Tuesday, June 11, 2013

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்...!?

டிங் டிங் டிங் டிங் டிங் டிங்......

"ஹலோ......... ஹலோ...."

"எடா பட்டி  எடா பட்டி பட்டி பட்டி...."

"டேய் டேய் நில்லு நில்லு என்னாச்சுன்னு சொல்லுய்யா முதல்ல...?"

"போடா பட்டி போடா பட்டி.....வ்ப்ஹ்ர்ன்ஹ் ஜ்ன்ப்ஜ்ச்ட்ப்வ் ஜ்ஹ்வ்தேவ் ப்ன்வ்வ்......."

"ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்....ஏன்டா இப்பிடி திட்டுறே மரியாதை இல்லாம...?"

"என் லேப்டாப் நாசமா போச்சு, என் மூஞ்சி நாசமா போச்சுடா பட்டி..."

"உன் லேப்டாப்பும் மூஞ்சியும் நாசமா போனதுக்கு என்னை எதுக்குடா இம்புட்டு திட்டு திட்டுறே...?

"கொய்யால நீதானே அன்னிக்கு..................................................."

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........"

பிளாஷ் பேக்.............. அப்பிடியே மோட்டு வளையத்தை அண்ணாந்து பாருங்க பார்ப்போம்.....

ஒருநாள் நானும் இந்த மலையாளி நண்பனுமாக பர்ச்சேஸ் பண்ணப் போனபோது, மிகவும் தாகமாக இருக்கிறது என்று ஒரு கூல்டிரிங்க்ஸ் கடையில் போயி ரெண்டு பிளாஸ்டிக் கேன் ஆரஞ்சு ஜூஸ் வாங்கி குடிக்கும் போது, அவன் உடனே ஒப்பன் செய்து குடிக்க....

நான் அவனுக்கு எப்பிடி கேன் ஜூஸ் மற்றும் பாட்டல் ஜூஸ் குடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தேன் அதாவது எந்த ஜூஸ் வாங்கினாலும் ஒப்பன் பண்ணும் முன்பு நன்றாக குலுக்கிவிட்டு அப்புறம்தான் ஒப்பன் செய்து குடிக்க வேண்டும் என்று சொன்னேன்.

இன்னைக்கு சேட்டன் லேப்டாப்பை ஒப்பன் செய்து வைத்துவிட்டு, ஃபிரிட்ஜில் இருந்த கேன் பீரை எடுத்து வந்து லேப்டாப் முன்பு அமர்ந்து ஒப்பன் செய்ய போனவனுக்கு என் நியாபகம் வந்துவிட...[[ஏன்டா சாராயம் குடிக்கும்போது மட்டும் என்னைத் தேடுறீங்க...]]

பீரை நன்றாக 'குலுக்கி' விட்டு ஒப்பன் செய்ய.......இவன் லேப்டாப்பும் மூஞ்சியும் நாறிப்போச்சு, இதுக்குதான் இம்புட்டு திட்டும், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

நான் என்ன சொன்னேன் இவன் என்ன செஞ்சிருக்கான் பாருங்க, நமக்கு வாய்க்கிறது எல்லாமே இப்பிடியா இருக்கணும்..? முடியல....
------------------------------------------------------------------------------------------------------------------

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் தாண்டுகிறார்கள் அதனால் இலங்கை ராணுவம் இவர்களை தாக்குகிறது என்று கூப்பாடும் கூச்சலும் போட்டு செய்தி சொல்லும் பத்திரிக்கைகள், இம்புட்டு வசதிகள் வந்திருந்தும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிரார்களா இல்லையா என்று ஏன் நேரில் சென்று பார்த்து பேட்டி  எடுத்து செய்தி போட மாட்டேன் என்கிறார்கள் ?
--------------------------------------------------------------------------------------------------------------------

வடமாநிலம் ஸ்டாலின் கையில் சரி, தென்மாவட்டம் அஞ்சாநெஞ்சன் கையில் சரி, இப்போ எனக்கு ஒரு டவுட்டு, மேமாநிலமும் அதாங்க மேற்கு மாநிலம்,கீமாநிலமும் அதாங்க கிழக்கு மாநிலம் யார் கையில்...? சும்மா ஒரு டவுட்டு ஹி ஹி...
---------------------------------------------------------------------------------------------------------------------

பத்து பனிரெண்டு வருஷம் முன்பு பஹ்ரைனில் நண்பர்களை விட சொந்த பந்தங்கள்தான் என்னை சுற்றி எப்போதும் இருந்தார்கள், சொந்த பந்தங்களுக்குள் சீட்டு போட்டு யாருக்கு பணம் அவசியமோ அவர்களுக்கு மாதா மாதம் கொடுத்து உதவுவது வழக்கம், அப்படிதான் நானும் மும்பையில் சொந்த வீடு வாங்க உதவினார்கள்....!

நாட்கள் நகர நகர சொந்த பந்தங்கள் எல்லாம் ஒவ்வொருத்தராக தம் தம் ஊர்களுக்கு பஹ்ரைனை காலி செய்து போய்விட, நண்பர்கள் மிகவும் அன்பாக அணைத்துக் கொண்டனர்.

ஆனால் இந்த காலத்துக்கும் பொறுமை இல்லாமல் ஒவ்வொரு நண்பனாக பஹ்ரைனை காலி பண்ணிவிட....ஏகத்துக்கும் தனிமையாகிப் போன உணர்வு எனக்கு, இப்போ இருக்குற தமிழ் நண்பர்களை விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்கு வந்து விட்டது, முன் நேற்றும் நண்பன் வின்னி என்ற விண்ணரசன்  போன் பண்ணி, அண்ணே எனக்கு இதே சம்பளத்தில் பெங்களூரில் வேலை கிடைக்கிறது நானும் பஹ்ரைன் காலிப் பண்ணப் போறேன்னு சொன்னதும் சந்தோசமாக இருந்தாலும், மனசுக்கு கவலையாக தொடங்கிவிட்டது.....!

நலம் வாழ எந்நாளும் அண்ணனின் வாழ்த்துக்கள் மக்கா....!13 comments:

 1. அரபு நாடுகளை விட அமெரிக்காவை விட இந்தியாவில் நல்ல சம்பளமும் கிம்பளமும் குறுக்கு வழியில் எதையும் சாதித்துவிட முடியும் என்பதால் இப்போது அநேக பேர் இந்தியாவிற்கே திரும்பி கொண்டிருக்கிறார்கள். இதில் அமெரிக்கா வந்த பல இந்தியர்கள் அமெரிக்க குடிமகனாகி(சிட்டிசன்) அத்ன் பிறகு இந்தியாவிற்கு இரண்டாம் தர குடிமகனாக திரும்பி கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம்மை போன்றவர்களோ இங்கேயே தங்கி கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை

  ReplyDelete
 2. சேட்டனுடன் 'சிரமம்' தான்... அதை விட ஒவ்வொரு நண்பரின் (இட) மாற்றமும்...

  ReplyDelete
 3. நீங்க அருவாளை காட்டுங்க ஓடிடுவான்

  ReplyDelete
 4. மீனவர் பிரச்சனையை நீங்கள் சொல்வது போல சேனல்கள் போட்டால் அவர்கள் TRP ஏறாது . இலங்கையில் சேனல் தெரியாது . அதான் அடக்கி வாசிக்கின்றனர் . அவர்களுக்கு தொழில் முக்கியம் மீனவர்கள் இல்லை .

  ReplyDelete
 5. அதான்,முன்னமே நான் சொன்னேனே,பேசாம டிரைவர் ஆகிடுங்கன்னு?பாஹ்ரேனி லேயும் வூடு வாங்கிடலாம்!

  ReplyDelete
 6. நண்பர்கள் பஹாரைனில் குறைவது கவலை என்றாலும் அவர்கள் சொந்தநாட்டில் வேலைகிடைப்பதும் சந்தோஸமும் சுகமும் தானே!

  ReplyDelete
 7. பத்திரிக்கையாளர்களுக்கு நல்ல கேள்வி! சுவையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 8. ஆமாங்க நீங்க சொன்ன பிறகுதான் தோணுது ஏன் எவ்வளவோ விஷயத்தில ரிஸ்க் எடுக்கும் நம்ப பத்திரிக்கைக்காரங்க மீனவர்கள் விஷயத்தை போட்டு உடைக்க மாட்டேங்கறாங்க....

  ReplyDelete
 9. உள்ளதைச் சொல்லும் தைரியம்
  இங்கே யாருக்குத்தான் இருக்கு ?
  இங்கு எல்லாமே அரசியல்
  அல்லது வியாபாரம்தானே

  ReplyDelete
 10. கடலில் உண்மையின் என்னதான் நடக்கிறது.

  ReplyDelete
 11. இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் தாண்டுகிறார்கள் அதனால் இலங்கை ராணுவம் இவர்களை தாக்குகிறது என்று கூப்பாடும் கூச்சலும் போட்டு செய்தி சொல்லும் பத்திரிக்கைகள், இம்புட்டு வசதிகள் வந்திருந்தும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிரார்களா இல்லையா என்று ஏன் நேரில் சென்று பார்த்து பேட்டி எடுத்து செய்தி போட மாட்டேன் என்கிறார்கள் ?//அவங்க வாயால வடை சுடுற கோஷ்டி சார்

  ReplyDelete
 12. தில்லியிலும் இதே நிலை தான் மனோ. முன்பெல்லாம் நிறைய தமிழர்கள் இருந்தார்கள். இப்போது உள்ளே வருபவர்களை விட வெளியேறும் தமிழர்கள் தான் நிறைய......

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!