Saturday, June 8, 2013

தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எந்தன் உயிருக்கு நேர்....!

இன்றைக்கு [[நேற்றும்]] மனதுக்கு மிகவும் ஆறுதலும் ஆனந்தமுமான நாள் என்று சொன்னால் அது மிகையாகாது, ஆம் எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன நண்பர்களின் எண்ணிக்கை இவ்வளவா....!
பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வாழ்த்துக்கள் நிரம்பி வழிகிறது, பேஸ்புக் சாட்டிங்கிலும், மெசெஜிலும், ஸ்டேட்டஸ்லும் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருக்கிறது...!

நேற்று இரவு டியூட்டி ஆனதால் போனை சைலண்டில் வைத்துவிட்டு தூங்கிவிட்டேன், எனக்கு நெருக்கமான நண்பர்கள் நண்பிகள் மற்றும் தங்கைமார் அக்காமார்களின் போன் கால்கள் அட்டெண்ட் பண்ண முடியாமல் போய்விட்டது [[ஸாரிப்பா]]
அமேரிக்கா இந்தியா இலங்கை சீனா இந்தோனேசியா மலேசியா சிங்கப்பூர் இத்தாலி பாரீஸ் ஆஸ்திரேலியா இங்கிலாந்த் இஸ்ரேல் வளைகுடா நாடுகள் பாகிஸ்தான் பஹ்ரைன் தாய்லாந்த் துருக்கி எகிப்து ஆப்பிரிக்க நாடுகள்.....இன்னும் நிறைய நாடிகளில் இருந்து நண்பர்கள் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்...!
உங்கள் யாவருக்கும் எனது மனம் கனிந்த ஆனந்த கண்ணீர் கனிந்த நன்றிகளை சொல்லிக் கொள்வதில் மிகவும் சந்தோஷமும் பெருமையும் கொள்கிறது மனசு...!

உங்களையெல்லாம் என்னோடு இணைத்து சேர்த்தது எது ?
நம் உயிர் தமிழல்லவா....!!!

என்னுயிர் தமிழுக்கு எனது மனமார்ந்த நன்றியை சமர்ப்பித்து, தமிழன் என்று பெருமை கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்...!

டிரிங் டிரிங்....

"ஹலோ வணக்கம் தினேஷ்..."

"அண்ணே வாழ்த்துக்கள் அண்ணே..."

"நன்றிப்பா..."

"என்னப் பண்ணிட்டு இருக்கீங்க?"

"டியூட்டிக்கு ரெடியாகிட்டு, பிறந்தநாள் வாழ்த்து சொன்னவங்களுக்கு நன்றி சொல்லி ஸ்டேட்டஸ் போட்டுட்டு இருக்கேன் சொல்லுங்க...?"

"பிறந்த நாளும் அதுவுமா பார்ட்டி கேக்கலாம்னு [[கொன்னேப்புடுவேன்]] நினைச்சா டியூட்டிக்கு போறேன்னு சொல்லுறீங்களே [[மனசுல அவ்வ்வ்வ்வ்'ன்னு அழுதுருப்பாரோ ]] அண்ணே...."

"ஹா ஹா ஹா ஹா"

பஹ்ரைன் நண்பன் கலியுகம்"தினேஷ்.

மிக்க நன்றி நன்றி நன்றி என் அன்பர்களே நண்பர்களே....!
தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எந்தன் உயிருக்கு நேர்....!

19 comments:

 1. அண்ணனுக்கும் சேர்த்து நானே சாப்ட்டேன் ...

  ReplyDelete
 2. நன்றி, அப்படியே உலகளவில் நண்பர்கள் இருக்காங்கன்னு சொல்லியாச்சுப்போல?

  ReplyDelete
 3. தினேஷை இப்படி ஏமாத்திட்டீங்களே! :)

  ReplyDelete
 4. பிறந்த நாளுக்கு நிறைய ”ரோஜாப்பூ” வந்து குவிஞ்சிருக்குன்னு மட்டும் நல்லா தெரியுது. ஹா ஹா ஹா

  ReplyDelete
 5. வாழ்த்துகள் அண்ணே....

  ReplyDelete
 6. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ ........

  ReplyDelete
 9. என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ ........

  ReplyDelete
 10. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ ........:)

  ReplyDelete
 11. ஆம் எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன நண்பர்களின் எண்ணிக்கை இவ்வளவா...
  மன்னிக்கவும் சகோ நூறு தடவைகள் சொன்னதாக நினைத்துக் கொள்ளுங்கள்
  ஆண்டவன் அருளாலே அனைத்து வளமும் நலனும் பெற்று நீடூழி வாழ்க
  வாழ்கவென வாழ்த்துகின்றேன் சகோ ....

  ReplyDelete
 12. எங்கள் அண்ணாவுக்கு 5கண்டத்திலும் நட்பு உண்டு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 13. கலைஞருக்கு வாழ்த்து சொன்னவர்கள் காரியக்காரர்கள் அவர் மூலம் காரியம் ஆக வாழ்த்து சொல்லுவார்கள் ஆனால் உங்களுக்கு 5 கண்டத்தில் இருந்தும் வாழ்த்து சொன்னவர்கள் அன்புக்கார புள்ளைகள் அவர்கள் அன்பை தவிர எதும் எதிர்பார்க்காமல் வாழ்த்து சொன்னவர்கள் உங்களுக்கு வாழ்த்து சொன்னவர்கள் மனதார சொன்னவர்கள் அதனால் நீங்கள் நெடுநாள் இன்பமாக அன்பை பொழிந்து வாழ்வீர்கள்.. வாழ்க வளமுடன்

  ReplyDelete
 14. அண்ணா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எல்லா வளமும் பெற்று அன்போடு சிறக்க வாழ்த்துக்கள் பல

  ReplyDelete
 15. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மனோ....

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!