ஒழுங்காக ஓடிட்டு இருந்த லேப்டாப் திடீரென வேலை நிறுத்தப் போராட்டம் செய்ய ஆரம்பிச்சிடுச்சு, என்னவெல்லாம் செய்யனுமோ செய்துப்பார்த்தும் என்னை கடைக்கே கொண்டு போயிருன்னு கதறுனதுனால, கடைக்கே கொண்டு போனேன்.
அங்கே இதுக்குண்டான கேரண்டி பில்லை கேட்க, "அண்ணே அந்த பில்லை அப்பவே ஏரோப்பிளேன்ல போகும்போது கீழே தூக்கி கடாசிட்டேன்"னு சொன்னதும் பிலிப்பைனிகாரன் அவன் மூக்கு கண்ணாடியை மாட்டிவிட்டு என்னை கூர்ந்து பார்த்தான் [[ஹி ஹி ]]
கேரண்டி பில் இல்லைன்னா செக்கப் [[!]] பண்றதுக்கு மூன்று தினார் ஆகும்னு சொல்லவே, சொறிங்க ச்சே சரிங்க'ன்னு சொல்லிட்டு மறக்காம பில்லையும் வாங்கிட்டுப் போனேன்.
லேப்டாப் இல்லாமல் படும் அவஸ்தை என்னான்னு தெரிஞ்சு பொரிஞ்சு போனேன், உறக்கமே வரல....ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காதாமே, இனி அதுகூட "டைப்புர கையும்"னு சேர்த்துக்கோங்க.
அடுத்த நாள் கடைக்கு வேகமா போனேன் பயபுள்ள சொன்னதைக் கேட்டு லேப்டாப் வேணுமா வேணாமா"ன்னு கொஞ்சமும் ரோசிக்கவே இல்லை "சரிய்யா பண்ணிக் குடு"ன்னு சொல்லிட்டு வந்தேன், அப்பிடி என்னத்தைக் கேட்டான்...?
உன் ஹாட் டிஸ்க் போயிடுச்சு...."என்னாது என் ஹாட் டிஸ்க்கா...? ஸாரி ஸார் உங்க லேப்டாப் ஹாட் டிஸ்க் பழுதடைந்து விட்டதால் புதுசு மாத்தனும் அதுக்கு எல்லாம் சேர்த்து முப்பத்தஞ்சி தினார் [[ஐயாயிரம் ரூபாய்]] ஆகும் என்ன செய்யனும்னு சொல்லுங்க...? [[வேற எண்ணத்தை சொல்லப்போறோம் மாத்துங்க]]
ஆவேசமாக வீடு வந்து தூங்கவே இல்லை, ஆனால் அன்னைக்குதான் பல நண்பர்களுக்கும் அம்மாவுக்கும் அண்ணனுகளுக்கும் போன் செய்தேன்...!
சாயங்காலமே பிலிப்பைனி போன் செய்து சரியாகிவிட்டது என்றான், கையில காசு இல்லாம ஒரு நண்பன்கிட்டே கடன் வாங்கி, அடுத்தநாள் போயி வாங்கிட்டு வந்தேன் ஆனால்.....
ரெண்டு பேய் இங்கே ஆடுதேன்னு கோவிலுக்குப் போனா அங்கே நாலு மாடு ச்சே பேய் கலர் கலரா ஆடுனாப்ல ஆகிப்போச்சு.
வாங்கி வந்து லேப்டாப்பை ஒப்பன் பண்ணுனா அருமையான போட்டோக்கள் படங்கள் எல்லாம் என்னைத் தனியே அனாதையாக்கி விட்டுப் போயிருந்தது, இதில் ஆபீசர் வீட்டு திருமணம் போட்டோக்கள், விஜயன் குடும்பமும் என் குடும்பமும் சுற்றுலா போன போட்டோக்கள், மற்றும் ஆபீசரும் விஜயனும் நண்பர்களாக சுற்றுலா போன போட்டோக்கள், மும்பை போட்டோக்கள், எனது குடும்ப போட்டோக்கள் என அத்தனையும் என்னைவிட்டு போய் விட்டதே என்று தாங்கமுடியாத கவலையில்தான் இருக்கிறேன்.
சரி வீட்டுக்கு ஸ்கைப்ல வீடியோ சாட்டிங் பண்ணலாம்னு போனா...அது டவுன்லோடு பண்ணு லொட்டு லொசுக்குன்னு கேக்க, விக்கி"யை வேலைப் பார்க்கவிடாமல் அவன் ஸ்டெனோவையும் பார்க்கவிடாமல் பாஸ்வேர்ட் தேடவச்சு கண்டுபிடிச்சு தந்தான் [[நன்றிடா அண்ணே]]
சரி இனி பேசலாம்னு வீடியோவை ஒப்பன் பண்ணுனா கேமரா தலைகீழா இருக்கு, என் வீட்டம்மா சிரிச்ச சிரிப்பு இருக்கே, மொத்த குடும்பத்துக்கும் போன் போட்டு சொல்லாத குறையாக சிரிக்க...பிள்ளைகளும் விழுந்து விழுந்து சிரிக்குதுங்க [[அவ்வ்வ்வ்]]]
கலியுகம்"தினேஷுக்கு காலையிலேயே போன் போட்டு சொன்னேன், அடப்பாவி அவரும் கிடந்தது சிரிக்குறார்.....அமோகமா பல்பு இலவசமாக விற்பனை ஆகிட்டு இருக்கு, இப்போ கிளம்பனும் மறுபடியும், பிலிப்பைனி கடைக்கு நாம போனாலே சேர்ல நிமிர்ந்து உக்காருதானுவ என்னான்னு பிரியல.
என்ன....அந்த போட்டோக்கள் மிஸ்ஸானதுதான் மனதில் ஆறாத வடுவாகவே எப்போதும் இருக்கும்....!

கூடி வந்து கும்மியடிச்சுட்டுப் போங்க.இல்லைன்னா,நான் உங்க கனவுல வந்து கண்ணைக் குத்திருவேன்./////நாம அப்துல் கலாம் மாதிரி கனவெல்லாம் காண மாட்டமே?நாமெல்லாம் யாரு?ஹி!ஹி!!ஹீ!!!
ReplyDeleteஆடின காலும்,பாடின வாயும்,டைப்புர கையும் சும்மா இருக்காது!////கரக்டா?
ReplyDeleteஹூம்,என்ன பண்ண?அதான்,என் புள்ளைங்க,போட்டோ புடிச்சுட்டு வந்து மறு நிமிஷமே பென் ட்ரைவுல ஏத்தி வச்சுடுவாங்க,வருமுன் காக்க!
ReplyDeleteஎல்லோரையும் சிரிக்க வைச்சிட்டீங்க....
ReplyDeleteஉங்களுக்கு ? சிரமம் தான்...
அவ்வப்போது backup எடுத்து வைக்கவும்...
ஹார்ட் டிஸ்க் கம்ப்யூட்டரின் ஹார்ட் மாதிரி! உங்கள் பொக்கிஷ போட்டோக்கள் இழந்ததையும் நகைச்சுவையுடன் சொன்னது சிறப்பு! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDelete///என்ன....அந்த போட்டோக்கள் மிஸ்ஸானதுதான் மனதில் ஆறாத வடுவாகவே எப்போதும் இருக்கும்....!///
ReplyDeleteஉங்க ஹாட் டிஸ்க்ல இருந்த போட்டோதானே மிஸ் ஆயிச்சு ஆனா உங்க ஹார்ட்ல இன்னும் அந்த நபர்கள் இருந்து கொண்டேதானே இருக்கிறார்கள் அதை யாரலும் அழிக்க முடியாது என்று சந்தோசமாக இருங்கள் மணோ.
எதிர்காலத்தில் கொஞ்சம் சோம்பேறித்தனம் படாமல் போட்டோக்களை ஆன்லன் ஸ்டோர்ஜில் சேமித்து வைக்கவும் நிறைய ஸ்டோரேஜ் இலவசமாக இருக்கிறது
லேப்டாப்கள் இப்படி திடீரென்று மக்கர் செய்துவிடுகிறது. அப்புறம் BACK UP எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று நினைப்போம் அதற்குள் இது போல் நடந்து விடுவது உண்டு.
ReplyDeleteஎதற்கும் பழைய ஹார்ட் டிஸ்க்கை கேட்டு வாங்கி விடுங்கள். வேறு சிஸ்டத்தில் ADDITIONAL ஆக இணைத்து ரெகவர் செய்ய முயற்சித்துப் பாருங்கள்.
ஒரு வருத்தத்தை சிரிப்பாக சொல்லியிருக்கிறீர்கள்...
ReplyDeleteதொலைந்தவைகள் மீண்டும் கிடைக்காது என்ற போது வருத்தம் அதிகமாகத்தான் இருக்கும்...
ஒரு வேல பயபுள்ள காசுக்காக ஏமாத்தி இருப்பானோ....???
ReplyDeleteமூக்கு கண்ணாடி போட்ட பயபுளைகல நம்ப கூடாது நு எங்க பாட்டி சொல்லுவாங்க.....(நானும் கண்ணாடி போடுவேங்க...)
வருத்தத்தை நகைச்சுவையாய் வழங்கியிருக்கிறீர்கள். பேக் அப் அவசியம் என்பதையே தங்களின் இழப்பு உணர்த்துகிறது
ReplyDeleteபேக் அப் ஒரு டிஸ்க்ல எடுத்து வெச்சு, அதுவு்ம் கெட்டுப் போயிட்டா...? போகணும் இருந்திருக்கு. விடுங்க மனோ. எல்லாத் தருணங்களும் உங்க மனசுல பச்சை குத்தினாப்புல பதிஞ்சிருக்குதில்ல... அதுவே போதும்னு சந்தோஷப்பட்டுக்குங்க. காமிராவை தலைகீழாப் பொருத்தியிருக்கானா...? செம காமெடி போங்க! உடனே அதைச் சரி பண்ணி வாங்கி, ‘மடிக்கணினி மன்னன்’ என்ற பட்டத்தை தகக வைத்துக கொள்க! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனம் நிறைந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஅடடா.... என்னுடைய கணினியிலும் நிறைய புகைப்படங்கள் உண்டு! இன்றே பேக் அப் எடுத்து விடுகிறேன்!
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் மக்கா
ReplyDeleteஅது சரி எல்லாரும் பாக்குற,படிக்கிறல இண்டலி-ல காம பதிவுகள் போடறானுங்களே அதுக்கு என்ன பன்னி தடுக்குறதுன்னு யோசிச்சீங்களா....????
ReplyDeleteஅண்ணே முக்கியமான போட்டோ லாம் தனிய ஒரு cd போட்டு வைகண்ணே
ReplyDelete