Wednesday, April 24, 2013

எஸ் பி பொன் மாணிக்கவேலும் ஒரு கொலையும்....!

டிரிங் டிரிங்....

"ஹலோ...யாரு...?"

"ஏன் என் சத்தத்தை வச்சி நான் யாருன்னு தெரியலையாக்கும்...?"

"ஒ நீயா..? என்னன்னு சொல்லு...?"

"ஏன் இப்பிடி கோபமா பேசுறே...? நான் எங்கே நின்னுட்டு இருக்கேன் தெரியுமா...?"

"நீதான் ஒரு செமினாருக்கு துபாய் போனேன்னு தெரியுமே, எல்லாம் நல்லபடியா முடுஞ்சுதா...?"

எதோ பிலிப்பைனி மொழியில திட்டிட்டு..."அடேய் நான் டுயூட்டி ஃபிரீ"ல நிக்குறேன் உனக்கு என்ன வேணும்னு கேக்கலாம்னு போன் பண்ணுனா நீ ராஸ்கல்..." மறுபடியும் பிலிப்பைனில திட்டுது.

"ஆஹா...ஸாரி மேடம் வெறி ஸாரி என்ன வாங்கப் போறே எனக்கு...?"

"ம்ம்ம் உனக்கு எது வேணும்னு எனக்குத் தெரியாதா என்ன...?"

"சரி சரி ஒரு சிமிர்னாஃப் மட்டும் வாங்கிட்டு வா..."

"நோ நோ அது உடம்புக்கு ரொம்ப சூடு பஹ்ரைன்ல சூடு வேற ஆரம்பிச்சிருச்சு,, சிவாஸ், பிளாக் லேபள், ஜாக் டேனியல் இதுல ஒன்னு சொல்லு..."

"எனக்கு ரெட் லேபளே போதும் ஆளைவிடு..."

கூட வேலைப் பார்க்கும் பிலிப்பைனி பெண்ணின் அன்பு...! யாரு பெத்தபிள்ளையோ, ஆண்டவன் எல்லாருக்கும் ஆறுதலுக்காக சிலரைப் படைச்சு இருக்கான் ஆனால் நாம்தான் அதை நல்ல முறையில் பயன்படுத்தாமல் உதாசீனப்படுத்துறோம் இல்லையா?
----------------------------------------------------------------------------

கொலை கேசை கண்டுபிடிக்க ஹோட்டலுக்குள்ளே போலீஸ் நாய் வரும்போது விறைப்பா நிக்கலாம், ஆனால் இந்த காலு சடகடன்னு ஆடுதே அதுக்கு ஏதாவது மார்க்கம் இருக்கா?

கூட வேலை பார்க்கும் பெண் பயத்துல அடிக்கடி பாத்ரூம் வேற போயிட்டு வருது எனக்கு இன்னும் கால் கடபட கடகட....
-----------------------------------------------------------------------------
எலேய் உங்களுக்கு தெரியுமாடே சேதி? அட நம்ம பிலாசபி பிரபாகரனுக்கு கல்யாணமாம்ல அடுத்த மாசம் புது மாப்பிளை ஆகுறாரு - சென்னை தியேட்டர்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட் இனி

வாழ்த்துக்கள் மக்கா.....
-----------------------------------------------------------------------------

மூட்டைக்கு மருந்தடிடான்னு பெங்காலிகிட்டே சொன்னா கொய்யால பாத்ரூம்ல போயி பெயிண்ட் அடிச்சுட்டு நிக்குறான் மிடியல.
-----------------------------------------------------------------------------

என்னாது சீனா"காரன் உள்ளே வந்துட்டானா? அப்போ நாம வெளியேப் போயிருவோம் - மன்மோகன் சிங் [[வடிவேலு வாய்சில் படிக்கவும்]]
---------------------------------------------------------------------------
நம்ம பொன் மாணிக்கவேல் எஸ்பி"யாக இருக்கும்போது சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் ஒரு தற்கொலை கேஸ், ஒரு பெண் தீக்குளித்து தற்கொலை செய்த செய்திகேட்ட எஸ்பி நேரே ஸ்பாட்டுக்கு போனார்...பிணத்தை பார்த்துவிட்டு மாப்பிளையை அள்ளி போட்டு கொண்டு வந்து பலமாக விசாரிக்க...
அது தற்கொலை அல்ல கொலை என்று தெரிய வந்தது. பத்திரிக்கை நிருபர்கள் "அதெப்பிடி சார் அது தற்கொலை இல்லை கொலைன்னு கண்டு பிடிச்சீங்க...?" என்று கேட்டதுக்கு எஸ்பி சொன்னார் "தற்கொலைன்னா உடம்பு முழுவதும் எரிந்து போயிடும், கொலைன்னா ஒருப்பக்கம் மட்டுமே எரிந்து இருக்கும், கொலையாளிகள் எங்களிடம் மாட்ட சில தடயங்களை விடுவார்கள் அல்லவா அதுல இதுவும் ஒன்று" என்று சொல்ல நிருபர்கள் வாயடைத்துப் போனார்கள்!


12 comments:

 1. கலக்கல் கலவை ..அண்ணே ...

  வடிவேல் வாய்சில் .. சிரிப்பு நிக்கல

  ReplyDelete
 2. அனைத்தும் கலக்கல்...

  மனம் கவர்ந்தவை :

  ///ஆறுதலுக்காக சிலரைப் படைச்சு இருக்கான் ///

  உண்மை...

  /// ஆனால் நாம்தான் அதை நல்ல முறையில் பயன்படுத்தாமல் உதாசீனப்படுத்துறோம் ///

  நமது அறியாமையால்...

  ReplyDelete
 3. துபாய் போலீஸ் நாயை நம்பலாம் ...நம்மூர் போலீஸ் நாய்களை நம்ப முடியாது !!!

  ReplyDelete
 4. கூட வேலைப் பார்க்கும் பிலிப்பைனி பெண்ணின் அன்பு...!//இது வேறையா?எந்த கணக்கு?

  ReplyDelete
  Replies
  1. ஒரு பாசம்தான் டீச்சர்...வேற ஒண்ணுமில்லை....

   Delete
 5. கொலை தற்கொலை ,அட!.....அட!..... நம்ம தமிழ் நாட்டு போலீஸ்க்கு ஒரு சல்யூட் ...

  ReplyDelete
 6. கொலை,தற்கொலை, அட!......அட!....... நம்ம தமிழ் நாட்டு போலீஸ்க்கு ஒரு சல்யூட்..........

  ReplyDelete
 7. நல்லா சிரிக்க வச்சுட்டீங்க மனோ சார்!

  ReplyDelete
 8. பொலிஸ் கில்லாடிதான் :)))

  ReplyDelete
 9. கடைசி விஷயம் தகவலுக்கு நன்றி மன்மொஹன்சிங்கும் காங்கிரஸ் தலைவி படம் எப்படிங்க இப்படி எல்லாம் அதுல வேற வடிவேல் கணக்க சொல்லி பாக்கணுமாம் .......

  ReplyDelete
 10. அட!......அட!.......தகவலுக்கு நன்றி நம்ம பொன் மாணிக்கவேல் ஒரு சல்யூட்..........

  ReplyDelete
 11. நல்லாத்தான் இருக்கு இந்த நக்கலு! :)

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!