Wednesday, July 4, 2012

அடுத்த முதல்வர் நான் இல்லை அதிர்ச்சி தகவல்...!


மும்பையில் தாடி ஷேவ் பண்ணுவதற்காக ஒரு சலூன் போனேன். எனக்கு முன்பாகவே ஒருவர் முடி வெட்டிக்கொண்டிருந்த படியால் நியூஸ் பேப்பர் படித்து கொண்டிருந்தேன், முடிவெட்டியவன் போயதும் என்னை வந்து உட்காருமாறு அழைத்தான், நானும் போயி அமர்ந்தேன் என்மீது டவலை போட்டுவிட்டு சொன்னான், சாப்ஜி ஏக் மினிட் மை ச்சூ ச்சூ ஜாக்கர் ஆத்தாஹூம் [[நான் ச்சூ ச்சூ போயிட்டு வாரேன்]] ஓகே சொன்ன நான், அவன் போயதும் வெளியே ஓடியே போயிட்டேன்.......எஸ்கேப்டா எஸ்கேப்பு....!!!


கொய்யால ச்சூ ச்சூ போறவன் கண்டிப்பா கை கழுவாமதானே திரும்பி வருவான் அவ்வ்வ்வ்வ்........ஒடுங்கலேய் மக்கா....!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குடும்ப "கட்"டுப்பாடு இன்று சிறையில் இலவசமாக செய்யப்படுகிறது, வேண்டுவோர் தொலைவரின் போராட்டத்தில் தாராளமாக கலந்து கொள்ளலாம்....! [[கிட்னியை காணவில்லை என்றால் கலகம் ச்சே ச்சீ கழகம் பொறுப்பில்லை]]


-------------------------------------------------------------------------------------------------------------

கவுண்டமணி, பன்னிகுட்டி ராம்சாமி அதிரடி சந்திப்பு...........பதிவர்கள் அலறி ஓட்டம்....குற்றம்....... நடந்தது என்ன....? காரணம் டாகுடர் விஜய்யா...? அல்லது பவர்ஸ்டாரா...? இல்லை டி ஆர். ராஜெந்தரா...? சுப்பிரமணியன் சுவாமியா...? - அதிர்ச்சி.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிரதமராக அனைத்து சட்டத்தகுதிகளும் கொண்டவர் சோனியா - கலாம் பேட்டி.

# கலாம் ஏன் இப்படி தரம் தாழ்ந்து போனார்...? இப்போ தெரியுதா ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளின் கருணை மனுவை நம்ம தமிழ் அண்ணாச்சி ஏன் ஏறெடுத்து பார்க்கலைன்னு...? காமெடி பீசைவிட கேவலமான பீசானார் கலாம், மனசுக்கு வருத்தமாகவே இருக்கு...! போங்க போங்க கனவு காணுங்க போங்க...!


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பதிவுலகிலும், பேஸ்புக்கிலும் சுடசுட செய்திகள் வெளியாகிறது, பிரபல பத்திரிக்கைகள் கலக்கம், கட்சி சானல்கள் தீவிர ஆலோசனை, ஆங்காங்கே பதிவர்களின் ஒருங்கிணைப்பை பார்த்து மீடியாக்கள் அதிர்ச்சி....!


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கபட நாடகம்:சோனியாவை பிரதமராக்க தயாராக இருந்ததாக, அப்துல் கலாம் தெரிவித்திருப்பதன் மூலம், அவர் நகைப்புக்கு இடமாகியுள்ளார். பல ஆண்டுகளுக்குப் பின், அவர் இதைத் தெரிவித்திருப்பதன் மூலம், மக்களின் மனதில் அவர் பிடித்திருந்த இடத்தை இழந்து விட்டார். மக்களின் பார்வையில் அவரின் செயல் கபட நாடகமாகியுள்ளது.

சோனியா பிரதமராவதை தடுத்து நிறுத்தியவர் கலாம் தான் என்ற தகவல், இதுநாள் வரை மக்கள் மத்தியில் உலாவிக் கொண்டிருந்தது. இதற்காக நாடு அவரை பாராட்டிக் கொண்டிருந்தது. ஜனாதிபதி பதவியிலிருந்து அவர் ஓய்வு பெற்ற பின்னரும், இதற்காக அவரை பலர் புகழ்ந்து கொண்டிருந்தனர். "சோனியாவை பிரதமராக்க தயாராக இருந்ததாக, இப்போது தெரிவித்திருப்பதை, கலாம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், சுயநலம் காரணமாக அமைதியாக இருந்து விட்டார் - பால்தாக்கரே.

மாவீரன் பிரபாகரனின் புகைப்படம் பால்தாக்கரேயின் வரவேற்பறையில் இன்றும் ஜொலித்து கொண்டிருப்பது எத்தனை பேருக்கு தெரியும்...?!!! அதைபற்றி மீடியாக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பிரபாகரனின் வீரமும் துணிவும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பார்...!!!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

லிப் கிஸ் என்ன அவ்வளவு பெரிய தப்பா...? அஞ்சலி கேள்வி!!

# ஸ்ஸ்ஸ்ஸ் அண்ணே சிபி அண்ணே நோட் பண்ணிக்கோ.

வெட்டிபிளாக்கர்ஸ் செத்தானுக இன்னைக்கு...!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேவயானி கதாநாயகியாக ராஜகுமாரன் கதாநாயகனாக "திருமதி தமிழ்" என்ற படத்தை தேவயானி தயாரிக்கிறார். எலேய் தமிழ்நாடு உருப்படுமாலேய் இப்பவே வெளியே எங்கேயாவது தப்பிச்சு போயிருங்க மக்கா...!


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திடீரென ராத்திரி எனக்கு நம்பரே இல்லாமல் ஒரு போன் வர.........

நான் : ஹலோ.......... ஹலோ................. ஹல்லல்லோ யார் பேசுறது...?

எதிர்முனை : ஹஹ்ஹ்ஹா ஹஹ்ஹஹ்ஹா ஹா ஹா ஹஹ்ஹஹ்ஹா.....

நான் : ஸ்ஸ்ஸ்ஸ் அபா....

எ.முனை : ஹஹ்ஹா ஹா ஹா நான்தான் மனசாட்சி பேசுறேன்.

நான் : கொய்யால இதுக்கா இப்பிடி ஒரு சிரிப்பு [[மனசுக்குள்]] ஓ மக்கா எப்பிடி இருக்கீங்க...?

மனசாட்சி : நல்லாயிருக்கேன் முங்கிட்டே இருக்கேன்.

நான் : அதான் தெரியுமே, [[முங்கும் போதுதான் நம்ம நியாபகமே வரும்போல]] சாப்டாச்சா...?

மனசாட்சி : தோசை "சுட்டு" வச்சிருக்கேன் இனிதான் சாப்பிடனும் ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா...

நான் : சரி சாப்புட்டு தூங்குங்க....

மனசாட்சி : நீங்க இன்னுமா முங்காம இருக்கீங்க...?

நான் : யோவ் நான் முங்குறதை எப்பவோ விட்டுட்டேன், இப்போ சுகர் பிரஷர்க்கு மருந்து சாப்புட்டுட்டு இருக்கேன்.

மனசாட்சி : ஹஹ்ஹா ஹா ஹா ஹாஹ்ஹா ஹாஹ்ஹா [[இதென்ன சிரிப்பு]] மக்கா எனக்கும் சுகர், பிரஷர் எல்லாமே அளவுக்கு மீறி போயிருச்சு, செக் பண்ணினேன், மாத்திரையா தந்தானுக அந்த கர்மாந்தத்தை தின்னு உடம்பு குப்புன்னு [[சரக்கு இல்லை]] பெருத்து போச்சு, கொய்யால'ன்னு மருந்தை ஓயின்ஷாப்பில் ச்சே ச்சீ சாக்கடையில் எறிந்து விட்டு...

நான் : அப்பிடியா....?

மனசாட்சி : என்ன நோப்பிடியா...? கேளுய்யா...கொஞ்சம் வெந்தயம் எடுத்து ராத்திரி படுக்கபோகும்போது ஒரு கப்ல போட்டு தண்ணி[!] ஊத்தி வச்சுட்டு, காலையில் எழும்பியதும் பல்லு தேய்க்காமல் [[இல்லைன்னாலும்]] அந்த வெங்காயத்தையும் ஸ்ஸ்ஸ்ஸ் ஸாரி வெந்தயத்தையும் தண்ணியையும் சேர்த்து குடிச்சி முழுங்கு மெல்லாதே, அப்புறம் கொஞ்சம் தண்ணி சூடு பண்ணு அதில் ஒரு ஸ்பூன் மீனை......... ஸாரி மக்கா.....ம்ம்ம்ம் தேனை போட்டு கலக்கி சூடா குடி, ஒரு நோய் உன் பக்கம் அண்டாது, ஆறுமாசமா நான் சாப்பிட்டேன் , இப்போ எனக்கு சுகருமில்லை, பிரஷருமில்லை ஸோ நீங்களும் அப்பிடியே பண்ணுங்க......என்னை பாருங்க நான் இப்போ ஸ்ட்ராங்கா இருக்கேன் ஸ்ட்ராங்கா இருக்கேன் ஸ்ட்ராங்கா.....இ....ழு...க்....கேன் ச்சாங்கா பு...ழு...க்...கேன் முயற்சி பண்ணு.....ங்...ங்...ச்சாங்கா.......[[மட்டை ஆகிருச்சோ...? போன் கட்டு]]
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நெல்லை பதிவர் சந்திப்பு நடந்த அன்று, மீட்டிங் எல்லாம் முடிந்து சாப்பாட்டுக்கு வெளியே வந்த சமயம்........நான் கேட்ட ஒரு சம்பாஷனை.....'வெட்டிபய' தம்பிகூட பேசிட்டு இருந்தேன்... கூட என் தளபதி தம்பி 'இம்சை அரசன்' கூட நின்னிட்டு இருந்தான், என் தங்கச்சி பாப்பா கல்பனா  என் போனை புடுங்கிட்டு போயிட்டாள் ஒரு போன் நம்பர் ரெக்கார்டு பண்ணுவதற்கு....ஆனால் என் காது கொஞ்சம் பக்கமா திரும்பியது.....அங்கே........ஒரு பெண் பதிவரிடம் தூ...ர...த்தில் இருந்து வந்த பதிவர் பேசியது....

--------- : நான் இம்புட்டு தூரத்தில் இருந்து இங்கே வந்ததே உங்களை பார்க்கத்தான்.....[[கொய்யால அப்போ நீ எங்களை பார்க்க வரலியா...?]]

-------- : [[ஜெர்க்காகி]] அப்பிடியா சந்தோசம்....[[ஹி ஹி]] என்ன விஷயம்...?

-------- : இல்லை.....எனக்கு கடல் கடந்த உலகில்......வேலை பற்றி சொல்ல வந்தேன்....[[தாம் படித்த படிப்பு பற்றி சொல்கிறார்]]

[[அம்மணி ஒரு மாதிரி ஃபீல் ஆகுறதை நல்லா உணர்ந்தேன்......!]]

--------- : ஓஹோ......ஹி ஹி......

-------- : என் தம்பி ஏற்கனவே அங்கேதான் வேலை பார்க்குறான்...[[அப்போ தம்பிகிட்டே சொல்லவேண்டியதுதானே...?]]

------- : உங்க பிளாக் நான் ரொம்ப ரசிச்சி படிப்பேன் [[டாபிக்கை மாத்துராங்களாம்]]

------- : நானும் உங்கள் பதிவுகளை விடாமல் படிக்கிறது உண்டு...[[பாவம்]]

அந்த பதிவர் நெளிந்து வழிந்து ஓடிய ஓட்டத்தை பார்த்து மனசுக்குள் மிகவும் சிரித்தேன்....! அதோடு போனவர்தான் அந்த ஆண் பதிவர் ஆளை அட்ரஸ் இல்லை....!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பக்கி கூட பேசி நாளாச்சென்னு நெட்டில் இருந்து போன் போட்டேன் அவனுக்கு, ஹலோ ஹல்லல்லோதான் சத்தமே கேக்கலை ஆனால் அவன் பி ஏ சத்தம் எனக்கு கேக்குது என் சத்தம் அங்கே கேக்கலை போல, விக்கி நம்பர் புரியாமல் போனில் அலறி கொண்டிருந்தான். நான் நல்லா ரசித்துவிட்டு போனை [[நெட்டை]] கட் பண்ணிவிட்டேன்.

பாவம் பயபுள்ளை டென்ஷனா ஆகிருவானேன்னுட்டு மொபைலில் ஒரு மிஸ்கால் அனுப்பினேன், நாதாரி அவனும் அங்கே இருந்து மிஸ்கால் அனுப்பினான் [[நீ நல்லா வருவேடே]] போடாங் கொன்னியான்னுட்டு நான் போன் பண்ணாமல் பிஸி ஆகிட்டேன் [[த்தூ த்தூ]]

என்ன நினைச்சானோ மறுபடியும் போன் அடிக்க, எடுத்தேன் பரஸ்பரம் நலம் விசாரணை, அப்புறம் "டேய் நான் டியூட்டி முடிஞ்சி வீடு போயிட்டு இருக்கேன் வித் இன் ஒன் ஹவர்ல போன் பண்ணுறேன்"

"சரிடா அண்ணே, நான் ஆன்லைனில்தான் இருப்பேன் ஸ்கைப்ல வா இல்லைன்னா ஜீ டாக்குல வா"ன்னுட்டு கட் பண்ணிட்டேன்.....நான்கு மணி நேரம் ஆகியும் போனைகாணோம், அப்புறமா பேஸ்புக்கில் பார்த்தால் அண்ணன் ஒரு ஸ்டேட்டஸ் போட்டுருந்தான் அவன் நண்பனுக்கு விபத்து ஏற்பட்டு ஆஸ்பிட்டல் கொண்டு சேர்த்ததாக.....சரி நல்ல காரியம் செய்துருக்கான் அப்பிடின்னுட்டு இருக்கும் போதே இன்னொரு ஸ்டேட்டஸ் போட்டான். நான் இன்று இரவே விமானத்தில் இன்னொரு சிட்டி போறேன்னு...!

சரி போகட்டும்னு நானும் மறந்துட்டேன், அப்புறம்தான்ய்யா அந்த அநியாயம் நடந்துச்சு.........சாப்பிட கிளம்பும்போது போன் பண்ணி சொல்றான் "டேய் நான் இப்போ தூங்கிட்டு இருக்கேன் இந்தா என் மகன்கிட்டே பேசு" பேசினேன்,பேசிவிட்டு உன் அப்பன்கிட்டே போன் குடு செல்லம்..... "டேய் நான் இப்போ தூங்கிட்டு இருக்கேன் இங்கே மணி பனிரெண்டரை ஆச்சு, அடுத்து நான் நான்கு மணிக்கு பிளைட் பிடிக்கணும் அதனால நான் தூங்குறேன் நான் அந்த சிட்டிக்கு போயிட்டு உனக்கு நாளை போன் பண்ணுறேன் சரியா...?"
[[இரண்டு மொட்டைகள் ச்சே ச்சீ சொட்டைகள்...!]]

கொய்யால தூங்கிட்டு இருக்குறவன் என்ன மண்ணாங்கட்டிக்குடா போன் பண்ணுறே...? இன்னொரு அநியாயம் என்னான்னா ரெண்டு நாளாச்சு சார் இன்னும் போன் பண்ணலை.......ஒருவேளை அவன் பி ஏ'வுக்கு ஆக்ஸிடன்ட்ன்னு சொல்வானோ...? நல்லாயிருடே...[[அப்டேட் தொடரும்]]
-------------------------------------------------------------------------------------------------------------

30 comments:

 1. பதிவு செம கலக்கல்
  தலைப்புதான் தூக்கி வாரி போட்டிடுச்சு சார்
  எல்லாம் வழக்கமான மனோ சுவராசியம் ம்ம்ம்ம் அருமை

  ReplyDelete
 2. பொய் சொல்லாதே...நீதான் மீண்டும் போன் பண்ணே...அப்புறம் நான் உன்னை கூப்டேன்...என்னமா பிளேட்ட மாத்தி போட்டுட்டான்யா...பிச்சி புடுவேன் பிச்சி...ராசுகோல்!

  ReplyDelete
 3. கலக்கல் பதிவு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. அஞ்சலியைப் பற்றி அவதூறாக பேசியதுக்கு பன்னிக்குட்டிராமசாமி தலமையில் சிறை நிரப்பும் போராட்டம் நடக்கும்......என எச்சரிக்கிறேன்!

  வாழ்க அஞ்சலி ரசிகர் கழகம்!

  வளர்க வெட்டி பிளாக்கர்!

  ReplyDelete
 5. நடிகை அஞ்சலி....July 4, 2012 at 1:00 AM

  சிபியுடன் என்னை இணைத்து பேசியதுக்கு வன்மையான கண்டனம்!

  ReplyDelete
 6. //தேவயானி கதாநாயகியாக ராஜகுமாரன் கதாநாயகனாக "திருமதி தமிழ்" என்ற படத்தை தேவயானி தயாரிக்கிறார். எலேய் தமிழ்நாடு உருப்படுமாலேய் //

  :))

  ReplyDelete
 7. my goodness.. என்ன ஒரு அட்டகாசமான பகிர்வுகள். நல்லா சிரித்தேன்

  ReplyDelete
 8. நடத்து மக்கா நடத்து

  ReplyDelete
 9. //[[கிட்னியை காணவில்லை என்றால் கலகம் ச்சே ச்சீ கழகம் பொறுப்பில்லை]]

  //

  தொண்டர்கலை கூட காண வில்லையாம்

  ReplyDelete
 10. //மாவீரன் பிரபாகரனின் புகைப்படம் பால்தாக்கரேயின் வரவேற்பறையில் இன்றும் ஜொலித்து கொண்டிருப்பது எத்தனை பேருக்கு தெரியும்...?!!! அதைபற்றி மீடியாக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பிரபாகரனின் வீரமும் துணிவும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பார்...!!!
  //

  ஆட்சரியமான விஷயம்

  ReplyDelete
 11. //அடுத்த முதல்வர் நான் இல்லை அதிர்ச்சி தகவல்...!//

  அண்ணே பயங்கர அதிர்ச்சி தகவல்னே இது

  ReplyDelete
 12. பதிவுனா....
  ஒரு 3 TO 4 MINTS-ல படிக்கிற மாதிரி போடணும்...
  நீ என்ன உண்மை தமிழனா....???

  போயா.....

  ReplyDelete
 13. பதிவு பக்கா கலாய்ப்பு அதுவும் சிறைநிரப்பு போராட்டம் கிட்னி சூப்பர் கமடி நைனா ஆட்டோ வரும் !ஹீ

  ReplyDelete
 14. விக்கி மாம்ஸ் கஞ்சிதான் இல்ல!ஹீ தூங்கும் போது பேசினாரா?:)))

  ReplyDelete
 15. அரசியலில் போனால் பதவி ஆசையில்  அப்துல்கலாமும் ஒரு சாமானிய மனிதன் தான் !

  ReplyDelete
 16. சிரிச்சு முடியலை மனோ.

  ReplyDelete
 17. ஒவ்வொன்றும் கலக்கல் ரகம்.

  ReplyDelete
 18. //
  அந்த பதிவர் நெளிந்து வழிந்து ஓடிய ஓட்டத்தை பார்த்து மனசுக்குள் மிகவும் சிரித்தேன்....! அதோடு போனவர்தான் அந்த ஆண் பதிவர் ஆளை அட்ரஸ் இல்லை....!//
  யார் அந்த பதிவர்கள்? எனக்கு மெயிலில் தெரிவிக்கலாம்.

  ReplyDelete
 19. ////கொய்யால ச்சூ ச்சூ போறவன் கண்டிப்பா கை கழுவாமதானே திரும்பி வருவான் அவ்வ்வ்வ்வ்........ஒடுங்கலேய் மக்கா....!//////

  வேற சலூனுக்கு போனாலும் அங்க சலூன்காரர் காலைல இருந்து போகாமேயா இருந்திருப்பாரு?

  ReplyDelete
 20. ///[கிட்னியை காணவில்லை என்றால் கலகம் ச்சே ச்சீ கழகம் பொறுப்பில்லை]/////

  தலைவருக்கு கிட்னின்னா ரொம்ப புடிக்குமோ?

  ReplyDelete
 21. /////கவுண்டமணி, பன்னிகுட்டி ராம்சாமி அதிரடி சந்திப்பு...........பதிவர்கள் அலறி ஓட்டம்....குற்றம்....... நடந்தது என்ன....? காரணம் டாகுடர் விஜய்யா...? அல்லது பவர்ஸ்டாரா...? இல்லை டி ஆர். ராஜெந்தரா...? சுப்பிரமணியன் சுவாமியா...? - அதிர்ச்சி./////////

  அதெப்படிய்யா நான் கலாய்ச்சு விட்டவங்களையெல்லாம் வரிசையா எழுதி இருக்கீரு? (இவரு உண்மைலயே நம்ம ப்ளாக்க படிச்சிருக்கிறாரு போல...?)

  ReplyDelete
 22. ///லிப் கிஸ் என்ன அவ்வளவு பெரிய தப்பா...? அஞ்சலி கேள்வி!!/////

  புள்ள இப்பத்தான்யா ஃபார்முக்கு வருது...... எப்படியும் டெவலப் ஆகிரும்ல...?

  ReplyDelete
 23. /////தேவயானி கதாநாயகியாக ராஜகுமாரன் கதாநாயகனாக "திருமதி தமிழ்" என்ற படத்தை தேவயானி தயாரிக்கிறார். ///////

  டீவில நடிச்சு நடிச்சு கைல காசு நிறைய சேர்ந்திருச்சு போல.... நண்டு கொழுத்தா வளைல தங்காதுலேய்ய்.....!

  ReplyDelete
 24. /////எ.முனை : ஹஹ்ஹா ஹா ஹா நான்தான் மனசாட்சி பேசுறேன்.//////

  என்னய்யா இது ஆச்சர்யமா இருக்கு, எல்லாருக்கும் மனசாட்சி மனசுக்குள்ளதான் பேசும், சினிமாவுல நம்மள மாதிரி உருவமா வந்து பேசும். பட் உங்களுக்கு போன்ல வந்து பேசி இருக்கே.....? சரக்க மாத்தி அடிச்சிருப்பீங்க மக்கா......

  ReplyDelete
 25. //////இன்னொரு அநியாயம் என்னான்னா ரெண்டு நாளாச்சு சார் இன்னும் போன் பண்ணலை.......ஒருவேளை அவன் பி ஏ'வுக்கு ஆக்ஸிடன்ட்ன்னு சொல்வானோ...? நல்லாயிருடே..///////

  ஆமா, பிஏ கால்தவறி மேல வந்து விழுந்துடுச்சாம்... எங்கெங்க காயம் பட்டிருக்குன்னு செக் பண்ணிட்டு இருக்காராம்...... முடிஞ்சதும் போன் பண்ணுவார்.....

  ReplyDelete
 26. ஒரு பதிவுல இப்படியா ரணகளம் ஆக்கறது.
  பீ கேர்ஃபுல்.!
  நான் நம்ப பதிவர்களை சொன்னேன்.

  ReplyDelete
 27. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!