Tuesday, April 23, 2013

வைதேகி காத்திருந்தாள் இப்போ நானும் காத்திருக்கிறேன்...!

டைரக்டரும், நடிகருமான ஆர் சுந்தர்ராஜன் பற்றி தெரியாதவர்கள் கிடையாது,  காமெடி ஆகட்டும் செண்டிமெண்ட் ஆகட்டும் எதிலும் ஈசியாக கலக்குகிறவர்.

என்பது தொன்னூறுகளில் சினிமாவின் ஒரு வசந்தகாலம் என்றே சொல்லலாம், சுந்தர்ராஜன் இயக்கி வெளிவந்தப் படங்கள் வெற்றியின் உச்சத்தை தொட்டுக்கொண்டிருந்தது.

நான் பாடும் பாடல் படம்தான் கவுண்டமணியின் காமெடி உச்சத்தை தொட்டது என்றே சொல்லலாம் "காட்டை வித்து கள்ளு குடிச்சாலும் கவுண்டன் கவுண்டந்தாண்டி" என சொல்லும் டயலாக் ஏக பிரபலமாக இருந்தது, படமும் கன்யாகுமரி மாவட்டத்தை சுற்றியே எடுக்கப்பட்டது.
வைதேகி காத்திருந்தாள்  படம் ஆரம்பத்தில் யாராலும் கவனிக்கப்படாமல் அப்புறமாகத்தான் பிக்கப் ஆகி வெற்றி அடைந்தது, அந்தப்படத்தை தரை ரேட்டுக்கு மாவட்ட வாரியாக வாங்கியவர்கள் மடியில் பணமோ பணமாக குவிந்தது...!

அம்மன் கோவில் கிழக்காலே படமும் பாடலும் காமெடியும் மிக அருமையாக இயக்கி இருப்பார் சுந்தர்ராஜன், எத்தனை முறைப் பார்த்தாலும் அலுக்காத படம் அது.
மெல்லத்திறந்தது கதவு படம் அவ்வளவாக இல்லாவிட்டாலும் பாடல்கள் மனதை இப்போதும் கொள்ளை கொண்ட வண்ணம் இருக்கிறது, அதில் இளைய ராஜாவும் எம் எஸ் விஸ்வநாதனும் இணைந்து பணியாற்றினார்கள்,பயணங்கள் முடிவதில்லை பற்றி சொல்லவே வேண்டாம்...!

திருமதி பழனிச்சாமி, இந்தப்படம் வெறும் காமெடி படம்னு நினைக்கும் முன்பே திடீர் திருப்பமாக மாறி, குலைநடுங்க வைத்தது பாதியில் வரும் வில்லன் கேரக்டர்.
இளையராஜாவும் சுந்தர்ராஜனும் இணைந்தால் அந்தப்படம் ஹிட் மட்டுமல்லாது பாடல்கள் தாளம்போட வைக்கும் என்பதற்கு முழு கியாரண்டி உண்டு.

வைதேகி காத்திருந்தாள் படத்தில் "அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட..." பாடல் கண்ணில் கண்ணீரை வரவைக்கும் அளவுக்கு சிறப்பாக எடுத்திருந்தார். டைரக்டராக கோலோச்சியவர் திடீரென நடிப்பு பக்கம் வந்துவிட்டார், என்னய்யா ஆச்சுன்னு கேட்பவர்களுக்கு அவர் கூறிய பதில் "நடிப்புதான்ய்யா ரொம்ப ஈசியாக இருக்கு, பணமும் கிடைக்குது, டைரக்ஷன்னாலே ஒரே டென்ஷன் மயம் அதான் வேண்டாம்னு விட்டுட்டேன்"ன்னு சொன்னார்.
நிறைய படங்களில் நடித்தும் மக்கள் ஆதரவைப் பெற்றார். இவர் நடிகராக வெளியே வந்த பின்புதான் மக்களும் இவரை அடையாளம் கண்டு கொண்டார்கள்.

இடையில் என்னாச்சோ தெரியவில்லை, ஆளையேக் காணோம், ஒரு அருமையான கலைஞனை இம்புட்டு சீக்கிரமாக மறந்து விட்டார்களே என்று சில சமயம் நான் யோசிப்பது உண்டு, இப்போது ஒரு படம் டைரக்ட் பண்ணிக் கொண்டு இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருப்பது சற்றே ஆறுதலாக இருக்கிறது...!

இதே போல இன்னொரு கலைஞனையும் நம்மாளுங்க கண்டுக்காமல் இருக்காங்க அது......... நம்ம பாக்கியராஜ், காலத்தை பிரயோசனப் படுத்திக்கோங்க திரைக் கலைஞர்களே....
சிவாஜி கணேசனை கடைசிக் காலத்தில் யாருமே கண்டுக்கவில்லை, இந்த நஷ்டம் அவர்களுக்கல்ல, நமக்குதான் நஷ்டம்...!
அய்யய்யோ ஆபீசர் நான் இல்ல நான் இல்ல....

27 comments:

 1. "உன்னை நினைத்து" ஆர் சுந்தர்ராஜன் ஆர்ப்பாட்டமில்லாத காமெடி இன்னும் மனதில் சிரித்துக் கொண்டே இருக்கிறது...

  அடுத்த காட்சி என்னவென்று சரியாக யூகிக்க முடியாதவாறு திரைக்கதை அமைப்பதில் நம்ம பாக்கியராஜ் கில்லாடி...

  இரு சிறந்த திரைக்கலைஞர்களும் வர வேண்டும்...

  இருவரின் படங்களிலும் பாடல்கள்...? சொல்லவா வேண்டும்...!!!

  ReplyDelete
  Replies
  1. தயாரிப்பாளர்கள் மனம் வைத்தால் நல்லது இல்லையா?

   Delete
 2. ///வைதேகி காத்திருந்தாள் இப்போ நானும் காத்திருக்கிறேன்...//

  நாங்களும் காத்திருக்கிறோம்.........சுகன்யா இன்னும் அழகாக இருக்கிறார்களே பழைய போட்டோவா அல்லது புதுப் போட்டோவா

  ReplyDelete
 3. கூகுள்ள கிடைத்தது நண்பா....

  ஆமா உங்க பிளாக் ஏன் எனக்கு ஒப்பன் ஆகமாட்டேங்குது?

  ReplyDelete
 4. காலம் எத்தனையோ சாதனையாளர்களை சீக்கிரமே மறக்க செய்துவிடுகிறது.
  மறு பிரவேசங்களில் சொல்லக்கூடிய அளவுக்கு எத்தகைய சாதனையாளர்களும் வெற்றியை ஈட்டியதில்லை என்று நினைக்கிறேன். தலைமுறை இடைவெளிதான் அதற்கு காரணமாக இருக்கக் கூடும் சுந்தரராஜன் அதைமுறியடிக்கிறாரா பார்க்கலாம்

  ReplyDelete
  Replies
  1. முறியடித்து விடுவார் என்றே நினைக்கிறேன், காரணம் கூடுதல் இடைவெளி எடுத்ததால் சிறப்பாக படம் எடுத்து இருப்பார் என்றே நினைக்கிறேன் நண்பா...

   Delete
 5. வைதேகி காத்திருந்தாள் சுந்தர்ராஜன் சார் படமா? படம் முழுசா பார்த்ததில்ல, ஆனா பாட்டு ரொம்ப புடிக்கும், என் அத்தைக்கு புடிச்ச படம்..

  ReplyDelete
  Replies
  1. பாட்டும் அருமை படமும் அருமை...

   Delete
 6. ஆர் சுந்தராஜனின் வெற்றிப் படங்கள் குறித்து இன்று தான் அறிந்து கொண்டேன்... அவர் இயக்கிய அத்தனை படங்களிலும் பாடல்கள் மிக அருமை தான்...

  நேற்று ஒரு செய்தி படித்தேன், இளையராஜா இல்லாமல் ஒருபடம் கூட இயக்க மாட்டேன் என்று... ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை... உங்களுக்கு தெரியுமா ஆபீசர் ...

  ReplyDelete
  Replies
  1. அவங்க ரெண்டு பேரின் அலைவரிசை ஒன்றாக இருப்பதால் அப்படி சொல்லி இருப்பார்னு நினைக்கிறேன்.

   Delete
 7. சூப்பர் தல இவங்கள ரெண்டு பெரும் தமிழ் சினிமால மறக்க கூடிய ஆட்களா? இவங்க படங்களை எல்லாம் பார்த்துகிட்டே இருக்கலாம் ஆர்.சுந்தர்ராஜன் மறக்க கூடிய ஆள ஏன்னா காமெடி சென்ஸ் மனுஷனுக்கு பிச்சு எடுபாறு அவர் குரலே சூப்பரா இருக்கும் பாக்யராஜ் இன்னமும் இவர அடிச்சுக்க ஆளு இல்ல

  ReplyDelete
  Replies
  1. செம நகைச்சுவை உணர்வு உள்ளவர் இல்லையா...

   பாக்கியராஜ்......அந்த வெங்கலக் குரல்....!

   Delete
 8. நல்ல கலை ஆர்வம் மிக்க இயக்குனர்.வரவேற்போம்!

  ReplyDelete
  Replies
  1. சத்தியமான வார்த்தை இது...!

   Delete
 9. ஆர்.சுந்தரராஜன் இத்தனை ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார் என்பதை இப்பத்தின் வாயிலாகத்தான் தெரிந்துகொண்டேன் ...கிரேட் மேன் !

  ReplyDelete
 10. அத்தனை சுந்தராஜன் படங்களையும் நெல்லையில் கூட்டம் கூட்டமாக பார்த்தது நினைவிற்கு வருகிறது.படம் ஓடு ஓடுன்று ஓடும்.

  ReplyDelete
 11. வைதேகி காத்திருந்தாள் !!!!பாடல்கள் ..இன்னும் காதில் தேனாய் ஒலிக்கிறதே .
  இரண்டு இயக்குனர்களும் மிக நல்ல படங்களை தந்திருக்காங்க இவர்களின் படங்களில் பாடல் இசை கதை நகைசுவை எல்லாமே அருமையாக இருக்கும்

  ReplyDelete
 12. அருமையான படங்கள் தந்தவர் ஆர்.சுந்தர்ராஜன் என் ஜீவன் பாடுது படமும் அவர் இயக்கியதாக ஞாபகம் அதில் முதல்க்காட்சியிலே கமடி சீன் வரும் பிள்ளையாரை வைத்தே கமடி செய்த காட்சி இன்னும் நீங்காத நினைவுகள் அருமையான பல படம் பட்டியல் இடலாம் சாமி போட்ட முடிச்சு கொஞ்சம் அவரை கஸ்ரப்படுத்திவிட்டதாக ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார் சூரிய வம்சம் மிலிட்டரி வேசம் நினைக்கும் போதெல்லாம் சிரிப்பு வெடிதான்!
  செந்தூரம் படத்தில் ஒரு பாடல் ராஜாவோடு சேர்ந்து பாடி இருந்தார் அவர் குரலில் திருமதி பழனிச்சாமி படத்தில் அம்மன்கோவில் வாசலிலே பாட்டும் என் பேவரிட் இளையராஜா +சுந்தர்ராஜன் கூட்டனி என்றால் நம்பி ஒலிநாடா வாங்களாம் என்ற காலம் இன்னும் மறக்க முடியாது மீண்டும் அவர் நல்ல படைப்பைத் தரவேண்டுவோம்!

  ReplyDelete
 13. பாக்யராஜ் ஒரு ஓல்ரவுண்டர் சினிமா உலகில் நல்ல கதையமைப்பு அவர் சிறப்பு!

  ReplyDelete
 14. சுகன்யா என்றால் கண்ணப்பன் ஞாபகம் வரும் இனி மனோ ஞாபகம் வரப்போகுது:))))

  ReplyDelete
 15. இனிய வணக்கம் மக்களே...
  நலமா?/
  அருமையான ஒரு இயக்குனர் பற்றிய
  அற்புதமான அலசல்...

  ReplyDelete
 16. அருமையான பகிர்வு அண்ணா...
  நல்ல கலைஞன் சினிமாவை விட்டு சமையல் மேஸ்திரியாக வேலை பார்க்கிறார் என்ற செய்தி அறிந்த போது ரொம்ப வருத்தமாக இருந்தது. இப்போது அவரது சினிமா வருகிறது என்று கேள்விப்பட்டதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது...

  ஆமா... சுகன்யா நல்ல நடிகையின்னு சொல்லி வால்டர் வெற்றிவேல் படத்தில் அந்த சின்ன ராசவே பாட்டு இருக்கே.... அப்படின்னு சொல்லப் போறீங்கன்னு பார்த்தா ஜகா வாங்கிட்டீங்களே....

  ReplyDelete
 17. காத்திருந்தது மட்டுமல்ல திரும்பியும் பார்க்க வைத்தாள் வைதேகி.

  ReplyDelete
 18. சுந்தர்ராஜன் பற்றி அருமையான தகவல் கொடுத்திருக்கீங்க... ஆமா, கடைசியா அந்த போட்டோ எதுக்கு?

  ReplyDelete
 19. அண்ணே அந்த சுகன்யா மேட்டரை எனக்கு மட்டும் சொல்லுங்கண்ணே.......

  ReplyDelete
 20. அவருடைய படங்களில் பாடல்களுக்கும், காமெடிக்கும் நிச்சயம் நல்ல இடம் உண்டு...

  வைதேகி காத்திருந்தாள் - பாடல்களை மறக்க முடியுமா.....

  நினைவுகளை மீட்டெடுத்த பகிர்வுக்கு நன்றி மனோ.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!