Thursday, June 20, 2013

ஹைஹீல்ஸ் செருப்பணிந்து சரக்கடிக்கும் பெண்கள்...!

பஹ்ரைனில் எமர்ஜென்சியின் போது கொல்லப்பட்ட மலையாளி குடும்பத்திற்கு 60,000 பஹ்ரைன் தினார் பஹ்ரைன் பார்லிமென்றின்  அனுமதியோடு கொடுக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 85,000,00 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்....

ஆனால் உயிர்...?

இதுவே தமிழன் செத்து இருந்தால் ஒரு நாதி பேதியும் எட்டிப் பார்த்திருக்காது...!

பத்து வருஷம் முன்னாடி ஒரு பதினோரு தமிழர்கள் தீயில் கருகி இறந்து போனார்கள் அவர்களுக்கு பஹ்ரைன் கவர்மெண்ட் ஒண்ணுமே குடுக்கலை, ஆனால் கருணாநிதி தலைக்கு ஒரு லட்சம் கொடுப்பதாக சொன்னார், கொடுத்தாரோ இல்லையோ ஆண்டவனுக்கே வெளிச்சம்...!
-------------------------------------------------------------------------

டாஸ்மாக் குடிமகன்களுக்கு தனி அடையாள அட்டை - மாதம் பத்து நாட்கள் ஒரு குவாட்டர் வீதம் இலவசம் - எனவே தெலுங்கு மானமுள்ள ச்சே தமிழ் மானமுள்ள தலைவனுக்கு "ஒட்டு" போடுங்க ஸ்ஸ்ஸ்ஸ் ஓட்டு போடுங்க.
-----------------------------------------------------------------------

நான் யாருக்கும் கடன் கொடுப்பதும் கிடையாது வாங்குவதும் கிடையாது என்றவன், "மெடிக்கல் செக்கப்புக்கு போகணும் என்கிட்டே காசு இல்லை உன்கிட்டே இருந்தா குடேன்" என்றான்.
----------------------------------------------------------------------------

சில்லரைத்தனமாக நண்பர்களை வைத்திருப்பவனுக்கும் புத்தி சில்லரைத்தனமாகவேதான் இருக்கும் என்றான் ஒரு சில்லரை.
------------------------------------------------------------------------
ஹிந்தியில் படம் நடிக்க [!] போகிறார் விஜய்//


அய்யா சாமிகளா அங்கே கொஞ்சூண்டு இருக்கும் தமிழனையும் சேர்த்து மொத்த ஹிந்திக்காரனையும் கொல்ல திட்டம் போடுறாயிங்க போல....

வேணா இலங்கை போயி சிங்கள படத்துல நடிக்க சொல்லுங்கப்பூ, அவனுகளை வேரடி மண்ணோடு சாகடிச்சிரலாம்.
-----------------------------------------------------------------------------
கிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டம் தெரிந்தும் அதில் ஈ போல சுற்றி வாராங்களே நம்மாளுங்க திருந்துங்கப்பா.
-----------------------------------------------------------------------------

சேலத்து மாம்பழம் மட்டும்தான் தித்திக்கும்னு யாருய்யா சொன்னது, மொராக்கோ, ஈராக், பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வரும் மாம்பழமும் தித்திக்கவே செய்கிறது ஹி ஹி....[[நோ நோ ஆபீசர்....... தப்பா திங்க் பண்ணப்டாது]]
----------------------------------------------------------------------------

ஹைஹீல்ஸ் செருப்பு போட்டுட்டு தண்ணியடிச்சா என்னாகும், எங்க ஹோட்டல்ல பப்பரப்பான்னு மல்லாந்து கீழே மேலே விழும் சவூதி, மொரோக்கன், எகிப்து பெண்களைப் பார்க்கும் போது மனசு கனக்கிறது என்னத்தை சொல்ல போங்க. 
----------------------------------------------------------------------------

ஹோட்டல் ரூல்ஸ் இதுன்னு சொன்னா....... அரபிக்காரன் அவன் அப்பன் வீட்டு ரூல்ஸ சொல்லுறான், அவன் சொல்லுறதை நாங்க கேக்கணுமாம் போடாங்கோ.
----------------------------------------------------------------------------

லெமூரியா கண்டத்தை ஆண்ட தமிழ் பாண்டிய மன்னனுக்கு அறுபதாயிரம் போர் கப்பல்கள் இருந்ததாம் - ஒரு மெத்த படித்த மலையாளி நண்பன் சொன்னது [[இது ஏற்கனவே பகிர்ந்ததான்னு சின்ன சந்தேகம்]] 
-----------------------------------------------------------------------------

புதிதாக வந்த பிலிப்பைனி வெயிட்ரஸ் பெண்தான் இப்போ எனக்கு ரிலாக்ஸ், அரபி தெரியாது என்பதால் போன் [[இன்டர்காம்]] பண்ணி அரபியில் பேசி கலாயித்து கொண்டிருக்கிறேன்  என்னைக்கு மாட்டப் போறேனோ ஹி ஹி....பாவம் பெண் பாவம் பொல்லாதது. [[என்கிட்டேயே வந்து கம்ளயின்ட் வேறப் பண்ணுது என்னாத்தை சொல்ல...]]
-----------------------------------------------------------------------------

பெண்ணைவிட அழகாக இருந்தாள், சத்திரத்தில் அறை [[அதாங்க ரூம்]] கொடுத்தேன் பாஸ்போர்ட் செக் செய்தேன் ஆண் பெயர் இருந்தது, அப்புறம்தான் தெரிந்தது அவள் ஒரு அண்ணகன் என்று வாழ்க வாழ்க...ஆனால் அழகோ அழகு...!
-----------------------------------------------------------------------------

என்னைப் பார்த்து ஹபீபி [அன்பானவனே] ஹபீபி...... என்று அன்பாக கைபிடித்து குலுக்கும் சவுதிப் பெண்கள்.......கடுகடுப்பாக பார்த்து மனதிற்குள் கொதிக்கும் சவூதி அரபிகள், அவனுக கண்ணைப் பார்க்கனுமே அம்புட்டு கடுமை கண்களில், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!
--------------------------------------------------------------------------- 

சூது நம்மை ஆளும் போது  நாம் சூதாட்டக்காரன் ஆகிறோம், கிரிக்கெட் மொள்ளமாரிகள் கவனத்திற்கு...!
--------------------------------------------------------------------------

எங்க டாடிக்கு அறிவே கிடையாது என்று கேஷுவலா தன் சக தோழியிடம் மகள் சொல்லும் போது - நான் அப்பான்னு கூப்பிடவே பத்துமுறை ரிகர்சல் பார்த்ததை எப்படி இவளிடம் சொல்வேன் ஹி ஹி..

சரி சரி இன்னைக்கு இம்புட்டு போதும்னு நினைக்கிறேன் ஹி ஹி விடு ஜூட் மனோ....


11 comments:

 1. சரி சரி இன்னைக்கு இம்புட்டு போதும்னு நினைக்கிறேன் ஹி ஹி விடு ஜூட் மனோ....

  எங்க ஓடுறீங்க சகோ சனங்கள் இன்னும் கொஞ்சம் சொல்லச் சொல்லிக்
  கெஞ்சுராக :))))))))

  ReplyDelete
 2. கலர் கலரா வரிகள் பட்டையை கிளப்புது...

  என்னத்தை சொல்ல... அண்ணே... நினைச்சி பார்த்தா மனசே சரியில்லை போங்க... ஹிஹி...

  ReplyDelete
 3. வேற எந்த ஊரு மாம்பழம்லாம் நல்லாருக்கும்ணா........?

  ReplyDelete
 4. என்னைப் பார்த்து ஹபீபி [அன்பானவனே] ஹபீபி...... என்று அன்பாக கைபிடித்து குலுக்கும் சவுதிப் பெண்கள்.......கடுகடுப்பாக பார்த்து மனதிற்குள் கொதிக்கும் சவூதி அரபிகள், அவனுக கண்ணைப் பார்க்கனுமே அம்புட்டு கடுமை கண்களில், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!//வை திஸ் கொலவெறி பாஸ்???????????? :p

  ReplyDelete
 5. பட்டாசு மாதிரி பரபர தான் சூப்பர் ஆமா பார்த்து அங்கலாம் கடுமையான சட்ட திட்டங்கள் பார்த்து குஞ்சிதபாதத்த வெட்டிர போறாங்க

  ReplyDelete
 6. இன்னைக்கு இது போதும்னு கிளம்பிட்டீங்க!!!

  கலர் கலரா கலக்கல்...

  ReplyDelete
 7. சேலத்து மாம்பழம் மட்டும்தான் தித்திக்கும்னு யாருய்யா சொன்னது, மொராக்கோ, ஈராக், பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வரும் மாம்பழமும் தித்திக்கவே செய்கிறது ஹி ஹி....[[நோ நோ ஆபீசர்....... தப்பா திங்க் பண்ணப்டாது]]
  ----------------------------------------------------------------------------/////////////////////////


  பழத்தை தோல் உரித்துதானே சாப்பிட்டீங்க???????????

  ReplyDelete
  Replies
  1. இதுவும் தப்பாச்சே ?

   Delete
 8. நம்மவர்களுக்கு கிரிக்கட் ஒரு போதை !ம்ம்ம் பலதையும் சொன்னாலும் அந்த ஹீல்ஸ் செருப்பு அழகிகள் :))))

  ReplyDelete
 9. டாஸ்மாக் குடிமகன்களுக்கு தனி அடையாள அட்டை - மாதம் பத்து நாட்கள் ஒரு குவாட்டர் வீதம் இலவசம் - எனவே தெலுங்கு மானமுள்ள ச்சே தமிழ் மானமுள்ள தலைவனுக்கு "ஒட்டு" போடுங்க ஸ்ஸ்ஸ்ஸ் ஓட்டு போடுங்க// அண்ணாச்சி வார்த்தைகள் எல்லாமே நச்சுனு இருக்கும் உரைக்கிற மாதிரியும் இருக்கும் அதுசரி எது எல்லாம் எப்படி உங்களுக்கு தோணுது ?

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!