Wednesday, July 31, 2013

அய்யய்யோ ஓடியாங்க ஓடியாங்க கள்ளன் கள்ளன்...!

பஹ்ரைன்ல இருந்து லீவுக்கு ஊர் போன எங்கள் பெரியப்பா மகன், கன்னியாகுமரிக்கு போக பைக்கில் போகும் போது பொத்தயடி வழியில் மத்தியான நேரம், யாருமற்ற ஒரு பாதையில் போக...அங்கே ஒரு பேங்கில் வேலை பார்க்கும் எங்கள் சித்தப்பா மகள் நடந்து வருவதைக் கண்டு, பிரேக் அடித்து, அக்கா...என்று கூப்பிட...

சட்டென்று அவனை பார்த்துவிட்டு கழுத்தில் இருந்த நகையை கெட்டியாக பிடித்துக்கொண்டு கீழே குனிந்து உட்கார்ந்து கொண்டு...
"அய்யய்யோ ஓடிவாங்க ஓடிவாங்க காப்பாத்துங்க காப்பாத்துங்க கள்ளன் கள்ளன்..." என்று கத்த....தம்பிக்கு புரிந்து போயிற்று தான் அக்காளை சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்றும், அல்லாமலும் தாடி, ஆளும் நல்ல கலர், கருப்பு வைரம்....!

கொஞ்ச நேரம் "கள்ளன் கள்ளன் காப்பாத்துங்க காப்பாத்துங்க" என்று கத்திய அக்காவுக்கு காப்பாத்த யாருமே வரவில்லை என்றதும், மெதுவாக கண்ணை திறந்து பார்க்க....

பைக்கில் இருந்து இறங்காமல், அக்கா நான்தான் என்று அவன் பெயரை சொல்ல.....எங்க அக்கா சிரிச்ச சிரிப்பு இருக்கே, இப்பவும் அவர்களைப் பார்க்கும் போது  இதை சொல்லி சொல்லி சிரிப்பேன்.

கள்ளன் என்று அலறிய தம்பி பைக்லேயே வீடு போயி சேர்ந்து, தம்பிக்கு சாப்பாடும் கொடுத்து எங்கள் நிலைமையையும் [[நாடோடி வாழ்க்கை]] நாங்கள் பல வருடங்கள் எங்கள் குடும்பங்களை சந்திக்க முடியாமல் இருப்பதையும் சொல்லி அழுதிருக்கிறாள்....!
------------------------------
--------------------------------------------------------

இப்போ இங்கே பஹ்ரைனில் [[ஊரிலும்தான்]] ஐ போன் மற்றும் சாம்சங் கேலக்ஸ்சி போன்ற சாதனங்கள் வருகையால் விபத்துகள் நடக்க அதிக வாய்ப்புகள் பெருகி வருகிறது, எழுபது சதவீதம் பேர்களிடமும் இந்த போன்கள் இருக்கிறது.
 
சும்மா போறவாற இடங்களில் எல்லாம் இவர்கள் இதை உபயோகிப்பதால், வாய்பேச்சு குறைந்து, விரல்கள் மட்டுமே நர்த்தனம் ஆடுகின்றன, வீட்டுல மனைவி பிள்ளைங்க கூட பேசுவாங்களோ இல்லையான்னும் தெரியல...!
பாவிங்க ரோட்டுல நடக்கும் போதும், ரோட்டை கிராஸ் பண்ணும்போதும் இதை நோண்டிகிட்டே நடப்பதுதான் நான் சொல்லும் விபத்தின் காரணம்...உதாரணமாக....
 
வேலை முடிந்து லாண்டரியில் துணி வாங்கும்படி போய்கொண்டிருந்தேன், அங்கிட்டும் இங்கிட்டும் கார்கள் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ரோட்டினை கடக்கவேண்டும் என்பதால், கார்கள் வராததை யூகித்து ரோட்டை கடக்கும் வேளையில் கவனித்தேன் ரோட்டுக்கு அங்கிட்டு எதிரே ஒருத்தன் ஐ போனை நோண்டிக் கொண்டிருந்தான்.
 
நானும் கிராஸ் செய்ய அவனும் கிராஸ் செய்ய....அவன் போனை நொண்டிக்கொண்டே ரோட்டை கடக்க முயல....நான் எதிரே வருவது தெரியாமல் போனை டைப்ப.....நான் அப்படியே ரோட்டில் நின்றுவிட்டேன், காரணம் இவன் என்னை கவனிக்காமல் வந்து கொண்டிருக்கிறான்.
 
எப்படியும் என்மீது மோதுவான் என்று ஸ்டெடியாக நின்று கொண்டேன், நான் யூகித்தபடியே சரியாக என்மீது வந்து மோதினான், மோதியவன் அதிர்ச்சியாக பார்க்கவும் நான் ஒரு அப்பு அப்ப போவது போல பாவனை செய்ய [[மிரட்டலுக்குதான் அதுக்குள்ளே நம்மள அவன் அடிச்சுறப்டாது இல்ல]] குனிந்து ஓடினான் பாருங்க, அந்த நேரம் ஏதாவது கார் வந்து மோதினால் ?
அக்கரை கடந்து ஹிந்தியில பச்சையா திட்டினேன், செத்துறப் போறேடா பரதேசின்னு...!

எப்பா நம்மாளுங்க யாரும் ரோட்டுல நடக்கும் [[கடக்கும்]] போது தயவுசெய்து ஐ போன் மற்றும் இன்டர்நெட்டுகளை உபயோகிக்காதீங்க, எப்பவும் ஒருப்போல இருக்காது ஆமா...!


மனோ"தத்துவம் : சாணி அள்ளுனாலும் சாணக்கியமா இருக்கனும்.

 

23 comments:

  1. ஹாஹஹா நல்லா இயல்பா எழுதியிருக்கீங்க சகோ. வாழ்க.

    ReplyDelete
  2. //கொஞ்ச நேரம் "கள்ளன் கள்ளன் காப்பாத்துங்க காப்பாத்துங்க" என்று கத்திய அக்காவுக்கு// கருப்பா பயங்கறமா இருப்பீங்களோ..? இல்லை பயங்கற கருப்பா இருப்பீங்களோ ஹா..ஹா.. :-)

    ReplyDelete
  3. "கள்ளன் கள்ளன் காப்பாத்துங்க காப்பாத்துங்க"
    நமது நாட்டின் நிலமை இப்படியாகி விட்டது என்ன செய்வது?

    ReplyDelete
  4. தெற்கத்திக் கள்ளன் கதையைப் படித்தவுடன் குபீரென்று சிரிப்பு வந்துவிட்டது..நல்ல அக்கா-தம்பிய்யா.

    ReplyDelete
  5. இங்கயும் அதே ஸ்மார்ட் போன் அநியாயம் தான்..பக்கிக கார் ஓட்டும்போதும் டைப்பிக்கிட்டே போறாங்க.

    ReplyDelete
  6. I saved my eyes
    By reading your ha ha has

    ReplyDelete
  7. //எங்கள் நிலைமையையும் [[நாடோடி வாழ்க்கை]] நாங்கள் பல வருடங்கள் எங்கள் குடும்பங்களை சந்திக்க முடியாமல் இருப்பதையும் சொல்லி //
    வலி நிறைந்த வரிகள்.

    ReplyDelete
  8. //எப்பா நம்மாளுங்க யாரும் ரோட்டுல நடக்கும் [[கடக்கும்]] போது தயவுசெய்து ஐ போன் மற்றும் இன்டர்நெட்டுகளை உபயோகிக்காதீங்க, எப்பவும் ஒருப்போல இருக்காது ஆமா...!//
    இப்படி நிறைய அலையுதுங்க. எச்சரிக்கை பதிவு நன்று.

    ReplyDelete
  9. //எப்படியும் என்மீது மோதுவான் என்று ஸ்டெடியாக நின்று கொண்டேன், நான் யூகித்தபடியே சரியாக என்மீது வந்து மோதினான், //
    எனக்கென்னமோ, அது பெண்ணாக இருக்குமோ என்றொரு சந்தேகம் இருக்கு மனோ. ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. அய்யயோ அய்யய்யோ ஒடுலெய் மனோ....ஹா ஹா ஹா ஹா...

      Delete
  10. பதிவின் முதல் பகுதியை நீங்கள்
    நகைச்சுவையாய் சொல்ல நினைத்தாலும்
    அதனுள் உள்ள தாளமுடியாத சோகம்
    கண்ணில் நீர் வரவழைத்து விட்டது

    எதிரில் இருப்பவர்களைத் தொலைத்து
    எங்கோ இருப்பவர்களைத் தேடித் திரியும்
    அவலம் இன்று எல்லா நிலையிலும் வந்துவிட்டது
    மிகப் பெரும் அவலமே

    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அது எப்படிங்க டெய்லி பதிவு போடறதுக்கு விஷயம் கிடைக்குதுன்னு நினைப்பேன். ஆனா எந்த விஷயத்தையும் சுவாரஸ்யமா எழுதற கலை இருக்கு உங்கக்கிட்ட. அதனால எழுதறதுக்கு விஷயத்த தேடி அலைய வேண்டியதில்ல. எழுதறது எல்லாமே விஷயமாத்தான் இருக்கு.

    சென்னையில சமீப காலமா ஒரு ஜோக் ரவுன்ட்ல இருக்கு:

    "ஏங்க அந்த பையன் கழுத்த ஒரு பக்கமா சாச்சிக்கிட்டு போறான்."

    "அது ஒன்னும் இல்லீங்க. தோள்லருக்கற ஃபோன் கீழ விழாம இருக்கறதுக்கு அப்படி வச்சிருப்பான். இப்ப அது அப்படியே நின்னு போயிருச்சி. நேரா நிமித்தவே முடியல!"

    சிரிப்பு வந்துருக்காதே.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹா சரிதான் அண்ணே....

      Delete
  12. ஐ போனை நோண்டுவதால் அதிகம் பேச்சு குறைந்துவிட்டது நிஜம் தான் அண்ணாச்சி இங்கேயும் அதே நிலைதான் நானும் கொஞ்சம் வழியில் போக்குவரத்தில் நோண்டுவதை குறைக்கப்போறன் :))))

    ReplyDelete
  13. முக்கிய அறிவிப்பு : சென்னை பதிவர் சந்திப்பு 2013← இணைப்பை சொடுக்கி வாசிக்கவும்... அன்புடன் அழைக்கிறேன்... நன்றி...

    தொடர்புக்கு : dindiguldhanabalan@yahoo.com
    +91 9944345233

    வாங்க அண்ணே...!

    ReplyDelete
  14. கள்ளன்
    >>
    சிரிப்பைவிட சோகம்தான் மிஞ்சி இருக்குண்ணா!

    ReplyDelete
  15. அடையாளந்தெரியாத அளவுக்கு அண்ணா தம்பி!ஆபிசர் சந்தேகம் எனக்கும் மனோ.

    ReplyDelete
  16. நல்லாவே சாணி அள்ளிட்டீங்கண்ணே....

    ReplyDelete
  17. அண்ணே...! மாட்னீங்க...

    http://rajiyinkanavugal.blogspot.in/2013/08/blog-post.html

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  18. ஒரு அப்பு அப்பியிருக்கலாம்!

    இங்கே அலைபேசி பயன்படுத்தியபடியே ஆளில்லா ரயில்வே க்ராஸிங் கடந்து சென்று பலர் இறந்திருக்கிறார்கள்..... இன்னும் தொடர்கிறது...

    மனோ தத்துவம் - ரசித்தேன்.....

    ReplyDelete
  19. டெம்பிளேட் கமெண்ட்....உமக்கு போதும்....

    என் தொடர் பதிவு என்ன ஆச்சி....????

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!