கல்யாணத்திற்கு முன்பு "மை ஹனி"ன்னு மொபைலில் மனைவி பெயரை வைத்திருந்தவன், கல்யாணத்துக்கு அப்புறம் அவள் பேரை மட்டுமே வச்சிருக்கான், என்னடா ஆச்சுன்னா...ஆமாம் பெரிய "ஹனி, அது ஒரு சனி"ங்குறான்.
-------------------------------------------------------------
பேய்கள் உலகில் உண்டா இல்லையா தர்க்கம் - நான் இருக்குன்னுசொல்லுறேன்,எப்படி என்றான். "நீதான் அது" என்றேன் கொலைவெறியா பார்த்துட்டுப் போறான் அவ்வ்...
-------------------------------------------------------------
அம்மா உணவகத்தை "சோம்பேறிகள் உணவகம்"ன்னு பெயர் மாற்ற வேண்டும் ஒரு நண்பன் பொற்கொடி ச்சே ச்சீ போர்க்கொடி பிடிக்குறான்...!
------------------------------------------------------------
சுகந்திக்கு சுகமில்லாமல் சுகப்படுத்த சுகமானவரை சுகப்படுதுபவர் இடம் அழைத்துப்போக சுகமானவர் முன் வரவில்லை ஏன்?[[பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்]]
----------------------------------------------------------
"என்னாது அரேஞ் மேரேஜா ? அப்பிடின்னா என்ன?"
"இரு குடும்பத்தார் சம்மதத்துடன் நடக்கும் கல்யாணம், அந்த இரு குடும்பங்களே கொண்டாடி மகிழும்"
"எங்க ஊர்ல [[பிலிப்பைன்ஸ்]] அந்த சிஸ்டமே இல்லை ஒன்லி லவ் மேரேஜ்தான்"
"நாசமாபோச்சு போ..."
"என்னாது"
"வாழ்த்துகள்னு சொன்னேன் மேடம்..."
"பக்கத்து வீட்டுப்பையனை லவ் பண்ணிகிட்டு, அப்புறமா கண்ணுக்குத் தெரியாம ஒரு நூறு கிலோ மீட்டர் தூரத்துல கல்யாணம் கட்டி குடுப்பதுதான் அரெஞ்ச் மேரேஜா மனோஜ்...?"
என்னிடம் பதிலில்லை....!
"என்ன மனோஜ் சத்தத்தையே காணோம்...?
----------------------------------------------------------
என்னாது அவரு பெரியார் பேரனா...? எனக்கு ரொம்பவே சந்தேகமாக இருக்கு - எலேய் வேஷ்டி கிழிஞ்சிறப்போகுது கவனமாக வீடு போயி சேறு ச்சே சேரு.
---------------------------------------------------------
தங்கம் விலை குறைந்ததை அடுத்து, அம்மாவுக்கு புற்று நோய் உடனே ஆபரேஷன் பண்ணவேண்டும் என்று பலரிடமும் கடன் வாங்கினவன் - சந்தேகம் வந்து பக்கத்து ஊரு நண்பன்கிட்டே விசாரிச்சா...பஹ்ரைன்ல இருந்து தங்க பிஸ்கட்டுகள் வந்ததாக தகவல், அம்மா சும்மா ஜம்முன்னு இருக்காங்களாம்.
ஏன் இந்தப் பொழப்பு?
-----------------------------------------------------------
பூனை எதுக்கு நம்மளை கண்டதும் ஓடுது...?
அதுக்கு நம்மளைக் காட்டிலும் அவசரமாம்...ஹி ஹி...
சரி இன்னைக்கு இம்புட்டு போதும் உங்களை வெட்டிருதேன் ஸாரி விட்டுருதேன்.
ஒவ்வொன்றும் சுவையே! இரசித்தேன்!
ReplyDeleteஉங்களை வெட்டிருதேன்.... இல்ல விட்டிருதேன்.... ரசித்தேன் மனோ.
ReplyDeleteஅனைத்தும் நன்று.
கல்யாணத்திற்கு அப்புறம் சனி" என்று மாற்றினால் அது அந்த சனி வேறு ஒருவனின் போனில் ஹனியாக மாறி இருக்கும் ஜாக்கிரதை
ReplyDeleteஅனைத்தும் நன்று.
தல கலக்கிடிங்க எல்லாமே நச்சுன்னு இருக்கு ஹா ஹா
ReplyDeleteமதுரை தமிழன் சொல்வது ரொம்ப சரி
திங்கள் கிழமை உங்கள் வலையில் விடிந்தது... சுகமான தொடக்கம்... நன்று...
ReplyDeleteஹா... ஹா... ரசித்தேன்...
ReplyDeleteகலக்கு மனோ.... ரசிக்கும் படியிருநடது...
ReplyDeleteஅந்த கொடி பிடிக்கிறது யாருன்னு சொன்ன சிலை வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்...
ஹா..ஹா..!
ReplyDeleteமுதல் துணுக்கு, ஹி ஹி ....
ReplyDeleteஅம்மா ஜம்முன்னுதான் இருக்காங்க. நான் தங்க பிஸ்கட் அனுப்பினவரோட அம்மாவ சொன்னேன்
நம்ம ஊரு அரேஞ்ச்டு மேரேஜ்(!) ...சிந்திக்கவேண்டிய விஷயம்தான்!
ReplyDeleteRompa naalaachu blog pakkam vanthurukku
ReplyDeleteSuper aayvu......
பூனை எதுக்கு நம்மளை கண்டதும் ஓடுது...?
ReplyDeleteஅதுக்கு நம்மளைக் காட்டிலும் அவசரமாம்...ஹி ஹி..//////அது சனி முகத்தில் முழிக்ககூடாதாம்.
சூப்பர்...அனைத்தும் ரசித்தேன்!!
ReplyDeleteஎல்லாமே அருமை!!!அந்த தங்க பிஸ்கட்டு வாங்கினவரு வூடு(சும்மா தெரிஞ்சிக்கத் தான்) எங்க இருக்கு???ஹி!ஹி!!ஹீ!!!
ReplyDeleteபெரியார் பேரன் இருப்பதே ???
ReplyDeleteதங்கம் வாங்க எனக்கு இப்படி ஒரு ஐடியா கிடைக்கலயே:))))))
போகிற வழியில் மனிதன் குறுக்கே வந்தால்
ReplyDeleteஅபசகுணம் என்று பூனை பயந்து ஓடுதோ மக்களே...????
அருமை
ReplyDeleteஎன்னாது அவரு பெரியார் பேரனா...? எனக்கு ரொம்பவே சந்தேகமாக இருக்கு - எலேய் வேஷ்டி கிழிஞ்சிறப்போகுது கவனமாக வீடு போயி சேறு ச்சே சேரு.// நாஞ்சில் மனோன்னா அங்கே நக்கலும் நையாண்டியும் இருக்கும் அறிவும் இருக்கும் உணவும் மிகுந்து இருக்கும் பாருங்களேன் இதை எப்படி நக்கல் பண்ணி இருக்கிறாரு...
ReplyDeleteபொற்கொடி யாருண்ணே......?
ReplyDeleteஎப்படீங்க இப்டி கலக்கலா எழுதுறீங்க? செமை!
ReplyDeletenallaa irukku...!
ReplyDelete