Thursday, January 13, 2011

மலையாளி சேட்டன்

நான்கு வருடம் முன்பு பஹ்ரைனில் எனக்கு நடந்த சம்பவம்.
நான் அப்போ ஹோட்டலின் வரவேர்ப்பாளராக பணி புரிந்த நேரம்,
பொதுவாக சவூதி அரேபியாவில் வேலை செய்யும் இந்தியர்கள் என்ஜாய் பண்ணுவதற்கு பஹ்ரைன் வந்து போவதுண்டு, அப்பிடி ஒரு மலையாளி இஞ்சினியர் எங்கள் ஹோட்டலில் தங்கி இருந்தார். நான் டியூட்டியில் இல்லாத சமயம் அவர் வந்ததால் நான் அவரை பார்க்கவில்லை. மறுநாள் நான் வேலைக்கு [மாலை டியூட்டி] போன போது, எனது வேலையில் மும்முரமாக இருந்து கொண்டிருந்தேன்....
நீங்கள் சினிமாக்களில் பார்த்திருப்பீங்க அதாவது ஹோட்டல் ரிஷப்ஷனில் வேலை செய்பவர்களின் தலை, முகம் எப்போதும் கவுண்டருக்குள்ளேயே இருக்கும் பரபரப்பாக எதையோ செய்து கொண்டிருப்பார்கள்....வெளியே இருந்து பார்க்கும் நமக்கு அவர் ரொம்ப பிஸியா இருப்பதாக தோன்றும், ஆனால் உண்மையில் அது அவ்வளவு உண்மை இல்லை... ரிஷப்ஷனில் உள்ள அண்ணாச்சியோ அல்லது அண்ணாச்சினியோ வீடியோ கேம் அல்லது சாட்டிங் இன்னும் பிற விஷயங்களில் மும்முரமா இருப்பாங்க [ஏன் எங்க ஹோட்டலில் நீல படம் பாத்தவனையும் பிடிச்சிருக்கேன்]  
                    சரி நாம் நம்ம விஷயத்துக்கு வருவோம், அந்த மலையாளி இஞ்சினியர் ரிஷப்ஷனில் உள்ள என்னிடம் வந்தார் [மப்பில்] வந்து என்னிடம் கேட்ட முதல் கேள்வி நீ மலையாளிதானே..? [இவங்க எங்கே போனாலும் இப்பிடித்தான் போல] நான் இல்லைஎன்று "மலையாளத்தில்" பதில் சொன்னேன்...அவரு ஷாக்காகி என்னை மேலேயும் கீழேயுமாக பார்த்தார் [இஞ்சினியர் ஆச்சே] அவருக்கு நான் கிண்டல் பண்ணுவது போல் தோன்றியது போல, இதுக்கு இடையில் நாசமா போன என் மலையாளி நண்பன் ஒருவனின் போன் வந்து தொலைக்க நான் மலையாளத்தில் சரளமாக உரையாட வந்தது வினை..இதை கவனித்த  மலையாளி சேட்டன் கோபத்தின்  உச்சாணி கொம்பில் ஏறி....ஏறி என்ன ஏறி சப்பணம் போட்டு உக்காந்தே விட்டார்....."விளிக்கிடா நின்றே மேனேஜரை" என மலையாளத்தில் சொல்லி விட்டு இங்கிலிபீஸில் காட்டு கத்தல் கத்த ஆரம்பிச்சிட்டார்.. இங்கிலிபீஸில் ஹோட்டலை பற்றி பல கேள்விகள் [கத்தல்கள்] கேட்டார் நானும் பொறுமையாக பதில் சொன்னேன். அப்புறம் திடீரென ஹிந்தியில் கேள்வி கேக்க நானும் ஹிந்தியில் பதில் சொல்ல அவருக்கு நான் செமத்தனமாக கேலி செய்கிறேன்னு நினைச்சிட்டாரு...இதற்கிடையில் செக்கூரிட்டி மேனேஜரை அழைத்து விட....
    மேனேஜரும் வந்தார் அவரிடமும் அதே கேள்வி நீ மலையாளியா [நான் மனசுக்குள்ளே செமத்தனமா ரசிச்சுட்டு இருக்கேன் ஏன்னா நான் மலையாளி இல்லைன்னு உண்மையத்தானே சொன்னேன்] மேனேஜர் : ஆமா நான் மலையாளிதான் என்னாச்சுன்னு மலையாளத்திலே உரையாடல் [சண்டை] தொடங்கியது....இஞ்சினியர் என்னை கை காட்டி இவன் என்னை கிண்டல் செய்கிறான், நான் யாரு என் பேக்ரவுண்டு, பிரண்ட் ரவுண்டு என்ன.............ன்னு கத்தி தீர்க்கு மட்டும் பொருத்து விட்டு என்ன கிண்டல் செய்தான் என்று கேட்டார், அதுக்கு இஞ்சினியர் கோபமாக அவன் மலையாளிதானே..? நான் கேட்டதுக்கு அவன் மலையாளி இல்லைன்னு "மலையாளத்தில்" சொல்லுறான்னு  சொல்ல.. மேனேஜர் வெடி சிரிப்பு சிரிக்க, இஞ்சினியர் "ங்கே".....
          இஞ்சினியர் சேட்டன் முழிக்க, பிறகு மேனேஜர் சொன்னார் சாரே அவன் தமிழன், ஆனால் பஹ்ரைன் வந்து நல்லா மலையாளம் கத்து கொண்டான் எழுதவும் படிக்கவும் கூட தெரியும்னு .இங்கே இப்போ நடந்த மேட்டர் எங்களுக்கு  புதுசில்லே..!!! பல முறை பல மலையாளிகள் இவனிடம் இதே மாதிரி கேட்டு பிரச்சினை நடந்ததுண்டு....அவன் ஆங்கிலத்தில் பேசினாலும் பிரச்சினை பண்ணுகிறார்கள்..அப்பிடி சொல்லி இஞ்சினியரை சமாளித்து அனுப்பினார்...போகும் போது சேட்டன் திரும்பி பார்த்து என்னை பார்த்து முறைச்சார் பாருங்க ஒரு முறைப்பு....ஆத்தீ இன்னும் நான் அவரை கிண்டல் பண்ணுவது போலவே பார்த்தார்....ஆனால் அவர் சந்தேகம்கடைசி வரை  தீரவே இல்லை என்பது அவர் முறைப்பில் தெரிந்தது....
டிஸ்கி 1: பங்காளியிடம் மலையாளம் பேசிய சேட்டன்மார் பல பேர பார்த்துருக்கேன்....
டிஸ்கி 2 : ஏன் எனக்கு மட்டும் இப்பிடி நடக்குது....
       

40 comments:

 1. மலையாளி சேட்டனிடம் சேட்டையா

  ReplyDelete
 2. இதன் மூலம் நான் புரிந்து கொண்டது;
  அடடா! மலையாளி இல்லையென மலையாளத்தில் சொல்லக் கூடாது.
  நல்ல கூத்துத் தான்.

  ReplyDelete
 3. // ரிஷப்ஷனில் உள்ள அண்ணாச்சியோ அல்லது அண்ணாச்சினியோ வீடியோ கேம் அல்லது சாட்டிங் இன்னும் பிற விஷயங்களில் மும்முரமா இருப்பாங்க///

  ஹி ஹி ஹி .. இப்படி உண்மை மட்டுமே பேசும் மனோ அண்ணன் வாழ்க !

  ReplyDelete
 4. //அப்புறம் திடீரென ஹிந்தியில் கேள்வி கேக்க நானும் ஹிந்தியில் பதில் சொல்ல அவருக்கு நான் செமத்தனமாக கேலி செய்கிறேன்னு நினைச்சிட்டாரு...//

  ஹி ஹி ஹி .. நீங்க தமில்லையே பேசிருக்கணும் ?!

  ReplyDelete
 5. //டிஸ்கி 2 : ஏன் எனக்கு மட்டும் இப்பிடி நடக்குது....//

  பார்ரா அண்ணா டிஸ்கி கூட போடுறாரு ?

  ReplyDelete
 6. பாவம்தான் நீங்க !

  ReplyDelete
 7. மிகவும் நன்றாக உள்ளது.உங்களின் எழுத்து நடை அன்று நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு உணர்வு.. நகைச்சுவையாகவும்.. அருமையாகவும் எழுதி உள்ளீர்கள் மனோ..

  ReplyDelete
 8. சாரே நான் மலையாளி அல்ல

  ReplyDelete
 9. உங்களின் எழுத்து நடை நன்றாக உள்ளது.

  நல்ல நகைச்சுவை.

  ReplyDelete
 10. ஏலே கேட்டியாலே...... நம்ம நாஞ்சில் மனோ சாருக்கு - ஹிந்தி, மலையாளம், இங்கிலிபீசு , தமிழ் - எல்லாமே தெரியுமாலே.... அதுக்குன்னு ஒரு பதிவு போட்டு இருக்காருலே ....

  ReplyDelete
 11. அனைவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. தவறாமல் வருகை தந்து பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.பின்னூட்டங்களை அவசியம் படித்து ரசித்து அனுபவிக்க வேண்டும். இந்த இணைப்பில் சென்று பட்டங்களை பெற்றுக்கொளவும்.நன்றி.
  http://ponmaalaipozhuthu.blogspot.com/2011/01/blog-post_12.html

  ReplyDelete
 12. டிஸ்கி 1: பங்காளியிடம் மலையாளம் பேசிய சேட்டன்மார் பல பேர பார்த்துருக்கேன்....
  டிஸ்கி 2 : ஏன் எனக்கு மட்டும் இப்பிடி நடக்குது...

  டிஸ்கி 1 ; உண்மை.:))
  டிஸ்கி 2 : இல்லை, எனக்கும் இப்படி நடக்கும். ஆனா நா அறுதுப்புடுவேன். அறுதிருக்கேன். :))

  பொதுவா இவர்களை மேலே ஏற விடாம கொண்டு போகணும்.

  ReplyDelete
 13. செம சேட்டை தான்

  ReplyDelete
 14. //:) நல்ல நகைச்சுவை //
  நன்றி மக்கா...

  ReplyDelete
 15. //Super boss...//


  நன்றி திருமலை...

  ReplyDelete
 16. //மலையாளி சேட்டனிடம் சேட்டையா ///

  மதுரைக்கே மல்லியா.....ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 17. //இதன் மூலம் நான் புரிந்து கொண்டது;
  அடடா! மலையாளி இல்லையென மலையாளத்தில் சொல்லக் கூடாது.
  நல்ல கூத்துத் தான்///

  அப்போ நான்தான் பலிகடா ஆயிட்டேனா... அவ்வவ்வ்வ்வ்...

  ReplyDelete
 18. //ஹி ஹி ஹி .. இப்படி உண்மை மட்டுமே பேசும் மனோ அண்ணன் வாழ்க !///

  உன் வாழ்க கோஷத்தை நான் நம்ப மாட்டேனே.....
  நீ அதுல உள்குத்து வெளிகுத்து எல்லாமே கலந்து வச்சிருப்பே....

  ReplyDelete
 19. //பார்ரா அண்ணா டிஸ்கி கூட போடுறாரு ?//


  அய்யா தெய்வமே.....

  ReplyDelete
 20. //பாவம்தான் நீங்க !//
  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 21. //மிகவும் நன்றாக உள்ளது.உங்களின் எழுத்து நடை அன்று நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு உணர்வு.. நகைச்சுவையாகவும்.. அருமையாகவும் எழுதி உள்ளீர்கள் மனோ..//  ஆயியே ஆயியே நமஸ்தே நமஸ்தே ஜி, சுக்ரியா.....

  ReplyDelete
 22. //சாரே நான் மலையாளி அல்ல//

  அதே மலையாளி இஞ்சினியரை அனுப்புறேன், நீங்களே சொல்லிருங்க...
  எனக்கு அலுத்து போச்சி...

  ReplyDelete
 23. //உங்களின் எழுத்து நடை நன்றாக உள்ளது.

  நல்ல நகைச்சுவை///

  நன்றி ஆயிஷா...

  ReplyDelete
 24. //ஏலே கேட்டியாலே...... நம்ம நாஞ்சில் மனோ சாருக்கு - ஹிந்தி, மலையாளம், இங்கிலிபீசு , தமிழ் - எல்லாமே தெரியுமாலே.... அதுக்குன்னு ஒரு பதிவு போட்டு இருக்காருலே ....///

  ஆமாலே ஓடியாங்கலே ஹா ஹா ஹா ஹா......

  ReplyDelete
 25. //பொதுவா இவர்களை மேலே ஏற விடாம கொண்டு போகணும்///

  கரிக்கிட்டு..... ரையிட்டு...

  ReplyDelete
 26. //செம சேட்டை தான் //

  சேட்டன்கிட்டே சேட்டைன்னு சொல்லுங்க ஹா ஹா ஹா......

  ReplyDelete
 27. //செம காமெடி! ///

  ஹா ஹா ஹா ஹா நன்றி மக்கா....

  ReplyDelete
 28. //ஏலே கேட்டியாலே...... நம்ம நாஞ்சில் மனோ சாருக்கு - ஹிந்தி, மலையாளம், இங்கிலிபீசு , தமிழ் - எல்லாமே தெரியுமாலே.... அதுக்குன்னு ஒரு பதிவு போட்டு இருக்காருலே .... //

  அரபியும் தெரியும்லே அதை விட்டுட்டீங்களே மக்கா அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்......

  ReplyDelete
 29. //ங்ணா.. கலக்குங்ணா........... ///

  வாங்க தல... உங்க ஆசியோடு....

  ReplyDelete
 30. //ஏலே கேட்டியாலே...... நம்ம நாஞ்சில் மனோ சாருக்கு - ஹிந்தி, மலையாளம், இங்கிலிபீசு , தமிழ் - எல்லாமே தெரியுமாலே.... அதுக்குன்னு ஒரு பதிவு போட்டு இருக்காருலே //

  hahaha.....ரிப்பீட்டே...

  ReplyDelete
 31. //hahaha.....ரிப்பீட்டே..///

  ஆத்தீ என்னாது இது பெரிய தலையே வந்துருக்கே.....!!!
  [வாங்க மக்கா வாங்க]

  ReplyDelete
 32. இந்த மலையாளி மலையாளத்துல பேசி இருக்கான். டுபாய்’ல உள்ள மலையாளியெல்லாம் ஹிந்தி பேசியே கொல்ரானுங்க... நாம மலையாலத்துல பேசினாலும், ஹிந்திலதான் பேசுவானுங்க....

  ReplyDelete
 33. மலையாளி இல்லையென மலையாளத்தில் சொல்லக் கூடாது.//
  நல்லா பாடம் படிச்ச மாதிரி இருக்கு.

  ReplyDelete
 34. Mohamed Faaique said...
  இந்த மலையாளி மலையாளத்துல பேசி இருக்கான். டுபாய்’ல உள்ள மலையாளியெல்லாம் ஹிந்தி பேசியே கொல்ரானுங்க... நாம மலையாலத்துல பேசினாலும், ஹிந்திலதான் பேசுவானுங்க....///

  ஓ இப்பிடியும் நடந்துட்டு இருக்கா....

  ReplyDelete
 35. //இராஜராஜேஸ்வரி said...
  மலையாளி இல்லையென மலையாளத்தில் சொல்லக் கூடாது.//
  நல்லா பாடம் படிச்ச மாதிரி இருக்கு//

  இது ஒருக்கா நடந்த விஷயம் அல்ல தொடர்ந்து நடந்துட்டுதான் இருக்கு அவ்வ்வ்வ்....

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!