Sunday, June 23, 2013

பதிவுக்குப் பதிவு மொய் அழகு...!

கவிதைக்கு பொய் அழகுன்னு எத்தனையோ முறை, எத்தனையோ தடவை எத்தனையோ பேரு சொல்லி சொல்லி மாய்ந்து போனார்கள், இப்போ என்கிட்டேயும் அதே கேள்வி வந்துருக்கு...!
எனக்கு கவிதை வடிக்க தெரியாது என்பதே உண்மை, "எப்பிடி நீங்க எல்லாம் அனுபவித்து எழுதியது போல தத்ரூபமாக இருக்கிறதே அது எப்பிடி...? அனுபவித்த ஒருவனால்தான் இப்பிடியெல்லாம் எழுத முடியும்" என்று கேட்பவரிடம் என்ன பதில் சொல்லவென்று புரியவில்லை...!
அப்போ காளிதாசன், வைரமுத்து, வாலி, திருவள்ளுவர் எல்லாம் அனுபவித்துதான் காதல், காமம், அழகு பற்றி எழுதி தள்ளினார்களா..? அவர்களையும் இப்படி கேள்வி கேட்பீர்களா என்றால் பதிலில்லை...!

தூரத்தில் இருந்து எழுதுகிறவனிடம் கேள்வி கேட்க முடிவதில்லை, பக்கத்தில் இருப்பவனையே நோன்டுபவர்களை என்னான்னு சொல்ல..?!
"சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு"ன்னு எழுதினவரைப் பற்றி இவங்க என்னான்னு நினைச்சாங்களோ எனக்குப் புரியல, அவரு போயி ஒரு நூறு ஆயிரம் சேலை கட்டிய பெண்களை மோந்து பார்த்துருப்பாருன்னு நினைச்சிருப்பாயிங்களோ?
மல்லிகை பூவும், பெண்ணும், பெண்மையும் பற்றி எழுதினால் ஏன் இப்படி சந்தேகமாக பார்த்து கேள்வி கேட்கிறார்கள் என்பதுதான் புரியாத சூத்திரமாக இருக்கிறது...!

வாழ்க்கை ஓட்டத்தில் 
ஓராயிரம் பூக்கள் 
என்றும் என் மஞ்சம் நிறைவாக...!
மறுபடியும் சொல்றேன் கவிதைக்கு பொய் அழகு, இதுக்கு மேலே சந்தேகம் கேடகனும்னு தோனுச்சுன்னா, தமிழ் [[ப்பூப்ப்]] தலைவன்கிட்டே போயி கேளுங்கப்பா போங்க.

16 comments:

 1. தமிழ் [[ப்பூப்ப்]] தலைவன்கிட்டே போயி கேளுங்கப்பா போங்க.///'அவரு' இப்பவும் இருக்காரா?

  ReplyDelete
 2. உண்மைதான் கவிதை எழுத கற்பனைதான் தேவையே தவிர அனுபவம் அவசியம் இல்லை, உண்மையில் அனுபவிப்பவர்கள் பலர் எழுதுவதில்லை.
  பிரபல காதல் கவிஞர் தபூ சங்கரின் திருமணம் காதல் திருமணம் இல்லை என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

  ReplyDelete
 3. நல்லாவே கேட்டீங்க அண்ணே கேள்விகளை...!

  ReplyDelete
 4. தலைப்பு சூப்பர்

  ReplyDelete
 5. Engggggiyo pOyttiinga kavigyaa

  ReplyDelete
 6. கற்பனை இருந்தா போதும் சகோதரரே! அனுபவிச்சு எழுதுவதென்றால் விஷயத்தை மனதில் நன்கு பதித்து உணர்ந்து எழுதுதலே..

  சொற்களுக்குப் பஞ்சமிருக்காமல் மனதில் தோன்றுவதற்கு நல்ல நயத்துடன் எழுதலாம். நானும் உங்களைப்போல்தான் இன்றுவரைக்கும் தயங்குகிறேன். மனதிற்குள் விடயத்தை, சொற்களை தேடல் செய்து கொஞ்சம் கிறுக்குகின்றேன்.


  அட மேலே நீங்கள் எழுதியதில்கூட கவிநயம் உள்ளதே.

  //வாழ்க்கை ஓட்டத்தில்
  ஓராயிரம் பூக்கள்
  என்றும் என் மஞ்சம் நிறைவாக...!//

  முயன்று பாருங்கள். முடியும். வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
 7. உண்மைதான் கற்பனை வேறு கவிதை வேறு அனுபவம் வேறு அதைச்சிலர் குலப்பிக்கொள்வது தான் கடினமாக இருக்கின்றது!

  ReplyDelete
 8. கற்பனையில் சிறகடித்துப் பறக்க, வார்த்தைகள் தானாகவே வந்து கோர்வையாய் விழ பிறப்பது கவிதை!

  அட நான் கூட புதுசா ஒரு இலக்கணம் சொல்லிட்டேங்கோ! :)

  உங்களை மாதிரியே கவிதைக்கு என்னை ஏனோ பிடிக்கவேயில்லை! அதான் கவிதையே வரதில்லை!

  ReplyDelete
 9. கவிஞர்கள் என்றாலே பொய் என்றுதான் ஒரு கவிஞரும் பாடுகிறார். கவிதை என்றாலே பெரும்பாலும் அதிலுள்ள கற்பனைதான் (பொய்) அழகு.

  பொய்யிலே பிறந்து
  பொய்யிலே வளர்ந்த
  புலவர் பெருமானே –
  உம்மைப் புரிந்துகொண்டாள்
  உண்மை தெரிந்து கொண்டாள்
  இந்தப் பூவையர் குலமானே
  - பாடல்: கண்ணதாசன் (படம்: ஆனந்தஜோதி)

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் சகோ வார்த்தைகளே வரவில்லை அத்தனை
  அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் கூடவே மெய்யும்
  அழகென்று சொல்லி முடித்துவிடுங்கள் சகோ பாவம் மெய்
  கண்கலங்கி நிற்கின்றது :))))))))

  ReplyDelete
 11. நிஜம் தன கவிதைக்கு பொய் தான் அழகு

  ReplyDelete
 12. இப்படியெல்லாம் கேள்வி கேட்டு தொந்தரவு பண்றாங்களா? கஷ்டம்தான்!

  ReplyDelete
 13. யோவ்வ்வ்வ்வ்வ் மனோ....பதிவு போடுறேன்-ன்னு
  படம் தேடி செம ஜொள்ளு விட்டிருக்கீர் போல....

  ReplyDelete
 14. படங்கள் . ம்

  கவிதை கற்பனை மட்டும் அல்ல

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!