Tuesday, November 6, 2012

ஓடவைத்த கவிதையும், ஒரு சமையலும்...!

நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்பிடின்னு சொல்லிதரட்டுமா சிம்பிள்தான், ஒருகிலோ நெல்லிக்காய் வாங்கி வந்து நன்றாக சட்டியில் போட்டு தண்ணீரில் கழுவவேண்டும்.

அப்புறம் நல்ல தண்ணீர் சட்டியில் ஊற்றி நெல்லிக்காயை சற்று சூடு பண்ண வேண்டும், உப்பு கொஞ்சம் தாரளமாக போடவேண்டும், தண்ணீர் கொதிக்க கூடாது, கொஞ்சம் வெள்ளைப்பூண்டு, ஒரு பத்து பீஸ் மிளகாயும் உள்ளே போடவும் [[சட்டிக்குள்ளே]]
சற்று சூடாகியதும் அடுப்பை அணைத்து விடவும், நன்றாக சூடு ஆறியதும் கொஞ்சூண்டு வினிகர் ஊற்றி ஒரு பெரிய பாட்டலில் அடைத்து ஃபிரிஜில் வைக்கவும், ரெண்டு மூன்று நாள் கழித்து எடுத்து சாப்புட்டுப் பாருங்க கண்ணு தெளியுறது நல்லாவே தெரியும்...!

ஒரு கோவா'க்கார நண்பன் சொல்லித்தந்தது, நெல்லிக்காய் கிடைக்கும் போதெல்லாம் வாங்கி இப்படி செய்து நான் சாப்பிடுவது வழக்கம்...!
------------------------------------------------------------------

எங்கள் ஹோட்டலுக்கு வந்த ஒரு நண்பனிடம்...

"ஒரு கவிதை சொல்லுய்யா பார்ப்போம்...?"

"அண்ணே மூடுல இருந்தாதான் அது வரும், நான் போயிட்டு வரும்போது சொல்லவா...?" [[பார்"க்கு]]

"சரி"

திரும்பி வரும்போது...
"அண்ணே நீங்க கேட்டதை இதுல எழுதி இருக்கேன் லல்லா இழுக்கா பால்து லொல்லுங்க" [[சொல்லுங்க]]

# கலங்களில் அவாள் வாசந்தம் 

காலைகளிலே ஆவாள் வாவியம் 

மதங்களில் அவாள் மால்கழி 

மாலர்களிலே ஆவாள் மெல்லிகை...

"அண்ணே அரகா இழுக்கா...?"

எடுத்தேன் பாருங்க ஓட்டம், எங்கேயும் நின்னு திரும்பிக்  கூட பாக்கலியே...

இவனெல்லாம் கம்பியூட்டர் இஞ்சினியராம் டேய்....!
--------------------------------------------------------------------
சங்க காலத் தமிழ் இலக்கியமான புறநானூற்றில் வரும் பாடல்கள் இரண்டில், சேர மன்னனான பெருஞ்சேரலாதன்,கரிகால் சோழனுடன் ஏற்பட்ட போரின்போது முதுகில் புண் பட்டதனால் வடக்கிருந்து உயிர் துறந்தது பற்றிய செய்தி வருகிறது
.அவ்வாறு வடக்கிருந்து உயிர் விடுவதன் மூலம், வீரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்கிக் கொள்ள முடிந்தது என்பதும், முதுகிலே அம்பெய்தவனுக்கு அது ஒரு களங்கமாகக் கருதப்பட்டது என்பதும் இப்பாடல்கள் மூலம் தெரிய வருகிறது.
-------------------------------------------------------------------
திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் எனப்படுகின்றன. பாளையங்கோட்டை கல்வி நிலையங்களுக்குப் பெயர்பெற்றது. இது தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படுகிறது. பாளையம்கோட்டைச் சிறையும் மிகவும் புகழ்பெற்றது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர்.
-------------------------------------------------------------------

வீட்டுக்குப் போறவனை நிப்பாட்டி வச்சி எங்கே போறேன்னு கேட்டுட்டு, குட்நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்"னு சொல்லும் ஃபிகர்கள், சொல்லவருவது என்ன...?
[[யாருலேய் அங்கே குனிஞ்சி கல்லைத் தேடுறது?]]
டிஸ்கி : புறநானூறு மற்றும் பாளையங்கோட்டை தகவலுக்கு "விக்கிபீடியா"வுக்கு நன்றி.


நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!