Tuesday, March 20, 2012

வான் படை, தரைப் படை, கடல் படை என வித விதமான படைகளுடன் கூடங்குளத்தில் போய் இறங்கி, ஒரு போருக்கு ஆயுத்தமாகியிருக்கும் தமிழக போலீசாருக்கு ஒரு தகவல்.

நம் எத்தனை பேருக்கு தெரியும் பிரபலங்களின் அப்பாக்கள் தாத்தாக்கள் பெயர்கள்...? எங்க அப்பா பெயர் துரைராஜ், தாத்தா பெயர் வேலாயுதம் என்ற வேதமணி, அவர் அப்பா பெயர் சோட்டா, அதுக்கு மேலே எனக்கு தெரியாது.....!!!

தெரியுமா தெரியுமா தெரியுமா தெரியுமா...?????

௧ : சிவாஜி கணேசனின் அப்பாவும், பிரபுவின் தாத்தாவின் பெயர்...?


௨ : எம்ஜியாரின் அப்பா பெயர்...?


௩ : காமராஜரின் அப்பா பெயர்...?


௪ : மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் அப்பா பெயர்..?


௫ : மறைந்த முன்னாள் அமைச்சர் பக்வத்சலம் அப்பா பெயர்...?

௬ : ராஜாஜியின் அப்பா பெயர்...?


௭ : அறிஞர் அண்ணாவின் அப்பா பெயர் [[கலைஞருக்கே தெரியுமோ என்னவோ...???!!!]]


௮ : நகைசுவை நடிகர் என் எஸ் கிருஷ்ணனின் அப்பா பெயர்...?


௯ :  நடிகர் ரஜினியின் அப்பா பெயர்..? [[ரொம்ப முக்கியம் ம்ஹும்]]


௰ : துரோகி கருணாவின் அப்பா பெயர்..? [[வரலாறு முக்கியம்]]


௧௧: சுப்ரமணியன் சுவாமிகளின் அப்பா பெயர்....? [[என்னதான் இருந்தாலும் ஒரு சீரியஸ் காமெடி அரசியல்வாதியை தந்தவர் அல்லவா]]


௧௨ : நடிகர் எம் ஆர் ராதா'வின் அப்பா பெயர்...?


௧௩ : சோனியா பூந்தியின் அப்பா பெயர்...? [[ நீரோ பரம்பரைன்னு மட்டும் தெரியும் எங்களுக்கு]]


௧௪ : சென்னிமலை கொடிகாத்த குமரன் அவர்களின் அப்பா பெயர்...?


௧௫ : பாரதியாரின் அப்பா பெயர்...?


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

அண்ணன் செல்வகுமார் அவர்களின் பேஸ்புக்கில் இன்று நான் பார்த்த எழுத்துக்களை நானும் வழி மொழிகிறேன் கீழே படியுங்கள்....!


வான் படை, தரைப் படை, கடல் படை என வித விதமான படைகளுடன் கூடங்குளத்தில் போய் இறங்கி, ஒரு போருக்கு ஆயுத்தமாகியிருக்கும் தமிழக போலீசாருக்கு ஒரு தகவல்.

கூடங்குளம் என்பது அயல் நாடு அல்ல. அங்கிருப்பவர்களும் நம் மக்களே...
அவர்கள் உங்களை போருக்கு அழைக்கவில்லை!
அவர்கள் தங்கள் அச்சத்தையும், உரிமையையும் முன்னிறுத்தி அமைதியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்!

அணு உலை எதிர்ப்பு என்பது மக்கள் உருவாக்கிய பிரச்சனை அல்ல. இன்றைய சிறிய தேவைக்காக, நாளைய சமுதாயத்தை அழிக்கின்ற அரசுகள் உருவாக்குகின்ற பிரச்சனை.

கூடங்குளத்தில் உங்கள் குடும்பத்தினர் எவராது இருந்தால், இந்தப் போராட்டம் அவர்களுக்கும் சேர்த்தே நடத்தப்படுகிறது.

எனவே அவர்களை பயமுறுத்தி, கலவரம் உண்டாக்கி உங்கள் படைபலத்தை சோதிக்காமல், அமைதிகாக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!
 

டிஸ்கி : மக்கள் மீது திணிக்கப்படும் இந்த சர்வாதிகாரத்துக்கு, இரண்டு அரசுகளும் பதில் சொல்லும்  காலம் வெகு விரைவில்.....!!!


டிஸ்கி : காங்கிரஸ் தலைமையும் அமெரிக்காவுக்கு ஜிஞ்சக் போடுற சிங்கிடிதான் என்பதை ஒருமுறை கூட நினைவூட்டுகிறேன், வெள்ளைக்காரனுக்கு எதிரா போராடி ஒடவச்ச அதே பரம்பரையில் வந்த நாம், ஒரு வெள்ளைகாரியின் கட்டளைக்கு ஆதரவாக ஓடிகொண்டிருக்கிறோம் என்ற உண்மை என்று புரியும் நம் மக்களுக்கு...????!!!!

டிஸ்கி : பயணங்கள் தொடர் நாளை [[ஓடிராதீங்கப்பு]]

தலைப்புக்கு நன்றி அண்ணன் செல்வகுமார்.16 comments:

 1. யப்பாடி போர் போர்..விளக்கம் கொடுத்து மக்களுக்கு பயத்தை போக்க வேண்டிய நேரத்தில்...அடக்குமுறை கண்டிக்கத்தக்கது!

  ReplyDelete
 2. மனோ படத்தில இருக்கிறவங்க அப்பா பேரை எல்லாம் சொல்லல...

  ReplyDelete
 3. தம்பி.. ஃபோட்டோவுல டாப்பா இருக்கே..

  ReplyDelete
 4. என்னாது? கக்கன் அமைச்சரா இருந்தாரா? - இப்பிடித்தான் இன்றைய அரசியல்வாதிகள் ஆச்சரியம் அடைவார்கள்!

  ReplyDelete
 5. Mano...
  Ennathaan solla vara....????

  Mudiyalai.......

  ReplyDelete
 6. //சோனியா பூந்தியின் அப்பா பெயர்...? [[ நீரோ பரம்பரைன்னு மட்டும் தெரியும் எங்களுக்கு]]//
  நல்லா பிடில் வாசிப்பாங்களா? :-)

  ReplyDelete
 7. //கூடங்குளத்தில் உங்கள் குடும்பத்தினர் எவராது இருந்தால், இந்தப் போராட்டம் அவர்களுக்கும் சேர்த்தே நடத்தப்படுகிறது//
  உண்மை பாஸ்!

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. கேள்வி சர்தான்... பதில் தான் லேது

  ReplyDelete
 10. நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும். இதுவும் அப்படித்தான்.

  ReplyDelete
 11. இந்திராகாந்தியின் அப்பா பெயர் தெரியும். நேரு.

  ReplyDelete
 12. இன்னோர் இடைத்தேர்தல் வராதென்ற தைரியம்ன்னு நினைக்கிறேன்...

  இந்த பிரச்சனையில் நான் என்ன சொல்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறேன்...

  இருந்தாலும் அரசின் அனுகுமுறை சரியில்லை என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்

  ReplyDelete
 13. அப்பா பேர் தெரியுமான்னு கேட்டு ஒரு பதிவை தேத்திய மனஓ அண்ணா வாழ்க.

  ReplyDelete
 14. ஹிஹி..
  அப்பா பெயர் தெரியுதோ இல்லையோ..

  எனக்கு இவர்களின் மாமா பெயர் தெரியுமே...  ஹிஹி
  அதான் .. நம்ம நேரு மாமன் சார்...

  ReplyDelete
 15. ஹி..ஹி.. ஆமா இல்ல... யோசிச்சா இத்தனை பிரபலங்களோட அப்பா பேரு நமக்கு தெரியாது இல்ல.. இதை ரூம் போட்டு யோசிச்ச உங்களுக்கு என் கைகுலுக்கல்....


  நட்புடன்
  கவிதை காதலன்

  ReplyDelete
 16. கடைசி வரைக்கும் அவங்க அப்பா பெயர் சொல்லலையே?

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!