Sunday, July 29, 2012

விஜயன் வாங்கி தந்த சிக்கன் கடாய்....!

லீவுக்கு ஊர் வந்தபோது "முதன் முதலாக" விஜயனை நாகர்கோவிலில் சந்திக்க போனபோது, மத்தியானம் ஆனபடியால் வாங்க சாப்பிட்டுட்டு போகலாம்னு வற்புறுத்தி என்னையும் "மாப்பிளை"ஹரீஷையும் அழைத்து சென்றார் விஜயன், நான் என்னவோ முகலாய குடும்ப வாரிசுன்னு நினைச்சாரோ என்னவோ ஒரு ஃபைவ் ஸ்டார் ரெஸ்டாராண்ட் கூட்டி சென்றார்.


போயி உட்கார்ந்ததும் என்னய்யா சாப்பிடலாம்னு மெனு'வை பார்க்கும் போதே, பிரியாணி சாப்பிடலாம்னு தோணவே மூவரும் ஓகே சொன்னாலும், விஜயனுக்கு மனசு கேக்கலை, வேற என்ன வேணும் மனோ ஆர்டர் பண்ணுங்க'ன்னு சொல்லிட்டே இருந்தார், சரி ஓகே மக்கா ஒரு சிக்கன் கடாய் சொல்லுங்கன்னு சொன்னதும் ஆர்டர் செய்தார்.

பிரியாணி வந்தது, சாப்பிட்டுட்டு இருக்கும் போதே சிக்கன் கடாய்'யும் வந்தது, சிக்கன் கடாய் எப்படி இருக்கும்னு எனக்கு தெரிந்ததால் விஜயனிடம் கேட்டேன், இதாய்யா சிக்கன் காடாய்...? தெரியலையே என்றார். சர்வரிடம் கேட்டேன் இது சிக்கன் கடாய்"யா...? ஆமா சார் இதுதான் "இங்கே" சிக்கன் கடாய் என்றார், நொந்து போனேன்...! சிக்கன் கடாய் கொஞ்சம் ட்ரை"யாக சின்ன சின்ன பீஸாக இருக்கும், ஆனால் இங்கே சிக்கன் லெக் பீஸை முழுசாக "கறிக்குள் போட்டு" கறியாகவே தந்தார்கள்....அட கொய்யால....!!!

பிரியாணியும் நல்லாயில்லை, எப்பிடியோ சாப்பிட்டுட்டு [[அண்ணாச்சி பழம் ஜூஸும் குடிச்சுட்டு]] வெளியே வந்து விஜயனை அன்பாக கடிந்து கொண்டேன், சாப்பாடும் சரியில்லை பில்லும் ரொ.....ம்....ப அதிகம், சின்ன ஹோட்டலுக்கு போயிருக்கலாமே அங்கே சாப்பாடும் நல்லா இருக்குமே மட்டுமில்லாது இலையிலும் சாப்பிடலாமேன்னு சொன்னேன். 

பாவம் விஜயன் முதன் முதலா அடியேனை பார்த்து மிரண்டுட்டார் போல ஹி ஹி [[அவர் அன்பு ரொம்ப பெருசுய்யா]] அப்புறம்தான் மீன்கறி சாப்பாடு ஸ்பெஷல் மெஸ்சை கண்ணில் காட்டினார், அதை நான் பலமுறை சொல்லி இருக்கேன் இல்லையா...? 

சரி சிக்கன் கடாய் எப்படி இருக்கும் போட்டோ கீழே.....

விஜயன் கூட்டிப்போன ரெஸ்டாரண்டில் பரிமாறப்பட்ட சிக்கன் கடாய் கீழே.........[[இது சிக்கன் கடாய் இல்லை, சிக்கன் கறி]] அந்த சர்வர் சொன்னதை நல்லா கவனிங்க..."இங்கே இதுதான் சார் சிக்கன் கடாய்" ஸோ சிக்கன் கடாய் சாப்பிட விரும்புபவர்கள் "முகல்" ஹோட்டலுக்கும் அல்லது பஞ்சாபி ஹோட்டலுக்கும் போவது நல்லது அங்கே "இங்கே இதுதான் சார் சிக்கன் கடாய்" என்று சொல்லமாட்டார்கள்.


விஜயன் கூட பலமுறை சாப்பிடும் போதும் அவரை கவனித்த ஒரு விஷயம் என்னான்னா, நாகர்கோவில் மற்றும் நானும் அவரும் சுற்றுலா செல்லும் போதும் அவர் சாப்பிடும் ஸ்டைலும், திருநெல்வேலி போனால் அவர் சாப்பிடும் ஸ்டைலும் வித்தியாசமாக இருக்கும்...!!!

நாகர்கோவிலில் அவர் சாப்பிடும்போது விரைவாக சாப்பிட்டுட்டு முதல்லயே எழும்பிருவார், அதே திருநெல்வேலியில் ஆபீசர் கூட சாப்பிடும் போது மெதுவாக ரசிச்சு சாப்பிடுவார்...! என்னான்னு கவனித்தேன்.....பாவி.... நாகர்கோவிலில் என்னை பில் கொடுக்க விடாமல் இருப்பதற்க்குதான் அந்த வேகம்னு புரிஞ்சி போச்சு, எம்புட்டோ சொல்லியும் என்னை பில் கொடுக்க விடவே மாட்டார்...!

அதே வேளையில் நெல்லையில் இவர் பாச்சா பலிக்கவில்லை ஹே ஹே ஹே ஹே அங்கே ஆபீசர் பெல்ட்டோடு இருப்பதால் அய்யா அடங்கி பயந்து பர்ஸை வெளியே எடுக்காமல்  மெதுவா ரசிச்சு சாப்புடுறதை கவனித்து ரசித்தேன்...!

ஆனால் ஒரு கெட்ட பழக்கம் என்னான்னா சாப்பிட்டதும் ஜூஸ் குடிக்கனும்னு சொல்லுவார் அவ்வ்வ்வ்வ்வ்வ்.....!
-------------------------------------------------------------------------

படித்ததில் பிடித்தது....!


29 comments:

  1. அனைவரும் அவசிய்ம் படித்தறியவேண்டிய
    பயனுள்ள அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. , நான் என்னவோ முகலாய குடும்ப வாரிசுன்னு ///ஓ! அந்தப் பரம்பரையில் வந்தவர் இல்லையா நீங்கள்??!!!
    நல்ல பதிவு மனோ.

    ReplyDelete
  3. இதான் நம்மூர்ல சிக்கன் கடாய்யா!?.. அடப்பாவிகளா!

    ReplyDelete
  4. இந்த நம்மூர் சிக்கன் கடாய் இம்சை நானும் அனுபவிச்சு இருக்கின்றேன் சென்னையில்!:)) 

    ReplyDelete
  5. விஜயன் பாவம் அண்ணாச்சி  பெல்ட் அடிவாங்கும் நல்ல ஆப்பீஸர்!:))
    பாம்பராக் இப்ப இல்லை அண்ணாச்சி தேடிப்பார்த்த்தேன்.

    ReplyDelete
  6. Ramani said...
    அனைவரும் அவசிய்ம் படித்தறியவேண்டிய
    பயனுள்ள அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்//

    நன்றி குரு....!

    ReplyDelete
  7. vanathy said...
    , நான் என்னவோ முகலாய குடும்ப வாரிசுன்னு ///ஓ! அந்தப் பரம்பரையில் வந்தவர் இல்லையா நீங்கள்??!!!
    நல்ல பதிவு மனோ.//

    முகலாயர் மாதிரி வாள் ஏந்தி வரும் இளவரசன்'னு நினைக்காமல் போனாரே...!

    ReplyDelete
  8. Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    இதான் நம்மூர்ல சிக்கன் கடாய்யா!?.. அடப்பாவிகளா!//

    விஜயனை பார்க்க போனால் ஜாக்கிரதை, ஆனால் பக்கத்தில் ஒரு மெஸ் இருக்கு, வாழை இலையில் அருமையான மீன் சாப்பாடு மணக்க மணக்க பரிமாறுகிறார்கள்...!

    ReplyDelete
  9. தனிமரம் said...
    இந்த நம்மூர் சிக்கன் கடாய் இம்சை நானும் அனுபவிச்சு இருக்கின்றேன் சென்னையில்!:))//

    பாருங்களேன் அந்த சர்வர் சொல்லும் அர்த்தத்தை, அதை கேட்டுதான் எனக்கு சிரிப்பும் கடுப்பும்....

    ReplyDelete
  10. தனிமரம் said...
    விஜயன் பாவம் அண்ணாச்சி பெல்ட் அடிவாங்கும் நல்ல ஆப்பீஸர்!:))
    பாம்பராக் இப்ப இல்லை அண்ணாச்சி தேடிப்பார்த்த்தேன்.//

    அதெப்பிடி...? நம்மாளுங்களுக்கு அதை தின்னுட்டு நாலடி மேலே துள்ளி சுவத்துல துப்பலைன்னா உறக்கமே வராதே...!!!

    ReplyDelete
  11. ஆமா சார் இதுதான் "இங்கே" சிக்கன் கடாய் என்றார், நொந்து போனேன்...! :))இனி நல்ல சாப்பாடு சாப்பிட சின்ன ஹோட்டலுக்கே போயிட வேண்டியதுதான் .ஒரு அனுபவப் பகிர்வின் மூலம் நல்ல தகவலையும்
    தந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ .படித்ததில் பிடித்தது
    செய்தியும் பிரமாதம்!....

    ReplyDelete
  12. படித்ததில் பிடித்தது சூப்பர்.எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க.

    ReplyDelete
  13. பில் யாரு வேணுமானாலும் கொடுக்கலாம் ஆனா அதோடு பணமும் சேர்த்து கொடுக்க வேண்டும். அது ஒரு வேளை உங்களுக்கு தைரியாது என்று விஜயன் நினைத்து இருப்பார் மனோ...

    ReplyDelete
  14. முகலாய வம்சத்தில் வந்த இருபத்தி நாலாம் புலிகேசி மனோ வாழ்க

    ReplyDelete
  15. புலிகேசி மன்னர் மனோ வாழ்க
    படித்ததில் பிடித்தது எனக்கும் :)

    ReplyDelete
  16. அந்த பரிசு கலக்கல் அன்பரே

    ReplyDelete
  17. நானும் இதை அனுபவித்திருக்கிறேன் நண்பரே..
    சிலர் முன் நாம் பில் கட்ட முனைவது அவர்களுக்கு பிடிக்காது..
    பெரியவர்கள் அல்லவா..
    நானும் நண்பர் விஜயன் போலவே மெதுவாய் சாப்பிட்டு அவர் எழுந்தபின் தான்
    எழுந்து கைகழுவ செல்வேன்...

    அனுபவங்கள் பேசுகின்றன..

    ReplyDelete
  18. கடாய் மட்டுமில்ல மக்கா சிக்கன் லாலிபாப்ன்னு கேட்டா கொண்டு வருவானுங்க பாருங்க போதும்டா வெறுத்துட்டேன் (சாரி படம் கைவசம் இல்ல)

    ReplyDelete
  19. படித்ததில் ரசித்தது அனைவரையும் ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  20. //போயி உட்கார்ந்ததும் என்னய்யா சாப்பிடலாம்னு மெனு'வை பார்க்கும் போதே, பிரியாணி சாப்பிடலாம்னு தோணவே//

    இல்லன்னா மட்டும் டெய்லி தயிர் சாதம் சாப்புடற மாதிரித்தான்...

    ReplyDelete
  21. //லீவுக்கு ஊர் வந்தபோது "முதன் முதலாக" விஜயனை நாகர்கோவிலில் சந்திக்க போனபோது,//

    இந்தப்படம் இன்னும் முடியலையா??

    ReplyDelete
  22. இந்த அனுபவம் எனக்கும் வந்ததுண்டு...
    பில் வரும்போதே அதை நாம் வாங்கி கொண்டால் சரியாப் போச்சி... (அவர்கள் வேண்டாம் என்று மறுத்தால் கூட நாம் பேச்சை மாற்ற வேண்டியது தான்)

    படித்ததில் பிடித்தது 100 % உண்மை.

    நன்றி.

    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete
  23. உம்மை அந்த முதலாளியிடம் போட்டு கொடுத்துவிட்டேன். அடுத்த முறை கடாய் மனோ அப்படின்னு ஒரு மெனு ரெடிபண்ண போகிறாராம்.... அதை ருசிக்க உம்மை வருக... வருக என அன்புடன் அழைக்கிறோம்.

    ReplyDelete
  24. நான் சைவம்கறதால சிக்கன் கடாய் பத்தி நோ கமெண்ட்ஸ். கடைசில இருக்கற படம் சூப்பரோ சூப்பர்.

    ReplyDelete
  25. ////சர்வரிடம் கேட்டேன் இது சிக்கன் கடாய்"யா...? ஆமா சார் இதுதான் "இங்கே" சிக்கன் கடாய் என்றார், நொந்து போனேன்...! ///////

    ஸ்பாட்லயே டெமோ காட்டியிருக்க வேணாமாய்யா.......?

    ReplyDelete
  26. படித்ததில் பிடித்தது.
    படித்ததில் பிடித்தது....!

    ReplyDelete
  27. மீண்டுமா.....?????????

    வாங்க எல்லாரும்.... வந்து...
    பதிவு அருமை....சூப்பர்...
    அப்படின்னு டெம்பிளாட் கமெண்ட் போடுங்க.....

    ReplyDelete
  28. கடாய்! என்றதும் வாணலி என நினைத்து விட்டேன்! நான் சுத்த சைவங்க!

    ReplyDelete
  29. படித்ததில் பிடித்தது - மிக அருமை.....

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!