Sunday, December 23, 2012

பெண்மையை அடுப்பங்கறையில் அடைத்துவிடாதீர்கள்...!


வெண்ணிலா என்று ஒரு தோழி[[பெயர் மாற்றப்பட்டுள்ளது]], கவிதைகள் புனைவதில் வல்லவர், சிரிப்புகள் கொளுத்தி போடுவதில் மொத்த மனசும் ரிலாக்ஸ் ஆகிவிடுமளவுக்கு சொந்தமாக ஜோக் எழுதிய அந்த சகோதரியை அவர்கள் வீட்டய்யா எழுத விடாமல் தடுத்ததை அடுத்து, அவர்கள் வேறு பெயர்களில் வந்தாலும் கண்டுபிடித்து தர்க்கங்கள் நடந்ததால்....இப்போது பிளாக், பேஸ்புக் வாசிப்பதோடு சரி, எழுத முடியாதபடி பண்ணி விட்டார்கள். 
அவர்கள் ஒருநாள் சாட்டில் வந்து அழுதுவிட்டு போனதோடு சரி, ஆளையே காணவில்லை, "எங்கிருந்தாலும் உங்கள் எழுத்துகளை வாசித்துக் கொண்டிருப்பேன்னு சொல்லிட்டு போனாங்க", அதுதான் கடைசி....!

அவங்களைப்போல நிறையபேர் இருக்காங்க, ஆபீசில் வேலை செய்யும்போது வாசிக்கலாம், ஆனால் எழுத முடியாது [[டைப்பிங் சத்தம்]] வீட்டிலோ நெட் கனெக்ஷன் கிடையாது, அவர்கள் என்னசெய்வார்கள்.?

உலகம் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு முதன்முதலாக இணைய உலகில் நாம் வரும்போது, எல்லாவற்றையும் தெரிந்துகொண்டா வந்தோம்...? நான் மூன்று வருடங்கள் இணையதளம் வாசித்தபின்பே நண்பர்கள் உதவியுடன் இணையத்தளத்தில் எழுத ஆரம்பித்தேன்.
மனம் திறந்து உண்மைகளை எழுதமுடியாதபடி மனதிற்குள் புழுங்கும் மனித[[ஷி]]ர்களுக்கு, நம்மை போன்றோர்களின் சுதந்திரமான எழுத்துக்களை பார்த்து, சற்றே ஆறுதல் அடைவார்கள் என்றே நினைக்கிறேன். 

காரணம், அவர்களின் மொத்த குடும்பங்களும் சமூக வலைத்தளங்களில் நிறைந்திருப்பார்கள், சின்னதாக ஒரு எழுத்து மாறிவிட்டாலும் குடும்பத்தில் பஞ்சாயத்தை கூட்டி விடுவார்கள், அம்புட்டு கெடுபிடிகள் உள்ளவர்களையும் நான் அறிவேன்.

நான் எழுதுவதை என் மொத்த குடும்பத்தினரும் கவனித்துக் கொண்டுதானிருக்கிறார்கள், சுதந்திரமானது மற்றவர்களின் சுதந்திரத்தை பரிக்காவண்ணம் நாம் இருப்பது மிகவும் முக்கியம்.
இன்றைக்கு உலகம் கைகளுக்குள் அல்ல, விரலிடுக்கில் வந்துவிட்டது,  இணையம் மூலமாக எல்லாவற்றிர்க்கும் தீர்வு சொல்கிறார்கள், மருத்துவமா, ஆன்மீகமா, தாம்பத்தியமா, விவாகரத்தா, ஏன் எதற்கு எப்படி என்று அனைத்துக்கும் தீர்வு இருக்கிறது சமூக வலைத்தளங்களில்....

பெண்கள், அவர்கள் மனைவியாக இருக்கட்டும் சகோதரிகளாக இருக்கட்டும், எழுத வாசிக்க அனுமதியுங்கள் அவர்கள் சுதந்திரத்தின் எல்லைகளை அவர்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள் என்பதை நாம் உணர்வதாயின் பிரசினைகளே இல்லை என்பதே உண்மை...
ஆக்டிவேட்டாக இல்லை என்பதற்காக, உங்களை தொல்லைகள் செய்யாமல் இருப்பவர்களை பதிவுலகத்திலோ, பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களிலோ  பிளாக் செய்து முடக்கி விடாதீர்கள், தொல்லைகள் செய்பவர்களை உடனே பிளாக் செய்யுங்கள் அதில் நியாயமுண்டு...!

நான் எப்போவோ எங்கேயோ படித்த ஒரு கதையுண்டு...

புது மணத்தம்பதிகள் சந்தோஷமாக தேன்நிலவு முடித்துவிட்டு பஸ்சில் ஊர் திரும்புகிறார்கள், பஸ்சில் தன்னோடு பிரயாணம் செய்த ஒரு குழந்தையோடு அந்தப்பெண் கொஞ்சி குலாவியபடி வருகிறாள்...

இவர்கள் ஊர் வந்ததும் பஸ்சில் இருந்து இருவரும் இறங்குகிறார்கள், கொஞ்சதூரமே போன பஸ்மீது மலையில் இருந்து உருண்டு வந்த பெரியகல் விழுகிறது, பஸ்சில் பயணித்த யாவருமே இறந்து போகிறார்கள்...
கணவன் சொல்கிறான் "அப்பாடா நாம இங்கேயே இறங்கினபடியால் தப்பித்தோம்" என்று சந்தோஷமாக சொல்கிறான்.

ஆனால் அந்த பெண்ணின் கண்ணோட்டமோ வேறாக இருந்தது..."நாம இங்கே இறங்கினபடியால்தானே எல்லாரும் செத்துபோனாங்க, நாம இங்கே இறங்கலைன்னா ஐந்து நிமிஷத்தில் பஸ் அந்த இடத்தை தாண்டி போயிருக்குமே, எல்லாரும் நலமாக இருந்திருப்பார்களே..." என்று கதறி அழுகிறாள்...

அதுதான் பெண்மை, அவள்தான் பெண்...பெண்கள் நாட்டின் கண்கள் என்று குருடாக இருக்காமல், பெண்கள் நமது கண்கள் என்று போற்றுவோம்....

மனதின் தோன்றல்கள் தவறு இருப்பின் மன்னிக்க....

15 comments:

  1. ஆகா ! பெண்ணின் சிந்தனைதான்
    எத்தனை உயர்வாய் உள்ளது
    சொல்லிச் சென்ற கருத்தும் எனக்கு
    அதிக உடன்பாடானதே
    சொல்லிச் சென்ற விதமும் மிக மிக அருமை
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. போற்ற வேண்டிய, பின்றபற்ற வேண்டிய பெண்ணியச் சிந்தனைகள். வரவேற்போம்.

    ReplyDelete
  3. இதை ஒரு பெண் எழுதினால் அதற்கு மதிப்பில்லாமல் போயிருக்கும் மனோ.அவசியம் பெண்களை கொத்தடிமைகளாகவும் கேலிப்பொருளாகவும் நினைப்பவர்கள் படுக்கனும் ,சிந்திக்கனும்!சிந்தனை அருமை மனோ!

    ReplyDelete
  4. அருமையான பதிவு...

    ReplyDelete
  5. அணைத்தும் சத்தியமான வார்த்தைகள்.

    இங்கு ஒரே விஷயத்தை ஆண் ந்ழுதினால் ஒரு மாதிரியும் பெண் எழுதினால் வேறு மாதிரியும் பார்க்கும் மனநிலை உள்ளது. இது மாற வேன்டும்

    ReplyDelete
  6. சூப்பர் சார்

    ReplyDelete
  7. அருமையான பதிவுண்ணே..அதுவும் அந்த கடைசிக் கதை சான்ஸே இல்லை. ஏனோ பெண்கள் அளவிற்கு நம்மால் அன்பு காட்ட முடிவதில்லை.

    ReplyDelete
  8. நல்ல பதிவு மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன்.பெண்ணாதிக்கம் ஒரு நாள் நிச்சயம் வரும்

    ReplyDelete
  9. அருமையான கருத்துக்கள் .கதையில் வரும் பார்வைகள் எத்தனை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மாற்றங்கள்.

    ReplyDelete
  10. நிச்சயமாக உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் , எந்த பிரச்சினைக்கும் இவர்களிடம் சமுக பற்றுள்ள தீர்வு இருக்கும் , பெண்களை எழுதவதால்தான் அன்றாட வாழ்வில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை எல்லாரும் அறிய முடியும் .

    ReplyDelete
  11. அருமையா சொல்லியிருக்கீங்க...

    எத்தனையோ வெண்ணிலாக்கள் இன்னும் அமாவாசை இரவில்தான் இருக்கிறார்கள்...

    ReplyDelete
  12. நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி மக்கா

    ReplyDelete
  13. அதுதான் பெண்மை, அவள்தான் பெண்...பெண்கள் நாட்டின் கண்கள் என்று குருடாக இருக்காமல், பெண்கள் நமது கண்கள் என்று போற்றுவோம்....///இந்த வரிகளுக்காகவே இந்த பதிவுக்கு மகுடம் சூட்டனும் மனோ.அருமையான எண்ணம்!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!