Thursday, August 1, 2013

முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...!

தங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி நேரத்தில் டைப்பி வெளியிட்டு விட்டேன், நக்கீரன் அண்ணனின் தொடர் பதிவுக்கு இன்னும் விஷயங்கள் தேவைப்படுவதால் வெயிட்டிங்.....அண்ணே மன்னிச்சு.
THE GREAT MUMBAI JUHU BEACH!!! [[இதுதான் தலைப்பு]] ஆகஸ்ட் 19/ 2010 ல், நான் மும்பை போனபோது மும்பை ஜூ பீச் சுற்றிப் பார்க்க குடும்பமாக போனபோது எடுத்த போட்டோவை போட்டு எனது வேதனையை சொல்லி இருந்தேன்.

அதற்க்கு ஸ்பீட் மாஸ்டர் முஸ்தபா வந்து ஒரு கமெண்ட போட்டுட்டு போயிட்டார், பிற்காலத்தில் எனக்கு விருது கொடுத்து கவுரவித்ததும் இதே நண்பன்தான் [[இப்போ ஆளு எங்கேன்னே தெரியவில்லை ஆரம்ப காலங்களில் பதிவுலகத்தின் ராஜாவாக திகழ்ந்தவர்]]

இதற்க்கு அடுத்த பதிவில் எனக்கு நானே கமெண்ட் போட்ட கொடுமையும் உண்டு [[சிரிக்கப்டாது ஆமா ]]  நாஞ்சில் எக்ஸ்பிரஸ் தம்பி பிரதாப் மெயிலில் [[கமெண்டில்]] வந்து கேட்டார் "என்ன அண்ணே உங்களுக்கு நீங்களே கமெண்ட் போட்டுருக்கீங்க" என்று, சரி நாம அதுக்கு சரிப்படமாட்டோமோன்னு நினைக்கும் வேளையில்....

கே ஆர் பி செந்தில் அண்ணன், தம்பி "மாப்பிளை"ஹரீஷ், தங்கை கல்பனா, தம்பி கோமாளி செல்வா, இம்சை அரசன், தோழி மதுரை பொண்ணு, தம்பி பிரவீண் மற்றும் டெரர்  குரூப் எல்லாம் உள்ளே வர, நானும் அவர்களின் பதிவுகளில் பின் தொடர ....சிபி அண்ணனும், விக்கி உலகமும், விஜயன் மற்றும் ஆபீசர் மற்றும் ஏனைய பதிவர்கள் நண்பர்கள் எல்லாரும் வந்து சேர இன்று என் வலைப்பக்கத்தை பார்த்தவர்கள் எண்ணிக்கை 285, 315 லட்சமாக இருக்கிறது....!

எனது பதிவுகளில் என் அனுபவங்களைத்தான் கூடுதல் பகிர்ந்துள்ளேன், சோகம் என்றாலும் அதில் இருக்கும் சுகத்தையும் சேர்த்தே அனுபவிக்க பழகிக் கொண்டேன், என்னை சுற்றி நடக்கும் சம்பவங்களை காமெடி கலந்து பார்த்து வெடி சிரிப்பாக சிரித்து மகிழ்வேன், அவைதான் என் பதிவுகளில் அதிகமாக வெளிப்படும்...!

அந்த அனுபவம்தான் முதல் பதிவிலேயே வந்துள்ளது, மனசில் இருப்பதுதானே சிலது வெளியே வரும் இல்லையா இவ்வளவாக சகித்து எனக்கு ஆதரவளித்த பதிவர்களுக்கும், எனது வாசகர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளை உங்கள் பாதங்களில் சமர்க்கிறேன்.

என் உயிர் தமிழின் பொற்பாதத்தில் என் நன்றியை மறுபடியும் சமர்ப்பிக்கிறேன்.


டிஸ்கி : நாய் நக்ஸ் அண்ணே, உங்க தொடர்பதிவுக்கு ஒரு ஹிந்தி படம்தானய்யா கிடைச்சிருக்கு, அதான் தாமதம் ஆகிட்டு இருக்கு கொஞ்சம் பொறுங்க, எனக்கு டீன் ஏஜ் பருவம் மும்பையில் அல்லவா, நான் சிலாகித்த காதல் சினிமா பற்றி சொல்லுதேன், சஃபர் கரோ பாய் சாப்.


ஓ  இதுக்கு இனியும் ஐந்துபேரை சேர்த்து விடனுமா ?

 ஏற்கனவே போனமுறை கோர்த்து விட்டதுல ரெண்டுபேர் கிரேட் எஸ்கேப் ஆகிட்டாங்க, சரி கூப்பிட்டு பார்ப்போமே ? ஒருமணி நேரத்தில் [[கூடுதலாக]] எழுதி முடிக்கும் சுவாரசியம் அல்லவா எனவே நம்பி கூப்பிடுதேன்.


 1 : அதே அதே....நம்ம ஆபீசர் சங்கரலிங்கம், தனது ஆக்கப்பூரவமான நடவடிக்கைகள், கைதுகள், ரெய்டுகள் பற்றி முதல் பதிவு எழுதி இருப்பார்ன்னு நினைக்கிறேன்.

2 : கே ஆர் விஜயன், எங்கள் கன்னியாகுமரி குசும்பு கலந்து ஏதாவது முதலில் எழுதி இருக்கலாம். வாசித்து நாமும் ரசிக்கலாம்.

3 : பன்னிகுட்டி ராமசாமி, ஆயிரம் கமெண்ட்ஸ் வாங்கிய அபூர்வ சிந்தாமணி, அந்த ஆயிரம் கமெண்ட்ஸ் பெற முதல்ல என்ன ஆரம்பம்ன்னு சொன்னா சிரியா சிரிக்கலாம்.

4 : சென்னை பித்தன், தல என்னா போடு போடுதாரு, அவரும் ஆரம்பத்துல என்ன ரசனையில ஆரம்பிச்சார் என்கிறதை பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கிறது.

5 : அவர்கள் உண்மைகள், ஒரு குசும்பே முதன் முதலாக குசும்பு எழுதினது எப்படின்னு தெரிஞ்சு நாமும் சந்தொஷப்படலாம்.


அன்புடன்,

நாஞ்சில் மனோ.


21 comments:


  1. அட மனோ நீங்க விபரம் தெரியாத ஆளா இருக்கிங்களே. போன தொடர் பதிவில் ராஜி அவர்கள் என்னை கூப்பிட்ட போதே நான் ஒரு அறிவிப்பு இட்டு இருக்கிறேன் என்னை இனிமேல் தொடர்பதிவுக்கு கூப்பிடுபவர்கள் 500 அமெரிக்க டாலர் முதலில் அனுப்பி வைக்கனும் என்று.. இப்ப பலியாடா வந்து மாட்டிகிட்டேங்களே............ஹீ.ஹீ..ஹீ எப்ப டாலர் அனுப்ப போறிங்க மனோ

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ நாங்க தினார் கொடுக்கும் பரம்பரையாச்சே...ஹி ஹி....

      Delete
  2. ///என்னை சுற்றி நடக்கும் சம்பவங்களை காமெடி கலந்து பார்த்து வெடி சிரிப்பாக சிரித்து மகிழ்வேன்... /// சொல்லவா வேண்டும்...? உண்மை...

    ReplyDelete
  3. குறிப்பிட்ட ஐந்து பேரின் அனுபவத்தையும் வாசிக்க ஆவலுடன்...

    ReplyDelete
  4. தொடர் பதிவை தொடர்ந்தவிதம் அருமை
    நானும் ஆவலுடன் அவர்களின் பதிவை
    எதிர்பார்த்து உள்ளேன்

    ReplyDelete
  5. ஓ தொடர் பதிவு எழுதினா தினார்,,டாலர் எல்லாம் கொடுப்பாங்களா???

    ReplyDelete
  6. ஆரம்பகால அனுபவம் அருமை!

    ReplyDelete
  7. எப்போதும் உங்கள் பதிவில் குறும்பு சரவெடியாக இருக்கும் அதை பலரும் ரசிக்கும் வண்ணம் பதிவிடும் முறையும் எனக்கு எப்போதும் பிடிக்கும்!

    ReplyDelete
  8. மறுபடியும் ஒரு தொடர் பதிவா? கணினி தொடர் பதிவே இன்னும் முடிஞ்சா மாதிரி தெரியலையே.

    எனக்கும் பின்னூட்டம் (கருத்துரைகள்னு அப்புறமாத்தான் பேர் வச்சாங்க)வர்றது ரொம்ப கம்மியாத்தான் இருக்கும். போக, போகத்தான் சுமாரா வரும். ஆனா பழைய BSNL கனெக்‌ஷன மாத்துனதுலருந்து மத்தவங்க பதிவில போயி கருத்து தெரிவிச்சதுக்கப்புறம் இப்பொ கொஞ்சம் கூடியிருக்கு. இதுலருந்து தெரிஞ்சிக்கிட்டது என்னன்னா நம்மள யாராச்சும் பாராட்டுணும்னா முதல்ல நாம மத்தவங்கள பாராட்டணும்.

    ReplyDelete
  9. முதல் பதிவு அனுபவம் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  10. பதிவு எழுத ஆரம்பித்த புதிதில் ஊக்கம் கொடுத்தவர்களை மறக்க முடியுமா என்ன..? உங்களுக்கென தனி எழுத்து நடை உருவாக்கிக் கொண்டதுதான் உங்கள் வெற்றியின் ரகசியம்..

    ReplyDelete
  11. அருமையாச் சொல்லிட்டீங்க!

    உங்கள் கட்டளை நிறைவேற்றப்பட்டது!

    ReplyDelete
  12. நல்ல அனுபவம். என்னையும் எழுதச் சொல்லியிருக்காங்க ராஜி.... எழுதறேன்.

    ReplyDelete
  13. இருயா மனோ...நான் போய் பூ வச்சி பொட்டு வச்சிக்கிட்டு,,,புடவை கட்டிட்டு,,,வளையல் மாட்டிக்கிட்டு வரேன்...

    எனினும் இரண்டு இடத்தில் என்னை குறிப்பிட்டமைக்கு நன்றி...!!!!!!!!!!

    ReplyDelete
  14. நகைச்சுவையோடு ஒன்றித்து இருக்கும் உங்களுக்கு இந்த அனுபவங்கள் இன்னும் மெருகூட்டிச் சிரிக்க வைக்கும்.எப்போதும் இதே மகிழ்ச்சி நிலைக்கட்டும் மன்னு !

    ReplyDelete
  15. ME THE FIRST..

    YOUR POST ALWAYS MAKES ME SMILE ANNAA.

    ReplyDelete
  16. என்னங்கண்ணே இப்படி பொசுக்குன்னு முடிச்சுட்டீங்க?!

    ReplyDelete
  17. நல்ல பகிர்வு:)! வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. சுருக்கமா முடிச்சிட்டீங்க? இன்னும் எழுதியிருக்கலாம்...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!