Monday, January 28, 2013

ஹேங்க் ஓவர்ல இருந்தால் சாவிக்கும் ஸ்டெப்னிக்கும் வித்தியாசம் தெரியாதா...?

 டியூட்டில எப்பவும் என் முதுகை சொறிஞ்சிட்டே இருந்தவனை என்னடா பண்ணன்னு யோசிச்சு கடைசியா கண்டுபிடிச்சேன்ய்யா சூப்பரான ஒரு வழி, கொய்யால இப்பல்லாம் எனக்கு இண்டர்காம்ல கூட போன் பண்ணுறது இல்லே அவன்....!
அப்பிடி என்னய்யா பண்ணுனேன்னு கேக்குறீங்களா...? சிம்பிள்...புதுசா ஒரு பேஸ்புக் அக்கவுண்ட் ஒப்பன் பண்ணி அவன் பாஷையையும், எப்பிடி டைப்பும் ஆபரேட்டும் பண்ணுறதுன்னு சொல்லிக்குடுத்தேன் அம்புட்டுதான் பயபிள்ளை இப்போ படுபயங்கர பிசியாகிட்டான், எனக்கும் தொந்தரவு நீங்கிடுச்சு.
--------------------------------------------------------------------------

என் மாமன் பெயர் லிங்கம், மச்சான் பெயர் சுயம்பு லிங்கம், அண்ணனின் நண்பன் பெயர் லிங்கம் [[கன்னியாகுமரி லிங்கமேதான்]] ரெண்டுபேருமே இப்போ உயிருடன் இல்லை, சொக்காரன் பெயர் பரமார்த்தலிங்கம், குடும்ப நண்பர் பெயர் லிங்க[ம்]துரை, கிளாஸ்மேட் மாய லிங்கம் இன்னொருத்தன் ராமலிங்கம், நண்பர் ஆபிசரின் பெயர் சங்கரலிங்கம்...

இன்னும் தேடுனா நிறைய லிங்கங்கள் கிடைக்கக்கூடும், பாருங்கய்யா நம்மள சுத்தி எத்தனை லிங்கங்கள் இருக்காயிங்கன்னு...!
----------------------------------------------------------------------------

காலை மணி ஒன்பது, நண்பனுடன் ஒரு உரையாடல்...

"ஹலோ நேற்று ராத்திரி சரக்கடிச்சுட்டு கார் சாவியை எங்கேடா வச்சே..?"

"கார்லதான் இருக்கு"

"டேய் மக்கா, கார் கீ எங்கேடான்னு கேட்டேன்"

"காருக்கு உள்ளேதான் இருக்கு"

"அடேய் கார் சாவி கார் சாவி கார் சாவி..."

"இரு இரு இப்போ ஏன் இப்பிடி நாய் மாதிரி கத்துறே...?"

"டேய் கார் கம்பெனிகாரன் காரை கேக்குறான்டா கார் கீ எங்கே வச்சிருக்கே சொல்லிதொலை"

"அது காருக்கு உள்ளேதாம்டா இருக்கு என் சிப்ஸு"

"எலேய் அங்கே வந்தேம்னா கொன்னேப்புடுவேன், கார் கீ கீ கீ கீ எங்கேடா விளக்கெண்ணெய்..?"

"என்ன...நான்தான் நேத்தடிச்ச ஹேங்க் ஓவர்ல இருக்கேம்னா உனக்கு என்னாச்சு காலையிலே தண்ணி போட்டுட்டியா..?"

"ப்த்விவ் ஹ்விவ்ட்க்பி லெப்ஜ்ஹ்ர்ஹ்கெ ஒக்ஜ்த் ப்ப்ப்ப்ஹ்ப்..."

"ஸ்டாப் ஸ்டாப் ஏன்டா இப்பிடி திட்டுறே...? இம்புட்டு கெட்ட வார்த்தைகளை உனக்கு சொல்லித்தந்தது "அது"தானே, இரு அதுக்கு இருக்கு இன்னைக்கு"

"அண்ணே.... சார்..... சேட்டா... உஸ்தாத்...வண்டி சாவி எங்கே வண்டியை தூக்கவேண்டும் ச்சே ச்சீ எடுக்கவேண்டும் ஆகையால் சாவியை எங்கே வைத்துள்ளாய் என்று சொல்லவும்"

"ஒ சாவியா..? அதை முதல்லையே கேட்டு தொலச்சிருக்க வேண்டியதுதானே...? நானும் "ஸ்டெபினி"யை கேக்குறியோன்னு நினச்சிட்டேன், சாவி ரிசப்ஷனில் இருக்கு போயி எடுத்துக்க"

"ஆஷெ யெய்ட்க்யூ ஜ்ஜ்ஹ்த் ஹுஜ்ப்கே க்க்ட்ஜுக்ப்..."

"ஓஹோ மறுபடியும் நீளமான கெட்ட  வார்த்தையா தேங்க்யூ டா செல்லம்"

#கொய்யால சரக்கடிச்சிகிட்டு இருக்குறவன் கூட தெறமையா பேசி சமாளிச்சிரலாம் போல, ஆனால் காலையில ஹேங்க் ஓவரோடு டியூட்டியில் இருப்பவனிடம் பேசினால் சாவிக்கும் கார் ஸ்டெப்னிக்கும் வித்தியாசம் தெரியாமல் கொலையா கொல்லுறானுங்க...!

11 comments:

  1. இன்னொரு லிங்கத்த விட்டிங்களே பாஸ் சரி சரி//////////இருக்கு என் சிப்ஸு" இப்படியா உண்மையிலேயே திட்டுவீங்க?அட ?இருந்தாலும் உங்கட பேஸ்புக் ஐடியா சுப்பர் அண்ணே

    ReplyDelete
  2. ஹா ஹா,எங்க போனாலும் இந்த லிங்கம் உங்க கூடவே வருவார். சாவி இருந்துச்சா?

    ReplyDelete
  3. சாவி கிடைச்சுடுச்சு ஆபீசர்...ஆனால் நாந்தேன் நொந்து போனேன் ஹி ஹி...

    ReplyDelete
  4. //ப்த்விவ் ஹ்விவ்ட்க்பி லெப்ஜ்ஹ்ர்ஹ்கெ ஒக்ஜ்த் ப்ப்ப்ப்ஹ்ப்..."//


    //ஆஷெ யெய்ட்க்யூ ஜ்ஜ்ஹ்த் ஹுஜ்ப்கே க்க்ட்ஜுக்ப்..."//

    மக்கா மிடியல இதுக்கு விளக்கம் என்னான்னு பிரிஞ்சிக்க மிடியல - ப்ளீஸ் தனிமடலிலாவது விளக்கம் அளிக்கவும் இல்லைனா தலையே வெடிச்சுடும்.

    ஆங்

    ReplyDelete
  5. தப்பான சரக்கை மிச்சிங் சரி இல்லாமல் அடிச்சா இப்படிதேன் ஆகும் ஹங் ஓவரா சொன்னேன்

    ReplyDelete
  6. //நம்மள சுத்தி எத்தனை லிங்கங்கள் இருக்காயிங்கன்னு//

    மக்கா, அட எனது நண்பன் மகாலிங்கம்

    ReplyDelete
  7. என் நண்பன் பெயர் சொக்கலிங்கம் ..

    ReplyDelete
  8. லிங்கம்,எத்தனை லிங்கமடா!
    பாருங்கள்..http://kuttikkunjan.blogspot.in/2013/01/blog-post_3.html

    ReplyDelete
  9. ஹா... ஹா...

    லிங்கமெல்லாம்... லிங்கில்தானே இருக்கு அண்ணா...

    எல்லாமே சிரிக்க வைத்தது...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!