Wednesday, January 30, 2013

பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே...!

நான்கைந்து அக்கா தங்கச்சிகளுடன் ஒற்றை ஆணாக பிறந்தவனும், நான்கைந்து அக்கா தங்கச்சி இருக்கும் வீட்டில் கல்யாணம் செஞ்சவனும் உருப்பட்டதா சரித்திரம் பூகோளம் செவ்வாய் "கெரகம்"மும் இல்லை...!

உதாரணமாக நிறைய சம்பவங்கள் இருந்தாலும், இரண்டு சம்பவங்கள் மட்டும் சொல்றேன் இது உண்மையில் நடந்த சம்பவங்கள்.

மூன்று அக்காள் ஒரு தங்கையுடன் பிறந்த என் நண்பன் ஜோசப், வெளிநாடு வந்து வேலை செய்து ஓவர்டைம் பார்த்து தூங்காமல் கொள்ளாமல் வேலை செய்து மூன்று அக்காள்மாரை கல்யாணம் செய்து கொடுத்து கரை ஏற்றினான்.
நான்காவதாக இவனுக்கு பெண் தேடினார்கள், இவன் வெளிநாட்டில் இருந்தபடியால் பெண் பார்க்கப் போனது எல்லாமே இவனுடைய அக்காள் தங்கச்சிகள், ஒரு அக்காளுக்கு பெண்ணைப் பிடித்தால் இன்னொருத்திக்கு பிடிக்கவில்லை இப்படியாக தொடர்ந்து மூன்று வருஷம் [!] பெண் தேடியும் கிடைக்காமல் போனது.

ஒருமுறை ஊருக்குப் போனவன் இவனே செலக்ட் செய்து ஒரு பெண்ணை கல்யாணம் கட்டி ஊரில் விட்டுவிட்டு வந்தான், வந்தவனுக்கு இங்கே நிம்மதி இல்லை ஒரே புகார் பட்டியல் அக்கா தங்கைகளிடம் இருந்து வந்த வண்ணமாக இருந்தது, போன் பேசி பேசி இவன் காசு அதிலேயே கரைந்து போனது.

வேறு வழியே இல்லாமல் கடன் வாங்கி மனைவியை தன்னோடு அழைத்து கொண்டவன், பொண்டாட்டி பேச்சைக்கேட்டு எங்களை மறந்துவிட்டான் என்ற புகாரோடு அக்காக்கள் பேச்சு வார்த்தையை கட் பண்ணிவிட்டார்கள்.

மனம் ஒடிந்தவன் ஓவராக குடிக்க ஆரம்பித்தான், இவளுக  டென்ஷனில் இன்னும் இன்னும் குடித்து வேலை ஸ்தலத்தில் பேரை கெடுத்ததும் அல்லாமல் மனைவிக்கும் பாரமாகிப்போனான். பொருத்து பொருத்து இருந்த மனைவிக்கு மன நலம் பாதிக்கப்பட்டு குழந்தையை பராமரிக்க கூட முடியாமல் திணறிப்போனான்.

ஒருவழியாக இனி வெளிநாடு வேண்டாமென்று ஊர் போனவன், அக்காக்களின் வசைபாடளாலும் மனைவியின் சுகமின்மையாலும் கண்காணாத இடத்திற்கு மனைவி பிள்ளைகளை கூட்டிக்கொண்டு ஓடியே போய்விட்டான் பாவம்...!

ஐந்தாறு வருஷம் கழித்து லீவுக்குப் போன இன்னொரு நண்பனிடம் இருந்து எனக்கு போன் வந்தது, "மனோஜ்  நம்ம ஜோசப் கோட்டையத்துல ஒரு சாயாக்கடை நடத்திட்டு இருக்கான் என்னைப்பார்த்து கண்ணீர் விட்டு அழுதே விட்டான், எப்படி இருந்தவன் இப்படி ஆகிட்டானேன்னு எனக்கும் அழுகையா வந்துருச்சு மனோஜ் " என்றான்.

எனக்கு கண்ணில் கண்ணீர் முட்டியது...வெளிநாட்டில் இருந்து அக்கா தங்கைகளுக்கு அவன் வாங்கி அனுப்பிய பொருட்கள், கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்த சாமான்கள், மச்சான்மாருக்கு கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்த நண்பனுக்கு சகோதரிகள் கொடுத்தது "அநாதை வாழ்க்கை....!!!"

இனி நான்கைந்து அக்காள் தங்கச்சிகள் இருக்கும் வீட்டில் பெண் எடுத்து கல்யாணம் செய்தவனின் கொடுமைய சொல்றேன்....

கல்யாணத்துக்கு முந்திவரை செம ஜாலியாக எங்களோடு வேலை செய்து கொண்டிருந்த நண்பன், கல்யாணம் முடிந்து திரும்பி வரும்போது கொலைகளத்தில் இருந்து வந்தவன் போல திகிலாக இருந்தான்.

ஒற்றில் இருந்து மிஸ்கால் வந்தால் உடனே போனை எடுத்துகொண்டு வெளியே ஓடிவிடுவான், என்னாச்சுன்னா கல்யாணம் கட்டினவுடனே தனிக்குடித்தனம் போக மனைவியின் அக்காள் தங்கச்சிகள் உசுப்பேத்த...தாயை பிரிந்து தனிக்குடித்தனம் வைத்தான் நண்பன்.

ஆனால் இந்த தனிக்குடித்தனம் எதுக்கு உதவியது தெரியுமா மனைவியின் அக்காக்கள் தங்கச்சிகள், மற்றும் குழந்தைகள் தங்கும் சுற்றுலா தளமாகிற்று, அவன் அம்மாவுக்கு அங்கே போகவே முடியாதபடி செய்துவிட்டார்கள்.

உன் மாப்பிளை வெளிநாட்டில்தானே இருக்கிறான் அதை வாங்கிக்கேள் இதை வாங்கிக்கேள் என்று மனைவியை உசுப்பேத்தி உசுப்பேத்தி சகோதரிகள் நன்றாக இவன் பணத்தை தின்று உறங்கி சுகிக்க, இவனுக்கு கடன் ஏறி கண்ணுக்குள் காலைவிட்டு ஆட்டியது.

கடன் கொடுத்தவர்கள் மிரட்டியும் கேவலமும் படுத்த தொடங்கியதும் நண்பன் மனநலம் பாதிக்கப்பட்டவனாக கம்பெனி ஊருக்கு திருப்பி அனுப்பியது...

இவனுக்கு இப்படி ஆனதும் மனைவியின் சகோதரிகள் யாவரும் அவரவர் காரியத்தை பார்த்துக் கொள்ள ஓடியேப் போனார்கள், தனிக்குடித்தனம் போன வீடு விற்கப்பட்டது, மறுபடியும் நண்பனின் அம்மா வீட்டிலேயே போயி தஞ்சம் ஆனார்கள்...

மனைவிக்கு அவனின் நிலை புரிந்ததா இல்லையா என்றே தெரியவில்லை, அவளும் அனாதை ஆனாள் அவள் வீட்டாரிடம் [[சகோதரிகளிடம்]] இருந்தும்...

இனி நான் முதல்ல சொல்லி இருக்கும் பாராவை ஒருமுறை கூட படித்துப்பாருங்கள்.

இதைப்பற்றி கே எஸ் ரவிக்குமார் அண்ணன் அழகான ஒரு படம் எடுத்து இருந்தார், சரவணன் ஹீரோவாக நடித்து வெளி வந்தப்படம் "பொண்டாட்டி ராஜ்ஜியம்" முடிந்தால் பாருங்கள்.

13 comments:

 1. படிப்பறிவு இல்ல மக்கா

  ReplyDelete
 2. இந்த காலத்தில் இப்படிபட்ட முட்டாள்தனமான ஆண்கள் இருக்கிறார்களா? வியப்பாகவே இருக்கிறது சரி ஆண்தான் அப்படி முட்டாள்தனமாக இருந்தான் என்றால் அவனைக் கட்டிக் கொண்ட பெண்ணும் அப்படியா?

  ReplyDelete
 3. பல இடங்களில் ஆண்களின் நிலை இப்படியும் இருக்கிறது.

  ReplyDelete
 4. மிக கஷ்டமான சூழ் நிலை.

  ReplyDelete
 5. கொடுமை... இந்த செண்டிமெண்டல் விவகாரத்தையெல்லாம் மூட்டை கட்டி விட்டு.. நம்மை நன்கு கவனித்துக்கொள்வது சிறப்பு

  ReplyDelete
 6. பல சுமைதாங்கிகளின் நிலை இதுதான்

  ReplyDelete
 7. எங்கோ ஏதோ ஒரு பெண் செய்யும் தவறுக்கு எல்லோருக்குமே கெட்ட பெயர்

  ReplyDelete
 8. பாவம் இப்படியான சுமைதாங்கிகள்!

  ReplyDelete
 9. நிதர்சனமான உண்மைகள் கனக்க வைத்த பதிவு!

  ReplyDelete
 10. தாயிடம் மகன் வந்தால் பரவாயில்லை.
  வயதான காலத்தில் தாய் இம்மாதிரி மருமகளிடம் எதிர்ப்பார்த்து நிற்கும்படி ஆகிவிட்டால்------கற்பனை செய்து பாருங்கள்.

  ReplyDelete
 11. நீங்க சொல்வது ஒரு சிலருக்கு மட்டும் நடப்பது அக்கரைக்கு இக்கரை பச்சைன்னு சொல்வாங்க நாலு சகோதரர்கள் கூட பொறந்து கைவிட பட்ட பெண்களும் இருக்காங்க இங்கனதான் நான் புதுசு பதிவுலகத்திற்கும்ம் உங்கள் ப்ளாக்கு வரும் போதே இப்படியா ......தலைப்பு பண்ண வேலை

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!