Showing posts with label கண்டனம். Show all posts
Showing posts with label கண்டனம். Show all posts

Thursday, January 24, 2013

எங்கள் அண்ணன் கமலுக்கு ஆதரவான அவசர பதிவு இது...!


கமலஹாசனுக்கு என் முழுமனதான ஆதரவை நாஞ்சில்மனோ வலைத்தளம் சார்பாக சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்...
என்னதான் அவரை நாங்கள் கிண்டல் செய்தாலும் அவரை நாங்கள் மிகவும் ரசிப்பவர்கள், நேசிப்பவர்கள் இது எங்கள் நட்பு வட்டங்களுக்கு நன்றாகவேத் தெரியும் அவர் சினிமா மீது காட்டும் ஆர்வம கண்டு மனம் சிலாகிப்பவர்கள் நாங்கள்.....

இடையில மார்கெட் பிடிக்க அவர் சில கொல்மால்கள் செய்வதுண்டு, இது எல்லாருமே செய்வதுதான் இருந்தாலும்.....இந்தமுறை அந்த மார்க்கெட்டுக்கு வரவேர்ப்பில்லாமல் போனது என்னமோ உண்மை, ஆனாலும்...

இந்த தடை....[[திட்டமிட்ட சில நயவஞ்சகர்களின் செயல்கள் என்பது கமலின் வாய்ஸ் ஸ்லாங்கில் நல்லாவே புரிகிறது தெரிகிறது]]

நாஞ்சில்மனோ வலைத்தளம் இதை "சகிக்காமல்" தன் கண்டனத்தை பதிவு செய்கிறது...

கமலஹாசனை குறி வைக்கும் பதர்களுக்கு, உலகம் உங்களுக்கு தெரியாதடா மானிடா நீ என்னப்படித்தாலும் என்றே சொல்லத் தோன்றுகிறது....

ஒரே ஒரு போட்டோ ஆதாரம் போட்டேன்னு வச்சிக்கோங்க உங்க டண்டனக்கா டிண்டனக்கா ஆகிரும்....

கலையை ரசிப்போம் உண்மையை பரிஷ்கரிப்போம் இதுதாண்டா மனுஷன் இல்லைன்னா நீ ப்பூப்பூப்பூப்ப்...

போங்கடா கொய்யால.....

எங்க அண்ணன் கமலுக்கு இது ஒன்னும் புதுசு இல்லை போ...போ...போ...போ....போய்யா....உன்னைப்போல பலபேரை பார்த்தவன் அவர்...

இன்னுமொன்னு ராசா....கமல் ரஜினியல்ல நியாபகம் இருக்கட்டும்...!

உண்மையை சொல்லனும்னா நெஞ்சில மாஞ்சா வேணும்ய்யா...!

எங்க அண்ணன் எல்லா மதத்தையும் மதிப்பவன்ய்யா எத்தனையோ முறை சொல்லி நொந்து போயிட்டார் போங்கடா....!

மோதுறவன் தைரியமா வந்து மோது....


Sunday, March 25, 2012

அரசின் அடக்கு முறைக்கு ஒரு அளவில்லையா...?

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின்மீது அரசின் ஒடுக்குமுறையை கண்டித்து பத்திரிகையாளர் சந்திப்பு
இடம்:பத்திரிகையாளர் மன்றம்.
நாள் - 22-03-2012, வியாழன்

அருள் எழிலன் கருத்துரை 

http://www.youtube.com/watch?v=GvLotfwKFu4

பா.செயபிரகாசம் கருத்து

http://www.youtube.com/watch?v=-58prUXyMns

அ.மார்க்ஸ் கருத்து

http://www.youtube.com/watch?v=vE2ijK_wbUU

மனுஷ புத்திரன் கருத்து

http://www.youtube.com/watch?v=b4N9fKEfSrY

சீனிவாசன் கருத்து

http://www.youtube.com/watch?v=rvYwlajDtQw

ஞானி கருத்து

http://www.youtube.com/watch?v=CsGzeRaF7dM

பாஸ்கர் சக்தி கருத்து

http://www.youtube.com/watch?v=wQfX0U1oSFc

அஜயன் பாலா கருத்து

http://www.youtube.com/watch?v=r7a723CSzag

அமுதன் கருத்து

http://www.youtube.com/watch?v=O7n0n8RcC1w

சுந்தர்ராஜன் கருத்து

http://www.youtube.com/watch?v=aWmDNUJ2Cfw

கேள்வி பதில் - சலசலப்பு

http://www.youtube.com/watch?v=GIA_l74MTUM

http://thamizharparai.blogspot.in/2012/03/blog-post_23.html

தமிழர் பறை நண்பர்கள் எனக்கு அனுப்பிய மெயில்இது......!

Wednesday, March 21, 2012

காந்தி தேசமே காவல் இல்லையா நீதிமன்றமே நியாயம் இல்லையா, இது அகிம்சை செத்துப்போன நாடா...???!!!

கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்யும் தினமலர் பத்திரிக்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், ரஷ்யா நாட்டில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு கண்மூடித்தனமாக இல்லாதவைகளை எழுதி வருகிறதை வன்மையாக கண்டிக்கிறோம்....!!!



இதென்ன அநியாயமான அநாகரீகமான அடக்குமுறை, இது காந்தி தேசமா இல்லை சிங்களன் தேசமா...? அகிம்சையாக போராட்டம் நடத்தும் சொந்த மக்களையே பயமுறுத்தி அச்சுறுத்தும் அரசாங்கம் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை, நீலாம்பரிகள் [[நரிகள்]] புரிந்து கொண்டால் நல்லது....!!!


அணுமின் நிலையம் திறக்கும் பட்சத்தில், தமிழகத்துக்கு முப்பது சதவீதம் மின்சாரம் கிடைக்கும் மீதி எல்லாம் கேரளாவுக்கும் கர்நாடகாவுக்கும் ஆந்திராவுக்கும் கொடுக்கும் ஏற்பாட்டில் அரசாங்கம் செய்யல்படுகிறது, அன்று போராட்டத்துக்கு எதிரானவர்களுக்கும் கரண்ட் கட் நிச்சயம் பார்க்கலாம்....!!!


அமைதியாக போராடும் மக்களுக்கு எதிராக காஷ்மீர் போன்ற மாநிலத்தை போல மாற்ற நினைக்கிறதா இந்த அமைதியை அகிம்சையை விரும்பாத அரசாங்கம்...???


கடந்த தேர்தலில் ஜெயலலிதா முதன் முதல் பிரச்சாரம் செய்த இடம் சாமிதோப்பு [[கன்யாகுமரி மாவட்டம்]] காரணம் அய்யா வைகுண்டரின் பக்தர்களான நாடார் இன மக்களின் ஓட்டை குறிவைத்து போனவருக்கு அம்மக்கள் அமோக ஆதரவு கொடுத்து ஜெயிக்க வைத்தார்கள், ஆனால் அம்மக்கள் எந்த ஊர் மக்கள் என்று அம்மா வகையறாக்களுக்கு தெரியவில்லை, ஆம் அம்மக்கள், அணுமின்நிலையத்துக்காக போராடும், கூடங்குளம் சுற்று வட்டாரத்து மக்களே என்பது எத்தனை பேருக்கு தெரியும், இனி பாராளுமன்ற தேர்தலில் சரியாக பாடம் கர்ப்பிக்கப்படும் ரெண்டு அம்மாக்களுக்கும்....!!!


சங்கரன் கோவில் தேர்தலில் வெற்றி பெற்ற திமிரில் கூடங்குளத்தில் அடக்குமுறை என்னும் அராஜகத்தை கையில் எடுத்து இருக்கிறார் மாண்புமிகு அம்மா, இனியும் ஒரு இடைத்தேர்தல் வராது என்ற தைரியத்தில், அமைதியாக போராடும் மக்களிடம் ஒரு பெரிய போர் நடப்பதாக ஒத்திகை காட்டும் இவர்களுக்கு, மக்களின் பயத்தை பீதியை மாற்றும் படியான விழிப்புணர்வு செய்து காட்டமுடியாத தற்குறி புத்தியை என்னவென்று சொல்ல......!!!!???

Tuesday, March 20, 2012

வான் படை, தரைப் படை, கடல் படை என வித விதமான படைகளுடன் கூடங்குளத்தில் போய் இறங்கி, ஒரு போருக்கு ஆயுத்தமாகியிருக்கும் தமிழக போலீசாருக்கு ஒரு தகவல்.

நம் எத்தனை பேருக்கு தெரியும் பிரபலங்களின் அப்பாக்கள் தாத்தாக்கள் பெயர்கள்...? எங்க அப்பா பெயர் துரைராஜ், தாத்தா பெயர் வேலாயுதம் என்ற வேதமணி, அவர் அப்பா பெயர் சோட்டா, அதுக்கு மேலே எனக்கு தெரியாது.....!!!

தெரியுமா தெரியுமா தெரியுமா தெரியுமா...?????

௧ : சிவாஜி கணேசனின் அப்பாவும், பிரபுவின் தாத்தாவின் பெயர்...?


௨ : எம்ஜியாரின் அப்பா பெயர்...?


௩ : காமராஜரின் அப்பா பெயர்...?


௪ : மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் அப்பா பெயர்..?


௫ : மறைந்த முன்னாள் அமைச்சர் பக்வத்சலம் அப்பா பெயர்...?

௬ : ராஜாஜியின் அப்பா பெயர்...?


௭ : அறிஞர் அண்ணாவின் அப்பா பெயர் [[கலைஞருக்கே தெரியுமோ என்னவோ...???!!!]]


௮ : நகைசுவை நடிகர் என் எஸ் கிருஷ்ணனின் அப்பா பெயர்...?


௯ :  நடிகர் ரஜினியின் அப்பா பெயர்..? [[ரொம்ப முக்கியம் ம்ஹும்]]


௰ : துரோகி கருணாவின் அப்பா பெயர்..? [[வரலாறு முக்கியம்]]


௧௧: சுப்ரமணியன் சுவாமிகளின் அப்பா பெயர்....? [[என்னதான் இருந்தாலும் ஒரு சீரியஸ் காமெடி அரசியல்வாதியை தந்தவர் அல்லவா]]


௧௨ : நடிகர் எம் ஆர் ராதா'வின் அப்பா பெயர்...?


௧௩ : சோனியா பூந்தியின் அப்பா பெயர்...? [[ நீரோ பரம்பரைன்னு மட்டும் தெரியும் எங்களுக்கு]]


௧௪ : சென்னிமலை கொடிகாத்த குமரன் அவர்களின் அப்பா பெயர்...?


௧௫ : பாரதியாரின் அப்பா பெயர்...?


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

அண்ணன் செல்வகுமார் அவர்களின் பேஸ்புக்கில் இன்று நான் பார்த்த எழுத்துக்களை நானும் வழி மொழிகிறேன் கீழே படியுங்கள்....!


வான் படை, தரைப் படை, கடல் படை என வித விதமான படைகளுடன் கூடங்குளத்தில் போய் இறங்கி, ஒரு போருக்கு ஆயுத்தமாகியிருக்கும் தமிழக போலீசாருக்கு ஒரு தகவல்.

கூடங்குளம் என்பது அயல் நாடு அல்ல. அங்கிருப்பவர்களும் நம் மக்களே...
அவர்கள் உங்களை போருக்கு அழைக்கவில்லை!
அவர்கள் தங்கள் அச்சத்தையும், உரிமையையும் முன்னிறுத்தி அமைதியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்!

அணு உலை எதிர்ப்பு என்பது மக்கள் உருவாக்கிய பிரச்சனை அல்ல. இன்றைய சிறிய தேவைக்காக, நாளைய சமுதாயத்தை அழிக்கின்ற அரசுகள் உருவாக்குகின்ற பிரச்சனை.

கூடங்குளத்தில் உங்கள் குடும்பத்தினர் எவராது இருந்தால், இந்தப் போராட்டம் அவர்களுக்கும் சேர்த்தே நடத்தப்படுகிறது.

எனவே அவர்களை பயமுறுத்தி, கலவரம் உண்டாக்கி உங்கள் படைபலத்தை சோதிக்காமல், அமைதிகாக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!
 

டிஸ்கி : மக்கள் மீது திணிக்கப்படும் இந்த சர்வாதிகாரத்துக்கு, இரண்டு அரசுகளும் பதில் சொல்லும்  காலம் வெகு விரைவில்.....!!!


டிஸ்கி : காங்கிரஸ் தலைமையும் அமெரிக்காவுக்கு ஜிஞ்சக் போடுற சிங்கிடிதான் என்பதை ஒருமுறை கூட நினைவூட்டுகிறேன், வெள்ளைக்காரனுக்கு எதிரா போராடி ஒடவச்ச அதே பரம்பரையில் வந்த நாம், ஒரு வெள்ளைகாரியின் கட்டளைக்கு ஆதரவாக ஓடிகொண்டிருக்கிறோம் என்ற உண்மை என்று புரியும் நம் மக்களுக்கு...????!!!!

டிஸ்கி : பயணங்கள் தொடர் நாளை [[ஓடிராதீங்கப்பு]]

தலைப்புக்கு நன்றி அண்ணன் செல்வகுமார்.



Sunday, December 11, 2011

முல்லைப்பெரியார் பற்றி பிரபல பதிவர்களின் கமெண்ட்ஸ்...!!!

முல்லைப்பெரியார் பற்றிய போராட்டங்கள் நடக்கும் இந்த நேரத்தில், நம்முடைய பதிவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை பேட்டி எடுத்து பார்ப்போம்....



திவானந்தா : எலேய் கேரளா தண்ணி தரலைன்னா என் ஹோட்டல்ல ஒரு மலையாளிக்கும் தண்ணி தரமாட்டேன், விக்கிட்டு சாவுங்க....


சிபி : தண்ணீர் தரலைன்னாலும் ஓகே, தந்தாலும் டபுள் ஓகே, என் மானம் சூடு சொரனை எல்லாம் விக்கிகிட்டே கொடுத்துட்டேன், இனி அவன்தான் என் பங்குக்கு பொங்குவான்...வேணும்னா நான் கால்ல விழ ரெடியா இருக்கேன்...


மெட்ராஸ்பவன் : உணர்ச்சி வசப்பட்டு நாம எந்த முடிவும் எடுத்துறப்புடாது, ஏன்னா கேரளாவிலும் நம்மாளுங்க இருக்காயிங்க கவனமா செயல்படனும், இருங்க நான் போயி சாப்புட்டுட்டு வாறேன்..


ஆபீசர் : கடல்ல போற தண்ணிதானே கொஞ்சம் வயித்துக்கும் ஈயலாமே....?

பக்கி ச்சே ச்சீ விக்கி : டேய் கேரளாக்காரன் ஒற்றுமையா இருக்கான்னா, அவர்கள் கொஞ்சம் ஜனத்தொகைதான் ஆனால் தமிழர்களின் ஜனத்தொகையை பார், அதான் ஒற்றுமையா நிக்கமாட்டேங்குரானுக...


கே ஆர் விஜயன் : அரசியல்வாதிகளின் சூழ்ச்சி இது, இரு மாநிலத்தவரும் இதை புரிந்து கொள்ளவேண்டும்...


கருண் : என் ஊர் பக்கத்தில் இருந்த ஒரு மலையாளி கடையை அடித்து நொறுக்கி விட்டார்கள், இது நியாயமா...?


காட்டான் : நம்முடைய உரிமையை என்றுமே அவர்களுக்கு விட்டு கொடுக்கப்டாது அண்ணா....


சம்பத்குமார் : ஏலத்தோட்ட வேலைக்குச் சென்ற தமிழக மக்களை சீண்டிப்பார்த்தவர்களை நடு ரோட்டில் வைத்து சுட்டாலும் தவறில்லை...


வீடு : ஏன் நம்முடைய அரசியல்வியாதிகள் இந்த விஷயத்தில் ஒற்றுமையில்லாமல் இருக்கிறார்கள், இவனுகளையும் விடக்கூடாது...


நண்டு நொரண்டு : நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம் நடத்தலாம்னு இருக்கோம்...


"என் மனவானில்" செல்வி : கேரளாவும் தமிழ்நாடும் சண்டை போட்டுக்கொள்ளாமல், பேசி தீர்க்கவேண்டும் பிரச்சினையை...


ரூஃபினோ : சிறுமிகளை கொடுமை படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன், கேரளா நியாயமாக நடந்து கொள்ளவேண்டும்...


மனசாட்சி : கேரளாவுக்கு, இறைச்சி, பால்பவுடர், அரிசி, காய்கறிகள், ஆடுகள், மாடுகள், மணல்கள் கொண்டு போவதை உடனே நிறுத்தவேண்டும்...


மதுமதி : நல்லதே நடக்கட்டும், சண்டை போடாதீங்கப்பா...

துஷ்யந்தன் : தமிழச்சிகள் மீது கைபோட்டவன் கையை அருத்துவிட்டுதான் பேச்சு வார்த்தையே ஆரம்பிக்கணும்...


மயிலன் : நான் இதைப்பற்றி ஒரு குறும் படம் எடுக்கலாம்னு இருக்கேன்...

நிரூபன் : பாஸ் நானும் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன் பாஸ், அநியாயம் எங்கே நடந்தாலும் நான் அங்கே இருப்பேன் பாஸ்...


கவிதை வீதி சௌந்தர் : நாற்று நட்டாயா களை பறித்தாயா, வயல் அறுத்தாயா, நெல்லை இடித்து பொழித்து அரிசியாக மாற்றினாயா, மானங்கெட்டவனே தண்ணீர் மட்டும் தராமல் நீ உவ்வாவுக்கு எங்கேடா போவீங்க...?


பன்னிகுட்டி : இந்த நாதாரிகளுக்கு கக்கா காப்பி போட்டு குடுத்துற வேண்டியதுதான் வேற வழியே இல்லை...

"சிரிப்பு போலீஸ்"ரமேஷ் : ஒரு கேரளா பெண்ணை கல்யாணம் செய்து கண்கலங்காம காப்பாத்தனும்னு நினைச்சேன், இனி அது கேன்சல்...


"கோமாளி"செல்வா : அண்ணா வேணும்னா நான் போயி கேரளாவுல கொசு மருந்தை தெருவுல அடிச்சி வீட்டுக்குள்ளே போக வச்சிறட்டுமா...?

சென்னை பித்தன் : அவனில்லாமல் அணுவும் அசையாது, டேம் அசஞ்சிருமா என்ன...?


கோமதி அக்காள் : கேரளா என்ற தெய்வத்தின் நாடு இப்படி தறிகெட்டு நடக்கலாமா...??

மேனகா : இவனுகளுக்கு திங்குறதுக்கு இனி களிதான் பொங்கி குடுக்கணும்...

வெங்கட் நாகராஜ் : போச்சுடா, கேரளா சுற்றுப்பயணத்திற்கு ஆப்பு பலமா வச்சிட்டானுகளே...!!!


கக்கு மாணிக்கம் : ஒரு பயலையும் சும்மா விடக்கூடாது, அதேபோல நம்ம அரசியல்வாதிங்க ஒவ்வொருத்தன் வீட்டு தண்ணீர் பைப்புகளை உடைத்து எறியவேண்டும்...

அம்பாளடியாள் : நான் ஒரு கவிதை ஏற்றி அறம் பாடப்போகிறேன் வழியை விடுங்க...


"நாய்நக்ஸ்"நக்கீரன் : நான் வேணும்னா தமிழ்பணம் போயோரிலியை போட்டு தாக்குன மாதிரி போட்டு தள்ளட்டுமா தலைவா...?

சத்திரியன் : சிங்கப்பூர்ல ஒரு மலையாளியும் கண்ணுல அம்புடமாட்டேங்குரானுகளே, கைவேற பலமா அறிக்குது...


அவர்கள் உண்மைகள் : மனோசார் ரெளத்திரம் பழகு என்ற பதிவில் சேட்டனை வெளுத்துவாங்கிய நீங்கள் ஒரு நடை கேரளாவிற்கு போய் சேட்டனிடம் காட்டிய அன்பை அங்குள்ளவர்களுக்கும் காண்பித்து வருமாறு கேட்டு கொள்கிறேன்...


ஆமினா : பெண்களிடம் வீரத்தை காட்டிய மலையாளிகளை நினைச்சாலே அருவருப்பாக இருக்கிறது, தமிழர்கள் என்றால் அவர்களுக்கு அம்புட்டு இளக்காரமா...?

ராஜி : அண்ணே ம்ம்ம்னு சொல்லுங்க அண்ணே இப்பவே அருவாளை தூக்கிட்டு வந்துர்றேன் [[ஆஹா கொலைவெறியா இருக்கே தங்கச்சி]]


ரமணி குரு : கேரளாவுக்கு போகும் பொருட்களை தடை செய்வது என்பது, தமிழக வியாபாரிகளையும் பாதிக்கும் என்பதையும் கொஞ்சம் நினைவு வைத்துக்கொள்ளுங்கள்...!!!

அரசன் : அப்படியே அணை உடைந்தாலும், அந்த தண்ணீர் மலைகளுக்கு இடையில் ஓடி, இடுக்கி அணைக்கே வந்துவிடும் ஒரு பாதிப்பும் இருக்காது...


சூர்யஜீவா : உணர்ச்சி வசப்படாமல் கேரளா மக்கள் யோசித்தால் அவர்களுக்கும் புரியும்... ஆனால் தமிழகமும் புரிய வைக்க முயற்சிக்கவில்லை... கேரளா அரசும் ஆதாயம் தேட பார்க்கிறது.

"தமிழ்தோட்டம்"யூஜின் : கேரளா அரசு ஆரம்பம் தொட்டே நம்மை வஞ்சித்து வருகிறது இனியாவது நாம் விழித்துகொள்வோம்...


ராம்வி : தண்ணீரும் தராமல் ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சு இப்போ பொம்பளை மேலேயே கையை வச்சிட்டானுகளா, இதை இப்போதே ரெண்டுல ஒன்னு பார்த்துரனும்...

"கலியுகம்"தினேஷ் : இதுக்கு ஒரே வழி பாரளும்மன்றத்துல உட்காந்துகிட்டு இருக்குற எம்.பிக்களை கல்லைக்கட்டி தண்ணில எறக்கி விடுங்க எல்லா பிரச்சனைக்கும் வழி பிறக்கும் [[அய் இது நல்ல ஐடியாவா இருக்கே]]


கோகுல் : தமிழ்நாட்டுல இருந்துதான் தண்ணீர் உருவாகி முல்லைபெரியார் அணைக்கு போகுதுன்னா, ஏன் நாமளே ஒரு அணையை கட்டக்கூடாது...?

என் ராஜபாட்டை : அவர்கள் நம்மை வஞ்சிக்கும் போது, நாமும் அவர்களை வஞ்சிப்பதில் தவறில்லை, எல்லா செக்போஸ்ட்டையும் இழுத்து மூடுங்கலேய்...


ஜெய்லானி : இருங்க நான் சவூதி அரசாங்கத்துகிட்டே பேசி அவனுக அந்நிய செலவானிக்கு ஆப்பு வைக்கிறேன்..

மொக்கைமாமா ராசு : காமெடி கிங் அண்ணன் சந்தானம் அவர்கள், டி ராஜேந்தரை கேரளா அனுப்பி கேரளாவை பயமுறுத்த போகிறார் என்பதை மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்..



சிவா : இனி ஒருக்கா தமிழன், தமிழச்சி மேல கையை வச்சீங்க ராஸ்கல் நான் ஷகீலா படத்துக்கு தடை வாங்கிருவேன் ஜாக்கிரதை...


யானைகுட்டி ஞானேந்திரன் : எலேய் தைரியம் இருந்தா ஒத்தைக்கு ஒத்தை வாங்கலேய் பாப்போம்...


வடிவேலை ஒரு சினிமாவில் காலேஜ் ஸ்டுடண்ட்ஸ் எல்லாரும் வரிசையின் நின்னு மண்டையில கொட்டி வீங்க வைப்பான்களே, அப்பிடியே அதை இந்த சிங்கிடி டர்பனை கழட்டிட்டு கொட்டுனா என்னான்னு தோணுது ம்ஹும்...!!!

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!