Monday, June 17, 2013

கடலுக்குள்ளே தண்ணி தண்ணிக்குள்ளே நாங்க....!

பத்து பன்னெண்டு வருஷம் முன்னாடி பஹ்ரைன் ஸல்லாக் பீச் கூட்டிட்டுப் போனது எனது அத்தானும் நண்பர்களும், அதன் பிறகு நண்பன் சுந்தரேஷன் அடிக்கடி கூட்டிட்டுப் போவது உண்டு.

பல வருஷங்கள் கழித்து நம்ம "கலியுகம்" தினேஷ் கூட்டிட்டுப் போனார் அங்கே, நண்பர்கள் அனில் அண்ணன் மற்றும் சாஜி என்ற நண்பனும் சேர்ந்து கொள்ள...பயணம் ஆரம்பம் ஆனது, பல விஷயங்களை பேசிக்கொண்டே போகும்போது பஹ்ரைனில் தமிழுக்கு கிடைத்த ஒரு மாபெரும் புகழ் செய்தியை கடைசியில் சொல்கிறேன்.

ஸல்லாக் பீச்சுக்கு இப்போவெல்லாம் அதிகமாக யாருமே வருவதில்லையாம், காரணம் கெடுபிடி, நாங்கள் போகும்போது ரெண்டு இந்தியன் குடும்பமும், ஒன்னோ ரெண்டோ அரபிக் குடும்பங்கள்தான் இருந்தன...!

தூரத்தில் தண்ணீர் மோட்டார்களுடன் ரெண்டுபேர் ரேஸிங் செய்து கொண்டு இருந்தார்கள், தண்ணீரும் இடுப்பளவுதான் இருக்கிறது, அதைப் பார்த்து அனில் அண்ணன் சொன்ன டயலாக்....

"இப்பிடியே தண்ணிக்குள்ளே நடந்து போனா சவூதி அரேபியா போயிறலாம் போல இருக்கே..."

கடல் தண்ணீர் முன்பு நான் போகும் பொது சுத்த வெள்ளையாக இருந்தது, கீழே போகும் குஞ்சு நண்டுகள் கூட கண்ணுக்குத் தெரியும், இப்போ அப்பிடி இல்லை பச்சை கலரில் இருந்தாலும் சுத்தமாக இருக்கிறது.

கடல் தண்ணீர் அடிக்கடி பல கலர்களில் மாறிவிடும் என அனில் அண்ணன் சொன்னார், அடிக்கடி போற ஆளு போல ஹி ஹி...

கடலுக்குள்ளே பன்னி ச்சே ச்சீ தண்ணி....எங்களுக்குள்ளே......? 

பச்சை தண்ணிதாங்க....கலியுலகம் பலியுலகமா மாறி தண்ணிய கடிச்சு வச்சிருச்சு ச்சே தடுத்து வச்சிருச்சு அவ்வ்வ்வ்வ்.....

வாங்க போட்டோவும் கமேண்ட்சும் பார்க்கலாம்....


 அடிக்கடி விபத்து நடக்கும் பகுதி எப்பிடியாவது ரெண்டு மூணுபேர் ஸ்பாட் அவுட் ஆகுற இடம்.

 பேசிட்டே இருக்கும்போது யாருய்யா அங்கே கல்லை தூக்குறது...? கலியுகம்"தினேஷ் மற்றும் அனில் அண்ணன்.

 பூமியில வாழுறத விட கடல்ல குதிப்பதே மேல்னு போயிட்டு இருக்காயிங்க.

 அய்யயோ நான் கட்டுன மணல் வீட்டை யாருலேய் இடிச்சுட்டு ஓடினது...?

 அப்பிடியே போயிருங்க வடக்கு பக்கமா சவூதி இல்லைன்னா கத்தார் வந்துரும்.

 எல்லாரும் தண்ணிக்குள்ளே ச்சூ ச்சூ'தான் போவாங்கன்னு பார்த்தா அண்ணன் விவகாரமான விரலை காட்டுதாரே....

 நான் இப்பிடி மல்லாந்து விழுறதை படம் பிடிங்க அண்ணே...

 அய்யயோ நண்டு நண்டு...


 இது என்ன யோகாசனம் அண்ணே...?

 ஓங்கி அடிச்ச அலையில [!] அண்ணன் காதுக்குள்ளே சனி ச்சே தண்ணி புகுந்துருச்சு.

 தண்ணிக்குள்ளே மனுஷ ஆமைகள்.

 தண்ணிக்குள்ளே காலைபிடிச்சு இழுத்து என்னை முக்கி வச்சது யாருலேய்...?

ஏதாவது கப்பல் வருதான்னு பாக்குறேன் அண்ணே பொருங்க.


 வாழ்கையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம்போல ஓடிடுவோமே வாழ்நாளிலே....


 எதுக்குடி என் குழந்தையை பயங்காட்டினே...? குழந்தை போட்டோவுல எப்பிடி மிரளுது பாருன்னு வீட்டம்மாவை மிரட்டுற ஒரே ஆள்....!

 அழகழகான பேரீச்சம் பழங்கள் மரத்திலிருந்து விழுந்து மனிதனின் கால்களுக்கு இரையாகும் உலகம்தான் வளைகுடா நாடோ...?!!!

 அடடே ராஜகுமாரன் தம்பி அறிமுகம் ஆகப்போறார் ஓடிருங்கே எல்லாரும்.ஆபீசர் நியாபகம் அதிகமாக வந்த நேரம்......! ஒ போனுக்கே போனா....ச்சே போட்டோவுக்கே போட்டோவா...

 மொரோக்கோ கூட்டத்தோடும் பிலிப்பைனி கூட்டத்தோடும் சேராதேன்னு சொன்னா கேக்குறியா...? பாரு கடிச்சி திங்கும் ஐஸ் கிரீமை கரண்டி போட்டு திங்குறத...


-----------------------------------------------------------------------
தமிழுக்கு கிடைத்தப் பெருமை என்னான்னு தெரியுமா...?

தமிழ், உலகின் மூத்த மொழிகளில் ஒன்று என்று பஹ்ரைன் யூனிவர் சிட்டியில் எழுதி பொரித்து வைத்து இருக்கிறார்களாம், என்று அனில் அண்ணன் சொன்னபோது ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போனோம்....!

கடைசியா இன்னொரு "குளியலை"யும் போட்டு முடிச்சா, கொண்டு போன எனது டவுசர் டவல் எல்லாம் தினேஷ் காருக்குள்ளே மாட்டிகிச்சு, சரிய்யா நாளை ஹோட்டல் பக்கம் வரும்போது கொண்டு வந்துருங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டேன்.

அடுத்தநாள் நேரே ஹோட்டலுக்கே வந்து தந்துட்டுப் போனார், அவர் போன கொஞ்ச நேரத்தில் நடக்கப்போகும் அக்கப்போர் தெரிஞ்சிருந்தா அவரையும் கண்டு மகிழ [?] செய்திருக்கலாம் போல...

நடக்கவே முடியாத [[சரக்கு]] அமெரிக்காகாரனை எலவேட்டர்ல போட்டு உருட்டி மேலே கொண்டு வந்தானுக எங்க செக்கிரியூட்டியும், ரெண்டு பெல் பாயும் மற்றும் பஹ்ரைன் டாக்ஸிகாரனுமாக, கெஸ்ட் சிட்டிவேஷனை பார்த்ததும் நான் ரூம் தரமாட்டேன் என்று மறுத்ததும் அல்லாமல் எங்கள் ஸ்டாப் யாவருக்கும் சரியான டோஸ் விட....[[நார்மல் அல்லாத அன்பர்களுக்கு நாங்கள் ரூம் கொடுப்பதில்லை]]

இதற்கிடையில் எங்கள் ஹோட்டல் ஊழியர் ஒருவர் வீல் சேர் கொண்டுவர, அதில் அந்த அமெரிக்கனை உக்கார வைத்ததும் அவன் சுகமாக தூங்கிவிட்டான்.

நான் கத்திய கத்தில் பயந்து போன டாக்ஸி டிரைவரும், எனக்கு காசும் வேண்டாம் ஒன்னும் வேண்டாமென்று ஓட....மாட்டுனது நாங்க...

என்ன செய்ய நேரம் சரியில்லைன்னா யானை மேல இருந்தாலும் நாயி கடிக்குமாமே.....ஆம்புலன்ஸ் கூப்பிட.....ஆம்புலன்ஸ்காரன் "இப்பிடி குடித்திருக்கிறவனை ஏர்போர்ட் செக்யூரிட்டிகள் எப்படி வெளியே விட்டார்கள்...?" என்று எங்களைப்  படுத்த....

அடுத்து போலீஸை கூப்பிட......அவர்களும் எங்களை சுளுக்கெடுக்க.....அப்புறமா அவன் ஐ டி செக் பண்ணும் போது அவன் அமெரிக்கன் நேவி மிலிட்டரிகாரன் என்று தெரிந்து.......அமெரிக்கன் நேவி போலீஸ்க்கு போன் போட்டு கூப்பிட....அவன் வந்து எங்களை சுளுக்கெடுத்து சந்தோஷமாக [[கொய்யால]] அவனை ஆம்புலன்ஸில் அள்ளிகிட்டு போனானுக.....

 ஆத்தீ......!
எப்பிடி வில் சேர்ல தூங்குறான் பாருங்க.

30 comments:

 1. என்ன மனோ இருந்து இருந்து இப்படிபட்ட பீச்சுக்கு உங்களை உங்கள் நண்பர் அழைத்து போயிருக்கிறார் அது மட்டுமல்லாமல் நீங்களும் அதை பதிவா போட்டு இருக்கீங்க.....ஏதோ பீச்சை பற்றி பதிவு போட்டு இருக்கிங்க...கண்ணுக்கு குளிர்ச்சியா நல்ல படங்களை போட்டு இருப்பிர்கள் என்று தேடி தேடி பார்த்தா இப்படி ஏமாற்றுவிட்டீங்களே நண்பா ஹும்ம்ம்ம்ம்ம்ம் பொளைச்சு போங்க இந்த தடவை சும்மா விட்டுடுறேன்

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

   Delete
 2. எங்க ஊர்காரனுக்கு ரூம் தராத உங்களுக்கு கண்டனம் . அப்ப்றம் அந்த நேவிக்காரன் கையில் இருந்த சர்க்கை உங்க ஹோட்டலில் யாரோ சுட்டுட்டாங்களாம் அதை கண்டுபிடித்து தாருங்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்க ஊர்காரன் உக்காந்து இருக்குற கோலத்தைப் பாருங்க ஹா ஹா ஹா....

   அவன் எங்களையல்லவா சுட்டு சுட்டு விளையாடினான், அவன் சரக்கை நாங்க சுட முடியுமா என்னா ஹி ஹி...

   Delete
 3. அனுபவங்கள் சுவாரசியம்.
  படங்களும் கம்மெண்டும் பார்த்து சிரிக்காம இருக்க முடியல
  தமிழ் செய்தி புதிது

  ReplyDelete
  Replies
  1. தமிழ், செய்தி எனக்கும் மிகவும் ஆச்சர்யமாகவே இருந்தது...!

   Delete
 4. நீங்க கலக்குங்க மக்கா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ஹா நன்றிலே தம்பி....

   Delete
 5. படங்களும் கருத்துக்களும் கலக்கல்...!

  பெருமை மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. ஹி ஹி ஆனந்த குளியல்லா

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை ஆனந்தி குளியல்ன்னு சொல்லல ஹி ஹி

   Delete
 7. வணக்கம் சகோதரரே!

  வந்த சுவடு கண்டு இங்கு வந்தேன்...
  வந்த இடத்தில் இங்கு ஒரே ’தண்ணி’ மயமாக இருப்பதால் கொஞ்சம் தள்ளி நின்றேன்...
  பின்னர் வருவோமென சென்றேன்... :).

  தொடர்வோரில் இணந்தமைக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!

  ReplyDelete
  Replies

  1. அய்யோ அந்த "தண்ணி" கிடையாதுங்கோ, இது வெறும் கடல் தண்ணீர் மட்டுமே, மிக்க நன்றி நன்றி...

   Delete
 8. நன்று,நன்று.............குளியல் நன்று!புகைப் படப் பிடிப்பு நன்று............டிரவுசர் நன்று,மொத்தத்தில் எல்லாமே நன்று!!!

  ReplyDelete
  Replies
  1. இட்ட கமேண்ட்சும் நன்று நன்று ஹி ஹி...

   Delete
 9. ஆட நம்ம இப்படி குளியல் போட்டு (கடலில்) ரொம்ப நாளாச்சே என்ற ஏக்கம் வருகின்றது காட்சிப்படம் பார்க்கும் போது அழகான படங்கள் அருமை!

  ReplyDelete
  Replies
  1. நானும் கடலில் குளித்து வருஷங்களாச்சு அதான் மொத்தமா குளிக்குறோம்.

   Delete
 10. ரொம்ப நாளைக்கப்புறம் அண்ணன் தண்ணிக்குள்ள இருந்திருக்கார்...... அட கடலை சொன்னேங்க...

  ReplyDelete
  Replies
  1. நல்லவேளை தண்ணிக்குள்ளே இருப்பதாக சொன்னீர், எனக்குள்ளே தண்ணின்னு சொல்லல ஹா ஹா ஹா ஹா...

   Delete
 11. நல்ல வேள அமெரிக்க காரனா போச்சி, காரியா இருந்தா என்னாகி இருக்கும்?

  ReplyDelete
  Replies
  1. காரியா இருந்தா ரூம் போட்டு குடுத்துருப்பேனோ ஹி ஹி சும்மா ஒரு டவுட்டுதேன்...

   Delete
 12. நன்றி தம்பி...மீண்டும்....முடிந்தால் சென்னை பதிவர் சந்திப்புக்கு வரவும்.....

  ஆனால்...ஸ்பான்சர் ....நீர் தான்.....
  மனசுலலாயி......

  ReplyDelete
  Replies
  1. யோவ் அண்ணே....பதிவர் சந்திப்பு கூப்புடுறது நீங்க ஸ்பான்சர் நானா ? பிச்சிபுடுவேன் பிச்சு ஓசில வந்து சாப்புட்டுட்டு வரலாmன்னு நினைச்சா அதுல கட்டையை போடுதீராக்கும்?

   Delete
 13. Replies
  1. மிக்க நன்றி.....

   சும்மா ஒரு ஜாலிக்காக போட்ட பதிவு ஹி ஹி...

   Delete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!