சின்ன வயசுல படிக்கும்போது என் கூட பெண் பிள்ளைகளே பக்கத்தில் சேர்வதில்லை அது ஏன்னு எனக்கும் புரியவில்லை, மற்ற நண்பர்களோடு சகஜமாக பேசிப் பழகும் குட்டிகள் நம்மளைக் கண்டால் நாலடி தள்ளியே எட்டிப்பொகுது நானும் எம்புட்டோ மண்டையை உருட்டி ரோசித்துப் பார்த்தும் ஒன்னுமே பிரியல....!
பள்ளிக்குப் போகும் வழியில் நிறைய மாமரங்கள் இருந்தாலும், எல்லாமே பயங்கரப் புளிப்பு நிறைந்த மாங்காய்தான் கீழே விழுந்து கிடக்கும் ஆனால் ஒரே ஒரு மாமரத்தில் மட்டும்தான் இனிப்பு மாங்காய் உண்டு, அதன் கீழே நிறைய மாங்காய்கள் விழுந்து கிடந்தாலும் போயி எடுக்கமுடியாது.
அந்த மாமரத்துக்கு காவலாக அங்கே ஒரு கடிநாய் உண்டு, உள்ளே போனால் நிச்சயம் கடி உண்டு, தொப்புளை சுற்றி நாப்பது ஊசியும் உண்டு. ஆர்வமாக அந்த தோப்பு உள்ளே போனவர்கள் நிறையபேர் கடி வாங்கிவிட்டு கமுக்கமாக வீட்டில் போயி சொன்னது உண்டு ஹி ஹி...
பள்ளிக்கு போகும் சிறுவர்கள் யாவருக்கும் அந்த மாமரம் [மாங்காய்] ஏக்கத்தையும் வாயில் நீரையும் சுரக்க வைத்தவண்ணம் இருந்தது, சிலநேரம் மாமரத்தின் சொந்தக்காரன் அங்கே வந்து மாங்காயை பொறுக்குவதை ஆ என்று வாய் பிளந்து கூட்டம் கூடி ஆவலாக பார்ப்பதும் உண்டு.
சரி நாம இனி மேட்டருக்கு வருவோம். பெண்களை கவர என்ன செய்யலாம்னு ரோசிக்கும்போது இந்த மாமரம் நினைவுக்கு வந்தது, இனி என்ன............. ஆக்ஷன்தான் ரொமாண்டிக்தான் டூயட்தான் கும்மாளம்தான், வடை பாயாசம்தான்.
ஒருநாள் திடீரென அந்த மாமரத்தின் பக்கமாக நின்று கத்தினேன் "யாருக்கெல்லாம் இந்த மாங்காய் வேண்டுமோ அவங்க எல்லாம் இந்த பக்கமா வந்து நில்லுங்க, நான்போய் மாங்காய் பொருக்கி வந்து தாரேன்"ன்னு சொன்னதும், மாங்காய்க்காக இல்லாவிட்டாலும் நாய் என்னை கடிக்கிறதையாவது பார்த்துவிட வேண்டும் என்ற வெறியில், பிள்ளைகள் பையனுங்க எல்லாம் நிக்க ஆரம்பிக்க...
நான் மெதுவாக தோப்புக்குள்ளே போக ஆரம்பித்தேன், நாயைத் தேடினேன் அது ஒரு பக்கமாக நின்று வாலை ஆட்டிய வண்ணம் மெதுவாக என்னை நோக்கி வர, எனக்கு காலெல்லாம் கடகட...கடி நாயாச்சே....
மெதுவாக கையில் கிடைத்த மாங்காயை பொருக்கி கொண்டு நாய் அருகில் வருமுன் வெளியே வந்துவிட்டேன், வந்து பெண்களுக்கு மாங்காயை பங்கிட்டு கொடுக்க...அப்புறமென்ன நாம ஹீரோதான், பொண்ணுங்க எல்லாம் நம்ம பின்னாடிதான் ஹி ஹி...
ஆமா......தோப்பு பக்கம் போனாலே கடிக்க ஓடிவரும் கடி நாய், என்னை ஏன் "ஓடி" வந்து கடிக்கவில்லை...?
சன்டேன்னா எங்க வீட்டுல இறைச்சி சாப்பாடு உண்டு, மத்தியானம் எங்க வீட்டுல சாப்பிட்டு எச்சம் இருக்கும் எலும்புகளை தூக்கிக் கொண்டு போயி அந்த நாயிக்கு விட்டெறிந்தேன், ராத்திரியும் மிச்சம் எலும்புகளை அடுத்தநாள் காலையில் நாயிக்கு கொண்டு போட்டேன்...அதான் நாயிக்கு பாசம் வந்துருச்சி என்மேல. இந்த ரகசியத்தை யாருகிட்டேயும் நான் சொல்லல. [[இந்த ஐடியா அந்த வயசுல எப்பிடி எனக்கு வந்துச்சுன்னே ஆச்சர்யமாக இருக்கு]]
தினமும் மாங்காய் பொறுக்குவதும் மக்களுக்கு வீதிப்பதுமாக இருந்ததால்...என்னை சுற்றி பெண் நண்பர்கள், ஆண் நண்பர்கள் என்று ஒரு கூட்டமே என்னை சுற்றி எப்போதும் இருக்கும்.
பொண்ணுங்க நம்மை காதலிக்கனும்னா ரிஸ்க்கை ரஸ்கா நினச்சு செய்யணும் [[ஹி ஹி]] அப்புறம் எனக்கு பொண்ணு கிடைக்கல கிடைக்கலன்னு நெஞ்சில அடிச்சு கதறப்டாது ஹி ஹி....
இப்போது அந்த மாமரங்கள் இருந்த இடமெல்லாம் வீடுகளாக மாறிப்போச்சு, கூதுகலமாக நாங்கள் ஓடிச்சென்ற இடமெல்லாம் சுத்தமாக மறைந்தும் போச்சு ஆனால் அந்த நினைவுகள் மற்றும் மாமரங்கள் இப்போதும் எங்கள் மனதில் பசுமையாக இருக்கிறது, என்னமோ தெரியாது இப்போதும் அந்த இடங்களை கடக்கும்போதெல்லாம் அந்த மாமரங்களின் வாசனை மூக்கைத் சுவாசிக்கவே வைக்கிறது...!
டிஸ்கி : ஜஸ்ட் ஜாலியா எடுத்துக்கோங்க.

மாங்காய் தந்து மங்கையர் மனதில் இடம் பிடித்தது அருமை. ஆனால் அந்த இடங்கள் எல்லாம் இன்று வீடுகளாய் மாறியது வருத்தமளிக்கின்றது.
ReplyDeleteஅந்த வாசம் இப்பவும் அந்த மண்ணில் இருக்குய்யா...!
DeleteMmm... Super story. I have no words to praise your bravery.
ReplyDeleteha ha ha ha....
Deleteஆமா அண்ணே நீங்க அப்பவே இப்படியா..................ஆமா அந்த மாங்காய் சாப்பிட்ட மங்கைகள் எல்லாம் எங்கே இப்போ ?(கோவிக்க கூடாது சும்மா பொது அறிவை வளர்ப்பதற்காக கேட்டேன் )
ReplyDeleteஹா ஹா ஹா ஹா பொது அறிவா...? பிச்சிபுடுவேன்பிச்சு ஹி ஹி...
Deleteபாருங்க ஒரு வாட்டி உதவினாலும், நாய்க்கு மட்டும் எவ்வளவு நன்றி இருக்கிறது...!
ReplyDeleteஇன்னும் குடியிருப்பு பெருகட்டும்... மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்...
இப்பவே வெயில் நெருப்பாக தகிக்கிறது அங்கே...!
Deleteoh mygoodness hahahaha
ReplyDeleteசரி சரி பயப்படாதீங்க ஹா ஹா ஹா ஹா...
Deleteஅப்பிடி போடுங்க ஆபீசர் அருவாளை ஹா ஹா ஹா ஹா...
ReplyDeleteஅடக்கடவுளே நான் பதிவை படிக்கவில்லை,மாங்காய் படத்தையே பார்த்துட்டுருக்கேன்...இப்படி படத்தை ஏங்கவைக்கறீங்களே..
ReplyDeleteha ha ha ha....
Delete//மாங்காய்க்காக இல்லாவிட்டாலும் நாய் என்னை கடிக்கிறதையாவது பார்த்துவிட வேண்டும் என்ற வெறியில், பிள்ளைகள் பையனுங்க எல்லாம் நிக்க ஆரம்பிக்க//
ReplyDeleteஇன்னொரு தபா மாந்தோப்பு பக்கம் போகும்போது சொல்லுங்க. அந்த நாய எங்க இருந்தாலும் கூட்டியாறேன்.
எலேய் தம்பி அண்ணன பாவம்லேய் ...
Deleteநல்ல வேலை அண்ணன் மாங்க கொடுகுரதோட விட்டாரு இல்லைன்னா
ReplyDeleteஅடப்பாவி...
Deleteஒரு குடம் உமிழ்நீர் ஊற்றின பின்னர் தான் உணர்ந்தேன்
ReplyDeleteஇது கடந்த கால நினைவுகள் என்று .இப் பகிர்வின் மூலம்
பசுமையான உங்கள் உள்ளத்தையும் அதில் இப்போது உள்ள
வலிகளின் ஆழத்தையும் உணர முடிந்தது சகோதரரே
கவலை வேண்டாம் வலைத் தளம் என்னும் இத் தோப்பில்
வலம் வரும் நாங்களெல்லாம் உகளுக்கு எப்போதும்
நண்பிகளோ சகோதரிகளோ தான் .சிறப்பான பகிர்வு .இனிய
நினைவுகள் இனியும் தொடர வாழ்த்துக்கள் ..........
அண்ணே பொண்ணுகளுக்கு மாங்கா குடுக்குறது தப்பு இல்லையா ..?
ReplyDeleteநான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேண்டுமென்றாள்,ஓஹோ,ஹோ
ReplyDeleteஎன்னமோ நடக்குது உலகத்திலே...
ReplyDeleteஅணணே... மாங்காய் கொடுத்து மயக்க நாய்க்கு எலும்ப போட்டிருக்காரு....
ReplyDeleteமாங்காய் சாப்பிட்ட மக்க அண்ணனை எலும்பாக்கிட்டாங்களே....
கடைசி வரி... எல்லா ஊரிலும் அதே நிலைதான்....
சீசனுக்கேத்த பதிவு....எத்தனைதான் சாப்பிட்டாலும் மாங்காய்களைப் பார்க்கும்போது எச்சில் ஊறுவதை தடுக்க முடியலையே...
ReplyDeleteமாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊறுகாய் ஊட்டும் சும்மாவா சொன்னாக :)
ReplyDeleteஇன்று விவசாய நிலங்களெல்லாம் அந்த நகர் இந்த நகர் என்று ரியல் எஸ்டேட் பிஸுனஸாகிவிட்டது.. பசுமையான நினைவுகள் மறப்பதில்லை!
ReplyDelete