நம்ம அரசனின் "இண்டமுள்ளு" விளம்பரம் அடிக்கடி கண்ணில் பட்டாலும், சிலதை ஷேர் செய்துவிட்டு ஒதுங்கி நின்றதுண்டு, காரணம் எல்லார் மாதிரியும்தான், வாசிப்புத் தன்மை, பொறுமையெல்லாம் சுத்தமா கொறஞ்சி போனதுதான் உண்மை !
நேற்று இலியாஸ் அபுபக்கரின் [பேஸ்புக்] பதிவு பார்த்துட்டு என்னமோ வித்தியாசமா இருக்கும் போலன்னு விளையாட்டா அந்த புஸ்தகத்தை கூரியர்ல அனுப்புய்யான்னு சொன்னேன், அவர்கிட்டே பிடிஎப் பைல்ல இருந்துருக்கு.
"அண்ணே...அனுப்புறேன் ஆனால் அதற்குண்டான காசு அரசன் கையில போயி சேரனும், இல்லைன்னா கொலைகாரனா மாறிடுவேன்"ன்னு பாசத்துல சொல்லி, மெசேஜ்ல அனுப்பி வச்சார்...
டியூட்டில சமயம் கிடைத்தபோது, இதுல என்ன இருக்கப்போகுதுன்னு நினைத்து [யாருலேய் கல்லெடுக்குறது ?] மெதுவாக இண்டமுள்ளை விரித்தேன்...
"பெருஞ் சொம" பாகம்..... அப்பிடியே "கருவாச்சி காவியம்" மாதிரி அப்பிடியே உள்வாங்கி இழுத்துப் போட்டுருச்சு, ஆத்தீ, இதையாடா மிஸ் பண்ணுனேன்னு மனசு அலறிக்கிட்டு இருக்கு...அதில் வரும் நாயகனைப்போல [மருதன்] நம்ம மனசும் துடிக்குது பார்வதிக்காக...
சும்மால்ல, நான்குநாள் பேஸ்புக் வராம இலியாஸ் இதை தொடர்ந்து வாசிச்சது, இந்த கிராமத்திய அழகுதான், அருமை அருமை...நெஞ்சை தொட்டுவிட்டது அரசன், வாழ்த்துக்கள்...
"அண்ணே காசு காசுன்னு நான் சொல்றது நூறு இருநூறு பணத்துக்காக அல்ல, இந்தப் படைப்பாளிக்கு நாம் அளிக்கும் கவுரவம் என்பதை மறந்திராதீங்க"ன்னு இலியாஸ் சொன்னது சத்தியமான உண்மை ! [நான் மறுபடியும் சென்னை போகும்போது என் கையாலேயே பணம் கொடுத்துருதேன் சாமி]
சென்னை போயிருந்தபோது, டிஸ்கவரி புக் பேலஸில் வேடியப்பன் அண்ணனின் ஒரு பதிவர் சந்திப்புக்காக நண்பர்கள் அழைத்து சென்றபோது அரசனை நேரில் சந்தித்துப் பேசினேன், அதிர்ந்து பேசாத குணம், பச்சை குழந்தை போல பவ்யமாக காட்சி அளித்தார், இப்பிடி உள்ளே புயல் இருக்குமென்று நினைத்துக் கூட பார்க்கவில்லை, வாவ்...!
கருவாச்சி காவியத்திற்கு பிறகு, கிராமிய மணம் கமழும் இண்டமுள்ளு, நம்ம அரசனை "மண்வாசனையின் அரசனாக" உயர்த்தி விட்டது...வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அரசன்...!
வாசிக்க வாசிக்க அதன் ருசியை உங்களுக்கும் தருவேன்...
என்னையே அசைத்து போட்டுவிட்டது அந்த கிராமிய மணம்
ReplyDeleteவாவ் அருமை அருமை...!
Deleteஅரசனுக்கு வாழ்த்துக்கள்....
ReplyDeleteஅடுத்த முறை போகும்போது தான் வாங்க வேண்டும்.
ReplyDeleteஅரசனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
சென்னைக்குபோகும் போதுதான் வாங்கனும்.அரசனுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅரசனின் மண் மணம் கமழும் படைப்பு நானும் வாசித்து அசந்து பதிவு இட்டுள்ளேன்!
ReplyDeleteநான் மறுபடியும் சென்னை போகும்போது என் கையாலேயே பணம் கொடுத்துருதேன் சாமி-----------------------நேர்ல பாத்தபோது காசு கொடுத்தியளா....???எழுத்தாளர் பாவம் சும்மா விடாது... ஹுக்க்ஹூம்....
ReplyDelete