முன்பு ஒரு நாள் [[பஹ்ரைன்]] நான் சிட்டியில் தங்கி வேலை பார்த்த சமயம்.......என் ரூம் இரண்டாவது மாடியில் இருந்தது, அங்கிருந்து கொஞ்சம் நடந்து ரோட்டில் வந்து நின்றால் எங்கள் கம்பெனி கார் வரும், அதில் ஏறி வருவதும் போவதுமாக இருந்த நேரம்...
அப்போது, நான் ரூமில் இறங்கி கீழே வரும்போதெல்லாம் ஒரு பஹ்ரைனி பெண் என்னை கடந்து நடந்து போவதுண்டு [[பர்தா போட்டிருப்பாள்]] என்னை பார்த்ததும், நான் வலது பக்கமாக வந்தால் இடது பக்கமாக துப்புவாள், நான் இடது பக்கமாக போனால் வலது பக்கமாக துப்புவாள். இது எப்போதும் நடக்கும் தொடர் சம்பவம் என்பதாலும், அர'பி'ச்சி என்பதாலும் அவர்கள் அப்படி செய்தால் கண்டுக்க கூடாது என்ற நண்பர்களின் அறிவுரைப்படி நான் கண்டு கொள்வதில்லை,என்றாலும் என் மனதில் உறுத்தி கொண்டுதான் இருந்தது...!
இது தொடர்கதையாக நடக்கும் போதே ஒரு நாள் என்னோடு ஃபிரன்ட் ஆபீசில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பஹ்ரைனி நண்பியிடம் பயந்து பயந்து இதை சொல்லிவிட்டேன்.
அவள் "ஓ அப்பிடியா...? ஓகே நாளை காலை நீ டியூட்டி வரும் ஒருமணி நேரம் முன்பே நான் உன் ரூமுக்கு வந்து விடுகிறேன், வந்து அவளை நாலு கேள்வி கேக்குறேன் பாரு" என்று கர்ஜிக்க.....
"அம்மாடியோ நீ என் ரூமுக்கா....? வேண்டாம் தாயே வேற வினையே வேண்டாம் அக்கம் பக்கம் இருக்கும் மலையாளிகள் வயிறு எரிஞ்சி என்னை கொளுத்தியே விடுவார்கள் மட்டுமல்ல உன் மாப்பிளை வேற பெட்ரோல் பாம்ப் எரிஞ்சிட்டு ஜெயிலில் இருக்குறான்னு வேற சொல்லிட்டு [[ஷியா]] இருக்கிறாய், நீ என் ரூமிற்கு வந்தது அவனுக்கு தெரிஞ்சா கேஸ் சிலிண்டரையே கொளுத்தி ரூமுக்குள்ளே எறிஞ்சிருவான் ஆளை விடு தாயே"ன்னு அலறுனதை பார்த்து வெடி சிரிப்பு சிரித்தாள்...!
"சரி, எனக்கு இதை மட்டும் சொல்லு, ஏன் எங்களை பார்த்தால் இப்படி துப்புகிறார்கள் உங்கள் நாட்டு காரர்கள் சொல்லமுடியுமா...? பிளீஸ்" பல நாட்கள் மழுப்பியவாறே கழண்டு கொண்டே இருந்தாள், நானும் அவள் கஷ்டத்தை புரிந்து கொண்டு அப்படியே விட்டுவிட்டேன்.
என்ன நினைத்தாளோ ஒருநாள் அவளே என்னை கேட்டாள்...."மனோஜ், இன்னைக்கும் அந்த கிழவி உன்னை பார்த்து துப்பினாளா..?"
"ஏய் நில்லு நில்லு....அவள் கிழவின்னு உனக்கு எப்படி தெரியும்...? அவள் பர்தா போட்டிருப்பதால் என்ன வயசென்று எனக்கே தெரியல, உனக்கெப்படி அவள் கிழவி என்று தெரியும்...?" என கேட்டேன்.
"[[பலமாக சிரிக்கிறாள்]] இப்போ காலம் மாறிடிச்சு மனோஜ்.....இப்படி துப்புவர்கள் கண்டிப்பாக கிழவியாகதான் இருக்கவேண்டும் காரணம் அவர்களுக்கு உலகம் தெரியாது"
"சரி.....அதைவிடு துப்புவதின் காரணம் சொல்லு...?"
"சைத்தானை பார்த்தால் துப்பிவிடு என்று முன்னோர்கள் சொன்னதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள், ஸாரி மனோஜ் நான் ஃபிராங்கா சொன்னதுக்கு"
"ஓ....இட்ஸ் ஓகே....இதுதான் மேட்டரா...? கொய்யால பாகிஸ்தான், பங்களாதேஷ், சிறிலங்கா, இந்தியா மக்களை கண்டால் இவர்களுக்கு சைத்தானாக தெரிகிறார்களா....? அடங்கொன்னியா...."
"ஸாரி மனோஜ், இதுக்கு உனக்கு ஒரு பரிகாரம் சொல்லுகிறேன் அப்படியே செய்து பார்த்துவிட்டு என்ன நடந்துச்சுன்னு என்கிட்டே சொல்லனும், இல்லைன்னா நான் நேரே உன் ரூமுக்கே வந்துருவேன்" என சொல்லி காதில் சொல்லி தந்தாள் அந்த சூத்திரத்தை...! [[நான்கு நாள் டைமும் தந்தாள்]]
நான்கு நாட்களுக்கு அப்புறம்......
"என்ன மனோஜ்...? சொல்லு மேட்டர் சக்சஸ்தானே...?"
"ஹா ஹா ஹா ஹா எஸ் எஸ் சக்சஸ்" என்று கட்டை விரலை காட்டினேன்.
என்னய்யா......உங்களுக்கும் சூத்திரம் தெரியனுமா.....? சொல்றேன்.
அந்த அரபிச்சி வலது பக்கமாக துப்பும் போது நான் இடது பக்கமாக துப்பினேன், அவள் இடது பக்கமாக துப்பிய அன்று நான் வலது பக்கமாக துப்பினேன்..........இதுக்கு அர்த்தமென்ன...? என் நண்பியிடமே கேட்டேன்....அவள் சொன்னாள்...."நான் உனக்கு சைத்தான் என்றால் நீயும் எனக்கு சைத்தான்" என்று பொருளாம்.....ரெண்டே நாளில் கிழவி என்னை பார்த்தால் அப்புறம் துப்புவதே இல்லை....!
என்னங்கடா உலகம் இது...?
இப்படியும் இருக்கத்தான் செய்றாங்க இல்ல.. ம்ம்ம்ம்
ReplyDeleteவேதனையா இருந்தாலும், சிரிப்பை அடக்க முடியவில்லை....இந்தியாகாரன் இங்கே இல்லையேல் இந்த நாடே இல்லை என்பது இங்கே சில அரபிகளுக்கு புரிவதில்லை...!
ReplyDeleteநம்ம அருமை அவங்களுக்கு எங்க தெரியப்போவுது?.. வேலை மட்டும் வாங்கத்தெரியும்!.. கஷ்டப்படும்போது தோள் கொடுக்க மாட்டாங்க.
ReplyDeleteவெளிநாட்டுக்காரங்களின் உழைப்புத் தெரியாத அரபிகள் பாவம் ஒருவிதத்தில் அவர்களுக்கு சுதந்திரம் மூடிய நிலையில் சைத்தான் யார் என்று தெரிவதில்லை அதனால் தான் இந்தியா இலங்கை பாகிஸ்தான் எல்லாம் அதிகம் பெண்ணடிமையை போதிப்பது இல்லை!
ReplyDeleteஇந்த அரபிகள் துப்புவது இங்கும் இருக்கின்றது அது அவர்களின் இயல்பாகிப்போச்சு நாம் தான் வீதியில் கிருமியைப் பரப்பக்கூடாது என்று நினைப்பது!
ReplyDeleteஅடுத்த தலைமுறையிடம் இன்னும் கொஞ்சம் மாற்றங்கள் எதிர்பார்க்கலாம் என்று நம்புவோம் அண்ணாச்சி!
ReplyDeleteமனோ பெண்களை பார்த்தால் "அப்படியே என்னைப்போல" வேற பக்கம் திரும்பிவிடனும் அப்படி செய்யாமல் பர்தா போட்ட பெண்ணை ஊற்று பார்த்தால் அவ உங்களைப் பார்த்து சைத்தான் பார்க்கிற பார்வையை பாரு என்று துப்பாமல் வேறு என்ன செய்வாள்.
ReplyDeleteஇப்படியும் மனிதர்கள்.... வேறென்ன சொல்ல...
ReplyDeleteஏன் மாம்ஸ்,,அவளே பர்தா போட்டு இருக்கா தானே,,அவளை எதுக்கு சைட் அடிக்கிறீங்க,,,நம்மாளுங்க இருக்காங்களே..ஒரு மரத்துக்கு சேலை கட்டி இருந்தா கூட பார்ப்பாங்க...நீங்களும் அந்த லிஸ்ட்ல சேர்ந்துட் டீங்களா
ReplyDeleteகண்ட கண்ட இடங்களின் காறி துப்புவதை தவிர்ப்பது நாட்டுக்கு நல்லது, அது அரபுவாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி.
ReplyDeleteநன்றி.. சுவாரிஸ்யமாக இருந்தது கதை. ஹஹ..
துப்புவதன் மூலம் ஒருவருக்கு பாடம் கற்பித்திருக்கிறீர்களே? அருமை. கொஞ்சநாளுக்கு பிறகு ஏன் துப்புவதில்லை? சைத்தானுக்கு சைத்தான் காம்ரமைஸ் ஆகிடுச்சா?
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்த்தூ.............!
ReplyDeleteநானும் துப்பிட்டேன் ஒரு குண்டு சைத்தானைப் பார்தது!
FOOD NELLAI said...
ReplyDeleteஇப்படில்லாம் உண்மையைப்போட்டு உடைக்கிறீங்களே, இப்ப நக்ஸ் வந்து ஆட்டமா ஆடுவாரே!!!/////
வந்துட்டேன் சார்....
அது ஒண்ணுமில்லை மனோ...
ReplyDeleteநீ எத்தனை கிமி தாண்டி போனாலும்....
உன்னை பத்தி தெரிஞ்சிடுது.....
நீ அந்த கொண்டையை சரியா மறைக்கலை.....
அந்த கிழவிக்குகூட தெரிஞ்சிருக்குயா.....!!!!!!!!!!!
ReplyDeleteவாழ்க கிழவி.....!!!!!!!!!!!
எங்கள் எல்லார சார்பாகவும் அந்த கிழவிக்கு ஒரு "ஓ".....
எனறு வாழ்த்தும் அதே நேரத்தில்....
ReplyDeleteஅந்த கிழவி....
ஒரு டம்மி பீஸ்-ஐ பொய் இப்படி நினைத்துவிட்டதே....!!!!!!!!
ஹலோ கிழவி....
நீ நினைக்கிற மாதிரி அவ்வளவு ஓர்த்...கிடையாது...மனோ...
மனோவுக்கு கிரீடம் வச்சிட்டியே கிழவி,....!!!!!!
செத்தான் சேகரு.....!!!!!!!
ReplyDeleteமனதிற்கு வேதனையாக இருந்தாலும், உங்கள் நண்பி சொன்ன யோசனைக்கு நன்றி. பகிர்வுக்கும் நன்றி.
ReplyDeleteஅதர பழசுங்க மக்கா இதுகெல்லாம் போய் சேர்ந்தாதான் சுபிட்சம்
ReplyDeleteதைதான் 2000 ஆண்டுகளுக்கு முன்னாள் வள்ளுவர் சொல்லி இருக்கிறார் .....
ReplyDeleteதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉமழை........
இதில் ஒவ்வொரு துப்புக்கும் ஒரு அர்த்தம் உள்ளது .அந்த அரபிகிட்ட எடுத்து சொல்லுங்க திருந்திடுவாங்க ......
சித்தப்பு துப்பறதுல பி.ஹெச்.டியே வாங்கிருப்பீங்க போல
ReplyDeleteஓ இப்படியெல்லாம் சைகை பாஷை இருக்கா?
ReplyDeleteஓடி போ.. சைத்தான்...
ReplyDeleteஉன் பெருமை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு மனோ..!
Haaa haaa...... Unmailiye neenga saiththaan illa thane? Ok. Be cool. Appadiye namma thalaththukkum konjam vandhuttup pogalaame? http://newsigaram.blogspot.com
ReplyDeleteநீங்க சைத்தான்ற உண்மை அண்ணிக்கு தெரியுமாண்ணா?
ReplyDeleteஅட இப்படியும் மனிதர்களா? வித்தியாசமா இருக்கு உங்க அனுபவம்!
ReplyDelete."நான் உனக்கு சைத்தான் என்றால் நீயும் எனக்கு சைத்தான்" என்று பொருளாம்.....ரெண்டே நாளில் கிழவி என்னை பார்த்தால் அப்புறம் துப்புவதே இல்லை....!
ReplyDeleteஐயோ பாவம் சகோ நீங்கள் ஆனால் வயித்தியம் சூப்பர் !:....:):):)
இப்படியும் ஒரு நிகழ்வு இருக்கிறதா!!!!!.......:)
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு :)
மனோவா? கொக்கா? இனிமேல் அந்தப் பாட்டி ஜென்மத்துக்கும் இந்த வேலை செய்யாது.
ReplyDeleteவேதனையான விஷ்யத்தை நகைச்சுவையாக பகிர்ந்திருக்கிறீர்கள் அண்ணா...
ReplyDeleteசைத்தானுக்கு சைத்தான் ...
ReplyDeleteகிழவிக்கு கிழவன் ..
குட் காம்பினேஷன்
மனோ சார்.சரியான போட்டி!பழிவாங்கீட்டீங்க பாஸ்ஃஃஃஃஃஃநாம யாரு???ஹீஹீஹீ...
ReplyDeleteபொதுவிடத்தில' உமிழ்தல் தடை!!!!!!!!!!!!!
அருமை சொந்தமே!சந்திப்போம்.
பேய்.பிசாசு,சைத்தான் எல்லாத்தையும் கண்ணால பாக்கிற சக்தி உங்களுக்குத்தான் கிடைச்சிருக்கு மனோ !
ReplyDelete