Showing posts with label மும்பை ரெட் லைட் ஏரியாவும் மனோ'வும். Show all posts
Showing posts with label மும்பை ரெட் லைட் ஏரியாவும் மனோ'வும். Show all posts

Friday, August 5, 2011

மும்பை ரெட் லைட் ஏரியாவும் மனோ"வும்......!!!

கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படம் வெளியானபோது, ஆனந்தவிகடனில் கமல் ஒரு பேட்டி குடுத்துருந்தார். எப்பிடின்னா "மும்பை சிவப்பு விளக்கு" பகுதிக்கு தான் போகமுடியாத காரணத்தால் அவர் நண்பர் சந்தானபாரதியை ரகசியமாக அனுப்பி வைத்து சில விஷயங்களை தெரிந்து கொள்ள அனுப்பினாராம்....!!!


பேட்டி குடுக்கும் போதே கமல் உஷார் ஆகிட்டார், அதாவது டைரக்டரும், நடிகருமான சந்தானபாரதியின் மனைவி ஆனந்தவிகடன் வாசகி என்பது தெரிஞ்சதும் உஷாராக பேட்டி குடுத்துருந்தார்.......!!


நாமதான் அம்புட்டு பிரபலம் கிடையாதே, ஏதோ ஒரு ரயில் டிக்கட் பரிசோதகருக்கு மட்டும்தானே நம்மளை தெரிஞ்சிருக்கு [[ஹி ஹி]] அதானால்......

நானே நண்பர்களுடன் "மும்பை சிவப்பு விளக்கு" பகுதிக்கு நேரிடையாக செல்லலாம், சென்று [[முன்பு அதிரடி ஆப்பரேஷன் நடத்தி பெண்களை காப்பாத்தி இருக்கோம் சில பல நாடகங்களும் அருவா, கத்திகளும் பறந்த அதே இடம், அதுக்கு தொடர் பதிவே போடலாம் ஹே ஹே ஹே ஹே]] அங்கே நடக்கும் சில பல விஷயங்களை உங்களோடு பகிரலாம்னு இருக்கேன்....


நண்பன் கிருஷ்ணா என்னை அண்ணே வாங்க அண்ணே கப்பலுக்கு, அண்ணே வாங்கண்ணே மும்பை சென்ட்ரல் போயி சுத்தி பார்ப்போனு வற்புருத்திட்டே இருக்கான் அதானால......!!!


அவனையும் கையோட கூப்பிட்டு போலாம்னு இருக்கேன் மும்பையின் சிவப்பு விளக்கு பகுதிக்கு.......!!! [[அடிவாங்க துணைக்கு நாலஞ்சி பேர் இருப்பது நல்லதுதானே ஹி ஹி]]


சரி இதுக்கு எதுக்குடா கமலையும், சந்தானபாரதியையும் இழுத்துருக்கேன்னு நீங்க கேக்குறது புரியுது ஹி ஹி.........!!!


ஏன்னா என் வீட்டம்மாவும் என் வாசகி என்பது குறிப்பிடத்தக்கது [[வாயிலேயே விழும் அடி]] அதான் முதல்லயே சொல்லிருவோம்......

ஹலோ நான் மும்பை ரெட் லைட் அவலங்களை சொல்லப்போறேன் அடுத்த பதிவில் சரியா.......????


டிஸ்கி : கடந்த ரெண்டுநாளா நெட் அவுட்டுங்கோ, யாருக்கெல்லாம் சந்தோசம் கைதூக்குங்க பார்ப்போம்....???

டிஸ்கி : ஐயோ சிபி அண்ணன் என் கண்ணாடியை களவாண்டு வச்சிருக்கான் ராஸ்கல் ஹி ஹி......[[என்னதான் சொல்லுங்க எங்க அண்ணன் அழகுதான்...!!!]]

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!