Sunday, July 20, 2014

பெண்களின் சின்ன சின்ன ஆசைகள் !

காய்கறி வாங்க மார்கெட்டுக்கோ அல்லது மளிகை கடைக்கோ போனது கிடையாது, அப்பிடியே போனாலும் அம்மா கூட அல்லது வீட்டம்மா கூட டைம்பாஸ் ஆக போறது உண்டு, அவிங்க என்ன எடுக்குறாங்களோ வாங்குறாங்களோன்னு பராக்கு பார்ப்பதோடு சரி...


இடையில் நண்பர்கள் போன் வந்துச்சுன்னா ஒரே ஓட்டமா ஓடிருவேன்.


ஒருநாள் சும்மா பார் போயிட்டு திரும்பும் போது மார்கெட் களை கட்டி இருக்க, சும்மானாச்சும் ஏதாவது காய்கறி வீட்டுக்கு வாங்கி போகலாம்னு கிளம்பினேன்.


தக்காளி கிலோ 20 ரூபாய் 


வெங்காயம் கிலோ 20 ரூபாய் 


கத்தரிக்காய் கிலோ 30 ரூபாய் 


முருங்கைக்காய் கிலோ 40 ரூபாய் 


கோவைக்காய் கிலோ 30 ரூபாய் 


வெள்ளரிக்காய் கிலோ 35 ரூபாய் 


மிளகாய் 5 ரூபாய்க்கு மட்டும் 


உருளை கிழங்கு கிலோ 20 ரூபாய் 


வெண்டைக்காய் கிலோ 30 ரூபாய் 


இஞ்சி ஐந்து ரூபாய்க்கு மட்டும் 


எலுமிச்சை பழம் ஒன்று இரண்டு ரூபாய் 


கறிவேப்பிலை ஓசி

ஆப்பிள் கிலோ 140 ரூபாய் 


பப்பாளி பழம் ஒன்று 60 ரூபாய் 


சீத்தாப்பழம் கிலோ 80 ரூபாய் 


வாழைப்பழம் டஜன் 50 ரூபாய் 


மாம்பழம் கிலோ 80 ரூபாய் 


இம்புட்டையும் வாங்கியாச்சா...இனி ஒன்னரை கிலோ மீட்டர் நடந்தாதான் வீட்டுக்கு போகமுடியும் ஆட்டோகாரங்க பக்கத்துல என்பதால் வரமாட்டாங்க, எனக்கு இத்தனையும் தூக்கிட்டும் போக முடியாது.


சுத்து சுத்தி பார்த்தேன் யாராவது வெட்டியா இருக்கானான்னு, ஒருத்தன் அம்புட்டான், தம்பி இதை தூக்கிட்டு வந்தியன்னா அம்பது ரூபாய் தாரேன் வாறியான்னு கூப்பிட்டேனா அவனோ...


"அட போய்யா இருநூறு ரூபாய் தந்தியன்னா வாறன் அதுவும் இப்பவே தரனும்"ன்னு சொல்ல வேற வழியே இல்லாம போச்சா...


அவனை கூட்டிகிட்டே வீடு பக்கத்துல வந்ததும் அவனிடம் இருந்து எல்லாவற்றையும் பிடுங்கி நான் தலையிலும் கையிலும் வைத்து விட்டு அவனை போக சொல்ல...ஒரு மாதிரி என்னை பார்த்து விட்டு சென்றான்.


வீட்டுக்கு நான் வந்த கோலத்தை பார்த்த வீட்டம்மாவுக்கு ஆச்சர்யமோ ஆச்சர்யம், என் மகள் ஐஈஈ என்று பைகளை ஒவ்வொன்றாக இறக்கி வைத்து பார்க்க...


வீட்டம்மா முகத்தில் வழிந்த சந்தோசம் பார்க்கணுமே அப்படியே பூரித்து போனாள், "எப்பா என்னால நம்பவே முடியல நீங்களா வாங்கிட்டு தூக்கிட்டு வந்தீங்க ?!"


சாயங்காலம் வீட்டம்மாவின் மராட்டி தோழி வீட்டுக்கு வந்தபோது "எடி எம்மாப்பிளை காய்கறி பழம்ன்னு நிறைய வாங்கி தூக்கிட்டே வந்துருக்கார் எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை" என்று இவள் சொல்ல...


"ஆங்...வாங்கிட்டு வந்தான்னு சொல்லு தூக்கிட்டு வந்தான்னு சொல்லாத கூட ஒரு ஆளு சுமந்துகிட்டு வந்தான்" [[பலமாத்தான் வாட்ச் பண்ணுறாங்க போல]]
அப்புறமென்ன வாயிலேயே அடி விழுந்துச்சு, "அய்யோ இனி மார்கெட்டுக்கு நான் தனியா போகணுமே"ன்னு மராட்டிகாரி புலம்பிகிட்டே போனாள்.


இப்போவெல்லாம் ஊருக்கு போனால் ஆர்டர் வந்துரும் அத்தான் இன்னிக்கு இது இல்லை அது இல்லைன்னு வாங்கிட்டு வர சொல்லிருவாங்க, நமக்கும் ஒரு வகையில வசதியா போச்சு, பின்னே அந்த கேப்ல ஸ்மல் இல்லாத சரக்கா சாத்திட்டு வந்துருவொம்ல்ல, எங்கே போனேன்னு கேக்க முடியாதே.


இந்த தடவை ஊருக்கு [[கன்னியாகுமரி]] போன போது இதே போல அம்மாவுக்கு காய்கறி வாங்கிப் போனேன் [[முதல் தடவை]] அம்மாவுக்கு கண்ணுல நீரா கொட்டிருச்சு "எலேய் மக்ளே தம்பி....... நீயாலேய் வாங்கிட்டு வந்தே"ன்னு ஆர்வமா பைகளை பிரிச்சு ஆச்சர்யமாக பார்த்தாங்க...


சிம்பிளான சில சந்தோஷங்களை அவர்களுக்கு கொடுக்க தவறிவிட்டோம் என்ற உண்மை அப்படியே முகத்தில் அறைந்து விட்டது !

10 comments:

  1. சிம்பிளான சில சந்தோஷங்களை அவர்களுக்கு கொடுக்க தவறிவிட்டோம் என்ற உண்மை அப்படியே முகத்தில் அறைந்து விட்டது//ம்ம் நிஜம்தான் அண்ணாச்சி மொழி வேறு இடையில் தடங்களாக!ம்ம்

    ReplyDelete
  2. வணக்கம்
    அண்ணா
    நன்றாக சொல்லியுள்ளீர்கள்.. பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. நீங்க சொன்னதை இப்படி அப்படின்னு கூட்டி பார்த்த ஒரு 12 கிலோதான் தேறுகிறது அதுக்கே மூச்சு திணறுதாய்யா இந்த வயசுல... மொரோக்கோ ஆளை எல்லாம் அப்படியே இரண்டு கையில் ஏந்திகிட்டு 10 மைல் அசராம ஒடுற ஆள் என்றுதான் நான் உங்களை பற்றி நினைச்சு ருந்தேன்... ஹும்ம்ம்ம்ம் இவ்வளவுதானா மனோ

    ReplyDelete
  4. நீங்க சொல்லுற மாதிரி எப்போவாவது செஞ்சாதான் அது அவர்களுக்கு சந்தோஷம் ,என் அனுபவ்த்தில் சொல்லுறேன் கேட்டுங்குங்க

    ReplyDelete
  5. சிறு சிறு செயல்கள்கூட எத்தனை மகிழ்வினை மற்றவர்களுக்கு வழங்குகிறது
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  6. சின்ன சின்னது தான் என்றும் நினைவில் நிற்கும் சந்தோசங்கள் அண்ணே....

    ReplyDelete
  7. வணக்கம்,மனோ!நலமா?///சில செயல்கள்,ஆத்தாவையும்,சில செயல்கள்,ஆத்துக்காரியையும் அசத்தும்,ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
  8. உண்மைதான் இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்களை வீட்டினருக்கு தந்தால் குடும்பத்தில் எப்போதும் நிறையும் மகிழ்ச்சி! நல்ல பகிர்வு!

    ReplyDelete
  9. //சிம்பிளான சில சந்தோஷங்களை அவர்களுக்கு கொடுக்க தவறிவிட்டோம் என்ற உண்மை அப்படியே முகத்தில் அறைந்து விட்டது //
    உண்மை தான்! நமக்கு மிகச் சிறிய விஷயங்கள் என்று நினைக்கும் சில காரியங்கள் நம்மைச் சேர்ந்தவர்களுக்கு எத்தனைப் பெரிய சந்தோஷத்தைக்கொடுக்கிறது என்பது அனுபவித்துப்பார்க்கும்போது தான் புரியும்!

    அழகிய பதிவு!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!