Tuesday, May 13, 2014

நடிகர்களும் தெய்வம் போலாகலாம்...!


கேப்டனை அன்னைக்கு ஓடி ஓடி போயி ரசிச்சவிங்க எல்லாம் இப்போ கிண்டல் பண்ணுறாங்க, ஒரு பெண்ணின் வாழ்கையை காப்பாற்றியவர் அவர், என்ன ஆச்சர்யமா இருக்கா ?

கேப்டனின் அதி தீவிர ரசிகை, கேப்டன் போலீசாக நடித்து உச்சத்தில் இருந்த நேரம், அந்த ரசிகைக்கு மாப்பிளை பார்க்க, பெண்ணோ எனக்கு போலீஸ் மாப்பிளைதான் வேண்டும் என்று ஒத்தைக்காலில் [[?]] நிற்க...


ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கே பொண்ணை கட்டி கொடுத்தனர், அந்த மாப்பிளை போலீசுக்கு தலை வேதனை சொறியும் பெண் வருகிறதுன்னு தெரியாமல் மாட்டிக் கொண்டார்.

"எதற்கும் கேப்டனையே உதாரணமாக" காட்டி காட்டி நம்ம நிஜ போலீஸை அலற விட்டுருக்கு, பொறுத்து பொறுத்து நொந்த மாப்பிளை போலீஸ்...கஷ்ட்டப்பட்டு கேப்டன் அப்பாயிண்ட் மென்ட் வாங்கி வாம்மா கேப்டனை நேரில் சந்திக்கலாம்ன்னு சொல்ல, குஷியாகிட்டாங்க.


கேப்டனிடம் போனதும் அட்வைஸ் பண்ணி இருக்கார், "நாங்க எல்லாம் நடிகர்கள், உன் மாப்பிளைதான் உண்மையான நிஜ ஹீரோ, வா வந்து சூட்டிங் பார்த்துட்டு போ அப்பத்தான் உனக்கு புரியும்"ன்னு சூட்டிங் ஸ்பாட் கூட்டிப் போனாராம்.


பொண்ணும்  மதி தெளிஞ்சி போனாளாம் !
=================================================================
நம்ம தல அஜித், வீட்டில் அல்லாமல் வெளியே சென்றால் கிளாசில் தண்ணீரோ, ஜூஸ், மற்றும் டீ வகையறாக்களை சாப்பிடும் போது, இடது கையால்தான் குடிப்பாராம், அடுத்தவர்கள் வலது கையால் குடிப்பதால் அவர்கள் வாய் வைத்து குடித்த இடம் மாறிவிடுமாம், எம்புட்டு கழுவினாலும் சிலருக்கு அது அலர்ஜிதான் போல, தல"யும் உஷார் இப்போ நானும் உஷார் அடுத்து நீங்களும் உஷார் !

இன்னுமொரு ஆச்சர்ய செய்தி...

தல கூடவே அசிஸ்டென்ட்டாக இருந்தவன், தல"யின் மிகவும் விசுவாசமுள்ள நண்பன், ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், ஆனால் பெண் வீட்டார் பெண் தர மறுப்பதாகவும் சொல்லி அழ...

தல நேரடியாகவே சம்பந்த பட்ட வீற்றிடம் நேரடியாக போயி பெண் கேட்க, வீட்டார் சந்தோசமாக சம்மதித்து விட்டார்கள் !

பண விஷயங்கள் எல்லாம் அவனை நம்பிதான் எல்லாம் நடக்குமாம், பணம் கையாடல் நடக்கிறது என்று பலமுறை மற்றவர்கள் தல"க்கு சொல்லியும் அவன் மீது இருந்த நம்பிக்கையில் இவர்கள் பொறாமை கொண்டு பொய் சொல்கிறார்கள் என்றே ரொம்ப நாள் எதையும் செக் பண்ண வில்லையாம் !
மற்றவர்கள் கோள் மூட்ட மூட்ட அம்மி நகர்ந்தது, ஏகப்பட்ட கையாடல்கள், இதற்கிடையே அவனின் கல்யாண பத்திரிக்கையும் வந்தது, 

கல்யாணத்தன்னைக்கு அங்கே சென்று மணமக்களை வாழ்த்தி விட்டு மணமகன் கிப்ட்டாக கையில் ஒரு பார்சலை கொடுத்துவிட்டு தல வந்துவிட்டாராம்.

முதலிரவில் மற்றது நடக்குமுன் அந்த கிப்ட் பார்சலைதான் ஆர்வமுடன் திறந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி கூடவே இன்பமும்...

ஆம் கவருக்குள் இருபது லட்சம் ரூபாயும் ஒரு பேப்பரில் "வேறே வேலை தேடிக்கொள்" என்றிருந்ததாம் !

அதான் தலைக்கு இம்புட்டு மாஸ் போல இல்லையா ?!

11 comments:

 1. கேப்டன் கேப்டன் தான், தல தல தான்....

  ReplyDelete
 2. நாங்களும் இனி உஷார்...

  தல மாஸ் தான்...

  ReplyDelete
 3. கேப்டன் பலருக்கும் உதவி செய்த நல்லவர். இன்னைக்கு எல்லாரும் அதை மறந்துட்டாங்க.

  ReplyDelete
 4. நடிகர்களை திட்டி/பழித்து கூறுபவர்களின் மத்தியில் இந்த பதிவு மிக்க நன்று....

  ReplyDelete
 5. புதுப்புது தகவலெல்லாம் தாறீங்க.

  ReplyDelete
 6. கேப்டன் தூக்கிவிட்ட பலர் இன்று அவர் மீது சேறு பூசுகின்றார்கள்§ தல எப்போதும் இன்பமும் துன்பமும் ஒன்றாக சினிமாவில் பார்த்த் ஒரு மாஸ்§ இனி நானும் உசார் தண்ணி போல கோப்பி குடிப்பதில்!ஹீ

  ReplyDelete
 7. தல.. நியுஸ் கலக்கல் அண்ணே!

  ReplyDelete
 8. தல குறித்த தகவல்கள் கலக்கல்! கேப்டன் நியுஸ் கேள்விப்பட்டு இருக்கேன்! நன்றி!

  ReplyDelete
 9. தல பற்றிய தகவல்களும், கேப்டன் பற்றிய தகவலும் நன்று...

  ReplyDelete
 10. ஹாய்,மனோ!எப்புடி இருக்கீங்க?///நல்ல சுவை.///தல......தல தான்!

  ReplyDelete
  Replies
  1. நல்லா இருக்கேன் நீங்க நலமா ?

   Delete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!