Showing posts with label பதிவர்களின் பதிவை படித்து வந்த ஃபீலிங் பார்ட் 3. Show all posts
Showing posts with label பதிவர்களின் பதிவை படித்து வந்த ஃபீலிங் பார்ட் 3. Show all posts

Tuesday, March 22, 2011

பதிவர்களின் பதிவை படித்து வந்த ஃபீலிங் பார்ட் 3

இதயசாரல்...
 
 
காற்றானாலும் உயிர்
ஊற்றானாளும் செந்தமிழே..!
உன்னையே சுவாசிப்பேன்.
 
இவர் ஒரு தமிழ்காதலன் இவரின் கவிதைகள், தமிழ் தேன்பொழியும் தேனூற்று...மனசுக்கு இதமாகவும் வலியாகவும், உவமை கொள்வதாகவும் இருக்கும்.
 
உணவு உலகம்...
குடிக்கும் தண்ணீரை பற்றி சாடியும், ஆலோசனையும் தந்திருக்கிறார். இவர் எழுத்தில் அதிகம் சமுதாயத்தை பற்றிய அக்கறை இருக்கும் இவருக்கு ஒரு ராயல் சல்யூட்....
 
 
பன்னிகுட்டி ராமசாமி....
 
வருங்கால சூப்பர் ஸ்டார் யாரென்று மிக சரியாக அடையாளம் காட்டிவிட்டார் இந்த ஆயிரம் கமெண்ட்ஸ் வாங்கிய அபூர்வ சிந்தாமணி. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...அப்பாடா ஏதோ நம்மால முடிஞ்சது.
 
அட்ரா சக்க....
சி பி செந்தில்குமார்...
 
எவ்வளவுதான் குண்டாந்தடி, உருட்டுகட்டை அடி வாங்கியும் மனுஷன் அசராமல் சினிமா விமர்சனம் போட்டு, சினிமா பார்ட்டிகளுக்கு எனிமா குடுத்துட்டு இருக்கார்னா ஆச்சர்யமா இருக்கு..!!! அதுவுமில்லாம அரசியல் சாக்கடைகளையும் போட்டு தாக்குறாரு....
 
ரோஜா பூந்தோட்டம்...
 
வைகோ, சீமான். நாஞ்சில் சம்பத். நெடுமாறன் என நீங்கள் ஒருங்கிணைத்து குரல் கொடுத்தால், 63 தொகுதிகளில் காங்கிரஸ் நடுநடுங்காதா?

அங்கீகாரம் பெறுவதற்கு 21 தொகுதிகளை கேட்கிறீர்கள். இங்கே 63 தொகுதிகள் உங்களுக்காக காத்திருப்பதை ஏன் மறந்து விட்டீர்கள்?
 
டிஸ்கி : இவர் வைகோ'வை பல கேள்விகளும், ஆலோசனையும் சொல்கிறார்.

கடைசி டிஸ்கி போட்டோ பன்னிகுட்டி'யை கடுப்பேத்த....



டிஸ்கி : பஹ்ரைனில் பதற்றம் குறைந்து நார்மல் நிலவரம் ஆகி வருகிறது. எங்களுக்காக துடித்த என் நண்பர்கள் தோழிகள் யாவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகளை உங்கள் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் நன்றி நன்றி மக்கா.....

 
 
 

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!