Friday, January 6, 2012

அநியாயத்துக்கு மேல் அநியாயம் செய்யும் மருத்துவமனைகளும் மருத்துவர்களும்....!!!


மருத்துவம் சேவை அல்ல!, கொள்ளை...!!!

உயிருக்கு ஆபத்தான நிலை வருகின்ற போது காப்பாற்றிய மருத்துவரை கடவுளை வணங்குவதை போல் வணக்குவது தான் நம்மை போன்ற சாதாரண மனிதர்களின் இயல்பு காரணம் நம்மால் பசியாற உணவு கொடுக்க முடியும் வெயிலில் ஒதுங்க நிழல் கொடுக்க முடியும் மானத்தை மறைக்க ஆடை கொடுக்க முடியும் ஆனால் ஊசலாடி கொண்டிருக்கும் உயிரை காப்பாற்றி கொண்டு வர இயலுமா?

வலியால் துடிப்பவனை வலி மறக்க செய்ய முடியுமா? நிச்சயம் ஆகாது அது ஒரு மருத்துவரால் தான் முடியும் அதனால் தான் சமூகத்தில் மிக உயரிய அந்தஸ்தில் அவர்களை வைத்து பார்க்கிறோம்

ஆனால் கடவுளின் தூதர்களான மருத்துவர்கள் இன்று தங்களது பொறுப்பையும் தகுதி தாரதரத்தையும் மக்களின் நம்பக தன்மையும் உணர்ந்து நடக்கிறார்களா? இல்லை என்று சொல்வதற்கு மிகவும் கஷ்டமாகத் தான் இருக்கிறது ஆனால் அது தான் உண்மை.

 பல மருத்துவர்கள் தங்களது தொழிலை மற்றவர்களின் ஆபத்தான நேரத்தில் பணம் பறிக்கும் கருவியாகவே பார்க்கிறார்கள் இதற்கு விதி விலக்காக சில மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் மறுக்க வில்லை ஆனால் இவர்களது எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது

சென்ற மாதத்தில் ஒரு நாள் எனக்கு மிகவும் நெருங்கிய ஒருவருக்கு இரு சக்ர வாகனத்தில் சாலையில் செல்லும் போது விபத்து ஏற்ப்பட்டு கால் எலும்புகள் ஒடிந்து விட்டன உடனடியாக அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று சொல்லிய மருத்துவர்கள் அதற்கு 85 ஆயிரம் செலவாகும் என்றார்கள் அந்த ஆபத்தான நேரத்தில் யோசிப்பதற்கு யாருக்கு தோன்றும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யுமாறு சொல்லி கடன் உடன் பட்டு பணத்தை கட்டி விட்டார்கள்.

 பிறகு அந்த நோயாளியின் மருத்துவ அறிக்கைகளை பாண்டிச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காட்டி இதற்கு எவ்வளவு செலவாகும் என்று விசாரித்தப் போது 35 ஆயிரம் இருந்தால் முடித்து விடலாம் என்றார்கள் நாகர்கோவிலுக்கும் பாண்டிச்சேரிக்கும் தொலைவு சற்று அதிகம் தான் அதற்காக மருத்துவ கட்டணத்தில் கூடவா இவ்வளவு அதிகம் தொலைவு இருக்கும்.

இது உதாரனத்திற்கு நான் சுட்டிக் காட்டிய சிறிய சம்வம் இதை விட கசப்பான கொடுமையான சந்தர்ப்பங்கள் பலவற்றை தினசரி மக்கள் அனுபவித்து வருகிறார்கள் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்று டாக்டரிடம் எடுத்து போனால் குறைந்த பச்சம் ஐநூறு ரூபாயாவது தேவை படுகிறது சாதாரண காய்ச்சலுக்கே ஒரு நாளையில் இத்தனை ரூபாய் செலவு என்றால் சாதாரண ஏழை ஜனங்களால் அதை எப்படி சமாளிக்க முடியும்..??

 இன்றும் நம் நாட்டில் ஒரு வேளை சோற்றுக்கு கூட வழி இல்லாத மக்கள் பல லட்சம் பேர் இருக்கிறார்கள் இவர்களால் அபாய நேரத்தில் மருத்துவ மனை வாசலை கூட மிதிக்க முடியாத நிலை தான் இந்த நிமிடம் வரை இருக்கிறது.

எழைகளுக்காகத்தான் அரசு மருத்துவ மனைகள் இருக்கின்றனவே அங்கே சென்று இலவச சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம் அல்லவா என்று சிலர் சிந்திப்பது நியாயம் தான் ஆனால் அரசாங்க மருத்துவமனைகளின் உண்மையான நிலையை நேரில் சென்று பார்க்கும் போது ஆரோக்கியமான மனிதர்களே தலை சுற்றி விழுந்து விடுவார்கள் நாய் கடிக்கு ஊசி போட வேண்டும் என்றால் கூட செவிலியர்களுக்கு தனியாக பணம் கொடுத்தால் தான் நடக்கும் இல்லை என்றால் மருந்தே குளிர் சாதன பெட்டியில் உறங்கி கொண்டிருந்தாலும் இல்லை என்று இறக்கமே இல்லாமல் சொல்லிவிடுவார்கள் நடந்து நடந்து நாய் போல குறைத்து சாக வேண்டியது தான் ஏழைகளின் தலை எழுத்தாக இருக்கிறது.

 அரசாங்க மருத்துவ மனைகள் சவக்கிடங்குகளாக காட்சியளிக்கும் இந்த நாட்டில் பல தனியார் மருத்துவமனைகள் நட்சத்திர ஓட்டல்களாக மின்னுகிறது ஒரு கண் அறுவை சிகிச்சைக்கு ஒரு தனியார் மருத்துவமனை விலை பட்டியலை தருகிறது பத்தாயிரம் ரூபாய்,அறுபதாயிரம் ரூபாய்,ஒன்னேகால் லட்ச்ச ரூபாய் என்பது அந்த பட்டியலில் உள்ள விலை விபரம் இது மூன்று விதமான நோய்களுக்கான சிகிச்சை கட்டணமாக இருக்குமென்று யாரவது நினைத்தால் அவர்கள் முழுமையான அப்பாவிகள்...!

ஒரே நோய்க்கு தரும் மூன்று விதமான கட்டண விபரம் தான் இது அப்படி என்றால் பணத்தை பொறுத்து தான் எங்கள் சிகிச்சையின் தரம் இருக்கும் என்பது தானே பொருளாகும் உயிரை பார்த்து செய்ய வேண்டிய மருத்துவம் பணத்தை பார்த்து செய்தால் அதில் மனிதாபிமானம் என்பது எங்கே இருக்கும்.

ஆகவே அடித்தட்டு மக்களும் நடுத்தர மக்களும் நோய் வந்தால் ஒன்று சகித்துக் கொண்டு வாழ வேண்டும் அல்லது வேறு வழியே இல்லை சாக வேண்டும் இது தான் நமது நாட்டின் ஆரோக்கிய வாழ்வின் எதார்த்த நிலை ஆங்கில வைத்தியம் என்று இல்லை மாற்று மருத்துவ முறைகளான அனைத்துமே பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது என்று சொன்னால் அதிலும் தவறு இல்லை

மருத்துவர்கள் வாங்கும் கட்டணம் ஒரு புறம் என்றால் மருந்துகளின் விலை ஏற்றம் இன்னொரு புறம் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெறும் ஒன்பது ரூபாய்க்கு விற்ற metrogyl Gel என்ற மருந்து இன்று முப்பது ரூபாய் எதற்க்காக அதன் விலை இத்தனை மடங்கு உயர்ந்துள்ளது என்று யாரும் கேட்க முடியாது.

 கேட்டாலும் இந்த ஜனநாயக நாட்டில் பதில் கிடைக்காது விலை ஏற்றம் செய்யும் அளவிற்கு அதன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அந்த மருந்து கம்பெனி சொல்லுமே ஆனால் இது வரை தரமற்ற மருந்தை எதற்காக விற்றீர்கள் என்று நான் கேட்டால் அது ஜனாயக விரோதமாகி விடும் இது தான் நம் நாட்டின் இன்றைய நிலை

இந்த நிலையில் தான் நமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்கள் மருந்துகளின் விலை குறைய வேண்டும் என்று பேசியிருக்கிறார்கள் அவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியது ஒன்று தான் அம்மா நீங்கள் வேண்டுகோள்விடும் நிலையில் இல்லை கட்டளை இடும் நிலையில் உள்ளிர்கள்...

 ஒரு மருந்தின் உற்பத்தி செலவு போக லாபமாக இத்தனை சதவிகிதம் வைத்து விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென்று கட்டளை இடுங்கள் கோடான கோடி இந்தியர்கள் குலதெய்வமாக உங்களை கையெடுத்து வணக்குவார்கள் ஆனால் என்ன செய்வது நான் வெறும் அலங்கார பொம்மை தானே என்று சொல்விர்கள் நிஜம் தான் அலங்கார பொம்மைகள் அவசியத்திற்கு உதாவாது என்று எங்களுக்கும் தெரியும் இருந்தாலும் ஒரு நப்பாசை சொல்லி தான் பார்ப்போமே என்று...

நன்றி : உஜிலாதேவி.

இது ஒரு மீள்பதிவு.

31 comments:

  1. எழைகளுக்காகத்தான் அரசு மருத்துவ மனைகள் இருக்கின்றனவே அங்கே சென்று இலவச சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம் அல்லவா என்று சிலர் சிந்திப்பது நியாயம் தான் ஆனால் அரசாங்க மருத்துவமனைகளின் உண்மையான நிலையை நேரில் சென்று பார்க்கும் போது ஆரோக்கியமான மனிதர்களே தலை சுற்றி விழுந்து விடுவார்கள் நாய் கடிக்கு ஊசி போட வேண்டும் என்றால் கூட செவிலியர்களுக்கு தனியாக பணம் கொடுத்தால் தான் நடக்கும் இல்லை என்றால் மருந்தே குளிர் சாதன பெட்டியில் உறங்கி கொண்டிருந்தாலும் இல்லை என்று இறக்கமே இல்லாமல் சொல்லிவிடுவார்கள் நடந்து நடந்து நாய் போல குறைத்து சாக வேண்டியது தான் ஏழைகளின் தலை எழுத்தாக இருக்கிறது.

    இந்நிலை மாறுமா?..மாற வேண்டும்.

    ReplyDelete
  2. ஜனநாயகமா? அப்படின்னா...பணநாயகம் மக்கா பணநாயகம்.

    ReplyDelete
  3. ///அரசாங்க மருத்துவ மனைகள் சவக்கிடங்குகளாக காட்சியளிக்கும் இந்த நாட்டில் பல தனியார் மருத்துவமனைகள் நட்சத்திர ஓட்டல்களாக மின்னுகிறது ஒரு கண் அறுவை சிகிச்சைக்கு ஒரு தனியார் மருத்துவமனை விலை பட்டியலை தருகிறது பத்தாயிரம் ரூபாய்,அறுபதாயிரம் ரூபாய்,ஒன்னேகால் லட்ச்ச ரூபாய் என்பது அந்த பட்டியலில் உள்ள விலை விபரம் இது மூன்று விதமான நோய்களுக்கான சிகிச்சை கட்டணமாக இருக்குமென்று யாரவது நினைத்தால் அவர்கள் முழுமையான அப்பாவிகள்...!///

    உண்மைதான்...நாஞ்சிலாரே.. பதிவில் பல உண்மைகளை 'பட் பட்'ன்னு போட்டு உடைச்சிருக்கீங்க...!! பாராட்டுகள்..!!!

    ReplyDelete
  4. இங்கே அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரம் இல்லை...!

    ReplyDelete
  5. டாக்டர்களும் சமூகத்தின் ஒரு பகுதியே, சமூகத்தையே அவர்களும் பிரதிபலிக்கிறார்கள், மொத்த சமூகமும் பணவெறி,திருட்டு, ஏமாற்று, பேராசை, குறுக்கு வழி என்று செல்லும் போது மருத்துவர்கள் மட்டும் இன்னும் அப்படியே இருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பது?

    மருத்துவ சேவை மட்டுமல்ல, இன்று எந்த ஒரு சேவையுமே கொஞ்சம் அசந்தால் ஏமாற்றிவிடுவார்கள் என்ற நிலைதான் உள்ளது. மாற வேண்டியது மொத்த சமூகமுமே, மருத்துவர்கள் மட்டும் அல்ல!

    ReplyDelete
  6. நண்பரே நீங்கள் சொல்வதனைத்தும் நிதர்சனம். என் நண்பரின் தந்தை ஒருவரை பத்துநாள் படுக்கையில் வைத்து, (கடைசி மூன்று நாள் யாரையும் பார்ர்க விடவில்லை) பிறகு பிணமாகத்தான் அனுப்பி வைத்தார்கள். மொத்த செலவு 5 லட்சம். அதை செலுத்திய பின்னரே உடலை எடுக்க விட்டனர். இதை பிறர் சொல்லும்போது ஒன்றும் தெரிவதில்லை. நமக்கு நடக்கும்போதுதான் தெரிகிறது.

    ReplyDelete
  7. இதற்க்கெல்லாம் ஒரே உண்மையான தீர்வு தமிழர்களின் கலைகளான சித்த மருத்துவத்தை நடைமுறை படுத்துவதுதான் . இந்த மருந்துகள் மனிதனை பாழ்படுத்துவதில்லை கொள்ளை இலாபம் ஈட்டுவதில்லை நாட்டிற்கு நல்லது சுற்று சூழலை காக்கும் நாம் வளம் பெறுவோம் வாழ்க வளமுடன் ....

    ReplyDelete
  8. டக்டருக்கு படிக்கவே இத்தனை லட்சமுன்னு வரும் போது அவங்க போட்டதை ,விட்டதை பிடிக்கவே செய்வாங்க ...இதுல சேவை அது இதுன்னு சொல்லி நாமதான் குழப்பிக்க கூடாது :-))

    ReplyDelete
  9. அரசு மருத்துவமனை டக்டர்களுக்கு நல்ல சம்பளம் தரனும் , அதே நேரம் அவங்களை தனியா கிளினிக் திறக்க விடக்கூடாது ..

    இது படி செய்தா... நல்ல தரமான சிகிச்சையை நாமளும் எதிர்பார்க்கலாம் :-))

    ReplyDelete
  10. நிதர்சனங்களின் பதிவு நண்பரே... மருத்துவம் சேவையாக இருக்க வேண்டுமே அன்றி பணம் பறிக்கும் பிஸினஸாக ஒருநாளும் இருத்தல் கூடாது. பிரபல தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் மருத்துவத்தை சேவையாக நடத்தும் மருத்துவர்களைக் கண்டறிந்து பயன்பெற வேண்டியுள்ளது. என்று இந்நிலை மாறுமோ என்று பார்த்தால் வெறுமைதான்.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. ஒரு மருத்துவன் என்பதால் மட்டும் நான் இந்த பதிவினை எழுதவில்லை....
    எழுதக்கூடாத பதிவு....
    வாசிக்க வாருங்கள் என்று அழைப்பதால் இது என் வலையின் விளம்பரத்திற்கான இணைப்பு அல்ல..இந்த ஒரு கருத்து நண்பர்கள் பலருக்கு கட்டாயம் போய் சேரவேண்டும் என்ற நோக்கத்தின் வழியே இது..

    ReplyDelete
  13. என் கருத்தினை கிட்டத்தட்ட பிரதிபலிக்கும் பன்னிகுட்டி அண்ணனுக்கு நன்றி..

    ReplyDelete
  14. மீள் பதிவுதான் ஆயினும் அனைவரும் மறுமுறை
    அவசியம் படித்துத் தெளிய வேண்டிய
    அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  15. //டாக்டர்களும் சமூகத்தின் ஒரு பகுதியே, சமூகத்தையே அவர்களும் பிரதிபலிக்கிறார்கள், மொத்த சமூகமும் பணவெறி,திருட்டு, ஏமாற்று, பேராசை, குறுக்கு வழி என்று செல்லும் போது மருத்துவர்கள் மட்டும் இன்னும் அப்படியே இருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பது?

    மருத்துவ சேவை மட்டுமல்ல, இன்று எந்த ஒரு சேவையுமே கொஞ்சம் அசந்தால் ஏமாற்றிவிடுவார்கள் என்ற நிலைதான் உள்ளது. மாற வேண்டியது மொத்த சமூகமுமே, மருத்துவர்கள் மட்டும் அல்ல!//

    ஆம் சமுதாயமும் மாறவேண்டும்....பணம் அதிகம் வாங்கினால் நல்ல மருத்துவம் என்று என்னுகிறார்கள்....பன்னிக்குட்டியண்ணனின் கருத்தே நானும்

    ReplyDelete
  16. மனிதம் மரத்த மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    ReplyDelete
  17. மனோ அண்ணா,
    மருத்துவர்களை பற்றிய உங்கள் பதிவில் எனக்கு சற்றும் உடன்பாடில்லை. நம் தேவைக்கு பெரிய பெரிய மருத்துவரை நாம் தேடி சென்று பர்த்து குண்மான பின் அவன் காசை புடுங்கிக்கிட்டான் நு சொல்வதில் என்ன நியாயம்? நம் வீட்டருகே இருக்கும் சிறிய அறையில் மருத்துவம் பார்க்கும் மருத்துவரை என்றாவது நாம் மதித்திருக்கிறோமா? அரசு ஆஸ்பத்திரியின் சீர்கேட்டை பற்றி வாய் கிழிய பேசும் நாம்தானே அதே அரசு ஆஸ்பத்திரியை அசுத்தம் செய்கிறோம். தனியார் ஆஸ்பத்திரியில் பேசுவாங்களேன்னு சுத்தமா வச்சுக்கும் நாம், அரசு ஆஸ்பத்திரிக்கு போனால் மட்டும் அந்த சுத்தத்தை கடைப்பிடிக்காததே காரணம்.

    ReplyDelete
  18. வணக்கம் அண்ணா,
    நல்லதோர் பதிவினைக் நீங்கள் படித்ததோடு நிறுத்தி விடாது எமக்காகவும் பகிர்ந்திருக்கிறீங்க.

    எல்லா மருத்துவர்களையும் நாம் இப்படிப் பிராடு செய்யும் ஒரு சிலரை அடிப்படையாக வைத்து எல்லா மருத்துவர்களையும் திட்டுவது தவறு என்பது என் கருத்து.

    ReplyDelete
  19. மேலே உள்ள என் பின்னூட்டத்தில் சிறிய எழுத்துப் பிழை உள்ளது.
    எல்லா மருத்துவர்களையும் தவறு சொல்ல முடியாது.
    இப்படிப் பிராடு செய்வோரும் இருக்கிறார்கள் தான்.

    ReplyDelete
  20. டாக்டரை பற்றி சொன்னா ராம்சாமிக்கு கோபம் வந்துடுதே அவர் இளைய டாக்டர் விஜய் விசிறியா?

    ReplyDelete
  21. ////சி.பி.செந்தில்குமார் said...
    டாக்டரை பற்றி சொன்னா ராம்சாமிக்கு கோபம் வந்துடுதே அவர் இளைய டாக்டர் விஜய் விசிறியா?////

    இல்ல அல்லக்கைய்யி.....

    ReplyDelete
  22. இரண்டு வித மனிதர்கள் எத்துறையில் இல்லை!அரசு மருத்துவ மனைகளின் அவல நிலையால் மக்கள் 5 நட்சத்திர மருத்துவ மனைகளைத்தான் நாட வேண்டியிருக்கிறது.சேவைக்கேற்ற செலவுதான்!

    ReplyDelete
  23. நல்ல மருத்துவர்களை தேட அதிக சிரமம் இருக்காது! ஆனால் அவரை சந்திக்க அதிக நேரம் அவருடைய வரவேற்பறையில் காத்துக் கொண்டிருக்க வேண்டும்!

    ReplyDelete
  24. உயிர்போகும் தருணத்தில் காசுபிடுன்குபவர்கள் எனத் தெரிந்தும்
    அவர்களை கடவுளாக மதிக்கிறோமே..
    அதன் மீதி நிழல் உங்கள் நெஞ்சில் இருக்க வேண்டும்.
    மனித நேயத்துடன் நடந்துகொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.....

    ReplyDelete
  25. மருத்துவம் பிழைப்பாகிப் போனது.
    வேறு என்ன சொல்வது.

    ReplyDelete
  26. டாக்டர்கள் மட்டுமின்றி கீழ்மட்டத்தில் இருந்து ஒவ்வொரு ஊழியர்களுக்கும் கட்டிங் வெட்டினால் தான் வேலை நடக்குது......

    ReplyDelete
  27. ஏங்க..அவனவன் மெடிக்கல் சீட்டு வாங்க லட்ச கணக்குல செலவு பண்றான்.அத எப்படி திருப்பி வாங்கறது..?ஏழைகளின் வயிற்றில் அடித்துதான் வாங்குகிறார்கள்.பின்ன அவன் எப்படி சேவை மனபான்மையுடன் மருத்துவம் பார்ப்பான்..?

    ReplyDelete
  28. Sir,Each family should have a M.B.B.S.Doctor as their Family Doctor.He will help in many ways.Don't go to spealists straight away.Don't enter corporate hospitals.99% of the small hospitals are very genuine.Analyse all aspects before blaming others.SANTHI.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!