Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Tuesday, May 13, 2014

நடிகர்களும் தெய்வம் போலாகலாம்...!


கேப்டனை அன்னைக்கு ஓடி ஓடி போயி ரசிச்சவிங்க எல்லாம் இப்போ கிண்டல் பண்ணுறாங்க, ஒரு பெண்ணின் வாழ்கையை காப்பாற்றியவர் அவர், என்ன ஆச்சர்யமா இருக்கா ?

கேப்டனின் அதி தீவிர ரசிகை, கேப்டன் போலீசாக நடித்து உச்சத்தில் இருந்த நேரம், அந்த ரசிகைக்கு மாப்பிளை பார்க்க, பெண்ணோ எனக்கு போலீஸ் மாப்பிளைதான் வேண்டும் என்று ஒத்தைக்காலில் [[?]] நிற்க...


ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கே பொண்ணை கட்டி கொடுத்தனர், அந்த மாப்பிளை போலீசுக்கு தலை வேதனை சொறியும் பெண் வருகிறதுன்னு தெரியாமல் மாட்டிக் கொண்டார்.

"எதற்கும் கேப்டனையே உதாரணமாக" காட்டி காட்டி நம்ம நிஜ போலீஸை அலற விட்டுருக்கு, பொறுத்து பொறுத்து நொந்த மாப்பிளை போலீஸ்...கஷ்ட்டப்பட்டு கேப்டன் அப்பாயிண்ட் மென்ட் வாங்கி வாம்மா கேப்டனை நேரில் சந்திக்கலாம்ன்னு சொல்ல, குஷியாகிட்டாங்க.


கேப்டனிடம் போனதும் அட்வைஸ் பண்ணி இருக்கார், "நாங்க எல்லாம் நடிகர்கள், உன் மாப்பிளைதான் உண்மையான நிஜ ஹீரோ, வா வந்து சூட்டிங் பார்த்துட்டு போ அப்பத்தான் உனக்கு புரியும்"ன்னு சூட்டிங் ஸ்பாட் கூட்டிப் போனாராம்.


பொண்ணும்  மதி தெளிஞ்சி போனாளாம் !
=================================================================
நம்ம தல அஜித், வீட்டில் அல்லாமல் வெளியே சென்றால் கிளாசில் தண்ணீரோ, ஜூஸ், மற்றும் டீ வகையறாக்களை சாப்பிடும் போது, இடது கையால்தான் குடிப்பாராம், அடுத்தவர்கள் வலது கையால் குடிப்பதால் அவர்கள் வாய் வைத்து குடித்த இடம் மாறிவிடுமாம், எம்புட்டு கழுவினாலும் சிலருக்கு அது அலர்ஜிதான் போல, தல"யும் உஷார் இப்போ நானும் உஷார் அடுத்து நீங்களும் உஷார் !

இன்னுமொரு ஆச்சர்ய செய்தி...

தல கூடவே அசிஸ்டென்ட்டாக இருந்தவன், தல"யின் மிகவும் விசுவாசமுள்ள நண்பன், ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், ஆனால் பெண் வீட்டார் பெண் தர மறுப்பதாகவும் சொல்லி அழ...

தல நேரடியாகவே சம்பந்த பட்ட வீற்றிடம் நேரடியாக போயி பெண் கேட்க, வீட்டார் சந்தோசமாக சம்மதித்து விட்டார்கள் !

பண விஷயங்கள் எல்லாம் அவனை நம்பிதான் எல்லாம் நடக்குமாம், பணம் கையாடல் நடக்கிறது என்று பலமுறை மற்றவர்கள் தல"க்கு சொல்லியும் அவன் மீது இருந்த நம்பிக்கையில் இவர்கள் பொறாமை கொண்டு பொய் சொல்கிறார்கள் என்றே ரொம்ப நாள் எதையும் செக் பண்ண வில்லையாம் !
மற்றவர்கள் கோள் மூட்ட மூட்ட அம்மி நகர்ந்தது, ஏகப்பட்ட கையாடல்கள், இதற்கிடையே அவனின் கல்யாண பத்திரிக்கையும் வந்தது, 

கல்யாணத்தன்னைக்கு அங்கே சென்று மணமக்களை வாழ்த்தி விட்டு மணமகன் கிப்ட்டாக கையில் ஒரு பார்சலை கொடுத்துவிட்டு தல வந்துவிட்டாராம்.

முதலிரவில் மற்றது நடக்குமுன் அந்த கிப்ட் பார்சலைதான் ஆர்வமுடன் திறந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி கூடவே இன்பமும்...

ஆம் கவருக்குள் இருபது லட்சம் ரூபாயும் ஒரு பேப்பரில் "வேறே வேலை தேடிக்கொள்" என்றிருந்ததாம் !

அதான் தலைக்கு இம்புட்டு மாஸ் போல இல்லையா ?!

Tuesday, May 22, 2012

ராஜாக்கலு வந்துலு, ராஜாக்கலு போயிலு....!!!

நேற்றைய தொடர்....


விபத்தில் கப்பல்கள் கடலில் மூழ்க நேரிட்டால், கப்பல் முங்கிய ஒரு மணி நேரத்தில் லைஃப் ராப்ட் எனப்படும் ரெண்டு பேர் அமரும் [[கார்களில் இருப்பது போன்று]] ரப்பர் போன்ற ஒன்று நிறைய ஆட்டோமேடிக்காக வெளியே வருமாம் அதில் ஏறி அமர்ந்து அடுத்த கப்பலோ, ஹெலிகாப்டர் மூலமாக தப்பித்து கொள்ளலாம், இதை து . கணேசன் அவரின் நண்பர் அதில் ஏறி உயிர் பிழைத்ததை சொல்லி உள்ளார்...!!!

சரி இனி அந்த ஆந்திரா'காரனை பார்ப்போம்....

இவன் இன்னொரு கப்பலில் இருந்து கிருஷ்ணாவின் கம்பெனி கப்பலுக்கு புதியதாக வந்திருக்கிறான், நல்ல குடிப்பழக்கம் உண்டாம் [[இல்லைன்னாலும்]] இங்கே வந்தவனுக்கு இங்கே இருக்கும் சக ஊழியர்களுக்கும் இவனுக்கும் ஒத்துபோகவில்லை, எல்லாமே முரணாக இருக்கவே, தலைகால் தெரியாமல் குடித்து விட்டு சலம்பல் பண்ணவே, சக ஊழியர்கள் அவனை பிடித்து கை கால்களை கட்டி போட்டு விட்டார்கள்.


கொஞ்சநேரம் கழித்து பாவம் என கட்டை அவிழ்க்கவும், ஓடிப்போயி கடலில் குதித்து விட்டான். உடனே சின்ன போட்'டில் போயி காப்பாத்தி கொண்டு வந்து கப்பலில் ஏற்ற, தொடர்ந்து தெலுங்கில் திட்டோ திட்டு என்று எல்லாரையும் திட்ட அங்கே தூத்துக்குடி அண்ணாச்சி ஒருவரும் இருக்க, அவரையும் அவர் பரம்பரையையே இழுத்து திட்டி இருக்கிறான்.


கோவம் வந்த அண்ணாச்சி, அவனை மறுபடியும் கடலில் தூக்கி வீச, கண்ட்ரோல் ரூமில் இருந்த கஸ்டம்ஸ் ஆட்கள் பார்த்துவிட, ஓடி வந்து காப்பாற்றி விட்டு கேஸ் எழுத கப்பலை விட்டு எல்லாரையும் வெளியே கொண்டு வரவும், அங்கே கிருஷ்ணா என்ட்ரி ஆகவும், தூத்துக்குடி அண்ணாச்சி காப்பாத்தும்படி அலற, இவன் அந்த ஆபீசர்களுடன் பேசி [[கவனித்து]] கேஸை இல்லாமல் செய்து, ஆந்திராக்காரனை மெண்டல் என்று சொல்லி ஆஸ்பத்திரி கூட்டிப்போகவும் அடுத்தநாள் அவனை ஊருக்கு அனுப்பவும் வெளியே கொண்டு வந்தான்.


அங்கேதான் ஏழரை சனி கிருஷ்ணாவுக்கு காத்திருந்தது, வெளியே வந்ததும், ரோட்டில் நின்று எல்லாரையும் திட்டோ திட்டு என்று திட்ட, ரெண்டுபேர் அவனை மடக்கி பிடித்தும் அவன் அசராததால் கிருஷ்ணா போயி ஒரு அப்பு அப்பிய பின் கொஞ்சம் அடங்கி இருக்கிறான், ஆனாலும் திமிர, எனக்கு இப்பமே சரக்கு வேணும்னு அலற ஆறு குவாட்டர்களை போதாது போதாதுன்னு வாங்கி குடிச்சும் மயங்கவில்லை அண்ணாகாரு...!!!

அவனை விடவும் முடியாது, விட்டால் எங்கேயாவது ஓடிவிடுவான் [[கிருஷ்ணாதான் உத்திரவாதி]] நாளைவரை இவனை பாதுகாத்து அனுப்பினாலே போதும், என்ன பண்ணலாம்னு யோசித்தவன் நேரே ஜெ ஜெ ஆஸ்பிற்றல் கொண்டு போக அங்கே நோ சான்ஸ் சொல்ல [[பேஷன்ட் நிலைமை அப்பிடி]] கிருஷ்ணாவின் கம்பெனி ஆஸ்பிற்றல் கொண்டு போனால் அங்கே டாக்டர் இல்லை நர்ஸ் மட்டுமே இருக்க...


சிஸ்டர் இவனை இன்று ராத்திரி மட்டும் ஒரு ஊசி போட்டு தூங்க வையுங்க என கிருஷ்ணா கெஞ்ச, நர்ஸ், அய்யய்யோ இவன் ஏற்கனவே கப்பல்ல இருந்து காஞ்சிபோயி[!] வந்துருப்பான் நான் வேற தனியா இருக்கேன் முடியாது என்று அலற, வேறே ஒரு தனியார் ஆஸ்பிற்றல் போயி சம்திங் நிறைய கொடுத்து, உறக்கம் ஊசி போடவைக்கும் போது.....

ஊசி போட்ட டாக்டர் சொல்லி இருக்கார் இந்த ஊசி போட்டதும் பெட்டில் படுக்க வைத்து விடுங்கள் இல்லைன்னா தூக்கிட்டுதான் போகனும்னு [[மருந்து பவர் அப்பிடியாம்]] சொல்ல, ஊசி போடப்பட்டது ஆனாலும் அண்ணாகாரு அசையலையாம், டாக்டர் நொந்து போனார் கிருஷ்ணாவுக்கு சிரிப்போ சிரிப்பு [[அந்த ரகளையிலையும்]]
கிருஷ்ணாவும் நானும்.

மறுபடியும் டோஸ் கூடுதலா ஏற்றி மற்றொரு ஊசி போட்டப்புறம்தான் நிறைய புலம்பலோடு படுத்துள்ளான், கிருஷ்ணா எஸ்கேப்....!!

டிஸ்கி : இன்னும் நிறைய கேரக்டர்கள் இருக்கு அண்ணே நேரம் வரும்போது ஒவ்வொன்றாய் சொல்றேன்னு சொன்னான் கிருஷ்ணா.....[[நன்றி தம்பி]]

டிஸ்கி : நாளை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின், கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபுரம் அரண்மனை பற்றி நீங்கள் அறியாத பல தகவல்களுடன், விஜயனின் கைவண்ண போட்டோக்களுடன் வெளி வரும்.


Tuesday, May 15, 2012

மும்பை டெரரிஸ்ட்களின் திட்டம் நிறைவேறிய இன்னொரு அதிர்சி தகவல்...!!!

கடல் மனிதர்கள் [[sea mans]] பற்றி நாம் எல்லாருக்கும் சரியா தெரியுமா தெரியாதான்னு தெரியாது, எனவே நான் வாசித்த புத்தகங்களில் இருந்தும் நண்பர்களின் அனுவங்களில் இருந்தும் நேரில் சந்தித்தவர்கள் பற்றியும் என்னால் முடிந்தவரை சொல்லுகிறேன், இவர்களை பற்றி எழுதுங்க அண்ணே என்று சொல்லி தன் சொந்த அனுபவங்களையும் நண்பன் கிருஷ்ணா சொல்ல சொல்ல கிரகித்து கொண்டேன்.


மும்பை ஒபேரா ஹோட்டல்.

கிருஷ்ணா மும்பையில் ஒரு கப்பல் கம்பெனியில் மேனேஜராக இருப்பதால் இந்த கடல் மனிதர்கள் பற்றி நிறைய தெரிந்து வைத்துள்ளான்....!! அவன்தான் நேற்று போன் செய்து அண்ணே கொலாபா, நரிமன் பாயிண்ட், கப்பல் துறைமுகம் எல்லாம் சுற்றி பார்க்கலாம் வாங்க அண்ணே என்று உரிமையுடன் அழைத்து [[இழுத்து]] சென்றான்.

நண்பன் கிருஷ்ணா.

முதலில் சென்றது நரிமன்பாயின்ட் கடற்கரை, ஏற்கனேவே பார்த்தது என்றாலும் இப்போதும் அந்த இடம் அருமையான லோகேஷனாகவே இருக்கிறது, நெஞ்சினிலே படத்தில் டாக்டர் விஜய் அழுது அழுது காதலில் உருகி இந்த கடற்கரை படியில் அமர்ந்துதான் பாடுவார். இன்னும் அநேக ஹிந்தி, தமிழ், தெலுங்கு பட சூட்டிங்குகள் இங்கே நடைபெறுகிறது, அது மட்டுமா காதல் ஜோடிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஜெக'ஜோதி'யாக சுற்றி திரிகிறார்கள்...!!!

சிட்டுகள் ஜாலியாக...

ஏற்கனவே மும்பை வெயிலில் தகிக்க அந்த கடல் காற்று உடம்பை வருடிய சுகம் அருமை, கடலோரம் வாங்கிய காற்று சுகமாக இருந்தது'ன்னு சத்தமாக நான் பாட, எங்களை கூட்டி வந்த மராட்டி கார் டிரைவர் ஒரு மாதிரியாக பார்க்க......நான் பொத்தி கொண்டேன் வாயை.....!!!


நிறைய போட்டோ கிராபர்கள் மாடலிங் குட்டிகளை கூட்டிகொண்டு வந்து போட்டோ ஆல்பம் ரெடியாக்கி கொடுக்கிறார்கள், நடிகையாவதற்க்கு என்பதை புரிந்து கொண்டேன்...!!! குடும்பம் குடும்பமாக வந்து கடல் காற்றை ருசித்து செல்கிறார்கள், மும்பை ஜூ பீச் கடலை பார்த்தீங்கன்னா ஒரே குப்பை கூளமாக இருக்கும், கடல் நீரும் அநியாயத்துக்கு சாக்கடை கலந்தே இருககும்...!!!

சுத்தமான கடல்நீர்...!!!

ஆனால் இங்கே கடல் நீர் சுத்தமாக அழகாக இருந்தது. எல்லாவற்றையும் நான் ரசித்து கொண்டிருக்கும்போதுதான் கிருஷ்ணா ஒரு குண்டை தூக்கிப்போட்டான், அண்ணே மும்பை தாஜ் ஹோட்டல் தீவிரவாத தாக்குதல் நடந்ததே, அந்த தீவிரவாதிகள் கப்பலில் இருந்து [[இடங்களை காட்டுகிறான்]] சின்ன போட்டுக்கு மாறி அதோ தெரியுதே ஒரு மீனவ குப்பம் அந்த வழியாக வெளியேறி ரெண்டு ரெண்டு பேராக பிரிந்து சென்றுதான் கொலைவெறி தாண்டவமாடினார்கள், 

தீவிரவாதிகள் கப்பலில் வந்து சின்ன போட்டுக்கு மாறிய கடல் பகுதி அதாவது கப்பல்கள் நிற்கும் இடம்.

பக்கத்தில் அதோ தெரியுதே ஒபேரா ஹோட்டல் அங்கேயும் புகுந்து தாக்கினார்கள் என்று ஒவ்வொன்றாக அவன் சொல்லிகொண்டிருக்கும் போதே எனக்கு பலமாக இன்னொரு சந்தேகம் வந்தது ஆமாம் பல தீவிரவாதிகளை ஊடுருவ வைத்துவிட்டு இவர்கள் போலீசையும் அரசாங்கத்தையும் திசை திருப்பி விட்டார்களோ என்று, காரணம் அந்த கப்பல் நிற்கும் இடமும் வின்ஜ் அல்லது போட்டுகள் தாராளமாக நடமாடுவதையும் பார்க்கும் போது அப்படிதான் தோன்றியது....!!

தீவிரவாதிகள் கரையேறி ரெண்டு ரெண்டு பேராக பிரிந்து சென்ற மீனவ குப்பம். 

கிருஷ்ணாவிடம் சொன்னேன், ஆனால் அவன் அதை கடுமையாக மறுத்தான் இல்லை அண்ணே இல்லவே இல்லை இதுல படுபயங்கரமான ஒரு அரசியல் இருக்கு, தீவிரவாதிகள் வந்த நோக்கத்தை கன கச்சிதமாக முடித்து விட்டார்கள் அது, மும்பை குண்டு வெடிப்பில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பதை, ஒரு வாரத்தில் இன்வெஸ்டிகேஷன் முடித்து, அந்த பிரமுகர்கள், அரசியல்வாதிளை அம்பலபடுத்த ரெடியாக, எவ்வளவோ பன்முக மிரட்டல் வந்தும் பயப்படாமல் அனைவரையும் நீதிக்கு முன் நிறுத்துவேன் என்று சபதமெடுத்து காத்திருந்த ஒரு தைரியமான போலீஸ் அதிகாரி டி ஐ ஜி'யை போட்டுதள்ளதான் இந்த அநியாயமான நாடகம் நடந்தது.....!!!

இதுவும் கப்பல்கள் நிற்கும் கடல் பகுதிதான்.

நான் அதிர்ந்து போனேன் என்னைய்யா சொல்ற அதுக்காக இன்னொரு நாட்டில் இருந்து டெரரிஸ்டை கொண்டு வரனுமா...? ஆமா பின்னே மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துல அந்த நாட்டுக்காரன் சம்பந்தமும் இருக்கே அண்ணே யோசிச்சு பாருங்க....???

நான் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....................யாரந்த அதிகாரி.......??? நாளைய பதிவில் தொடரும் மற்றும் கடல் வாழ் மக்கள் பற்றியும்......!!!

Saturday, November 5, 2011

அண்ணன் வைகோ'வின் ஆவேசம்.....!!!!

கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்புக்கு ஆதரவாக அண்ணன் வைகோ உண்ணாவிரதம் இருந்தார். அப்போது எடுத்த சில புகைப்படங்களை நண்பன் கூடல்'பாலா எனக்கு மெயிலில் அனுப்பியுள்ளார், அல்லாமலும் வைகோ பேசிய உரைகளை வீடியோ மூலம் பார்க்க விரும்புவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்...!!!

http://www.youtube.com/watch?v=64xigegkhyQ&feature=share







இன்னைக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அணுமின் நிலையத்தை சுற்றி பார்க்க போயிருக்கிறார் ஆனால் போராட்டம் நடத்தும் மக்களை போய் பார்க்கும் திட்டம் அவர் பயணத்தில் இல்லை...!!! அழிக்கும் சக்தியை கண்டுபிடிக்கும் இவர்கள், மக்களை பாதுகாக்கும் விஷயத்தில் "முட்டை"யாக இருப்பது ஏன்??? ஆச்சர்யமாக இருக்கிறது....!!!

டிஸ்கி : என் உயிர் இஸ்லாமிய நண்பர்களுக்கு என் இனிய ஈத் முபாரக் வாழ்த்துக்கள்....

படங்களுக்கு நன்றி : கூடல்பாலா.



நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!