அள்ளி கொஞ்ச ஆசைதான்
கடல் நம்மை
பிரிக்காதிருந்தால்
தினம் தினம்
உன்னை நெஞ்சில் துயில செய்து
மகிழ்வேனே
என் செல்ல தேன் மகளே....
நிலவை பார்க்க
மனம் மறுக்கிறது...
உன் முகம்
அங்கே இருந்து
அழுவதால்.... நான் கண்ணீர்
சிந்தமுடியாத
உன் சத்தியத்தை
நினைத்து
நிலவை நான்
பார்ப்பதில்லையடி....
தாமரை இலை மேல்
தண்ணீராய் இருக்கிறேன்
உன்னை தீண்ட முடியாமல்...
என்றும்
நீயும் நானும் வேறு வேறுதான் உணர்ந்து கொள்...
தனிமைதான்
எனக்கும் அழகு இங்கு...