Tuesday, June 25, 2013

ரஜினியை நமக்குத் தெரியும் ரஜினிக்கு நம்மைத் தெரியுமா...?

நமக்கு அம்மாவை தெரியும் கலைஞரை தெரியும் ரஜினியை தெரியும் கமலை தெரியும் ஏன் கனிமொழியை கூட தெரியும் ஆனா........ அவிங்களுக்குதான் நம்மளை தெரிய மாட்டேங்குது - ம்ஹும் நாங்களும் சொல்வொமுல்ல
-------------------------------------------------------------------------------

ஒரு நல்ல செய்தி ஒரு கெட்ட செய்தியும் ஒருத்தன் வாழ்க்கையில இப்பிடியா வந்து கும்மி அடிக்கணும்...?

வேலைக்கு அவசரமா போனவன் கண்ணுல நடு ரோட்டுல ஐநூறு சவூதி ரியால் கிடப்பது தெரிய அவசரமா ஓடிப்போயி எடுத்தவனின் புட்டத்தில் ஒரு கார் வந்து பிரேக்கடித்து மோத....

ஆஸ்பத்திரிக்கு ஐநூறு ரியாலை மொய் எழுதிட்டு வந்தான்....எப்பூடீ......!

நீதி : அக்கம் பக்கம் பார்த்து நடக்கனும் 
---------------------------------------------------------------------------------
நாலு மாசத்துக்கு ஒருமுறை லோக்கலா செருப்பு, ஷூ வாங்கி கடி வாங்குறதை [[செலவு]] விட, குவாலிட்டியா வாங்கி பயன்படுத்துங்க கடியில இருந்தும், பாக்கெட் காசு செலவுல இருந்தும் விடுபடலாம்...!

குவாலிட்டியா வாங்குனா ரொம்பநாள் யூஸ் ஆகும், மற்றது நம்மையும் கடிச்சு வச்சுட்டு அதுவும் சீக்கிரமே பிஞ்சி போகும்.
------------------------------------------------------------------------------------

பஹ்ரைனில் ஒரு முறை வயிற்று வலி தொடர, ஆஸ்பத்திரி போயி செலவானது 120 பஹ்ரைன் தினார் [[பதினைந்தாயிரம் ரூபாய்]] ஆனாலும் வயிற்று வலி சரியா தீரல, ஒருமுறை ஊருக்கு [[மும்பை]] போனப்போ இதே வயிற்று வலி வர, பக்கத்து தெருவில் உள்ள டாக்டரைப் பார்த்தேன் ஒரு ஊசியும், மூன்று  வேளை  மாத்திரையும் தந்தார் 40 ரூபாய் வாங்கினார், இதுவரை வலி இல்லை. 

வெளி நாடுன்னா அங்கேயும் அநியாயம்தான் போங்க....!
-----------------------------------------------------------------------------------

ரம்ஜான் வந்தா ஊருக்கு போலாம்னு ஆசையா காத்திருந்தது, முடியாமப் போனது மனசுக்கு கஷ்டமாகத்தான் இருக்கு, எங்கே நாம நினைக்குறது எல்லாம் நடக்கவா செய்யுது ? நடப்பது நடக்கட்டும் பார்க்கலாம்.
-----------------------------------------------------------------------------------

முதலாளிமாருங்க எடுத்ததுக்கும் பிடித்ததுக்கும் அமேரிக்கா, லண்டன், சுவிசர்லாந்னு பொசுக்கு பொசுக்குன்னு போறாங்கய்யா, நமக்குதான் குடுப்பினை இல்லை - சிரிக்கப்டாது ஆமா.
------------------------------------------------------------------------------------

நம்மாளுங்க சிம்மிங்பூள் போயி குளிச்ச ரெண்டு மணி நேரத்துல தண்ணீரின் மொத்தக் கலரும் மாறிப்போச்சு, நீச்சல்குளத்துக்கு சொந்தக்காரன் அருவாளோட வருமுன்னே எடுத்தோம் பாருங்க ஓட்டம் அவ்வ்வ்வ்வ்....
-----------------------------------------------------------------------------------

இவிங்க ஓரங்க நாடகம் இன்னும் தீர்ந்தபாடில்லை போல கொய்யால...!
-------------------------------------------------------------------------------------

டேய் மக்கா அந்த வீட்டுல கடிநாய் இருக்கு எச்சரிக்கையாக இருக்க்கவும்னு நண்பன் சொன்னது சரியாக அந்த வீட்டின் முன்பு போகும் போதுதான் நினைவுக்கு வரவும் அந்த கடிநாய் அவன் முன்பு வரவும் சரியாக இருந்தது.

"படேர்"ன்னு எடுத்தான் பாருங்க ஓட்டம், ஓடிட்டே திரும்பி பார்த்தவனுக்கு அதிர்ச்சி.......பின்னே, இவன் இங்கிட்டு ஓட அது இவன் ஓடினதைப் பார்த்து அங்கிட்டு ஓடிக்கொண்டிருந்தது.


18 comments:

 1. சுவாரஸ்யமான அனுபவங்கள் அடங்கிய
  பதிவு அருமை.தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ரஜினியை நமக்குத் தெரியும் ரஜினிக்கு நம்மைத் தெரியுமா...? நம்மை தெரியாது ஆனால் நம்ம கையில் பணம் இல்லாவிட்டாலும் பொண்டாடி கழுத்தில் தாலி இருப்பது தெரியும் அதனால்தான் அடுத்த படத்தை எடுத்திருக்கிறார் மிகவும் நம்பிக்கையுடன்

  ReplyDelete
  Replies
  1. மனைவியிடம் சொல்லாமல் மறைத்த ரகசியம்//

   எனக்கு உங்க பிளாக் ஒப்பன் ஆகலை சரவணன் என்னான்னு பாருங்க.

   Delete
 3. இங்கே செருப்பு அடிக்கடி திருடு போறதனால 100 ரூபாய் செருப்புதான் யூஸ் பண்றோம்...

  ReplyDelete
 4. நல்ல சேதி, கேட்ட சேதி... சபாஷ் மக்கா..

  ReplyDelete
 5. இந்த தடவ பொண்ணுகளோட கும்மலாம் போட்டாத எழுதலையோ

  ReplyDelete
 6. நல்ல செய்தி...

  முடிவில் ஜோக் செம... ஹா... ஹா...

  ReplyDelete
 7. படம் போட்டு புட்டு புட்டு வைத்தீடிங்க . சும்மா சொலக் கூடாது நல்லாவே சொல்றீங்க .தேனோடு மருந்து .நகைசுவையொடு கருத்துக் குவியல்

  ReplyDelete
 8. ஒவ்வொரு குறிப்பும் அருமை! தொடர வாழ்த்துக்கள்! வயித்துவலி விசயம் சூப்பர்!

  ReplyDelete
 9. ஓரங்க நாடகம் கண்ணுக்குள்ள நிக்குது மக்கா !பயப்புள்ள
  இன்னாமா ஓரங் கட்டுது பாரு :)

  வாழ்த்துக்கள் சகோ சிரிக்க வைத்த சிறப்பான நகைச்சுவைகளுக்கு .

  ReplyDelete
 10. கடைசி ஜோக்.... ரசித்தேன்....

  சுவையான பகிர்வுக்கு நன்றி மனோ.

  ReplyDelete
 11. கலக்கல் அண்ணா!

  ReplyDelete
 12. \\வெளி நாடுன்னா அங்கேயும் அநியாயம்தான் போங்க....!\\

  பொதுவாகவே வெளிநாடுகளில் பணம் பிடுங்கும் அளவுக்கு ட்ரீட்மென்ட் இருப்பதில்லை பாஸ்...நம்ம ஊருதான் பேஸ்ட்..ஒரே ஒரு ஊசி போதும்..

  ReplyDelete
 13. //"படேர்"ன்னு எடுத்தான் பாருங்க ஓட்டம், ஓடிட்டே திரும்பி பார்த்தவனுக்கு அதிர்ச்சி.......பின்னே, இவன் இங்கிட்டு ஓட அது இவன் ஓடினதைப் பார்த்து அங்கிட்டு ஓடிக்கொண்டிருந்தது.//

  ஹா..ஹா... செம..

  ReplyDelete
 14. எல்லாமே செம அண்ணா...

  அந்த நாய்... அதான் கடைசியா போட்டிருக்க ரெண்டும் சூப்பரண்ணா...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!