பசிக்குதே வெளியே [[எங்க ஹோட்டல் சாப்பாடு எனக்கு பிடிக்காது]] போயி "திக்கா" [[அரபிகள் விரும்பி சாப்பிடும் சாப்பாடு]] வாங்கிட்டு வாய்யான்னு ஒரு அரபியை அனுப்பினேன், அவனும் வாங்கிவந்தான் அந்த சாப்பாடுகூட பச்சை வெங்காயத்தை வைத்து சாப்பிட்டால்தான் ருசியாக இருக்கும், ஆனால் வாய் நாறும், எனவே டியூட்டி நேரத்தில் வெங்காயம் சாப்பிடுவது இல்லை.
நான் வெங்காயம் சாப்பிடாமல் வைத்திருப்பதைக் கண்ட அந்த அரபி நண்பன் என்னிடம் அன்பாக கடிந்து கொண்டான்.
"அறிவு கெட்டவனே அறிவு இருக்காடா உனக்கு, உங்க நாட்டுக்காரன் எதுக்கு சீக்கிரம் சீக்கிரமா ஹார்ட் அட்டாக் வந்து சாவுரான்னு இப்பதாண்டா தெரியுது...?"
"யோவ் இதுக்கும் சாக்காலத்துக்கும் என்னய்யா சம்பந்தம்" என்றேன்
"டேய் [[ஹபீபி]] வெங்காயம் நன்றாக சாப்பிடுவது இதயத்திற்கு மிகவும் நல்லது என்றுதான் எங்கள் மூதாதையர்கள் எங்களை சாப்பாட்டில் பச்சை இலைகளையும் அதோடு வெங்காயத்தையும் சேர்த்து சாப்பிட சொல்லி இருக்கிறார்கள் தெரியுமா...?"
"ஓஹோ"
"எங்க நாட்டுக்காரனையும் பாரு, உங்க நாட்டுக்காரனையும் நல்லாபாரு எவன் அற்பாயுசுல சாகுறான்னு"கேட்டான் பாருங்க...!!
ஆச்சர்யத்தில் வாயடைத்துப்போனேன்.
அதே அரபி சொன்ன இன்னொன்னு...
வெள்ளைப்பூண்டை வறுத்து தின்றால் அதுவும் இதயத்திற்கு மிகவும் நல்லதாம், மிகவும் ஆரோக்கியமாக இருக்குமாம் இதயம்...உடலுக்கு மிகவும் சுறுசுறுப்பு கொடுக்குமாம்...!
நாம் இவைகளை எல்லாம் புஸ்தகங்களில் வாசிப்பதோடு சரி, நடைமுறைப்படுத்துவதில்லை என்ற தோணல் ஆச்சர்யத்தைதான் உண்டாக்கியது...!
ஒரு படத்தில் யாரோ வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் சொல்வார்கள், "தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டர் பக்கத்திலேயே வரமாட்டார்". அதற்கு வெண்ணிற ஆடை மூர்த்தி, "தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிடு, எவனுமே உன் பக்கத்தில வரமாட்டான்" என்று சொல்லுவார். உங்கள் பதிவைப் படித்ததும் எனக்கு இது தான் ஞாபகத்துக்கு வந்தது. உடலுக்கு ஆரோக்கியமான விஷயங்களை நாம் தவிர்ப்பதால் தான் இள வயதிலேயே மாரடைப்பு வருகிறது....
ReplyDeleteவெங்காயம் பூண்டு உடலுக்கு மிக நல்லது. நீங்கள் நன்றாக கவனித்து பார்த்தால் பிரியாணி பண்ணும் போது அதனுடன் வெங்காயம் கொண்டு ரய்த்தா ( சம்பல் ) செய்வார்கள் காரணம் பிரியாணியில் அதிக அளவு நெய் சேர்ப்பதால் அது எளிதில் செரிமானம் ஆகி உடம்பில் கொழுப்பு சேருவதை தடை செய்யும்.
ReplyDeleteசுகர் உள்ளவர்களுக்கு இலவச இணைப்பாக இருதய நோய்களும் சேர்ந்தே வரும் அதனால் சுகர் உள்ளவர்கள் நான் வெஜ் சாப்பிட்டால் வெங்காயம் பூண்டு அதிக அளவு சேர்த்து கொள்ள வேண்டும்.
இப்போது பூண்டை நேரடியாக சாப்பிட பிடிக்காதவர்கள் இப்போது வெளிவரும் பூண்டு மாத்திரையை வாங்கி சாப்பிடலாம். இந்த மாத்திரையை சாப்பிடுவதால் மிக நல்ல பலன் உண்டு. இதை என் சொந்த அனுபவத்தில் தினசரி காண்கிறேன்.
மக்கா.... சேச்சிகிட்ட வெங்காயத்தோட சமைக்க சொல்லுங்க.
ReplyDeletegood information. Thanks for sharing.
ReplyDeleteThanks
ReplyDeletevery good information which you have shared.
சரியான முறை
ReplyDeleteபயனுள்ள தகவல் அண்ணாச்சி.
ReplyDeleteஅப்ப அடிக்கடி வெங்காயம் பூண்டு சாப்பாட்டுல சேர்த்திருவோம்! நன்றி!
ReplyDeleteநம்ம இந்திய ஆர்ஜினில் ஜீன் மூலம் வரும் இந்த நோயினை ஜெனிட்டிக்கில் இன்னும் முன்னேறும் போது தான் முற்றிலும் தடுக்க முடியும் என நினைக்கிறேன். நாம் என்ன வெங்காயத்தை சாப்பிடாமலா இருக்கிறோம்.
ReplyDeleteபயனுள்ள தகவல்
ReplyDeleteஎல்லாத்தையும் பண்ணலை என்றாலும் கூட சிலவற்றை முயன்று பார்க்கிறேன் அண்ணே
ReplyDelete
ReplyDelete//நாம் இவைகளை எல்லாம் புஸ்தகங்களில் வாசிப்பதோடு சரி, நடைமுறைப்படுத்துவதில்லை என்ற தோணல் ஆச்சர்யத்தைதான் உண்டாக்கியது...!//
இது தான நாம