Tuesday, April 30, 2013

வெற்றிகள் வெறியாக மாறினால் உன் நிலைமை என்ன...?

ஆரம்பத்தில் நான் பார்"மேனாக பணியிலிருந்த சமயம், காபி ஷாப்பில் பில்லியார்ட்ஸ் விளையாட்டுகள் நடப்பதுண்டு முதலாளியும் [[அரபி]] வந்து விளையாடுவது வழக்கம், கஸ்டமர்கள் இல்லாத சமயம் சில கஸ்டமர்களோடு கம்பெனி கொடுத்து விளையாட சொல்வார் முதலாளி என்னையும்....
பில்லியார்ட்ஸ் விளையாடுவது கூடுதலும் அரபிகள்தான், அந்த சமயத்தில் ஒரு இந்தியா பெங்களூரை சேர்ந்த ஒருவன், பஹ்ரைனில் இந்தியன் டிஸ்கோவில் டீ ஜே"வாக இருப்பவன், தினமும் பில்லியார்ட்ஸ் விளையாட வருவது உண்டு, மொத்த அரபிக் கில்லாடிங்க கண்ணுலயும் பில்லியார்ட்ஸ் கம்பை விட்டு ஆட்டிவிட்டுதான் போவான்.

அவனை ஒருக்காவாவது தோற்கடிக்க வைக்க வேண்டும் என்று எவ்வளவோ பிரயாசப்பட்டும் முடியாமலேயே போய் விட்டது, ஸ்பெஷல் ஆளுங்களை கூட கூட்டிட்டு வந்தும் அவனை ஜெயிக்க முடியவில்லை.
இப்படியா ஒருநாள் வெறித்தனமாக விளையாடி வெற்றி களிப்பில் அரபிகளிடம் சொடக்குப் போட்டு சொடக்குப் போட்டு அண்ணே நீ வாரியா மாமா நீ வாரியா மச்சான் நீ வாறியான்னு வரிசையாக கேட்டுகொண்டிருந்தான்.

ஒரு அரபியும் விளையாட முன்வரவில்லை....லைனாக வாறியா வாறியான்னு கேட்டவன் என்னைக் கண்டதும் நீ வாறியான்னு கூப்பிட்டான் [[அவன் நல்லநேரம் அப்பவே ஆரம்பம் ஆகிவிட்டது]]
சரி சொல்லிட்டு விளையாட்டை ஆரம்பிச்சேன், மொத்த அரபிகளின் முன்பு இந்தியர்கள் நாங்கள் விளையாட்டை தொடங்க ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்...

என் நல்ல நேரமோ இல்லை அவன் கெட்ட நேரமோ, அவன் நல்ல நேரமோ இல்ல என் கெட்ட நேரமோ தெரியல....பயபுள்ள ஒரு பால் போடவும் நான் எனது பால் மொத்தத்தையும் உள்ளே தள்ளிவிட்டு கருப்பு போல் எந்த பாக்கெட்டுல போடணும்னு அவன்கிட்டே கேட்டுட்டு உள்ளே போட அவன் மலைத்துப் போனான்.
அரபிகள் ஆரவாரமாக வந்து என்னைக் கட்டிப்பிடிக்க பயபுள்ளைக்கு ஒரு மாதிரியாக ஆகிவிடவே, பில்லை செட்டில் செய்துவிட்டு போனவன்தான் அதற்க்கு பிறகு ஆளையே காணோம்.

ஒருநாளும் பில்லியார்ட்ஸ் விளையாடி நான் ஜெயிச்சதே கிடையாது என்பது எனக்குத் தெரிந்த உண்மை...!
அதுல ஒரு பாடம் படிச்சேன், வெற்றி களிப்பு வெறியாக மாறிவிட்டால் அவமானம்தான் என்பது நன்றாக மனதுக்குள் உரைத்தது. வெற்றி என்றும் நமது கையில் இருப்பதில்லை அது ஒருவர் மாற்றி ஒருவர் பக்கம் போய்க்கொண்டேதான் இருக்கும் இல்லையா...?


19 comments:

  1. அதுல ஒரு பாடம் படிச்சேன், வெற்றி களிப்பு வெறியாக மாறிவிட்டால் அவமானம்தான் என்பது நன்றாக மனதுக்குள் உரைத்தது. வெற்றி என்றும் நமது கையில் இருப்பதில்லை அது ஒருவர் மாற்றி ஒருவர் பக்கம் போய்க்கொண்டேதான் இருக்கும்....

    உண்மை...

    ReplyDelete
  2. ஆர்வத்தோடு விளையாடி வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தவரின் மனநிலையை நினைப்பது மிகப்பெரிய வெற்றி...

    ReplyDelete
  3. நேரம் கிடைப்பின் வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Pain-Gain.html

    ReplyDelete
  4. வெற்றிகள் மகிழ்வைத் தரலாமே தவிர தலைக்கணத்தைத் தரக்கூடாது என்பதை தங்களின் பதிவு உணர்த்துகின்றது, நன்றி

    ReplyDelete
  5. //வெற்றி களிப்பு வெறியாக மாறிவிட்டால் அவமானம்தான்//
    நல்லாருக்கு

    ReplyDelete
  6. தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

    ReplyDelete
  7. வெற்றி என்பது நாணயத்தின் ஒரு பக்கம் அது எப்போதும் ஒரு பக்கமாகவே விழாது

    ReplyDelete
  8. பதவி ( வெற்றியும் கூட சேர்த்துக்கலாம்) வரும் போது
    பணிவு வரவேண்டும்...
    துணிவு வரவேண்டும் தோழா...
    ====
    ஆர்ப்பாட்டமில்லாத வெற்றியின் சுவை..
    நீடித்து நிலைக்கும்....

    ReplyDelete
  9. உண்மைதான்,இப்போதெல்லாம் வெற்றிக் களிப்பு போதையாகி....................வெறியாகி.......எல்லாம் கொஞ்ச நாளைக்கே என்று புரியும்!!!!!!!!!

    ReplyDelete
  10. ஆணவம் அவர் கண்ணை மறைத்துவிட்டது

    ReplyDelete
  11. ஒரு சுவாரஷ்யமான சம்பவம், அதற்குள் ஒரு அருமையான செய்தி...! சூப்பர்!

    ReplyDelete
  12. அண்ணே சூப்பர் எவ்ளோ பெரிய விஷயத்த இவ்ளோ சிம்பிள்ள சொல்லிடிங்க

    ReplyDelete
  13. வெற்றி சந்தோஸம் தரவேண்டும் அது வெறியாக இருக்கக்கூடாது சரியான கருத்தினைச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  14. வெற்றி ஒருவருக்கும் தலைக்கனத்தினைத் தந்து விட்டால் இப்படித்தான்....

    நல்ல பகிர்வு மனோ... வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. என்றைக்கு எந்த சாதனையிலும் பெருமை மறைந்து தான் என்கிற ஆணவம் வருகிறதோ, அன்றைக்கே அந்த சாதனைக்கு இற‌ங்கு முகம் வந்து விடுகிறது. அழகாக, அமைதியாக உங்களள் சாதனையைப்பகிர்ந்திருப்பதற்கு பாராட்டுக்கள்!

    அது ச‌ரி, அத்த‌னை அரே‌பிய‌ர்க‌ள் சூழ்ந்து கொன்டு பாராட்டினார்க‌ளே, வெல்ல முடியாதவனை வென்றிருக்கிறீர்கள், ப‌ரிசு எதுவும் த‌ர‌விலையா உங்க‌ளுக்கு?

    ReplyDelete
  16. அது சரி அரபி என்ன கொடுத்தான்..அல்வா கொடுத்தானா அல்லது அரபி தினார் கொடுத்தானா??

    ReplyDelete
  17. That might not be Billiards. That may be Snooker. Jayakumar.

    ReplyDelete
  18. mika arumaiyaana pakirvu...
    unmai!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!