Tuesday, January 29, 2013

அடேங்கப்பா வேகம் பிடிக்கும் வலைத்தளம்..!


ஆரம்ப நாட்களில், சும்மா விளையாட்டாக ஆரம்பித்த பேஸ்புக், அதில் காமெடியை மைய்யமாக கொண்டு விளையாடி என்னை பழக்குவித்த தம்பிகள் "கோமாளி" செல்வா, பிரவீன், மதுரை பொண்ணு, தங்கச்சி கல்பனா, நிவேதா,  சத்யசீலன்...மற்றும் பலர்...
பிளாக் மட்டுமே வாசித்துக்கொண்டு இருந்த என்னை நாஞ்சில் மனோ என்று பெயரிட்டு பிளாக் தொடங்குமாறு சொன்ன தம்பி "நாஞ்சில் எக்ஸ்பிரஸ்"பிரதாப், பிளாக் ஒப்பன் செய்தபின் அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்ற ஐடியாக்கள்  தந்து பின்பலமாக ஆதரவாக இருந்த தம்பி செல்வா மற்றும் பிரவீன் மதுரை பொண்ணு, தங்கச்சி கல்பனா...!

பல பிரபல பிளாக்கர்கள் தலை[பிச்சி] தெறிக்க ஓடிய பின்னும்,இன்றைக்கும் ஆலமரம்போல தழைத்து ஓங்கி நிற்கும் "நாஞ்சில்மனோ" வலைத்தளம் பல பிரபலங்கள் வாசித்து ரிலாக்ஸ் ஆகும் தளமாக மாறியதில் எங்க யாவருக்கும் பெருமையும், வாசிக்கும் உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றிகள் பல....!

பேஸ்புக்கிலும் வலைத்தளத்திலும் இம்புட்டு பெரிய பெரிய தலைகள் எல்லாம் பர்சனலாக சாட்டிங்கில் வருவதைப் பார்த்தால் ஆச்சர்யமாகவே இருக்கிறது...!

இதற்க்கு உதாரணம், நடிகை ஷாலினி அஜித் அவர்களின் பேஸ்புக்கில் அவர் போட்டோவின் கீழே ஒரு கமெண்ட்ஸ் போட்டேன்..."என்ன மேடம் எப்ப பார்த்தாலும் போட்டோவா போட்டுட்டு இருக்கீங்களே" என்று...நான் சற்றும் எதிபார்க்கா வண்ணம் சாட்டில் வந்த ஷாலினி, "நீங்க மட்டும் பேஸ்புக்லையே கிடந்து  படுத்து  உறங்கலாமோ...?" என்று கிண்டல் பண்ணி சற்று சாட்டிவிட்டு போனது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது, இதைப்போல பல தலைகள் மின்னல் போல சாட்டிங்கில் வந்து போவதுண்டு...!

எது எழுதினாலும் அது காமெடியாக இருந்தாலும் அதில் ஒரு பிரயோசனம் உள்ள மேட்டர் இருக்கும்படி இனி கவனித்துக் கொள்கிறேன் நண்பர்களே...
மகா சபையில், கர்ணனை கேவலப்படுத்தும் நோக்கோடு  நீ சத்ரியனா..? என்ற கேள்விக்கு கர்ணனிடத்தில் பதிலில்லை ஆனால் அதே மகா சபையில் தன் நண்பனை விட்டுக்கொடுக்காமல் துரியோதனன் அவனை அரசன் ஆக்கி மகிழ்ந்து எதிரிகளின் வாயடைத்தான், அதற்காகவே தவறு என்று தெரிந்தும் கவுரவர்களுக்காக தன் உயிர் தந்து செஞ்சோற்று கடன் தீர்த்தான் கர்ணன்...! அதைப்போல என்னை யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் [[நான் தவறே செய்திருந்தாலும்]] நட்புடன் என்னோடு இருக்கும் நண்பர்களைப் பெற்றதும் இங்கேதான்...!

உங்கள் அனைவர் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பணம் செய்கிறேன் நன்றி...!

17 comments:

  1. முகநூலின் பலமே அதுவாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  2. அண்ணா பிரயோஜனமெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்... உங்க சைட்டுக்கு வந்தா எல்லாரும் சிரிச்சுட்டு போகனும்... அது போதும்...

    ReplyDelete
  3. நெஞ்ச நக்கிட்ட போ...ஸ்ஸ்ஸ் அபா வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. என்ன திடீரென்று இப்படி ஒரு பாசம்...? நன்றிகள் நாங்கள் சொல்கிறோம்...

    ReplyDelete
  5. நாங்களும் பிரபல பதிவர் உங்களுடன் பழக்கம் வைத்திருப்பதை எண்ணி மகிழ்கின்றோம்.

    கலக்குங்க தல

    ReplyDelete
  6. சுவாரஸ்யமாக பேஸ்புக்கின் பலம் சொல்லிப் போகும்
    பதிவு மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மக்கா.... வலையுலக பலத்தை எதார்த்தமா சூப்பரா சொல்லியிருக்கிங்க

    ReplyDelete
  8. ஏங்க சாதாரண பேஸ்புக் ப்ளாக் பகிர்வுகளுக்குப்போய் செஞ்சோற்றுக் கடன் பற்றியெல்லாம் பேசி அழுகையை வரவழைக்கின்றீர்கள்..!! சீரியஸா சொன்னாலும் இந்த பதிவும் எனக்குக் காமடியாகவே இருக்கிறது.. :)))

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்! பேஸ்புக்கில் இருக்கீங்களா? நானும் தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  10. அன்புக்கு பாசத்துக்கு எங்களை சிரிக்கவைப்பதற்க்கு நன்றி நன்றி

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் சகோ!!

    ReplyDelete
  12. ///உங்கள் அனைவர் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பணம் செய்கிறேன் நன்றி.///


    என்ன மனோ இப்படி மனசை பிழிஞ்சு அழுக வைக்கீறிங்க....

    அப்புறம் கடைசியாக ஏதோ சமர்பணம் என்று சொல்லி இருக்கிறீர்கள் அந்த பணத்தை எங்க வந்து வாங்கி கொள்வது என்ற விபரம் இல்லை எவ்வளவு தொகை என்றும் நீங்கள் தெளிவாக சொல்லவில்லை கொஞ்சம் விபரமாக அதற்கு ஒரு பதிவு போடவும்

    ReplyDelete
  13. சரிதான் என்னையும் சேர்த்துகிடுங்க உங்க நண்பேங்க குழுவில் வாழ்த்துகள் பல பல

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!