Showing posts with label இன்று சில தகவல்கள். Show all posts
Showing posts with label இன்று சில தகவல்கள். Show all posts

Tuesday, April 26, 2011

இன்று சில தகவல்கள்

இன்று சில தகவல்கள்....



நம்ம மகாத்மா காந்திக்கு இரண்டு கைகளாலும் கடிதம் எழுதும் பழக்கம் உண்டாம்....!!!!! [[காந்தின்னா சும்மாவா]]



பாலாவின் இயக்கத்தில் உருவாகும் 'அவன் இவன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது.....[[சிபி'க்கு ஆப்பு உறுதி ஆகிருச்சி]]



மன்மதன் அம்பு' படத்தில் இடம்பெறும் 'நீலவானம்...' பாடல் காட்சி முழுவதும் ரிவர்ஸ் ஷாட்டில் எடுக்கப்பட்டதாம்.கமலின் மனைவி விபத்தில் இறந்துவிடுவார். அதிலிருந்து அவர் உயிர்த்தெழுந்து காரில் ஏற.......[[எத்தனை படத்திதில்தான் முதல் மனைவியை கொல்லுவீங்க]]



இந்தியாவில் லோக்பால் சட்டத்தால் ஊழலை முழுமையாக ஒழிக்க முடியுமா?.........[[ முதல்ல அந்த கமிட்டியையாவது ஒழுங்கா கூட்டுங்க]]


ஐ.நா., : இலங்கையில் புலிகளுடனான இறுதிக்கட்டப் போர் நடந்த ஒருமாத காலத்தில் போராட்டத்திற்கு தொடர்பு இல்லாத 10 ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்களை குண்டு போட்டு கொன்றுள்ளது என்றும், சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கின்றனர் என்றும் ஐ.நா., சபை விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [[இதைத்தானே கொன்னியா அப்பவே இருந்து கரடியா கத்திட்டு இருக்கோம் போங்கடா கொய்யால]]



ஸ்பெக்ட்ரம் ஊழலில், முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழிக்கும், கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக, சி.பி.ஐ., தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இருவரும் கூட்டுச்சதி செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு பெயர் இடம் பெறவில்லை. [[ "தொடர்பு இருப்பதாக" யோவ் நம்ம மக்கள் டபுள் மீனிங்'ல நினைச்சிர போறாங்கய்யா]]


புதுடில்லி:பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கழகம், பெட்ரோல் விலை எந்த நேரத்திலும் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது. [[ நாசமாபோச்சி போங்க]]



பெங்களூரு சிறையில் இருந்து முத்துலட்சுமி விடுவிக்கப்பட்டார்...[[ ஐயோ பாவம் ]]




சென்னை: "ஸ்பெக்ட்ரம் ஊழலில், பயனடைந்த கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா...[[ இனி நீங்க வந்து என்னல்லாம் லந்து குடுக்க போறீங்களோ கிர்ர்ரர்ர்ர்ர் ]]





 சென்னை : ""இலங்கை பிரச்னை, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளின் நல்லுறவை வளர்க்க வேண்டியது பற்றியும் விரிவாக விவாதித்து முடிவெடுக்க வேண்டிய விஷயம்,'' என்று, முதல்வர் கருணாநிதி கூறினார்....[[ புதுசா சொல்றாராம் யப்பா நடிப்பு திலகமே, எனக்கென்னமோ இவர் சோனியாகானை மிரட்டுற மாதிரி தெரியுது ]]



ஒரு ஸ்பெஷல் டிஸ்கி : கிரிக்கெட் நடக்கும் போது நம்ம தக்காளி [[விக்கி]] பக்கத்து வீட்டுல உள்ள கிரிக்கெட்டே தெரியாத [[என்னை மாதிரி]] அமெரிக்கன், சைனாக்காரன், ஜெர்மன்காரனை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு கூட்டிட்டு போயி கிரிக்கெட் பார்க்க வைப்பாராம், அவனுகளும் இவர் கும்மி அடிக்கும் போது, அவனுகளும் [[ஒன்னும் புரியாமலேயே]]  சேர்ந்து கும்மி அடிப்பானுகளாம், வேற வழி....??? கிரிக்கெட் முடிஞ்சி பார்த்தா அவனுக மூர்ச்சை ஆகி கிடக்குரானுகளாம் [[ஏன் இந்த கொலைவெறி]]



நன்றி : தினமலர் 

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!