Monday, December 17, 2012

நன்றி மறப்பது நன்றன்று, ஒரு குமுறல் ரிப்போர்ட்...!

வாழ்க்கையில் பல விஷயங்களை நாம் கண்டுகொள்வதில்லையா, இல்லை நமக்கென்ன நம்ம வேலை முடிஞ்சுதா போயிகிட்டே இருப்போம் என்ற மனநிலையா என்னவென்று புரியவில்லை எனக்கு, சில விஷயங்களை சொல்கிறேன் சரியா தப்பான்னு நீங்களே சொல்லுங்கப் பார்ப்போம்...?
விமானத்தில் பயணம் செய்த நாம், பத்திரமாக தரை இறங்கியபின், விமானத்தை விட்டு இறங்கும்போது அந்த விமான ஒட்டிக்கோ அல்லது விமான பணிப்பெண்ணுக்கோ நன்றி சொன்னதுண்டா...? அவர்கள் முகங்கள் நமக்கு நியாபகம் இருப்பதுண்டா...?
தொலைதூர ரயில்களில் பயணம் செய்யும்போது, அந்த ரயிலில் எத்தனை ரயில் ஓட்டுனர்கள் இருந்தார்கள், எத்தனை பேர்கள் மாறி வந்து ரயிலை இயக்கினார்கள், பத்திரமாக ஊர் வந்து இறங்கியபின் அவர்களுக்கு நன்றி சொன்னதுண்டா [[மனதிலாவது]] அவர்கள் முகங்கள் நியாபகம் இருப்பதுண்டா...?
டவுன் பஸ்ஸாக இருக்கட்டும், தொலைதூர பேருந்தாக இருக்கட்டும், மாட்டுவண்டியைவிட கேவலமாக ஓட்டுறானே பேசாம நடந்து போயிறலாமோ என்று கிண்டல் பேசும் நாம், பத்திரமாக ஊரில்போயி இறங்கும்போது அந்த ஓட்டுனருக்கு நன்றி சொன்னதுண்டா...? அவர் முகம் நமக்கு நியாபகம் இருப்பதுண்டா...?

ஆட்டோக்காரனை திட்டிக்கொண்டே ஊர்வலம் போகும் நாம், டிப்பர் லாரிக்கும், தண்ணி லாரிக்கும் நம்மை தப்புவித்து கொண்டு சேர்த்தமைக்கு, அவனுக்கு நாம் நன்றி சொன்னதுண்டா...? அவன் முகம் நியாபகம் உண்டா...?
அறுவடை நாட்களில் அதிகாலையில் உறக்கம் களைந்து வந்து, உங்கள் வயல்களை அறுத்து உங்கள் களஞ்சியங்களில் சேர்த்த உழைப்பாளிகளுக்கு நாம் நன்றி சொன்னதுண்டா...? அவர்கள் ஏழைமுகம் நம் நியாபகத்தில் இருப்பதுண்டா...?
பசியாக ஹோட்டலில் சாப்பிடப்போனால், அவன் பசியையும் பார்க்காது நமக்கு அன்பாக உணவு பரிமாறிய சர்வருக்கு நாம் நன்றி சொன்னதுண்டா..? அவன் முகம் நமக்கு நினைவிருப்பதுண்டா...? அங்கே அதே சமையலை சமைத்து தந்தவரின் முகங்களை நாம் பார்த்ததுண்டா...? அந்த ஏழைப்பட்ட மனிதனுக்கு நாம் நன்றிகள் சொன்னதுண்டா...?
நாற்றத்தைப் பொருட்படுத்தாது, ஒரு குவாட்டரை உள்ளே தள்ளிவிட்டு, நம் வீட்டு கழிவறைகளை சுத்தம் செய்பவனுக்கு நாம் நன்றி சொன்னதுண்டா...? பேரூந்து நிலையங்களின் கழிவறை குறைகளை சொல்லும் நாம், அங்கே கழுவி சுத்தம் செய்பவருக்கு நன்றி சொன்னதுண்டா...? அவர்கள் ஏழைமுகம் நமக்கு நினைவிலுண்டா...?

கண்ணில்லாமலும், காலில்லாமலும் தன வயிற்றை கழுவ, ஊனமுற்றோர்கள் நடத்தும் டெலிபோன் பூத்களில் போன் செய்யும் நாம் அவர்களுக்கு நன்றிகள் சொன்னதுண்டா...? அவர்கள் ஊனமுகம் நமக்கு நினைவிலிருப்பதுண்டா...?

அதிகாலையில் நம் வீடுகளில் இட்டுப்போகும் நியூஸ் பேப்பர் பையனுக்கு நன்றி சொன்னதுண்டா, அவன் கஷ்டனிலைகளை நாம் அறிந்ததுண்டா...?
ரயில் பிரயாணங்களில் [[தூர]] நம்மோடு ராணுவ உடையில் சேர்ந்துவரும் நாட்டின் எல்லைகாக்கும் வீரர்களின் கரம்பற்றி நாம் நன்றிகள் சொன்னதுண்டா...? அவர்கள் அமர இருக்கைகள் கொடுத்ததுண்டா...? அவர்களை தனிமைப் படுத்தாமல் அவர்களோடு அளவளாவியதுண்டா..? அவர்கள் குழி விழுந்த கன்னங்கள் நினைவிருப்பதுண்டா...?

பணம் கொடுத்தாச்சு, வேலை முடிஞ்சிருச்சு, இதே இப்போதைய மனிதனின் சுயநலமாக போய்விட்டதின் அர்த்தம் என்ன...? அன்பு.... பாசம்.... நேசம்.... அறம்... மனிதநேயம்...உதவிக்கரம்...பண்பு..பொறுமை...நன்றி மறவாமை இதெல்லாம் எங்கேய்யா போச்சு இந்த உலகத்துல....? இந்த எழவுக்காவது உலகம் அழிஞ்சிபோகட்டும் என்றே தோன்றுகிறது...!

என் மனதில் தோன்றிய வேதனைகளை உங்களோடு பகிர்ந்துகொண்டேனே தவிர யாரையும் புண்படுத்த அல்ல, மன்னிக்கவும்...! 

25 comments:

  1. நல்ல பகிர்வு....பார்த்திபன் அஜித் நடித்த படம்....அதில் பார்த்திபன் பஸ் டிரைவருக்கு நன்றி சொல்லிவிட்டு இறங்குவார்.அதை பார்த்தமுதல் இன்று வரை தொலைதூர பஸ்களில் பயணம் செல்லும்போது நன்றி சொல்லி இருக்கிரேன்.இப்போ பெரும்பாலும் நானே கார் எடுத்து கிளம்பி விடுவதால் வாய்ப்புகள் அமையவில்லை...

    ReplyDelete
  2. sako....

    nalla ketteenga....

    ini naan muyarchikkuren.......


    mikka nantri!

    ReplyDelete
  3. ஞாயமான கேள்விதேன்...பதில் ரெம்ப சிம்பிள்ணே...இயந்திர உலகம்!

    ReplyDelete
  4. அட ஆமா நான் எப்பவுமே இல்லை கேட்டதில்லை சார்... இனி முயன்று பார்கிறேன்...

    ReplyDelete
  5. நாம் இந்தியாவில் இருக்கும் வரை நமக்கு உதவிய நண்பர்களுக்கு மட்டுமே சொல்லுவோம் ஆனால் வெளிநாட்டுக்கு வந்த பின் அவர்களிடம் இருந்து முதலில் கற்றுக் கொள்ளும் பழக்கம் எல்லோருக்கும் நன்றி சொல்வதுதான் அதனால் நான் எல்லோருக்கும் நன்றி சொல்லிவருகிறேன்

    அன்பு.... பாசம்.... நேசம்.... அறம்... மனிதநேயம்...உதவிக்கரம்...பண்பு..பொறுமை...நன்றி மறவாமை இதெல்லாம் இன்னும் இருக்கிறது நாம் சாதாரண மக்களாக இருக்கும் வரை ஆனால் இதெல்லாம் தலைவராகிய பின் காணாமல் போகிவிடும் நண்பரே

    ReplyDelete
  6. சுய உலகம் - சுயநலம்

    சிந்திக்க வேண்டிய பதிவு பகிர்வுக்கு நன்றி மக்கா

    ReplyDelete
  7. நல்ல நறுக் பதிவு.

    'குப்புஸ்' செய்யுற போட்டோ பஹரைன் ஐ ஞாபகபடுத்துகிறது.

    ReplyDelete
  8. நல்ல பதிவு.....பகிர்வுக்கு மிக்க நன்றி......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  9. விமானத்தில் பயணம் செய்த நாம், பத்திரமாக தரை இறங்கியபின், விமானத்தை விட்டு இறங்கும்போது அந்த விமான ஒட்டிக்கோ அல்லது விமான பணிப்பெண்ணுக்கோ நன்றி சொன்னதுண்டா.?// அண்ணே ஏர் இண்டியா படத்தை போட்டுட்டு இந்த கேள்வி வேறயா???, எறங்கி வரும் போது எங்கே இவங்க யாரும் நம்மகிட்ட கடன் கேட்டுருவாங்கன்னு பயந்த மாதிரி மூஞ்சை திருப்பிகிட்டு அந்த அம்மாக்கள் நன்றி சொல்வதை நீங்க மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்...இங்கு குறிப்பிட்டுள்ளதில் நிறைய பேருக்கு சொல்வதுண்டு.... கட்டாயம் சொல்ல வேண்டியது கடைசியில் உள்ள நல்ல உள்ளங்களுக்கு..யோசிக்க வைத்த பதிவு. நன்று....

    ReplyDelete
  10. நல்ல கருத்துக்கள் ...

    அதற்காக முதலில் உங்களுக்கு நன்றி ..

    ReplyDelete
  11. ரொம்ப அன்பான மனசு கொண்டவர் நமது பங்காளி ! அருமை அன்பரே!

    ReplyDelete
  12. சரி . கஷ்டபட்டு படிச்சு கமென்ட் போடுற எங்களுக்கு நன்றி சொல்லாதது ஏன் ?

    ReplyDelete
  13. இன்டலி இணைத்துவிட்டேன்

    ReplyDelete
  14. அருமையான பதிவுங்க சகோ .

    இந்தியால இருக்கும் போதே ஆட்டோ ஒட்டுனருக்கேல்லாம் அண்ணா நன்றின்னு சொல்லித்தான் இறங்குவேன் .
    ரெயில் ஓட்டுனர் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கலை ,
    சர்வருக்கும் நன்றி சொல்லியிருக்கேன் ..
    இன்னும் பலர் உங்க லிஸ்டில் இருப்பவர்கள் நான் மிஸ் செய்திருக்கேன் (

    ஆனா உண்மைதான் மனோ ..நீங்க நன்றி அல்லது தான்க்ச்னு சொன்னதும் அவங்க முகத்தில் ஒரு வெளிச்சம் ஒரு சந்தோசம் கீற்றாய் அப்படியே தெரியும்
    யாரையாவது மறந்திருந்தால் இனி மறவாமல் அவங்களுக்கு நன்றி சொல்றேன் இனிமே ..

    ReplyDelete
  15. 21 ம் தேதி நெருங்க நெருங்க....மனோவுக்கு
    ஒரே பீலிங்.....

    போயா போய் மட்டையாகுற அளவுக்கு .....
    சரக்க போட்டுட்டு தூங்கு.....

    22ம்தேதி எழுந்திருக்கலாம்....

    ReplyDelete
  16. நான் இங்கு சவூதி வந்த பிறகு கற்று கொண்ட நல்ல பழக்கம் டவுன் பஸ்சிலும், டாக்ஸி யிலும் இறங்கிய வுடன் நன்றி சொல்வதுண்டு , விடுமுறையில் ஊர் போனாலும் ஆட்டோ டிரைவர்க்கு நன்றி சொல்வதுண்டு.,விமானத்தில் இறங்கும்போது ஏர் ஹோஸ்டஸ் ஏர் லங்காவில் ஆய் பூவன் என்பார்கள் நானும் அதையே திருப்பி சொல்வதுண்டு , இதுவரை அடி கிடைத்தலில்லை ,
    நன்றி சொல்வதில் ஒரு சந்தோசம் கிடைக்கிறது என்பது மறுப்பதற்கில்லை.

    ReplyDelete

  17. உண்மைதான் மனோ! உங்கள் பதிவைப் படித்தபின் என் மனமே உறுத்துகிறது, கடந்த கால செயல்களைஎண்ணிப் பார்த்தால்.....!?

    ReplyDelete
  18. அண்ணே... அட ஆமால்ல...

    நீங்க சொன்னதும்தான் ஞாபகம் வருது...
    உண்மைதான்... சொல்லனுமின்னு இனியாவது கண்டிப்பா தோணும்... தோணனும்.

    நான் பெரும்பாலும் எல்லாவற்றிற்கும் நன்றி சொல்வது உண்டு. பேருந்தில் எல்லாம் இல்லை....

    ReplyDelete
  19. நம்மைப்பற்றி சிந்திக்கின்றோம் தவிர நமக்கு உதவும் மற்றவர் பற்றி யார் சிந்திக்கின்றோம் அருமையான கேள்விகள்! அருமையான பதிவு அண்ணாச்சி!

    ReplyDelete

  20. "நான் பெரும்பாலும் எல்லாவற்றிற்கும் நன்றி சொல்வது உண்டு. பேருந்தில் எல்லாம் இல்லை...."

    இங்கு சவுதியில் டவுன் பஸ்ஸில் எங்கு கை காட்டினாலும் நிறுத்துவார்கள் , அவர் போகும் ரூட்டில் எங்கு நிறுத்தசொன்னாலும் நிறுத்தி இறக்குவார்கள் , மேலும் நம்மைப்போன்ற வெளி நாட்டவர்கள் தான் பயணம் செய்வார்கள் ,

    ReplyDelete
  21. பஹ்ரைன்ல பஸ் அந்தந்த பஸ்டாப்பில்தான் நிற்கும், ஏறு இறங்கு மட்டுமே, இடையில் நிற்காது அஜீம்...!

    ReplyDelete
  22. இங்கே (சவுதியில் )எல்லாம் முன்னா பாய் ஸ்டைல் தான் (பாசத்தில் சொல்கிறேன்) , நாம் வெளிநாட்டவர்கள் இடையிலே ஒரு இனம் தெரியாத பாசம், நட்பு நிலவுவது உண்டு . அந்த பாசம் நாடு மொழி ஒன்றும் அறியாதது.

    ReplyDelete
  23. நன்றியை நினைவுபடுத்திய மனோவின் ஆழமான பதிவுக்கு நன்றி மனோ.அருமையான பதிவு.சிலவேளைகளில் நாம் நம்மை மறந்து நன்றி கெட்ட மனிதராய் இருப்பதை உணர்த்தியுள்ளீர்கள் மனோ!கிரேட்லா.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!