Monday, November 21, 2011

நட்சத்திரங்களின் பேட்டி, இன்றைக்கு பாத்திமா பாபு....!!!

பிரபல செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான மதிப்பிற்குரிய பாத்திமா பாபு அவர்களிடம், நாஞ்சில்மனோ வலைத்தளத்திற்கு பேட்டி தரமுடியுமா என்று கேட்டதும், அன்பாக ஒப்புகொண்டார்கள்...எனக்கு நம்பவே முடியலை, நேற்று சிவாஜி சந்தானம் சார் பேட்டியையே இன்னும் நம்ப முடியாமல் இருக்கேன், இதோ அடுத்த நட்சத்திர தேவதையும் பேட்டிக்கு தயாரா வந்ததை நினைத்து பூரித்துப் போனேன்....


எவ்வளவு எளிமையாக பழகுகிறார்கள், அதனால்தான் இவர்கள் நட்சத்திரங்களாக மின்னுகிரார்கள்...!!! தூரத்தில் இருந்து பார்க்கும் போது நாம் மிரண்டு போகிறோம் இவர்களைப் பார்த்து, அருகில் போனால் இனியவர்கள், மிகவும் அன்பாக இருக்கிறார்கள்...!!! வாழ்த்துக்கள் மேடம், நன்றிகளும்....


இனி நாஞ்சில்மனோ'வின் கேள்விகளும், பாத்திமா பாபு'வின் பதில்களும்....

1 : ஒரு டிவி செய்தி வாசிப்பாளரா ஆன உங்களுக்குத்தான் முதல் தகவல்கள் வரும், அதிர்ச்சியான செய்திகள் வரும் போது உங்கள் மன நிலை எப்படி இருக்கும்...?

கேட்கும் உங்களுக்கு இருப்பது போலவே...


2 : பார்த்தேன் ரசித்தேன் படத்துல சிறப்பாக கலகலப்பான பேர்வழியா நடிச்சி அசத்தி இருந்தீங்க, உங்க கூட நடிச்ச பிரசாந்த், லைலா, சிம்ரன் பற்றி சொல்லுங்க மேடம்...? 

லைலாவிடம் விளையாட்டுத்தனம் அதிகம். ப்ரஷாந்த் அந்த காலத்திலேயே கணிணியை அபரிமிதமாக நேசித்தவர் 
சிம்ரன் முதல் படத்தில் (விஐபி) பார்த்ததற்கும் அப்போதைக்கும் அபரிமிதமாக பரிமளித்திருந்தார்...நடிப்பில் ஒரு முதிர்ச்சி இருந்தது...!!!


3 : உங்களுக்கு பிடிச்ச உலக தலைவர்கள்...?

ஒபாமா, நெல்சன் மண்டேலா, ஆங் சாங் சூ கீ....!


4 : இயற்கை பேரழிவுகள், எந்த ரூபத்தில் எப்போது வரும் என கனிக்க முடியாத இந்த வேளையில், அணுமின் நிலையங்கள் இன்னும் தேவையா...?

அணுமின் நிலையங்களின் சாதகங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும், பாதுகாப்பு விஷயங்களை மேம்படுத்தி மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். 
கரண்ட் கூடத்தான் ஷாக் அடிக்கும்....பெட்ரோல், எரிவாயு போன்றவையும் கவனமாக கையாளப்பட வேண்டியவை...நாம் உபயோகிக்கவில்லையா? அணுவும் அது போலவே...


5 : உங்களுக்கு பிடித்த நடிகர்கள், நடிகைகள் பற்றி சொல்லுங்களேன்...?

எல்லோரையும் பிடிக்கும்....கமல், மோஹன்லால், நந்திதாதாஸ், ரேகா(ஹிந்தி), பெரிய லிஸ்ட்....அது...


6 : உங்க வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் சொல்லுங்களேன்..?

இன்னும் எத்தனை வருடங்களுக்கு இந்த கேள்வி கேட்கப்பட்டுக்கொண்டிருக்கும்? so very cliched it sounds..


7 : எப்போதாவது பல்பு வாங்கிட்டு முழிச்ச சம்பவங்கள் உண்டா...?

இல்லைன்னா அது பொய்யா இருக்கும்....


8 : தைரியமாக வேலை செய்ய போய்க்கொண்டிருக்கும் பெண்களுக்கு உங்கள் அறிவுரை...?

CONTINUE.....


9 : எப்போதும் உற்சாகமாக அழகா இருக்கிறீர்களே அதன் ரகசியம் என்ன...?

உங்க கேள்வியிலேயே பதிலும் இருக்கு,,,,உற்சாகம்....ஆமாம் மனசுல எந்த negative thoughts ம் இல்லாம சந்தோஷமா இருக்கறேன்....அது காரணமா இருக்கலாம்.


10 : மீடியா, நடிப்பு, குடும்பம், எப்பிடி இருக்கு வாழ்க்கை...?

ஒவ்வொன்றிற்குமான நேரம் கிடைக்கிறது.


11 : உங்களுக்கு பிடித்த இயக்குனர், வெள்ளித்திரை, சின்னத்திரை...?

மணிரத்னம், கே பாலசந்தர் வெள்ளித்திரையில்....சின்னத்திரையில்....என்னை தெலுங்கில் அறிமுகப்படுத்திய உப்பலபட்டி நாராயண ராவ்...


12 : வேகமாக வளர்ந்து பெருகி வரும், பதிவுலகம், பதிவர்கள் பற்றி சொல்லுங்க மேடம்...? 

நல்ல ஆரோக்கியமான அறிவியல் வளர்ச்சி....


13 : பதிவுலகில் அட்டகாசமாக பிரகாசித்து வரும் பெண் பதிவர்களுக்கு [[ஆண் பதிவர்களுக்கும்]] உங்கள் ஆலோசனை என்ன...?

நானே ஒன்றரை ஆண்டுகளாகத்தான் பதிவுலகில் தடம் பதித்திருக்கிறேன்....அவர்கள் தான் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டும்..... 
சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.,,,,censor இல்லை இங்கே...


14 : இப்போது என்னென்ன படங்களில் நடித்து கொண்டு இருக்குறீர்கள்...?

தமிழில் - என் பெயர் குமாரசாமி மலையாளத்தில் ஜோஸ் ஏட்டண்டெ ஹீரோ & தி கிங் அண்ட் தி கமிஷ்னர்.


15 : உங்களை அன்புடன் தாங்கும் உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்கள்...? 

கணவர் பாபு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் அக்கௌண்ட்ஸ் ஆஃபிஸர், மகன் ஆஷிக் ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங் மூன்றாம் ஆண்டு, மகன் ஷாருக் எட்டாம் வகுப்பு
அத்தனை பேருக்கும் நான் தான் குழந்தை போல...


16 : கடைசி ஸ்பெஷல் கேள்வி, சந்தானம் சிவாஜி சார் நழுவின மாதிரி சொல்லிறாதீங்க, அரசியலில் ஈடுபட்டு பெண்களுக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் 
மனதில் எழுந்தது உண்டா....? [[ஹை மாட்டிகிட்டாங்களே]] 

கீதையிலிருந்து - எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது....எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்...


டிஸ்கி : மிகவும் நன்றி மேடம்...

40 comments:

 1. பாத்திமா பாபுவின் அனைத்து பதில்களும் சுருக் அன்ட் நறுக்

  ReplyDelete
 2. யோவ்! என்னய்யா இப்பிடி கலக்குறீர்

  ReplyDelete
 3. கொஞ்சமும் எதிர்பார்க்காத நட்சத்திரங்கள் உங்கள் ப்ளாக் கை அலங்கரிக்கிறார்கள். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வலைப்பூவில் ஓர் மாற்றத்தினை கண்டோம்... உங்களால்... நன்றி மனோ சார்... மேடமிடம் கேட்ட கேவிகள் எல்லாமே அருமை... அவங்க பதிலும் அருமையாக இருக்கு... தொடருங்கள் சார்

  ReplyDelete
 5. ////பெட்ரோல், எரிவாயு போன்றவையும் கவனமாக கையாளப்பட வேண்டியவை...நாம் உபயோகிக்கவில்லையா? அணுவும் அது போலவே./////

  இந்த அறிவுபூர்வமான பதில் சிந்திக்கவே வைக்கிறது...

  மிக்க நன்றி அண்ணாச்சி..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  இந்த வார தமிழ் சினிமா செய்திகளின் தொகுப்பு (14.11.2011-20.11.2011)

  ReplyDelete
 6. எனக்கும் பிடித்த நடிகை இவர்.நன்றி மனோ !

  ReplyDelete
 7. அழகான கேள்விகளும் அருமையான பதில்களும் .
  நான் ஸ்கூல் படிக்கும்போதிலிருந்து இவங்கன்னா அவ்ளோ ஆசை .
  வாழ்த்துக்கள் படங்கள் எல்லாமே அழகா இருக்கு .

  ReplyDelete
 8. மனோ சார்... நல்ல முயற்சி... தொடருங்கள்...

  ReplyDelete
 9. சூப்பர் கேள்விகள்...நச் பதில்கள்

  ReplyDelete
 10. //////பெட்ரோல், எரிவாயு போன்றவையும் கவனமாக கையாளப்பட வேண்டியவை...நாம் உபயோகிக்கவில்லையா? அணுவும் அது போலவே.//
  என்ன ஒரு எதார்த்தமான பதில்.

  ReplyDelete
 11. கலக்கலா இருக்கு, கை தேர்ந்த ஆசிரியரின் பேட்டி. அதை கலகலப்பாக்கியிருக்கு.

  ReplyDelete
 12. அண்ணே! புதுசா ஜர்னலிசம் கோர்ஸ் படிச்ச்சீங்களா? ஹோட்டல் வேலையை ரிசைன் பண்ணிட்டு பத்திரிக்கை நிரூபரா போக போறீங்களா?!

  ReplyDelete
 13. ஆனாலும் பேட்டி கலக்கலா இருந்துச்சு அண்ணா

  ReplyDelete
 14. நல்ல முயற்சி ,அருமை நண்பரே

  பேட்டி காணப்படுபவர்கள் பதிவுலகில் வளம் வந்து கொண்டிருந்தால் அவர்களது ப்ளாக் முகவரியும் தரலாமே ?

  நல்ல கேள்விகள் அதற்கான அழகான பதில்கள் நண்பரே

  ReplyDelete
 15. தொடர்ந்து பேட்டி போட்டு அசத்தறீங்க மக்கா.... நல்லா இருக்கு.

  ReplyDelete
 16. //// : பதிவுலகில் அட்டகாசமாக பிரகாசித்து வரும் பெண் பதிவர்களுக்கு [[ஆண் பதிவர்களுக்கும்]] உங்கள் ஆலோசனை என்ன...?

  நானே ஒன்றரை ஆண்டுகளாகத்தான் பதிவுலகில் தடம் பதித்திருக்கிறேன்....அவர்கள் தான் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டும்.....
  சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.,,,,censor இல்லை இங்கே...
  ///// என்னது பாத்திமா பாபு வலைப்பதிவு எழுதுறாங்களா இல்ல வலைப்பதிவுகளின் வாசகியா?

  ReplyDelete
 17. எனக்கு மிகவும் பிடிச்ச ஒரு நடிகை இவங்கள் செய்திவாசிப்பதை பார்பதற்கே நான் செய்திகளை பார்ப்பதுண்டும்

  உங்கள் கேள்விகளும் மேடத்தின் பதில்களும் அருமை

  ReplyDelete
 18. வெளிப்படையான நறுக் பதில்கள்.

  ReplyDelete
 19. மிக அருமை...கலக்குற மாப்ள... உள்ளூரிலே இருந்து கிட்டு நாங்க பண்ண முடியல... வெளி நாட்ல இருந்து பேட்டி எடுக்குறீங்க... முயற்சி இருந்தால் முடியாதது எதுவுமே இல்லை என்பதற்கு உதாரணம்... இந்த வரிசையில் அடுத்த நட்சத்திரத்தை எதிர்பார்க்கிறோம்...

  ReplyDelete
 20. என்னையா நடக்குது இங்க ஓடுது யாரு ஒபாமா பேட்டியா?

  ReplyDelete
 21. இன்னும் எத்தனை வருடங்களுக்கு இந்த கேள்வி கேட்கப்பட்டுக்கொண்டிருக்கும்? so very cliched it sounds..


  மாறுபட்ட பகிர்வு. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 22. நீங்க கலக்குங்க அண்ணே ...
  உங்கள் கேள்வியும் அதற்கு அவங்க பதிலும் அட்டகாசம் ...
  மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணே ....
  இந்த போட்டோ எல்லாம் எப்படி கெடைக்குது அண்ணே ....

  ReplyDelete
 23. அண்ணே அசத்திறீங்கண்ணே..
  அடுத்த பேட்டி யாருன்னே

  ReplyDelete
 24. புகைப்படக் கலைஞரும் தாங்கள்தானோ!

  ReplyDelete
 25. இப்ப இன்னும் எங்கேயோ போய்ட்டீங்க...

  நல்ல கேள்விகள், நல்ல பதில்கள்...

  ReplyDelete
 26. நேற்று சந்தானம் சார் இன்று பாத்திமா பாபு மேடம்
  அண்ணாச்சி பதிவுலக மேம்படுத்திட்டிங்க...

  ReplyDelete
 27. அருமை!...வாழ்த்துக்கள் சகோ .அடுத்த பேட்டி யாரோட!...

  ReplyDelete
 28. தம்பி லேப் டாப் மனோ.. பதிவு டாப் லேய்

  ReplyDelete
 29. பாத்திமா பாபு பதிவுலகில் இருப்பது புது தகவல்... அணு உலை விஷயம், சிறுபிள்ளை தனமான பதில்

  ReplyDelete
 30. சி.பி.செந்தில்குமார் said...
  தம்பி, அடுத்த பலி யாரு?//

  நீதாம்லேய், இப்பவே பதிவு ரெடி பண்ணி சேவ் பண்ணி வச்சிருக்கேன் ஹா ஹா ஹா "பிரபல பதிவர்களின் பாடல் கும்மி" இது தலைப்பு, வா நாளைக்கு வச்சிருக்கேன் உனக்கு அருவாள்...

  ReplyDelete
 31. கடைசி கேள்விக்கு பதில் உங்களுக்கு தெரியாதா? இல்ல சும்மானாச்சும் கேட்டீங்களா!! இவுங்க அ.தி,மு.க பார்டி தானே!!!
  அண்ணே அடுத்து யாரு?

  ReplyDelete
 32. விகடன் லூசுப்பையன் /கார்ட்டூன் கண்ணா மாதிரி சுவையாக இருந்தது. சில சமயங்களில் மாடர்ன் ஆர்ட் படங்களுக்கு ஓவியரை விடவும் வியாக்கியானம் செய்வோர் சொல்வதைக் கேட்டு ஓவியர்கள் மலங்க விழித்து ஆமோதிப்பது போல்/பாத்திமா மேடத்துகிட்ட வாங்கிக் கட்டிக்கப் போறீங்க/... அருமையான பதிவு!

  ReplyDelete
 33. சூப்பர்ர்ர்!!கேள்வியும் பதில்களும் ரசிக்கும்படி இருக்கு...

  ReplyDelete
 34. அட..அடுத்தடுத்து அதிரடி பேட்டி..சூப்பர்.இன்னும் யார் யாரிடமெல்லாம் பேட்டி எடுத்து வைத்து இருக்கீங்க.ஒவ்வொன்றையும் தினம் ஒன்றாக பதிவிடுங்கள்.

  ReplyDelete
 35. //////பெட்ரோல், எரிவாயு போன்றவையும் கவனமாக கையாளப்பட வேண்டியவை...நாம் உபயோகிக்கவில்லையா? அணுவும் அது போலவே.//


  சமையல் எரிவாயுவையும், மின்சாரத்தையும் அணுசக்திக்கு இணையாக ஒப்பிட்ட பா.பா.வின் பொதுஅறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது:)))

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!