Showing posts with label தமிழனை ஓரங்கட்டும் வட இந்திய ஊடகம். Show all posts
Showing posts with label தமிழனை ஓரங்கட்டும் வட இந்திய ஊடகம். Show all posts

Tuesday, March 8, 2011

தமிழனை ஓரங்கட்டும் வட இந்திய ஊடகம்

தமிழனை ஓரங்கட்டும் வட இந்திய ஊடகம்...

வட இந்தியர்களுக்கு தமிழரை பற்றிய அறியாமையும் இருக்கிறது என்றே எனக்கு கருத தோன்றுகிறது.
 இது இன்று நேற்றல்ல காலம் காலமாக நடந்து வரும் அநியாயம்.
ஒரே ஒரு உதாரணம் சொல்லுகிறேன் கேளுங்கள். நமது பாட புத்தகத்தில் வரலாறு புக்கில் அனைத்து
வட இந்திய மன்னர்கள், போராட்ட தியாகிகள் பற்றியும் அவர்கள் செய்த தொண்டும்  வீரம் பற்றியும் நம்
பாட புஸ்தகத்தில் உண்டு. அம்பேத்கர் முதல் கொண்டு திலகர் வரை நமக்கு தெரியும் அதே வேளை ....
வட இந்தியாவில் போயி கேட்டு பாருங்கள்...காமராஜரை, அண்ணாவை, கட்டபொம்மனை,
வவுசி'யை,மருது பாண்டியரை,கொடிகாத்த குமரனை, சேரனை, சோழனை, பாண்டியனை....தெரியுமான்னு...?
ஒரு நாதாரிக்கும் தெரியாது..[[மெத்த படிச்சவனுக்கும் தெரியுமோ தெரியாதோ]]
இதுக்கு முக்கிய காரணமே நம்ம ஆட்சியாளர்கள்தான்....தமிழை செம்மொழி ஆக்கியவர்கள் முதலில்
வட இந்திய பாட புஸ்தகத்தில் [[எப்பவோ செய்திருக்க வேண்டியது]] தமிழை பற்றி தமிழனை பற்றி தமிழன் வரலாறை பற்றி குணத்தை பற்றி,
வீரம், விவேகம்,காதல்,பற்றி சொல்ல தவறி விட்டார்கள்...[[அப்படி சொல்லபட்டால் வருங்கால
சந்ததியினர் இதை அறிந்து நம்மையும் மதிப்பார்கள்]]
ஆகவேதான் இன்றைக்கு தமிழன் சாகும் போது, தமிழை தமிழனை பற்றி தெரியாத சில மானங்கெட்ட  வட இந்தியா மீடியாக்கள்.. கண்டு கொள்வதில்லை..!!!! அதே வேளை சீக்கியனும், மற்ற வட இந்தியனும் சாகும் போது மட்டும் குய்யோ முய்யோ'ன்னு கத்துரானுக..
மொத்தத்தில் தமிழன் பெருமையை உணர்த்த, குறிப்பாக வட இந்தியாவில், நம் ஆட்சியாளர்கள் கோட்டை விட்டு விட்டார்கள்!!!!!!!
 
டிஸ்கி : நண்பன் கக்கு மாணிக்கத்தின் பதிவை படிச்சுட்டு எனக்கு வந்த கோபம் இது. அவருக்கு நான் போட்ட கமெண்ட்ஸ்'தான் இது. கொஞ்சம் விரிவு படுத்தி போட்டுருக்கேன்.
 
டிஸ்கி : நான் மும்பை'வாசி எனக்கு தெரியும், அனுபவித்து இருக்கிறேன். உதாரணமா தமிழன் என்று  சொன்னாலே ஒரு அடி கூடுதலாகவே கிட்டும் போலீசிடமிருந்து கூட......

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!