Sunday, June 30, 2013

சூப்பராக சொதப்புவது எப்படி...!

மலையாளி நண்பர் ஒருவர் ஊருக்கு போக ரெடியானார். ரம்ஜான் நெருங்குவதால் ஏர் டிக்கெட் விலை தாறுமாறாக எகிறிக் கிடப்பதால் பஹ்ரைன் டூ மும்பை டூ கொச்சி டிக்கெட் விலை கொஞ்சம் சீப்பாக கிடைத்தமையால் மும்பை வழி  போக ரெடியானார்.
என்னிடம் மனோஜ் மும்பை ஏர்போர்ட்டில் யாராவது இருந்தால் நீயும் உன் குழந்தைகளுக்கு சாக்கிலேட் தந்து அனுப்பு கொடுத்து விடுகிறேன்னு சொன்னார், நண்பர்களுக்கு போன் பண்ணினால் அவனவன் சென்னை தூத்துக்குடின்னு சிதறி கிடக்கானுக.\

கடைசியாக நண்பன் ஒருவன் இன்னொரு நண்பனின் போன் நம்பர் தர அவனுக்கு போன் போட்டு ஃபிளைட் நம்பர் டீட்டெயில் எல்லாம் கொடுக்க, அவனும் அண்ணே நான் பார்த்துகிடுதேன்னு சொன்னதும், அவனுக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் விலையுள்ள ஜானிவாக்கர் ஒன்னரை லிட்டர் வாங்கி கொடுத்தனுப்பினேன்.
மலையாளி நண்பனுக்கு மும்பைன்னாலே தாவூத் நினைப்புதான் எப்போதும் அம்புட்டு பயம், நண்பன் ஒருத்தன் வாரன்னதும் சமாதானமாக புறப்பட்டான். ட்ரான்சிட் பேசஞ்சர் என்பதால் விமான நிலையத்தை விட்டு வெளியே போகமுடியாது.

நான் இங்கேயே சாக்கிலேட் வாங்காமல் அவர் கையில் ஒரு அமௌண்டைக் கொடுத்து [[லக்கேஜ் கூடிவிடும்]] டியூட்டி ஃபிரீயில் சாக்லேட்டும் பாட்டலும் வாங்கிகொள் என்று பணத்தை கையில் கொடுத்தேன்.

அவரும் சந்தோசமாக கொடுத்த காசுக்கு எல்லாம் வாங்கி விட்டு எனக்கு போன் செய்து என்னென்ன வாங்கினார் என்று சொல்லவும், நானும் ஆர்வக்கோளாரில் மும்பைக்கு போன் செய்து குழந்தைகளிடம் சொல்லிவிட பயங்கர சந்தோசம் ஆகிவிட்டார்கள்.
பிளேன் லேண்டாகும் நேரம் மும்பை நண்பனுக்கு போன் செய்தேன் ரிங் போயிகிட்டே இருக்கு அப்பவாவது நான் சுதாரிச்சு இருக்கனும், போன் அடித்து நொந்து போனபின்பு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன், அவன் பிசியாக இருக்கலாம், அதான் நாம பிளேன் நம்பரெல்லாம் கொடுத்தாச்சென்னு.

காலையில போயி சாக்கிலேட் வாங்கி சாப்பிடலாம்னு குழந்தைகள் ஆவலாக இருக்க, எனக்கு காலையிலதான் மைல்டா ஒரு சந்தேகம் வர, மறுபடியும் மும்பை நண்பனுக்கு போன் செய்ய, எடுக்கவே இல்லை, கொஞ்சம் நேரம் கழித்து அவனுடைய நண்பன் போன் எடுத்து பேசினான், அவரு நல்ல தூக்கத்துல இருக்காருங்க அப்புறமா போன் பண்ணுங்க என்று.
எனக்கு அப்பவே புருஞ்சுபோச்சு பயபுள்ள சொதப்பிட்டான்னு, மலையாளி நண்பனுக்கு இன்னும் நான் போன் பண்ணல, என்ன சொல்லி திடடப்போராறோன்னு திகிலா இருக்கு. மும்பையில இப்பிடித்தான் கிழிச்சிகிட்டு இருக்குருயான்னு கேக்கப்போறார்.

குழந்தைகளை நினைச்சு பேனாவில் ஓவராக கசியும் மசி போல இருதயம் அழுதுட்டே இருக்கு.

இனி பார்சல் குடுப்பே பார்சல் குடுப்பே குடுப்பே......!

சரின்னு சாயங்காலம் போன் பண்ணினேன் லைன்ல வந்தவன் சொன்ன பதில் எனக்கு தலை சுத்தி போச்சு.[[மும்பை போனா முதல்ல இவனுக்கு செவியில ரெண்டு குடுக்கணும்]]

"அண்ணே...தூங்கிட்டேன்......"[[அதுவும் டியூட்டியில....கொய்யால...]]

17 comments:

  1. பிள்ளைகள்தான் பாவம் ஏமாந்துட்டுதுங்க.

    ReplyDelete
  2. ரெண்டு மட்டும் பத்தாது... (செவியில)

    ReplyDelete
  3. enna kodumai sir ithu..

    porupatra seyal..

    ReplyDelete
  4. சாக்லேட் எதிர்பார்த்து காத்திருந்த குழந்தைகளை நினைத்தால் தான் பாவம்... இந்த பார்சல் பிரச்சனை இங்கேயும் உண்டு! :)

    ReplyDelete
  5. சொல்லாம இருந்து இருக்கலாம்

    ReplyDelete
  6. பாவம் குழந்தைகள்!ஏமாற்றம் தாங்கமாட்டார்கள்!

    ReplyDelete
  7. குழந்தைகளின் ஏமாற்றம் தாங்க இயலாது தான். :-(

    ReplyDelete
  8. ஆனா ஜானி வாக்கர் உனக்கு வாங்கி குடுத்து விட்டுருக்கேன்னு சொன்னதுக்கு அப்புறமும் ஒருத்தர் தூங்கி இருக்காருன்னா சம்திங்க் ராங்க். (ஒருவேளை ஜானியை பிடிக்காம இருக்குமோ!!!)

    ReplyDelete
  9. //RobertJune 30, 2013 at 9:29 PM

    ஆனா ஜானி வாக்கர் உனக்கு வாங்கி குடுத்து விட்டுருக்கேன்னு சொன்னதுக்கு அப்புறமும் ஒருத்தர் தூங்கி இருக்காருன்னா சம்திங்க் ராங்க். (ஒருவேளை ஜானியை பிடிக்காம இருக்குமோ!!!) ///

    இந்த மேட்டர சொல்லாம விட்டுருப்பவோய்!

    ReplyDelete
  10. குழந்தைகளை நினைச்சு பேனாவில் ஓவராக கசியும் மசி போல இருதயம் அழுதுட்டே இருக்கு.

    அவங்க சந்தோஷம் வடிஞ்சி போயிருக்குமே அண்ணா...

    சரி விடுங்க... இதை வேறு வழியில் சரி செய்யுங்கள்...

    ReplyDelete
  11. இப்படித்தான் இருக்கனும்...

    பிளைன்ல போர ஒருத்தனைனும் நிம்மதியா விடாதே மனோ...!

    ReplyDelete
  12. குழந்தைகள் பாவம் அதைவிட மலையாளி நண்பன் நினைப்பார் இப்படியான சோம்போறிகளை எல்லாம் மனோ நட்பாக வைத்து இருக்கின்றானே உருப்பட்டாப்போலதான் என்று!:))))

    ReplyDelete
  13. அட கொடுமையே! குழந்தைகள் ஏமாந்து போயிருப்பார்களே!.

    ReplyDelete
  14. எதுவும் நண்பர்களிடம் கொடுத்து விடும்போது வீட்டுக்கு தகவல் சொல்லக் கூடாது.அப்படிச் சொன்னாலும் மனைவிக்கு மட்டும் தெரிவிக்க வேண்டும்.குழந்தைகள் ஏமாற்றம் அடைவது சமயத்தில் நடக்கக் கூடியதே!நண்பர்களைக் குறை சொல்வதை விடுத்து,நாம் அவதானமாக(ஆர்வமிருந்தாலும்)நடந்து கொள்வது நன்மை தரும்.

    ReplyDelete
  15. மக்கா குழந்தைகள் ஏங்கி போய்யிருப்பாங்கப்பா...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!