நேற்று போல் இன்று இல்லை இன்றுபோல் நாளை இல்லை என்று கவிஞர்கள் சொன்னது [!] உண்மைதான் போல....இதற்க்கு வருஷங்களும் விதிவிலக்கல்ல...
2009 - 2010 - 2011 வருஷங்கள் பதிவுலகின் பொற்காலம் என்று சொன்னால் அது மிகையாகாது, ஆனால் 2012 ஆம் வருஷம் படு சுட்டியாக சுவாரஷ்யமாக எழுதிய பதிவுலக எழுத்தாளர்கள் பலரைக் காணவே இல்லை, சரக்கு தீர்ந்து போனதா இல்லை அவர்கள் சோர்ந்து போனார்களா அவதானிக்க இயலவில்லை...!
இதனால் புதிய பதிவர்களின் வரவு அறவே குறைந்து போனது, அடுத்து சிறப்பாக எழுதிய எழுத்தாளர்கள் பலரை இந்த பதிவுலகம் கண்டு [கொள்ள கொல்ல]வில்லை என்பதும் உண்மை...!
சரி..... ஏன் பதிவு எழுத புதிய விஷயங்கள் இல்லையா என்ன...? சம்பவங்கள் இல்லையா என்ன...? கற்பனை கதைகள் இல்லையா...? காதல் இல்லையா...? காவியங்கள் இல்லையா...?
இருக்கு...
இன்றைய தலைமுறை பிள்ளைகள் பலருக்கு இடிமுழக்கம் பற்றியும், இடிதாங்கி பற்றியும் தெரியுமா...? இங்கே பஹ்ரைனில் வானுயர்ந்த கட்டிடங்களைப் பார்க்கிறேன் ஆனால் இடிதாங்கிகள் இல்லை, ஒருவேளை வளைகுடா நாடுகளில் இடி மின்னல் மழை அதிகமாக இல்லை என்ற காரணமாக இருந்தாலும், இப்போதைய இயற்கையானது சற்று விநோதமாகவே இருக்கிறது...!
இப்போதைய காலநிலைகளில் பலவிதமான மாற்றங்கள் வந்து கொண்டிருப்பதை காண்கிறோம் இல்லையா...?
இந்தியாவில் பல இடங்களில் கட்டிடங்களில் இடிதாங்கியை பார்த்துள்ளேன், அந்த இடிதாங்கியின் பயன் என்ன, அதன் அர்த்தம் என்னவென்று நம் குழந்தைகளுக்கு நாம் சொல்ல கடமை பட்டுல்லோமா இல்லையா...?
இங்கே [[பதிவுலகில்]] டீச்சர்களும், வாத்தியார்களும் எனது நண்பர்களாக இருப்பதால் அவர்களுக்கு இந்த வேண்டுகோளை பதிவு செய்கிறேன்.
மாணவர்களுக்கு இடிதாங்கி பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் சொல்லித் தாருங்கள்.
இனி இடிதாங்கியின் பயன்கள் பற்றி நான் வாசித்ததில் இருந்து சில உங்கள் பார்வைக்கு...
இடிதாங்கி எனும் கருவி மின்சார பாதுகாப்பு அமைப்பு இடி மின்னல் போன்ற இயற்கை நிகழ்வுகளிலிருந்து சேதமாவதை தடுக்க மின்சார அமைப்புகளுள் பயன்படுத்தபடுகிறது. பெரும்பாலான இடிதாங்கிகள் மின்னலின் தாக்கத்திலிருந்து வெளிப்படும் உச்ச கட்ட மின்சாரத்த்தை பூமிக்கு மாற்றி செலுத்துகிறது. இதனால் மின்சாதங்களுக்கோ மின்அமைப்புகளுக்கோ பழுது ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
இடிதாங்கி என்பது கட்டடத்தின் உயர்ந்த பகுதியில் இடி, மின்னல் தாக்காமல் இருப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கருவியாகும். இதன் முனைப்பகுதி காந்தச் சக்தியால் ஆனது. இந்தக் கருவியைக் கட்டடத்தின் உயர்ந்த பகுதியில் வைத்து தடித்த காப்பர் பட்டையின் மூலம் பூமியில் எர்த் செய்து விடுவார்கள். இடி தாக்கும்போது இடிதாங்கி, மின்னலை ஈர்த்து பட்டை வழியாக பூமியைச் சென்றடைகிறது. இதனால், கட்டடங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதோடு சேர்ந்து நாமும் பாதுகாக்கப்படுகிறோம்.
இடி மின்னலில் உண்டாகும் மின்சாரம் பல இலட்சக்கணக்கான ஓல்ட் அழுத்தமுடையதாகக் காணப்படுகிறது. இந்த உயர்ந்த அழுத்த மின்சாரம் நம்மையும், கட்டடங்களையும் தாக்குவதால் பேரிழப்பு ஏற்படுகிறது.
இடிதாங்கி கூர்மையான அம்பு போன்ற அமைப்பையுடையதாகக் காணப்படுகிறது. கூர்மையானப் பகுதியில் எலக்ட்ரான், புரோட்டான்கள் மிக வேகமாக தயார் நிலையில் இருக்கும். தட்டையான வடிவமுடையதாக இருந்தால் எலக்ட்ரான், புரோட்டான் சிதறிய நிலையில் காணப்படும். இடி தாக்கும்போது இடிதாங்கி கூர்மையான பகுதியாக இருந்தால் எலக்ட்ரான்,புரோட்டான்கள் வேகமாக செயல்பட்டு தன்னகத்தே இழுத்து பூமிக்குச் செலுத்த வசதியாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒயர் மற்றும் ஹோல்டருடன் கூடிய ஒரு பல்பை எடுத்துக் கொள்வோம்.
பல்பைச் சுற்றி கருமை நிற காகிதத்தை நன்றாக ஒட்டிவிட்டு பல்பின் முன்பகுதியின் காகிதத்தில் சிறிய துவாரம் எடுத்து, மின்சாரத்தைச் செலுத்தும்போது மின்விளக்கு எரிகிறது. சிறிய துவாரத்தில் மின்னொளி பீறிட்டுப் பாய்வதைக் காணலாம். காகிதத்தை எடுத்துவிட்டால் மின்னொளி எல்லா திசைகளிலும் சிதறி விழுகிறது.
அதனால்தான் கூரிய அமைப்பைக் கொண்டதாக இடிதாங்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வருஷத்தின் முதல் பதிவும் இதுதான்...!
யாவருக்கும் எனது பொங்கல் திருநாள் வாழ்த்துகள்...
யாவருக்கும் எனது பொங்கல் திருநாள் வாழ்த்துகள்...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !
ReplyDeleteஅண்ணே எனக்கு இதுவரைக்கும் தெரியாது இப்ப நம்ம ஊர்ல கூட வக்கிறது இல்ல பயனுள்ள தகவல் நன்றி
ReplyDeleteஅண்ணன் தகவல்ல இறங்கிட்டாரே..... நல்ல தகவல்தான்..... அப்பப்ப எழுதுங்க....!
ReplyDeleteநல்ல தகவல் ...கண்டிப்பாக மாணவர்களிடம் சொல்கிறேன்
ReplyDeleteஅனைவரும் அறிந்திருக்கவேண்டிய
ReplyDeleteஅவசியமான தகவல்,பகிர்வுக்கு நன்றி
இனிய பொங்கல் நன் நாள் வாழ்த்துக்கள்
வருடத்தின் முதல் பதிவே முழங்குகிறது....தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனதினிய பொங்கல் வாழ்த்துகள் அண்ணாச்சி !
ReplyDeleteபதிவுகள் குறைவதற்கு தமிழக முதல்வர்தான் முதல் காரணம் என கருதுகிறேன்...
ReplyDeleteநல்ல தகவல்கள் மனோ.....
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பகிர்வுகள்.
ReplyDeleteஇனிய வணக்கம் நண்பர் மனோ...
உண்மையே...
ஆழ்ந்த கருத்துகள் கொண்ட பதிவுகள்
எழுதும் பலர் இன்று காணாமலேயே
போய்விட்டனர்..
நீங்கள் கூறிய அத்தனை சாத்தியங்களும்
இதற்கு பொருந்தும்...
இடிதாங்கி பற்றிய விளக்கமும் அதன் முக்கியத்துவத்தை
குழந்தைகளுக்கு உரைக்கவேண்டும் என்ற உண்மையையும்
கூறியது ஏற்கத்தக்கது ...
இந்த வருடம் செழிப்பாக அமையட்டும்...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
என் மனம் கனிந்த இனிய பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்கள்...
இதுவரை நான் அறியாத ஒன்றை சொல்லி தந்ததற்கு மிக்க நன்றி.....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
நல்ல தகவல் மனோ அண்ணாச்சி. .பதிவு குறைய மின்சாரஇன்மையும் முக்கியகாரணம்.
ReplyDelete//ஒருவேளை வளைகுடா நாடுகளில் இடி மின்னல் மழை அதிகமாக இல்லை என்ற காரணமாக இருந்தாலும்//
ReplyDeleteஇங்கு இடிதாங்கிகள் உள்ளது தோழமை. ஆனால் புதிய வடிவங்களில். 30000 டாலர் செலவில் அமைக்கபட்ட ஒரு இடிதாங்கியின் சேவையை காண்க..
http://downloadblackberryos.blogspot.com/2010/04/lightning-arrester-saves-tower.html
நல்ல பகிர்வு அண்ணா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...