...அவள் முகம் சுருங்கி மூக்கு விடைக்க தொடங்கியது. ஒன்னுமே  பேசாமல் போய்விட்டாள். எனக்கு மேட்டர் புரிஞ்சிடுச்சு [ஹா ஹா ஹா எத்தனை பேரை பாத்துருக்கோம்]
அடுத்த நாள் வந்தாள்.....என்னோடு ஒன்றுமே  பேசவில்லை பேப்பரை கொடுத்தேன் வாங்க வில்லை கோபமாக சாவியை கேட்டாள் கொடுத்தேன். நாலஞ்சு நாள் இது தொடர்ந்தது. நான் வலிய போயி பேசியும் ஒதுங்கி ஓடினாள் அப்புறம் நானும் ஒன்றும் சொல்வதில்லை அவளும் ஒன்றும் பேசுவதில்லை.
திடீரென நேற்று என் முன்னால் வந்து கண் கலங்கினாள். என்னாச்சுனு கேட்டேன். அது மனோ இப்போதான் என் முதலாளி உன்னை பற்றி சொன்னார் நீங்க தமிழன் என்று, நீங்க மலையாளி என்று நினைத்துதான் நீங்க தமிழ்நாடுன்னு [அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்] சொன்னபோது என்னை கேலி செய்கிறீர்கள் என நினைத்து எனக்கு கோபம் வந்து விட்டது மன்னித்து கொள்ளுங்கள் என்றாள். அட இது எனக்கு புதுசில்லை இப்பிடி அடிக்கடி நடப்பதுண்டுனு சொன்னேன். பயங்கரமா ஒரு சிரிப்பு சிரித்து விட்டு மறுபடியும் சாரி சொல்லிட்டு, நீங்க முதல்லையே சொல்லியிருக்கலாமே என்றாள். அட சேச்சி அதை சொல்லத்தான் நீங்க நேரமே தர்ரதில்லையே... உடனே கோபபடுகிறீர்களே நான் என்ன செய்ய முடியும் என்றேன். சிரித்து விட்டு போனாள்......... 
 
டிஸ்கி : இந்த அநியாயத்துக்கு ஒரு முடிவு சொல்லுங்கப்பா, வர்றவனெல்லாம் முதல்ல கேக்குற கேள்வி நீ மலையாளிதானேனு  கேட்டு சொன்னாலும் கொல்றானுவ சொல்லலைன்னாலும் கொல்றானுவ....அப்பவாவது ஆம்பிளைங்க, இப்போ இதோ பொம்பளைங்க கூடயும் அக்கப்போர் ஆரம்பிச்சாச்சு....எலேய் கோமாளி செல்வா நீ இங்கே வந்துருலே மக்கா.....

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!