Friday, April 19, 2013

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயப்படுறது எதற்காக...?


நம்ம சேட்டன் ஒருத்தன்கிட்டே சவூதி அரபி ஒருத்தன், நல்ல தண்ணியில்  "என்னைய்யா நீ கேரளாவா...?"

"ஆமா சார் நான் கேரளாதான், அங்கே சவுதியிலும் நிறைய கேரளா ஆளுங்கதானே இருக்காங்க...?" பெருமையாக...

"கேரளா பார்க்க ரொம்ப அழகு...!" அரபி 

"ஆமா எங்க கேரளா ஒரு கிரீன் [[பசுமை]] தேசம்...!"

"பின்னே எதுக்குய்யா உங்க ஆளுங்க இந்த பாலைவனத்துல வந்து கிடக்கீங்க...?" அரபி 

நம்மாளு பேய் முழி முழிக்க, நான் வடிவேலு அடிவாங்கு முன் ஓடும் அவருடைய நண்பனுங்க போல ஓடியேப் போயிட்டேன்.

அரபி வம்பு பேசுறான்னு எனக்கு முதல்லையே புரிஞ்சிப் போச்சு ஹி ஹி...
----------------------------------------------------
சின்னபுள்ளையில நண்பன் ஒருவன் என்னைக் கடிச்சி வச்சிட்டான், எங்கம்மாகிட்டே சொன்னதும் வான்னு கூட்டிட்டுப் போயி எங்கவீட்டு முருங்கை மரத்தை காட்டி...

"ராமசந்திரன் என்னைக் கடித்தான் நான் உன்னைக் கடிக்கிறேன்னு மூன்று முறை சொல்லி சொல்லி முருங்கை மரத்தை கடிக்க சொன்னார்கள்.

எங்கம்மாகிட்டே இதுபற்றி கேக்க மறந்துட்டேன், இதுல ஏதாவது வைத்தியம் இருக்கா தெரிஞ்சவங்க சொல்லுங்க...?
---------------------------------------------------------
ஒரு முறை லீவுக்கு மும்பையிலிருந்து  ஊருக்கு போனபோது, அழகான சட்டை பேன்ட் போட்டு இன் செய்துகொண்டு நாகர்கோவில் கிளம்பினேன் நானும் நண்பர்களுமாக, என்னை பார்த்த என் அக்கா,  "எலேய் தம்பி நில்லு" என்று சொல்லிவிட்டு ஒரு ஹீரோ பென்னும்  ஒரு மடித்த வெள்ளைப் பேப்பரும் கொண்டு வந்து என் சட்டை பாக்கெட்டில் குத்தி வைத்துவிட்டு.

எப்போ வெளியில் கிளம்பினாலும் சட்டை போட்டால் கூடவே இந்த பென்னும் பேப்பரும் வைத்துக் கொள்ளவேண்டும் அதுதான் ஆண்களுக்கு அழகு என்று சொன்னாள்.

அது முதல் இன்றுவரை அதை நான் கடைபிடித்து வருகிறேன், பஹ்ரைன் வேலைக்கு வந்த பின்பு எங்கள் மேனேஜர் ஒருவர் என்னைக் கவனித்துவிட்டு எல்லாரிடமும் புகழ்ந்து சொல்லுவார், "மனோஜை பாருங்க எப்போ சட்டை போட்டுருந்தாலும் கூடவே பென்னும் பேப்பரும் பாக்கெட்டில் இருக்கு, இது மிகவும் நல்ல விஷயம், காரணம் ஏதாவது விபத்து நமக்கோ பிறருக்கோ நடந்தால் உடனே நம்பரை நோட் பண்ணிக்கொள்ள உதவும்" என்று பாராட்டுவது உண்டு...!
-------------------------------------------------- 
அதேபோல நான் எப்போ மும்பையில் இருந்து ஊருக்கு போனாலும் [[கல்யாணத்திற்கு முன்பு]] எங்கள் வீட்டில் அப்போது விறகு அடுப்பு என்பதால் [[இப்போதும் இருக்கு]] காய்ந்த வேலிக்கரை முள்செடிகளை  கொப்பு கொப்பாக வெட்டி வந்து கூட்டகூட்டமாக எங்க அப்பா சேர்த்து வைத்து காய வைத்து இருப்பார்.

நான் ஊருக்கு போகும்போது ஊர் சுற்றும் நேரம் தவிர அந்த காய்ந்த முள்செடிகளை பிரித்து, அரைப்பாகம் நீளத்திற்கு அழகாக வெட்டி அடுக்கி வைத்து கொடுப்பேன் அம்மாவுக்கு, லீவுக்கு வந்தேம்னா அம்மாவுக்கும் அக்காளுக்கும் ஆறு மாசத்துக்கு விறகுக்கு பஞ்சமில்லாமல் வெட்டி அடுக்கி வைத்துவிட்டுத்தான் வருவேன்.

அப்போ எங்கள் வீட்டை சுற்றி சுவர் கிடையாது, ஒரு ஓட்டுவீடு மட்டுமே [[இப்பவும்]] அதை சுற்றி பூவரசம் மரங்களும் முருங்கை மரங்களுமாக முள் வேலிகள் போடப்பட்டு இருந்தன.

அப்படிப்பட்ட ஒருநாளில் நான் அம்மாவுக்காக விறகு வெட்டிக் கொண்டு இருந்தேன், அம்மா மீன்கடைக்கு போய்விட, வீட்டில் நான் கடைக்குட்டி என்பதால்  என் அக்காவுக்கு நான் ரொம்ப செல்லம், இடையிடையே வந்து மண்டையில் ரெண்டு கொட்டு கொட்டிவிட்டு சீக்கிரம் வெட்டி முடிலெய் என்று என்னை மிரட்டிக் கொண்டு வீட்டுக்குள் சென்றுவிட.

நான் விறகு [[அருவா வைத்துதான் கோடாலின்னு நினச்சிராதீக]] வெட்டிக்கொண்டு இருக்கும் போது வேலிக்குள் ச்சீத் ....ச்சீத்...ச்சீத்...என்று சத்தம் வந்துகொண்டே இருக்க, நான் கவனிக்காமல் வெட்டிக்கொண்டே இருந்தேன்.

வெட்டுவதை நிறுத்திவிட்டால் அந்த சத்தமும் நின்றுவிடும், மறுபடியும் வெட்டுவேன் சத்தம் தொடரும் இப்படியே ஒரு அரை மணி நேரம் கடந்துவிட, எனக்கு அது என்னான்னு பார்க்கத் தோன்றவே....

வேலிக்குள்ளாக போயித் தேடிப்பார்த்தேன்....கொஞ்சநேரம் தேடிப்பார்த்தபின்புதான் தெரிந்தது ஒரு "பாம்பு" தவளையை பாதி முழுங்கியும் முழுங்காமலுமாக போராட்டம் நடந்துகிட்டு இருக்கு.

நான் விடுவேனா......

எடுத்தேன் பாருங்க ஓட்டம்......... தெற்கு தெருவை விட்டுட்டே மீன்கடையைப் பார்க்க நான் ஓடின ஓட்டத்தை ஊரே ஒரு மாதிரியாகப் பார்க்க, எங்க அம்மாகிட்டேப் போயித்தான் நின்னேன்.

"என்ன மக்ளே ஆச்சி...... ஏம்லேய் அய்யா இப்பிடி ஓடி வருதே...?"

"யம்மா பாம்பு பாம்பு வேலிகுள்ளே பாம்பு...."

"நம்ம வீட்டு வேலிக்குள்ளேயா மக்ளே...? அது ஒன்னும் செய்யாது வா போகலாம்"

"நான் வரமாட்டேன் அந்த பாம்பை கொல்லசொல்லு அப்புறமா வீட்டுக்கு வாறன்"

"சரி சரி வா அம்மாவே அந்த பாம்பை கொன்னுருதேம்லேய் வா எங்கூட"

வீட்டுக்குப் போனதும் அம்மாவுக்கு பின்னாடி நான் எனக்குப் பின்னாடி எங்க அக்கா...அம்மாவுக்கு பாம்பு இருக்கும் இடத்தைக் காட்டினேன், ஆத்தீ பாம்பு இன்னும் தவளையை தின்னு முடிக்கல ரெண்டும் போராட்டத்துலதான் இருந்துச்சு.

எங்க அம்மா ஏதோ கம்பை எடுத்து பாம்பை கொல்வாள்ன்னு பார்த்தா...ஒரு கையில கொஞ்சூண்டு மண்ணை அள்ளி அது மேல வீசிட்டு, போ அங்க போ போ அங்க போ"ன்னு சொன்னதுதான் உண்டு பாம்பு அப்பிடியே திரும்பி போயிருச்சு....!

"ஏம்மா அதை அடிக்காம விட்டே"ன்னு கேட்டதுக்கு அம்மா சொல்லுச்சு, "அது கொம்பேறிமூக்கன் பாம்பு, எந்த அரவத்தையும் தொந்தரவு நாம பண்ணலைன்னா, நம்மளையும் அதுக தொந்தரவு பண்ணாது புரியுதா...?"

எங்க புரியுதா, அதோட விறகு வெட்டை சுத்தமா நிறுத்திட்டேன், வேலிக்கரைப் பக்கமே போவதில்லை மதில் சுவர் வரும் வரை....நம்ம தைரியம் பற்றி நமக்குத் தெரியாதா என்ன...? அதுவும் பாம்பு......!

அம்மாவுக்கு, உயிரினங்கள் மீது அலாதி அன்பும் பிரியமும் உண்டு என்பதை இப்போது நினைக்கும் போதும் எனக்கு ஆச்சர்யமாகவே இருக்கும்...!!!


20 comments:

 1. அரபி எல்லாரும் சர்தாரா மாறிடுவாங்களோ

  ReplyDelete
 2. rasiththup padoththu makizhnden vaazhththukkal iniya kaalai vanakkam mano

  ReplyDelete
 3. //எங்க புரியுதா, அதோட விறகு வெட்டை சுத்தமா நிறுத்திட்டேன்///

  இப்ப புரியுது ஏன் உங்க அருவா இன்னும் பளபளப்புடனும் கூர்மையாவும் இருக்குதுன்னு....

  ReplyDelete
 4. மற்றவைகளை ரசித்தேன்...

  //அம்மாவுக்கு, உயிரினங்கள் மீது அலாதி அன்பும் பிரியமும் உண்டு என்பதை இப்போது நினைக்கும் போதும் எனக்கு ஆச்சர்யமாகவே இருக்கும்...!!!//

  இதை (அம்மாவின் அன்பை) நினைத்து நெகிழ்ந்தேன் அண்ணா...

  ReplyDelete
 5. இதுல்ல ஏன் சூப்பர் ஸ்டார் வந்தாரு

  ReplyDelete
 6. நல்லா வைக்கிறீங்க ஐயா தலைப்பு! அர்த்தம் கண்டுபிடிக்க என் மரமண்டைக்கு அஞ்சு நிமிசம் ஆனது! ரஜினி காந்தும் பாம்புக்கு பயப்படுவார்! நீங்களும் பயப்படுவீங்க! ஓக்கே ஒக்கே!

  ReplyDelete
 7. // "ராமசந்திரன் என்னைக் கடித்தான் நான் உன்னைக் கடிக்கிறேன்னு மூன்று முறை சொல்லி சொல்லி முருங்கை மரத்தை கடிக்க சொன்னார்கள்.

  // ம். இப்படி எல்லாம் இருக்கா?

  ReplyDelete
 8. எனக்கு கூட அதே டவ்ட் இங்கே சூப்பர் ஸ்டார் எதுக்கு ஒருவேளை பாம்பு வந்ததாலா அந்த நாள் நியாபகங்கள் சுவரஸ்யம்

  ReplyDelete
 9. மனுஷங்க கடிச்சாலும் விஷம்ன்னு சொல்லுவாங்க,முருங்கை விஷம் முறிக்குமோ? பெரியவங்க சொல்லுறதுல அர்த்தம் இருக்கும்,,,

  ReplyDelete
 10. அம்மா, அக்கா, நீங்கள் என்று பாச வலையில் பின்னியிருந்த இந்தப் பதிவைப்படித்தபோது மனது நெகிழ்ச்சியடைந்தது!!

  ஆனாலும் உங்கள் அம்மாவுக்கு தைரியம் அதிகம் தான்! பொதுவாய் கிராமத்துக்காரர்கள் இப்படித்தான் எதையும் தைரியமாக எதிர்நோக்குவார்கள்!

  ReplyDelete
 11. பேனா/பேப்பர் நல்ல பழக்கம் மக்கா..

  ReplyDelete
 12. அன்பின் மனோ - பரவாய் இல்லை - வீட்டில் நடந்த நிகழ்வுகளை நிஅனிவுஇல் வைத்து - அசை போட்டு - ஆனந்தித்து - அவற்றை பதிவாக்கியமையும் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 13. பாம்புக்குப் பயந்த ரஜனியும் கருப்பு,நானும் கருப்பு ன்னு சொல்ல வரீங்க,ஓ.கே,ஓ.கே!!!!///அம்மாக்கள் எப்பவுமே கருணை உள்ளம் கொண்டவர்கள் தான்,நாம தான் புரியாம....................!

  ReplyDelete
 14. தமிழ்வாசி பிரகாஷ்April 22, 2013 at 12:00 AM
  பேனா/பேப்பர் நல்ல பழக்கம் மக்கா..///ஆமாமா,சமயத்துல போன் நம்பர் எழுதலாம்,ஏன் லவ் லெட்டர் கூட எழுதலாமே?ஹி!ஹி!!ஹீ!!!!

  ReplyDelete
 15. தவளையைக் காப்பாத்திட்டு இங்கே போட்டிருந்தால் தேவலாம்??

  ReplyDelete
 16. அட ரஜனி ஏதோ முக்கிய விடயம் என்று வந்தால் பாம்பூஊஊஊஊ!ஹீ மலரும் நினைவுகள் வேலி ஞாபகம் வருகின்றது அண்ணாச்சி.

  ReplyDelete
 17. நல்ல பதிவு ,,,எல்லா அம்மாக்களும் இப்பிடித்தான் போலிருக்கே ,,,எங்க அம்மாவும் பாம்பை அடிக்கவே விடாது ,,,,அது சாமியாம் ,,,,சாமி போயிரு என்று எங்கம்மா சொல்லும் பாம்பு போயிரும் ,,..எங்களூருக்குப் பக்கத்தில் வாழைத் தோட்டத்து அய்யன்கோயில் என்று ஒரு கோயில் இருக்கிறது ,,,வீட்டில் பாம்பைக்கண்டால் உடனே அந்த கோயிலுக்குப் போய் வருவார்கள் ,,இது பண்டைக்காலம் தொட்டு நடந்து வரும் எங்களூர் மக்களின் நம்பிக்கை ,,,பிறகு பாம்பு நம் கண்ணில் படவேபடாது ,,,

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!