Wednesday, June 5, 2013

தமிழக மக்களுக்கு பொன்னும் வெள்ளியும் அள்ளித்தரும் சூப்பர்ஸ்டார்...!

பதிவுகள் அதிகம் எழுத நேரங்கள் கிடைப்பதில்லை இப்போது, காரணம் கடுமையான ஆணிகள் பிடுங்க வேண்டி வந்திருக்கிறது. தப்பிச்சீங்க போங்க....

காடுகள் மலைகள் எதற்கு ?

மழைகள் பொழிந்து நதிகள் வழியாக மனிதனுக்கு நன்மை உண்டாக்க...!

கடல் எதற்கு ? 

மனிதனுக்கு போக்குவரத்து மற்றும் மீன்...!
பேருந்து, ரயில் எதற்கு ?

இடி மன்னர்கள் சுகிக்க...!

விமானம் எதற்கு ?

விமானப் பணிப்பெண்ணை சைட் அடிக்க...!

பூங்காக்கள் எதற்கு ?

சைட் டிஷ் சகிதம் டாஸ்மாக் சரக்கை கும்பலாக இருந்து அடித்து நாறடிக்க...!

சாக்கடைகள் எதற்கு ?

குடிமகன்கள் உறங்குவதற்கு...!

செருப்புகள் எதற்கு ?

திருடவும், கடி வாங்கவும்...!

பொக்கேக்கள் [[மலர் கொத்து]] எதற்கு ?

மனிதர்களை சோப்பிட்டு ஏமாற்ற...!

கம்பியூட்டர்கள் எதற்கு ? 

எதற்கோ உருவாக்கப்பட்டது ஆனால் இப்போ சமூக வலைத்தளங்கள் அதை நாறடித்து கொண்டிருக்க...!

பணம் எதற்கு ?

அது எல்லாவற்றிர்க்கும் உதவும்...!
கோவில் குளங்கள் எதற்கு ?

எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லை, பக்கத்து வீட்டுக்காரனுக்கு ரெண்டு கண்ணும் போகணும்னு வேண்டுதல் செய்ய...!

மனைவிகள் எதற்கு ?

வீட்டய்யா சொல் பேச்சு கேக்காமலிருக்க...!

கோபங்கள் எதற்கு ?

நம்மால் முடியலை அதான்...!

கரண்ட் எதற்கு ?

இப்படி அடிக்கடி காணாமல் போவதற்கு...!

அரசாங்கம் எதற்கு ?

மக்களின் பணத்தை சுருட்டி தன்னை [[தனிப்பட்ட]]வளப்படுத்திக் கொள்ள...!

மரங்களெல்லாம் எதற்கு ?

எல்லாத்தையும் வெட்டி வீடு கட்ட...! [[பூமியை மொட்டையாக்க]]

அருவிகலெல்லாம் எதற்கு ? 

திரும்பத் திரும்ப சரக்கடித்துவிட்டு குளிக்க...!

கண்ணீர்கள் எதற்கு ?

என் ஆளை அவன் தள்ளிகிட்டு போயிட்டான் அதற்க்கு...!

சாத்தான்கள் எதற்கு ?

சரக்கடிக்காமல் வருகிறவனை போட்டுத்தள்ள [[பயங்காட்ட]]

தினமலர், தினதந்தி பேப்பர்கள் எதற்கு ?

வடை பொதிய, மற்றும் வாழைக்காய் பஜ்ஜி எண்ணையை துடைக்க...!

சட்டை வேஷ்டி எதற்கு ?

சண்டை போட்டு கிழிக்க...!

கோர்ட் எதற்கு ?

கள்ள சாட்சி சொல்ல, அடுத்தவன் உழைப்பை சுரண்டி எடுக்க....!

போலீஸ் எதற்கு ?

சொல்லவும் வேணுமா என்ன...!

ஒபாமா...?

மாற்றமே இல்லாத மாற்றம் உள்ள அதிபர்...!

மன்மோகன் சிங் ?

புழு பூச்சியை விட கேவலமான ஒரு மனிதன் ச்சே மனுஷன்னா கொஞ்சமாவது ரோஷம் இருக்கனுமே...!

ரஜினிகாந்த் ?

தமிழக மக்களுக்கு பொன்னும் வெள்ளியும் அள்ளித்தரும் நொள்ளல்  ச்சே வள்ளல்...!
கமலஹாசன்...!

பெண்மையை போற்றும் ஒரே மனிதன்...!

குஷ்பு ?

பெண்களின் "கவச" காவலாளி....!
[[படத்தில் இருப்பது பிரகாஷ் மற்றும் சிபி அண்ணன்]]

சிபி செந்தில் குமார் ?

மனோவிடம் உதையும் மிதியும் வாங்க [[ஹி ஹி]]

விக்கி உலகம் ?

பேரிக்காகாரன்கிட்டே உத வாங்க...!

ஆபீசர் சங்கரலிங்கம் எதற்கு ?

குஜராத்திகாரன் பான்பராக்'கை எந்த அண்டர்கிரௌண்டில் ஒளிச்சி வச்சாலும் கண்டுபிடித்து நொங்கெடுப்பது...!

நாஞ்சில்மனோஎதற்கு  ?

உங்க எல்லாரையும் வலைத்தளங்களை விட்டு ஓடவைக்கவும், தானும் ஓடவும் ஹி ஹி...

நோ நோ அழப்பு டாது........ நல்லபடியா எழுத ஆரம்பிச்சது இப்பிடி மொக்கையா போகும்னு நினைக்கலியே ஹி ஹி...

கல்லெடுத்து எரிஞ்சிறாதீங்கப்பூ....!

23 comments:

 1. மனோவின் பதிவு எதற்க்கு?

  இப்படி போட்டு தாக்க.. அப்படின்னா அருவா எதற்கு? பள பளன்னு இருப்பதால் முகம் பார்க்க

  ReplyDelete
  Replies
  1. என்னாது அருவாள்ள முகம் பார்க்கனுமா அவ்வ்வ்வ்....

   Delete
 2. நாஞ்சில்மனோஎதற்கு ?

  உங்க எல்லாரையும் வலைத்தளங்களை விட்டு ஓடவைக்கவும், தானும் ஓடவும் ஹி ஹி...
  கவலை வேண்டாம் ஓடமாட்டோம்.
  அருமை

  ReplyDelete
 3. பாஸ் நாங்க சொல்ல வேண்டியதை நீங்களே சொல்லக்கூடாது

  ReplyDelete
  Replies
  1. சரி அப்போ சத்தமா சொல்லுங்க பார்ப்போம் ஹி ஹி...

   Delete
 4. இதுல மத்தவங்களையும் சேர்த்தது சூப்பர்....

  ReplyDelete
  Replies
  1. சிபி அண்ணன் மாட்னான் இன்னைக்கு ஹா ஹா ஹா ஹா...

   Delete
 5. ஹ ஹா... முடியல சித்தப்பு....

  ReplyDelete
 6. லேப் டப்ப விட்டுட்டீங்க?அது இருக்கிறதால தானே,இப்புடீல்லாம் நம்பளக் கொலையாக் கொல்ல முடியுது?

  ReplyDelete
 7. கருத்து பெட்டி எதுக்கு?
  >>
  அண்ணா போட்ட பதிவு நல்லா இருக்குன்னு வாழ்த்த.

  ReplyDelete
 8. யப்பா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 9. சிரிப்பு தாங்க முடியல சிரிச்சு சிரிச்சு ஆமா இந்த பார்க்கும் ஒரு சுகம் தான் நாறடிக்க:))))

  ReplyDelete
 10. பாஸ் ஸ்மார்ட் போன்களை கண்டுக்காம விட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்

  ReplyDelete
 11. //குஜராத்திகாரன் பான்பராக்'கை எந்த அண்டர்கிரௌண்டில் ஒளிச்சி வச்சாலும் கண்டுபிடித்து நொங்கெடுப்பது...!//
  அருவாளோட அவா என்னை விரட்டுறதைப் பார்க்குறதுல அப்படி என்ன ஆனந்தமோ! ஹா ஹா ஹா

  ReplyDelete
 12. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. etharkku....!?

  ippadi..!
  (lol)

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!