Monday, July 9, 2012

தண்டனை காந்திக்கு இல்லைடா அண்ணே....!!!

ஈரோடு பதிவர் சந்திப்பு, நெல்லை பதிவர் சந்திப்பு, சென்னை பதிவர் சந்திப்பு, பஹ்ரைன் பதிவர் சந்திப்பு எல்லாம் நடந்துருக்கு, ஆனால் வேறே எங்கேயும் பதிவர் சந்திப்பு நடந்ததா தெரியலையே என்னாச்சுப்பா...? நாகர்கோவிலில் ஒன்னும் நடக்க காணலை....!!! [[அடுத்த முறை நான் ஊர் வரும்போது ரெடி பண்ணலாம்னு இருக்கேன், விஜயன் மற்றும் பெயர் சொல்லமுடியாத குமரி நண்பர்கள் ஆதரவுடன்....!]]தமிழ் சங்கம் வைத்த மதுரை என்னாச்சு....?  வேறே மாவட்டங்கள் என்னாச்சுப்பா...? கொஞ்சம் யோசிங்க...!
-------------------------------------------------------------------------------------------------------------

திமுக கட்சி தலைமை செய்ததை பற்றி ஒரு முப்பத்திரண்டு கேள்வி [[இன்னும் நிறைய இருக்காம்....இருக்கு]] கேட்டார் ஒரு நண்பர்......ஆனால் "துமுகா" [[இதுக்கு அர்த்தம் என்னா..?]]  ச்சே ச்சீ திமுக ஒரு வாழும் வரலாறு'ன்னு ஸ்டேட்டஸ் போட்ட நண்பன் அதுக்கு பதில் சொல்லாமல் அந்த கேள்வியின் கமேண்ட்சையே டிலிட் பண்ணிட்டார்....!? நல்லா இருங்கடே...! ஊழல் செய்த பணத்தில் இவருக்கும் பங்கு இருக்கும் போல.....நல்ல ஒரு மீடியாவின் நிருபரும் கூட இவர்.......! வாலுங்கடே ஸ்ஸ்ஸ்ஸ் வாழுங்கடே....! [[நீயும் தெலுங்கனா...? இல்ல தமிழனா...? நெஞ்சை தொட்டு சொல்லு ]]-------------------------------------------------------------------------------------------------------------

நம் ரத்தத்தை குடிக்கும் கொசுவுக்கும், மூட்டைக்கும் ஏன் ஒரு வியாதியும் வரமாட்டேங்குது...?

-------------------------------------------------------------------------------------------------------------

நடுநிலை பத்திரிக்கை என்று சொல்லும் ஒரு பத்திரிக்கை, நான் அந்த கட்சிகாரன்னு அடிக்கடி சொல்லியும், பிளாக் மற்றும் சமூக தளங்களில் பிரகடன படுத்தும் ஒருவனை அந்த பத்திரிக்கையின் நிருபராக எப்படி அனுமதித்தார்கள்...???!!! அந்த பத்திரிக்கையின் நம்பகதன்மை என்ன...???? நக்கீரனில் பணி செய்தால் ஓகே ஏன்னா அதை பற்றி நம் எல்லாருக்கும் தெரிந்ததே...!

-------------------------------------------------------------------------------------------------------------

சனிகிழமை மட்டும் ஸ்பெஷலா மீன்கறி சாப்புடுறாரே விஜயன் அதன் ரகசியம் என்ன...?

-------------------------------------------------------------------------------------------------------------

யப்பா........திருவனந்தபுரம் பத்பனாபசுவாமி கோவிலில் இருக்கும் செல்வம் எல்லாம் எங்கள் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வரிப்பணம், கேரளா அரசர்கள் கொடுமை படுத்தி வரி வசூல் பண்ணியது என்று நண்பன் சொல்லுகிறான் உண்மையா...???!!!

-------------------------------------------------------------------------------------------------------------

ஐந்து லிட்டர் பிளாக் லேபளை [[விஸ்கி]] இரண்டே நாளில் குடித்து மங்களம் பாடிய பிரபல பிராப்ள பதிவர்....!!!???

-------------------------------------------------------------------------------------------------------------

கொக்க கோலா, பெப்சியில் ஆல்கஹால் கலந்திருப்பதாக புதிய ஆய்வுகள் சொல்கின்றன....! [[ஆனால் அமெரிக்காவில் விற்கபடுவைகளில் ஆல்கஹால் இல்லையாம்...!?]]

-------------------------------------------------------------------------------------------------------------

கரண்ட் கட்டாகாமல் வாழ வேண்டுமா...? மதுரையில் அஞ்சாநெஞ்சன் அண்ணன் இருக்கும் இடம் அருகில், சென்னையில் போயஸ்கார்டன், கோபாலபுரம், சி ஐ டி காலனி  பக்கமாக வீடு பார்த்து குடியேறுங்கள் [[ஹி ஹி எப்பூடீ]]

-------------------------------------------------------------------------------------------------------------

வீட்டுக்குள்ளே ஏசி'யை போட்டுட்டு வெளியே வந்து நிற்கும் நண்பன்....! [[முடியல]]

-------------------------------------------------------------------------------------------------------------

சகுனி இரண்டாம் பாகம், விரைவில் படபிடிப்பு ஆரம்பம் - வெட்டிபிளாக்கர்ஸ் தற்கொலை முயற்சி...!

-------------------------------------------------------------------------------------------------------------

சென்னை: ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் கட்டாயமாகிறது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 ஆக நிர்ணயம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

-------------------------------------------------------------------------------------------------------------

பேஷன்ட்: டாக்டர், நான் தெரியாம சாவியை முழுங்கிட்டேன்.

டாக்டர்: எப்போ நடந்தது?

பேஷன்ட்: அது ஆச்சு மூணு மாசம்.

டாக்டர் கோபமாக: இம்புட்டு நாள் என்ன செஞ்சீங்க?

பேஷன்ட்: டூப்ளிகேட் சாவி உபயோகப்படுத்தினேன், இப்போ அதுவும் தொலைஞ்சி போச்சு.
 [[படித்ததில் பிடித்தது]]
-------------------------------------------------------------------------------------------------------------

நரகத்தில் நம்ம விக்கி, காந்தியும், பிபாஷா பாசுவும் உல்லாசமாக நடனமாடிக்கொண்டிருந்ததை பார்த்தான்.

விக்கி : "காந்திக்கு இம்புட்டு மஜாவான தண்டனையா...?"

மனோ : "தண்டனை காந்திக்கு இல்லைடா வெண்ணை.......... பிபாஷா பாசுவுக்கு"
-------------------------------------------------------------------------------------------------------------

விஜயன் : தலைவரே மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க... வாங்க ஓடிடலாம்...!

மனோ : இருய்யா.. எனக்கு ஒரு செருப்புதான் கிடைச்சிருக்கு...!
-------------------------------------------------------------------------------------------------------------

27 comments:

 1. Pls remove gandhi comment

  Prasath

  ReplyDelete
 2. செம!

  #யோவ்... கோவை'லையும் பதிவர் சந்திப்பு நடத்தி இருக்காங்கன்னு கேள்வி!!!

  ReplyDelete
 3. பிபாஷாவை அசிங்கப்படுத்தியதால், வெளிநடப்பு செய்கிறேன் யுவர் ஆனர்!

  ReplyDelete
 4. //நடுநிலை பத்திரிக்கை என்று சொல்லும் ஒரு பத்திரிக்கை, நான் அந்த கட்சிகாரன்னு அடிக்கடி சொல்லியும், பிளாக் மற்றும் சமூக தளங்களில் பிரகடன படுத்தும் ஒருவனை அந்த பத்திரிக்கையின் நிருபராக எப்படி அனுமதித்தார்கள்...???!!! அந்த பத்திரிக்கையின் நம்பகதன்மை என்ன...???? நக்கீரனில் பணி செய்தால் ஓகே ஏன்னா அதை பற்றி நம் எல்லாருக்கும் தெரிந்ததே...!
  ////

  இதைவிடப் பெரிய கொடுமை சுஜாதா அவார்டு கொடுத்தது!!!

  #லகலக.....
  காலத்தின் கோலம்....

  ReplyDelete
 5. //வெளங்காதவன்™ said... #யோவ்... கோவை'லையும் பதிவர் சந்திப்பு நடத்தி இருக்காங்கன்னு கேள்வி!!! //

  என்னாது கேள்வியா கேலியா போச்சி உமக்கு, நடந்துருக்கு ரெண்டு வாட்டி ஒக்கே

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. மக்கா, ஒவ்வொரு பதிவிலும் வெட்டிபிளாக்கரை பத்தி ஏதாவது சொல்லி - கடுப்பேத்துறார் மை லார்ட்

  ReplyDelete
 8. வெட்டிபிளாக்கரை பத்தி இனி ஏதாவது சொன்னால் கிளாஸ் நிறைக்கும் போராட்டம் நடத்துவோம்

  இப்படிக்கு
  வெட்டிபிளாக்கர் கொபசெ

  ReplyDelete
 9. யோவ்..!வௌங்காதவன்...சூனா பானாவுக்கும் சுஜாதா விருது கொடுத்தாங்கய்யா....சுஜாதா உயிரோட இல்லை...!இருந்தா நாண்டுகிட்டு போயிருப்பாரு!

  ReplyDelete
 10. மனோ புதிய தலைமுறை பாதி சன்டிவி என்னவோ புதுசா கண்டுபிடிச்ச மாதிரி அலப்பரை பண்ணிக்கிட்டு இருக்கீங்க....

  ReplyDelete
 11. தொடர்ந்து வெட்டிபிளாக்கரை வம்பு இழுத்ததால் இந்த வாரம் மனோ மேல பஞ்சாயத்து...!சொம்போட ஆல் வெட்டிஸ்! வாங்க!

  ReplyDelete
 12. எல்லா மேட்டர்சும் சூப்பர். சென்னை ஆட்டோக்கள்ல மீட்டரா... சான்ஸே இல்ல. இந்த வௌங்காத ஆட்டோக்காரனுங்க மீட்டர் வெக்கச் சொல்லி அரசு சொன்னாலும் வெக்காம ஏமாத்தத் தான் பாப்பாங்க பிரதர். அப்புறம்... ரெண்டு நாள்ல ப்ளாக் லேபிலை காலி பண்ணின அந்த ஆசாமி யாருப்பா... என்ட்ட மட்டும் சொல்லிடுங்களேன்...

  ReplyDelete
 13. //வீடு சுரேஸ்குமார் said...

  யோவ்..!வௌங்காதவன்...சூனா பானாவுக்கும் சுஜாதா விருது கொடுத்தாங்கய்யா....சுஜாதா உயிரோட இல்லை...!இருந்தா நாண்டுகிட்டு போயிருப்பாரு!
  ////

  அவ்வ்வ்வ்வ்வ்.... செத்தாண்டா சேகரு...

  ReplyDelete
 14. நல்ல கேள்விகள் & தகவல்கள்.... கலக்கல் பதிவு....

  ReplyDelete
 15. 5லீட்டர் சோமபானம் இரண்டுநாளில் யாரு அந்த பார்ட்டி அண்ணாச்சி! எனக்குமட்டும் தனியாக சொல்லுங்க!

  ReplyDelete
 16. நான் மதுரைக்கு வரும் வரை மதுரை பதிவாளர்கள் பதிவர்கள் சந்திப்பு நடத்த போவதில்லை என்று ஒட்டு மொத்தமாக தீர்மானம் எடுத்துள்ளனர்.

  ReplyDelete
 17. மனோ நீ வர வர பிரபல பதிவர் ஆகிகிட்டே வரீரு...
  பாத்து சூதணமா இருந்துக்கப்பு....சொல்லிப்புட்டேன்...

  ReplyDelete
 18. kanthji pavamya...vitrum avara

  ReplyDelete
 19. வழக்கம் போல கல கல பதிவு! வெட்டி பிளாக்கர்னா என்னா? யாரு அந்த பதிவரு! ஒண்ணுமே விளங்கல?

  ReplyDelete
 20. s suresh said...
  வழக்கம் போல கல கல பதிவு! வெட்டி பிளாக்கர்னா என்னா? யாரு அந்த பதிவரு! ஒண்ணுமே விளங்கல?//

  பேஸ்புக்ல கலக்கிட்டு இருக்குற நம்ம பசங்கதான் மக்கா....!

  ReplyDelete
 21. நாகை பதிவர் சந்திப்பிற்கு rs.52,000 நன்கொடை தர சம்மதித்த நாஞ்சில் மனோவை எண்ணி கண் கலங்கும் இந்த வேளையிலே....!

  ReplyDelete
 22. //பெயர் சொல்லமுடியாத குமரி நண்பர்கள் ஆதரவுடன்....!]]//

  வாய்லா புண்ணா?

  ReplyDelete
 23. அண்ணே செமத்தியா வறுத்து எடுதிருக்கிங்க ..

  ReplyDelete
 24. கவுண்டமணி காமெடி வாய் விட்டு சிரிச்சுட்டேன்

  ReplyDelete
 25. ஹா ஹா ஹா. செம கலாய்ப்பு.

  ReplyDelete
 26. nalla irukku...
  nalla than irukkum unga blog...

  ReplyDelete
 27. மனோ : "தண்டனை காந்திக்கு இல்லைடா வெண்ணை.......... பிபாஷா பாசுவுக்கு"//

  He He.. Anne neenga arivu kozhunthunne!

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!