நான்கு வருடம் முன்பு பஹ்ரைனில் எனக்கு நடந்த சம்பவம்.
நான் அப்போ ஹோட்டலின் வரவேர்ப்பாளராக பணி புரிந்த நேரம்,
பொதுவாக சவூதி அரேபியாவில் வேலை செய்யும் இந்தியர்கள் என்ஜாய் பண்ணுவதற்கு பஹ்ரைன் வந்து போவதுண்டு, அப்பிடி ஒரு மலையாளி இஞ்சினியர் எங்கள் ஹோட்டலில் தங்கி இருந்தார். நான் டியூட்டியில் இல்லாத சமயம் அவர் வந்ததால் நான் அவரை பார்க்கவில்லை. மறுநாள் நான் வேலைக்கு [மாலை டியூட்டி] போன போது, எனது வேலையில் மும்முரமாக இருந்து கொண்டிருந்தேன்....
நீங்கள் சினிமாக்களில் பார்த்திருப்பீங்க அதாவது ஹோட்டல் ரிஷப்ஷனில் வேலை செய்பவர்களின் தலை, முகம் எப்போதும் கவுண்டருக்குள்ளேயே இருக்கும் பரபரப்பாக எதையோ செய்து கொண்டிருப்பார்கள்....வெளியே இருந்து பார்க்கும் நமக்கு அவர் ரொம்ப பிஸியா இருப்பதாக தோன்றும், ஆனால் உண்மையில் அது அவ்வளவு உண்மை இல்லை... ரிஷப்ஷனில் உள்ள அண்ணாச்சியோ அல்லது அண்ணாச்சினியோ வீடியோ கேம் அல்லது சாட்டிங் இன்னும் பிற விஷயங்களில் மும்முரமா இருப்பாங்க [ஏன் எங்க ஹோட்டலில் நீல படம் பாத்தவனையும் பிடிச்சிருக்கேன்]
சரி நாம் நம்ம விஷயத்துக்கு வருவோம், அந்த மலையாளி இஞ்சினியர் ரிஷப்ஷனில் உள்ள என்னிடம் வந்தார் [மப்பில்] வந்து என்னிடம் கேட்ட முதல் கேள்வி நீ மலையாளிதானே..? [இவங்க எங்கே போனாலும் இப்பிடித்தான் போல] நான் இல்லைஎன்று "மலையாளத்தில்" பதில் சொன்னேன்...அவரு ஷாக்காகி என்னை மேலேயும் கீழேயுமாக பார்த்தார் [இஞ்சினியர் ஆச்சே] அவருக்கு நான் கிண்டல் பண்ணுவது போல் தோன்றியது போல, இதுக்கு இடையில் நாசமா போன என் மலையாளி நண்பன் ஒருவனின் போன் வந்து தொலைக்க நான் மலையாளத்தில் சரளமாக உரையாட வந்தது வினை..இதை கவனித்த மலையாளி சேட்டன் கோபத்தின் உச்சாணி கொம்பில் ஏறி....ஏறி என்ன ஏறி சப்பணம் போட்டு உக்காந்தே விட்டார்....."விளிக்கிடா நின்றே மேனேஜரை" என மலையாளத்தில் சொல்லி விட்டு இங்கிலிபீஸில் காட்டு கத்தல் கத்த ஆரம்பிச்சிட்டார்.. இங்கிலிபீஸில் ஹோட்டலை பற்றி பல கேள்விகள் [கத்தல்கள்] கேட்டார் நானும் பொறுமையாக பதில் சொன்னேன். அப்புறம் திடீரென ஹிந்தியில் கேள்வி கேக்க நானும் ஹிந்தியில் பதில் சொல்ல அவருக்கு நான் செமத்தனமாக கேலி செய்கிறேன்னு நினைச்சிட்டாரு...இதற்கிடையில் செக்கூரிட்டி மேனேஜரை அழைத்து விட....
மேனேஜரும் வந்தார் அவரிடமும் அதே கேள்வி நீ மலையாளியா [நான் மனசுக்குள்ளே செமத்தனமா ரசிச்சுட்டு இருக்கேன் ஏன்னா நான் மலையாளி இல்லைன்னு உண்மையத்தானே சொன்னேன்] மேனேஜர் : ஆமா நான் மலையாளிதான் என்னாச்சுன்னு மலையாளத்திலே உரையாடல் [சண்டை] தொடங்கியது....இஞ்சினியர் என்னை கை காட்டி இவன் என்னை கிண்டல் செய்கிறான், நான் யாரு என் பேக்ரவுண்டு, பிரண்ட் ரவுண்டு என்ன.............ன்னு கத்தி தீர்க்கு மட்டும் பொருத்து விட்டு என்ன கிண்டல் செய்தான் என்று கேட்டார், அதுக்கு இஞ்சினியர் கோபமாக அவன் மலையாளிதானே..? நான் கேட்டதுக்கு அவன் மலையாளி இல்லைன்னு "மலையாளத்தில்" சொல்லுறான்னு சொல்ல.. மேனேஜர் வெடி சிரிப்பு சிரிக்க, இஞ்சினியர் "ங்கே".....
இஞ்சினியர் சேட்டன் முழிக்க, பிறகு மேனேஜர் சொன்னார் சாரே அவன் தமிழன், ஆனால் பஹ்ரைன் வந்து நல்லா மலையாளம் கத்து கொண்டான் எழுதவும் படிக்கவும் கூட தெரியும்னு .இங்கே இப்போ நடந்த மேட்டர் எங்களுக்கு புதுசில்லே..!!! பல முறை பல மலையாளிகள் இவனிடம் இதே மாதிரி கேட்டு பிரச்சினை நடந்ததுண்டு....அவன் ஆங்கிலத்தில் பேசினாலும் பிரச்சினை பண்ணுகிறார்கள்..அப்பிடி சொல்லி இஞ்சினியரை சமாளித்து அனுப்பினார்...போகும் போது சேட்டன் திரும்பி பார்த்து என்னை பார்த்து முறைச்சார் பாருங்க ஒரு முறைப்பு....ஆத்தீ இன்னும் நான் அவரை கிண்டல் பண்ணுவது போலவே பார்த்தார்....ஆனால் அவர் சந்தேகம்கடைசி வரை தீரவே இல்லை என்பது அவர் முறைப்பில் தெரிந்தது....
டிஸ்கி 1: பங்காளியிடம் மலையாளம் பேசிய சேட்டன்மார் பல பேர பார்த்துருக்கேன்....
டிஸ்கி 2 : ஏன் எனக்கு மட்டும் இப்பிடி நடக்குது....